Sep 29, 2009

விதி வலியது.....

இந்த சம்பவம் நடந்து ஒரு இருபது வருடங்கள் ஆகிவிட்டது. எங்கள் குடுமபத்தில் ஒரு திருமணம். எல்லோரும் கலயாண மண்டபத்தில் பிஸியாக இருந்தோம். எனக்கு நிறைய நண்பர்கள். கல்யாண மண்டபம் முழுவதும் என் நண்பர்கள் பல உதவிகளை செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு நண்பர் ஓடி வந்தார். அவர் என்னைவிட பத்து வயது மூத்தவர். ஆனால் என்னுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். அவர் சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டவுடன் நான் பதட்டத்தில் அவருடன் ஓடினேன். நல்ல வேளை அந்த சமயத்தில் திருமணம் முடிந்து இருந்தது. அதனால் என்னை யாரும் அங்கு தேடவில்லை. அவர் அப்படி என்ன விசயம் கூறினார்?

அந்த நண்பரின் இன்னொரு நெருங்கிய நண்பர். அவர் எனக்கும் நண்பர்தான். அந்த நண்பர் அப்போது வரை கல்யாண மண்டபத்தில்தான் இருந்தார். விசயம் இதுதான். அந்த இன்னொரு நண்பர் எங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வந்த ஒருவரின் சிறிய பெண்ணை, ஏதோ பேசி மயக்கி வீட்டிற்கு கூட்டிச் சென்று, ஏதோ செய்ய முற்படுகையில், என்னிடம் விசயத்தைச் சொன்ன நண்பர் அதைப் பார்த்து, அவரை திட்டி அந்த பெண்ணை திரும்பவும் கல்யாண மண்டபத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். விசயத்தை கேள்வி பட்டு நான் அங்கே செல்வதற்குள் அந்த நண்பர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

அந்த நிமிடத்தில் அவர் என் கண்ணில் பட்டு இருந்தால் நடந்திருப்பதே வேறு. ஆனால் தப்பித்து விட்டார். அவர் என் கண்ணில் படும்போது இரண்டு நாட்கள் ஆகி விட்டது. என் கோபமும் ஓரளவு குறைந்திருந்தது. அந்த பெண் வீட்டினர் அனைவரும் கல்யாணம் முடிந்து ஊருக்கு சென்று விட்டனர். அந்த பெண் வீட்டாரிடம் விசயத்தைக் கூறாமல், அந்த பெண்ணிடம் மட்டும் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தேன். அந்த நண்பரை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அந்த அளவிற்கு திட்டி அவரின் நட்பினைத் துண்டித்தேன். பிறகு கை காலில் விழுந்து என்னுடன் நட்பை தொடரவே விரும்பினார். பின் காலப் போக்கில் நான் அவருடன் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே அவரின் நட்பை வைத்திருந்தேன்.

அந்த நண்பர் பெண்கள் விசயத்தில் ரொம்ப வீக். அவருக்கு பலத் தரப்பட்ட பெண்களுடன் தொடர்பு இருந்தது. என்னதான் வருடங்கள் ஓடினாலும் அவரை அடிக்காமல் விட்டு விட்டோமே என பல நாட்கள் நான் வருந்தியதுண்டு. பின்பு நான் வேலை விசயமாக ஊரை விட்டு வெளியில் வந்து விட்டேன். ஒவ்வொரு முறை விடுமுறைக்கு செல்லும்போதெல்லாம் அவரின் லீலைகளைப் பற்றி மற்றவர்கள் கதை கதையாக சொல்லுவார்கள். அந்த வயதில் நமக்கும் ஆசை இருக்கும். நம்மில் பலர் பயத்திலேயே கெட்டு போகாமல் இருந்திருப்போம். ஆனால், அடுத்தவர்களின் கதைகளை கேட்பதில் மட்டும் அலாதி பிரியம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படித்தான் அவரின் காம லீலைகள் அவர் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ தெரிய வந்தது. நமக்கு மட்டும் ஏன் அந்த அனுபவங்கள் ஏற்படுவதில்லை என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

பிறகு பல வருடங்கள் கழித்து அந்த நண்பருக்கு திருமணம் நடந்தது. அவருடைய மனைவியை ஒரு முறை நேரில் பார்த்தபோது ரொம்ப மனம் நொந்து போனேன். அவரைப் பார்க்க அழகாகவும், லட்சணமாகவும் தெரிந்தார். அந்த பெண்ணுக்கு இப்படி பட்ட கணவனா? என ஆச்சர்யப்பட்டேன். அவனுக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. வருடங்கள் பல வந்து போயின. என் மனமும் பழி வாங்கும் நிலையிலிருந்து பக்குவப் பட்டு இருந்தது.

சில வருடங்களுக்கு முன் ஊர் போயிருந்த போது என்னை பார்க்க வந்து இருந்தார் அந்த நண்பர். வெளிநாட்டு சிகரட் வேண்டும் என்று கேட்டார். நானும் கொடுத்தேன். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு போய் விட்டார். நானும் கிளம்பி மலேசியா வந்து விட்டேன். ஒரு நாள், வேறு ஒரு நண்பரிடமிருந்து போன். அந்த நண்பர் திடீரென ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டதாக சொன்னார். என்னதான் அவரின் கேரக்டர் சரியில்லை என்றாலும், அவர் என் நண்பர் என்ற முறையில் மனம் மிக வேதனை அடைந்தது. ஆனால், மனதின் ஓரத்தில் அவர் செய்த தவறுகளை அவர் உணர்ந்தாரா? இல்லையா? என்ற கேள்விகள் தோன்றிக் கொண்டிருந்தன. அவரே போய்விட்டார், இனி என்ன? என்று நான் அந்த விசயத்தை மறந்து விட்டேன். ஆனால் அவருக்காகவும், அவரின் பெண்ணுக்காகவும் நான் ஆண்டவனை பிரார்தித்தேன்.

சமீபத்தில் ஒரு நாள் நான் ஊரில் இருந்த போது, ஒரு பெண்ணை பஸ் ஸ்டாண்டில் எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல இருந்தது. மனது குழப்பமாக இருந்தது. திடீரென நினைவு வந்தது போல் இருந்தாலும், பல கேள்விகள் என் மனதை ஆக்கரமித்தன.

"அது யார்? இறந்து போன அந்த நண்பரின் மனைவி போல் அல்லவா இருக்கிறது? சரி அது யார் அவர் கூட இன்னொரு ஆண்?" குழப்பத்தில் அருகில் இருந்த என் நண்பரை கேட்டேன். அவர் கூறிய பதில்தான் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

" தெரியாதா உனக்கு. அவர்தான் அந்த பெண்ணை வைச்............"

விதி வலியது......

8 comments:

அப்பாவி முரு said...

மதி தூங்கிக்கொண்டு இருந்தால்...

விதி வலியது தான்..

பிரபா said...

ரொம்ப கஷ்டமாயிருக்கு ..............
விதி வலியது,

Anonymous said...

உலக்ஸ்,நீங்கள் இந்த பதிவிற்கு " முற்பகல் செய்யின்" என்று வைத்து இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் :-)

என். உலகநாதன் said...

//மதி தூங்கிக்கொண்டு இருந்தால்...

விதி வலியது தான்..//

சரிதான் நண்பரே!

என். உலகநாதன் said...

//ரொம்ப கஷ்டமாயிருக்கு ..............
விதி வலியது,//

வருகைக்கு நன்றி பிரபா!

என். உலகநாதன் said...

//உலக்ஸ்,நீங்கள் இந்த பதிவிற்கு " முற்பகல் செய்யின்" என்று வைத்து இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் :-)//

ஆமால்ல.

Anonymous said...

நம்ப முடியவில்லை. நீதி கதை போல இருக்கிறது. இந்த மாதிரி கேஸ்கள், சீரும் சிறப்புமாக செல்வ செழிப்போடு இருக்கும் காலம் அல்லவா இந்த காலம்.

- சுவாமி

என். உலகநாதன் said...

//நம்ப முடியவில்லை. நீதி கதை போல இருக்கிறது. இந்த மாதிரி கேஸ்கள், சீரும் சிறப்புமாக செல்வ செழிப்போடு இருக்கும் காலம் அல்லவா இந்த காலம்.

- சுவாமி//

உண்மைக்கதை சுவாமி. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.