Sep 24, 2009

மிக்ஸர் - 24.09.09

அவர் ரொம்ப அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். என் நண்பர் நம்பி வீட்டுக்கு அடிக்கடி வருவார். ஆரம்பத்தில் அவருடன் அதிக நெருக்கம் கிடையாது. நண்பர்கள் அனைவரும் கிரிக்கட் விளையாட சென்றால் அவர் வர மாட்டார். அதனால் அதிகமாக அவரிடம் யாரும் பேசுவது கிடையாது. சாதாரண நபர் அளவிலே பழகினார்.

எங்கள் கிரிக்கட் குழுவில் வேறு ஒரு நண்பர் இருந்தார். அவர் எல்லோரையும் நக்கலடித்துக்கொண்டும், அனைவரை பற்றியும் மட்டமாக பேசிக்கொண்டும், தான் ஒரு பெரிய ஹீரோ என்ற ரேஞ்சுக்கு திரிவார். நன்றாக பெளலிங் போடுவார். நான் நினைத்தேன் அவர் கிரிக்கட்டில் நிச்சயம் பெரிய ஆளாக வருவார் என்று. மனதளவில் எனக்கு அவர் மேல் பொறாமையும், கோபமும் எப்பொழுதும் உண்டு. அவர் நன்றாக விளையாடியதால் பொறாமையும், அனைவரையும் எப்போதும் கிண்டல் செய்வதால் கோபமும் வரும். கடைசியில் என்ன நடந்தது?

முதல் பாராவில் உள்ளவர், சடாரென பெரிய நடிகராகி, நடிகர் சங்க உபத் தலைவராக பணியாற்றி, எம்.எல்.ஏ ஆகி, இப்போது எம்.பி யாகி மத்திய இணை அமைச்சராகி விட்டார். அவர் வேறு யாரும் இல்லை, என் நண்பர் குமரேசன் என்கிற நெப்போலியன் தான்.

இரண்டாவது பாராவில் உள்ளவர் ஏதோ பிரைவேட் கம்பனியில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதாக கேள்வி.

***************************************************

ஏறக்குறைய அதே தருணத்தில் எங்கள் தெருவில் சில நண்பர்கள் (எங்கள் குழுவினர் அல்ல) நடிகர் வஸந்த் அவர்களுக்கு தலைமை ரசிகர் மன்றம் லால்குடியில் நிறுவினார்கள். "மெல்லப் பேசுங்கள்" என்ற படத்தில் நடித்தவர் அவர். அதன் துவக்க விழாவுக்கு அவரும் அவருடன் நடிகர் மனோஜ் என்பவரும் லால்குடிக்கு வந்தார்கள். நாங்கள் அப்போது "சலங்கை" என்ற பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தோம். நான் அந்த பத்திரிக்கை சார்பாக நடிகர் வஸந்தை பேட்டிக் கண்டேன். மிகவும் அருமையாக, ரொம்ப தெளிவாக பதில்கள் கூறினார். அவருடன் நாங்கள் போட்டோ எல்லாம் எடுத்துக்கொண்டோம். அவரை சந்தித்தப்பின் நண்பர்கள் அனைவரும் நினைத்தோம், " அவர் மிகப் பெரிய நடிகராக வருவார்" என்று. என்னக் காரணமோ தெரியவில்லை. அவர் அந்த அளவிற்கு வரவில்லை.

***************************************************

பல வருடங்களுக்கு முன் எஸ் வி சேகர் ஒரு பேட்டியில் கூறிய விசயம் நினைவுக்கு வருகிறது. ஒரு நிருபர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் பதிலும் இதோ:

"சார், இப்போ வர படங்களில் எல்லாம் ஒரு மெசேஜும் இருப்பதில்லையே"

" என்னைப் பொருத்தவரை உலகத்திலேயே மெசேஜ் கொடுக்கும் ஒரே ஆள் போஸ்ட் மேன் தான். உங்களுக்கு ஏதாவது மெசேஜ் வேண்டுமென்றால் அவர் தருவார். நீங்கள் ஏன் சினிமாவில் தேடுகிறீர்கள்"

***************************************************

சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம். நான் யாருக்காகவாவது பணம் இந்திய ரூபாயில் தர வேண்டி இருந்தால், மலேசியாவில் இருந்து லெட்டரை பேக்ஸில் என் அக்கவுண்ட் உள்ள வங்கிக்கு அனுப்புவேன். சம்பந்தப்பட்ட நபருக்கு உடனே பணம் போய் விடும். இப்போது வந்த ஒரு புது மேனேஜர், பேக்ஸ் அனுப்பினால் மட்டும் போதாது, நீங்கள் ஒரிஜினல் லெட்டரை போஸ்ட்டில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு சென்ற வாரம், ரூபாய் 30,000 ஒருவருக்கு பணம் அனுப்பச் சொல்லி பேக்ஸ் அனுப்பிவிட்டு, உடனே ஒரிஜினல் லெட்டரை போஸ்ட்டில் அனுப்பி விட்டேன். நார்மல் போஸ்ட் மலேசியாவிலிருந்து போய் சேர ஐந்து நாட்கள் ஆகும். நேற்று எதேச்சையாக அக்கவுண்ட் பேலன்ஸை நண்பர் மூலம் செக் செய்தால், அவர்கள் இர்ணடு முறை பணம் அனுப்பி உள்ளது தெரிய வந்தது. பேக்ஸ் காப்பி மூலம் ஒரு முறையும், ஒரிஜினல் லெட்டர் மூலம் ஒரு முறையும். என்ன மாதிரி வேலை செய்கிறார்கள் என்று பாருங்கள்? விரைவில் அந்த பணத்தை என் கணக்கில் போடுவதாக சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்!. ரூபாய் 30,000 சரி, அதுவே 3,00,000 என்றால், என்ன செய்வது? அந்த பணம் நம் கணக்கில் திரும்ப வரும் வரை தூக்கம் வருமா?

***************************************************

நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் எதுவும் படிக்கவில்லை என்றாலும், கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு உண்டு. அனுபவம் மூலமாக கற்றுக்கொண்ட விசயங்கள் பல. எங்கள் கம்பனியின் சாப்வேரில் எங்கே தவறு ஏற்பட்டாலும், எனக்கு எந்த சாப்ட்வேர் அறிவும் இல்லை என்றாலும், என்னால் எங்கே தவறு என்று கண்டு பிடிக்க முடியும். அப்படிப்பட்ட என்னால், இந்த "தமிழ்மணத்தில்" ஓட்டு போடுவது எப்படி என்று இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் கூறிய அனைத்தும் செய்து பார்த்து விட்டேன். ஓப்பன் ஐடி மூலம் சென்றால், "invalid user name" என்று என்னென்னவோ வருகிறது. அட்லீஸ்ட் நாமாவது நமக்கே ஒரு ஒட்டு போட்டுக் கொள்ளலாம் என்றால், அதற்கும் வழியில்லை.

நண்பர்கள் யாராவது எனக்கு உதவ முடியுமா?

***************************************************

முன்பெல்லாம், நமது பதிவு "தமிழிஷில்" பிரபலமானால் உடனே அவர்களிடத்திலிருந்து ஒரு மெயில் வரும். நானும் உடனே தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பின்னூட்டம் இடுவேன். இப்போது அப்படி வருவது இல்லை. ஏன் என்றும் தெரியவில்லை?

***************************************************

மற்றவர்களை ஒப்பிடும்போது நான் எழுதிய பதிவுகளும் குறைவு, நண்பர்கள் லிஸ்ட்டும் குறைவு. ஆனாலும், முகம் தெரியாத வெளிநாட்டு தோழிகளிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்கள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றன. நான் நன்றாக எழுதுகிறேன் என்று சொல்ல வரவில்லை. நான் எழுதும் ஒரு சில அனுபவங்கள் சிலர் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பதும், அதை அவர்கள் மெயில்கள் மூலம் தெரிவிப்பதும் உண்மையிலேயே வியப்பை அளிக்கின்றன். அந்த ஒரு சில நண்பர்களுக்காகவாவது நான் எழுதிகொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன், என்ன சரியா நண்பர்களே?

***************************************************

22 comments:

gulf-tamilan said...

mm. !!!

☀நான் ஆதவன்☀ said...

//நானும் உடனே தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு பின்னூட்டம் இடுவேன். இப்போது அப்படி வருவது இல்லை. ஏன் என்றும் தெரியவில்லை? //

spamல செக் பண்ணி பாருங்க. அதுல இருக்கும்.

//முகம் தெரியாத வெளிநாட்டு தோழிகளிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்கள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றன.//

அப்படியே ‘வாசகர் கடிதம்’ன்னு ஒரு பதிவு போடுறது! :)

Cable Sankar said...

/மற்றவர்களை ஒப்பிடும்போது நான் எழுதிய பதிவுகளும் குறைவு, நண்பர்கள் லிஸ்ட்டும் குறைவு. ஆனாலும், முகம் தெரியாத வெளிநாட்டு தோழிகளிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் வரும் கடிதங்கள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றன. நான் நன்றாக எழுதுகிறேன் என்று சொல்ல வரவில்லை. நான் எழுதும் ஒரு சில அனுபவங்கள் சிலர் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பதும், அதை அவர்கள் மெயில்கள் மூலம் தெரிவிப்பதும் உண்மையிலேயே வியப்பை அளிக்கின்றன். அந்த ஒரு சில நண்பர்களுக்காகவாவது நான் எழுதிகொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன், என்ன சரியா நண்பர்களே?//


பார்த்து நண்பரே.. சுயதம்பட்டம அடிக்கிறீர்கள் என்று பதிவெழுதிட போகிறார்கள்.

நிஜமாகவே நீங்கள் நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

ஃபேக்ஸ் அனுப்பியவுடன் சாதாரண தபாலும் அனுப்பும்போது அந்த பேப்பரில் க்ளியராக சிவப்பு மசியில் ஃபேக்ஸ் ஏற்கனவே அனுப்பட்டதை குறிக்க வேண்டும். தேவையானால் பணம் அதுவரை அனுப்பாமலிருந்தால் மட்டுமே இக்கடிதத்தின் மேல் பணம் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கலாம்.

இன்னொரு உத்தமமான வழி ஃபேக்ஸ் அனுப்பாது வெறுமனே லெட்டரை மட்டும் அனுப்புவது. நண்பருக்கு விஷயத்தை கூறிவிட வேண்டியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிருஷ்குமார் said...

"Mella pesungal" vasanth pinnalil chinnathirayil vetrikarmana nadigara valam vandhu ,chinna thirai kena sangamum amaithu avargalukkagaa kural koduthadayum kuripitu irukalam.Avar Sila madahangalukku munnar Maaradaipal maranamadaidar yenbathu ucha katta sogam..

அமுதா கிருஷ்ணா said...

நெப்போலியன் என் நண்பர்(திருச்சி) சின்னதுரை என்பவர்க்கு மிக நெருங்கிய நண்பர் சார்.

நடிகர் வஸந்த் சமீபத்தில் ஹார்ட் அட்டாக்கினால் இறந்து விட்டார்..

எனக்கும் இந்த ஓட்டு பிரச்சனை உள்ளது..அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை..

அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்..

Anonymous said...

நன்றாக இருந்தது நண்பரே.. அருமையான பதிவு...
நடிகர் வசந்த் சமீபத்தில் இறந்துவிட்டார் என்று செய்தி படித்த நினைவு... please confirm?

எவனோ ஒருவன் said...

1 - நல்லாயிருக்கு.

3 - டைமிங்கா பாத்து விடுறீங்களே!

---

சில தளங்கள் இப்படித்தான் வெறுப்பேற்றும். தளத்தை உருவாக்கும்போது சரியான திட்டமிடுதல் இல்லாமையே இதற்குக் காரணம். சில தளங்களில் லாகின் செய்த பிறகு, குறிப்பிட்ட பக்கங்களுக்கு சென்று வந்தால் லாகவுட் ஆகிவிடும். சில இடங்களில் தவிர்த்து விடலாம். தவிர்க்க முடியாத தளங்களைக் கட்டி அழவேண்டியுள்ளது.

என். உலகநாதன் said...

//mm. !!!//

உங்கள் வருகைக்கு நன்றி gulf-tamilan.

என். உலகநாதன் said...

//spamல செக் பண்ணி பாருங்க. அதுல இருக்கும்//

பார்த்தேன் இல்லை நண்பரே!

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

என். உலகநாதன் said...

//பார்த்து நண்பரே.. சுயதம்பட்டம அடிக்கிறீர்கள் என்று பதிவெழுதிட போகிறார்கள்//

நீங்கள் சொல்வது நியாயம்தான் கேபிள் சார். தெரியாமல் எழுதி விட்டேன். இனி ஜாக்கிரதையாக எழுதுகிறேன்.

//நிஜமாகவே நீங்கள் நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்//

நன்றி கேபிள் சங்கர் சார்.

என். உலகநாதன் said...

//இன்னொரு உத்தமமான வழி ஃபேக்ஸ் அனுப்பாது வெறுமனே லெட்டரை மட்டும் அனுப்புவது. நண்பருக்கு விஷயத்தை கூறிவிட வேண்டியது//

சில சமயம் அவசரத்திற்காக பேக்ஸில் அனுப்ப வேண்டியதுள்ளது சார்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

என். உலகநாதன் said...

//Avar Sila madahangalukku munnar Maaradaipal maranamadaidar yenbathu ucha katta sogam..//

கேட்கவே மந்து ரொம்ப கஷ்டமாக இருக்கு கிருஷ்குமார்.

என். உலகநாதன் said...

//நெப்போலியன் என் நண்பர்(திருச்சி) சின்னதுரை என்பவர்க்கு மிக நெருங்கிய நண்பர் சார்//

அப்படியா மேடம். நீங்களும் திருச்சியா?

//அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்..//

நிச்சயம் மேடம்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்.

என். உலகநாதன் said...

//நன்றாக இருந்தது நண்பரே.. அருமையான பதிவு... //

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

//நடிகர் வசந்த் சமீபத்தில் இறந்துவிட்டார் என்று செய்தி படித்த நினைவு... please confirm?//

நண்பர்கள் அந்த விசயத்தை உறுதி படுத்திவிட்டார்கள் நண்பா!

என். உலகநாதன் said...

//1 - நல்லாயிருக்கு.//

உங்கள் வருகைக்கு நன்றி எவனோ ஒருவன்.

[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

அப்பாவி முரு said...

அண்ணே நீங்க மினிஸ்டர் மச்சானா???

என். உலகநாதன் said...

//-:)//

நன்றி ஞானப்பித்தன்.

என். உலகநாதன் said...

//அண்ணே நீங்க மினிஸ்டர் மச்சானா???//

இல்லைங்க. நண்பர் அவ்வளவுதான்.

என். உலகநாதன் said...

Tamilish Support to me
show details 12:42 AM (8 hours ago)Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர் - 24.09.09' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th September 2009 04:42:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/117007

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அனுபவங்கள் ; படிக்க நல்லாருக்கு