சந்திப்பு என்பதுதான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
கோட்சே, காந்தியை சந்தித்து பேசியிருந்தால்?
ஜார்ஜ் புஷ். சதாம் உசேனை சந்தித்து பேசியிருந்தால்?
கர்ணன், தர்மரை சந்தித்து பேசியிருந்தால்?
விரும்பிய முதல் பெண்ணை நான் சந்தித்து பேசியிருந்தால்?
- இப்படி பல இருந்தால் கள், ஒரு வேளை சாத்தியமாயிருந்தால், விளைவுகள் வேறு மாதிரி அல்லவா ஆகியிருக்கும். பேசி தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றுமே இல்லை. காதலனும், காதலியும் உடல் வேட்கையை மட்டும் நினைக்காமல் தங்கள் குடும்பங்களைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி மனம் விட்டு பேச வேண்டும். கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசினால் எந்த சண்டையும் அவர்களுக்குள் வராது.
மேலே சொல்லும் சந்திப்புகள் பிரச்சனைகள் தீர்வதற்கு. அதனால் பிரச்சனை இருந்தால்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. பிரச்சனை வராமல் இருப்பதற்கும், நல்ல புரிதல்களுக்கும் சந்திப்பு அவசியம். பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களை பார்க்காமல் பேசாமல் நான் ஒரு நாளைக்கூட தள்ளியதில்லை.
+2 படிக்கும்போது நடந்த ஒரு சம்பவம். நாங்கள் லால்குடியில் இருந்து தினமும் ட்ரெயினில்தான் திருச்சிக்கு செல்வோம். நான் படித்தது தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி. வருடா வருடம் ட்ரெயின் டே நடத்துவோம். அதில் எனக்கும் ஒருவனுக்கும் சின்னத் தகராறு. அவன் பார்க்க நன்றாக முரட்டுத்தனமாக இருப்பான். அவனும் என் பள்ளிதான். நான் நோஞ்சானாக இருப்பேன். மதிய சாப்பாட்டு இடைவெளியில் நண்பர்கள் கூறினார்கள்,
"உலக்ஸ், உன்னை ஸ்கூல் விட்டவுடன் அவன் அடிக்கப்போகிறானாம். ஜாக்கிரதை"
என்னால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று நன்றாகத் தெரியும். நண்பர்கள் அனைவரும் பயப்பட்டார்கள். நான் பயப்படவில்லை. நேராக ஸ்கூல் முடிந்தவுடன் அவனிடம் சென்றேன். அவன் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்துக்கேட்டேன்,
" என்ன என்னவோ அடிக்கிறேனு சொன்னியாமே, எங்கே அடி பார்க்கலாம்?"
" இல்லை, நான் சும்மா சொன்னேன்....."
என்னை அங்கே எதிர்பார்க்காத அவனால் என்னை அடிக்க முடியவில்லை. அவனால் உடனடியாக அந்த அடிக்கும் மூடுக்கு வரமுடியவில்லை. பிறகு சமாதானமாகப் போய் நண்பன் ஆகிப் போனான். எதிராளி பயப்படும்போதுதான் நமக்கு அவனை திட்டும் இன்பமோ, அடிக்கும் இன்பமோ கிடைக்கும். அவன் நம்மை உதாசீனப்படுத்தினால், நாம் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொள்வதில் எந்த பெருமையில்லை.
எந்தப் பிரச்சனையும் நான் வளரவிடுவதில்லை. நேரே போய் எதிராளியின் வீட்டுக்கே பேச சென்று விடுவேன். அதிக கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும். அன்பு இருக்கும். நேரம் பார்த்து அவர்களின் வீக் பாயிண்ட்டை பிடித்தோமானால், வெற்றி நமக்குத்தான்.
திரும்பவும் சொல்கிறேன், பிரச்சனைக்காத்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை. நல்ல நட்புக்கும் சந்திப்புக்கள் அவசியம் தேவை. நான் எங்கள் ஊரில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடத்தினால், நான் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், அந்த நல்ல நிகழ்வை தள்ளிப்போட்டு விட்டேன்.
பின் எதற்காக இந்த பதிவு என்கின்றீர்களா?
நாளை நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புக்கு என்னால் போக முடியாததால், எல்லோரையும் அலைகடல் என திரண்டு போகச்சொல்லவே இந்த பதிவை எழுதுகிறேன். என்னால்தான் போக முடியவில்லை. முடிந்தவர்கள் சென்று பயன் அடைந்து, அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:
பதிவர்கள் சந்திப்பு இடம் :
DISCOVERY BOOK PALACE
No. 6. Mahaveer Complex, 1st Floor,
Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78.
Ph; 65157525 (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நாள் : 7.11.2009 மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களை பகிர இசைந்திருக்கிறார்.
பதிவர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் இருக்கிறது.
புதிய, பழைய என்றில்லாமல் இணைய எழுத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்
பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே)
தொடர்புகளுக்கு :
பாலபாரதி : 9940203132
கேபிள் சங்கர் : 9840332666
தண்டோரா : 9340089989
நர்சிம் : 9841888663
முரளிகண்ணன் : 9444884964
15 comments:
//அதை பதிவாக திங்கள் கிழமை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்:
//
போட்டுருவோம்..
உலக்ஸ் அண்ணே.,
சிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.
//போட்டுருவோம்..//
நன்றி கேபிள் சார்!
//உலக்ஸ் அண்ணே.,
சிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.//
அடடா, விசா இல்லையே?
இருந்தா இன்னைக்கு இரவே உங்க வீட்டுக்கு வந்துடுவேனே?
என். உலகநாதன் said...
//உலக்ஸ் அண்ணே.,
சிங்கபூருல இருக்கும் முரு, நாளைக்கு சனிக்கிழமை உங்களை அடிக்கணும்ன்னு திட்டம் போட்டிருக்கார்.//
அடடா, விசா இல்லையே?
இருந்தா இன்னைக்கு இரவே உங்க வீட்டுக்கு வந்துடுவேனே?///
அது பெரிய பிரச்சனை இல்லை. உங்க கிட்ட மலேசிய விசா இருக்குள்ள. தைரியமா, வுட்லேண்ட்ஸ் செக் பாயிண்ட் வாங்க. 30 டாலர்க்கு சிங்கிள் எண்ட்ர்ய் விசா தருவாங்க.
அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.
தெரிஞ்சிருந்தா போன தடவையே அடிக்கப் போறேன்னு சொல்லியிருப்பேன்ல?
:)
கண்டிப்பா பதிவு போட்டுடலாம்.
அப்றம், என்னோட வரலாறு எழுதிருக்கேன்... வந்து பார்க்கவும்.
http://www.yetho.com/2009/11/blog-post_06.html
போன தடவை நான் போனேன்..என்னைதவிர பெண்கள் யாரும் வரவேயில்லை...இந்த முறை வரார்களா பார்க்கணும்...
//அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.//
அண்ணே,
அடுத்த தடவை நிச்சயம் வரேன்.
நீங்க கொஞ்சம் விசயத்தை தள்ளிப்போடுங்க.
//அப்றம், என்னோட வரலாறு எழுதிருக்கேன்... வந்து பார்க்கவும்.//
நன்றி நண்பா!
//போன தடவை நான் போனேன்..என்னைதவிர பெண்கள் யாரும் வரவேயில்லை...இந்த முறை வரார்களா பார்க்கணும்...//
மேடம்,
இந்த தடவை போய்ட்டு வந்து எழுதுங்க!
//என். உலகநாதன்
November 6, 2009 5:27 PM //அதை வச்சு, இந்த முருவை என்னன்னு கேட்டுடலாம்.//
அண்ணே,
அடுத்த தடவை நிச்சயம் வரேன்.
நீங்க கொஞ்சம் விசயத்தை தள்ளிப்போடுங்க.//
போட்டோம்.
நானும் திருச்சி தாங்க ....நான் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்......ஆனால், என்னைய உங்களுக்கு யாருன்னு தெரிய வாய்ப்பு இல்லை.. சும்மா சொன்னேன்.
சந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்கள்
//நானும் திருச்சி தாங்க ....நான் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்......ஆனால், என்னைய உங்களுக்கு யாருன்னு தெரிய வாய்ப்பு இல்லை.. சும்மா சொன்னேன்.//
உங்கள் வருகைக்கு நன்றி பிரதீப்!
//சந்திப்பு இனிதே இடம்பெற வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கு நன்றி சந்ரு!
Post a Comment