Jan 21, 2010

இதற்கு யார் காரணம்? (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும்) - பாகம் 2

" ஆமாம்" என்று அவள் சொன்னவுடன், குமாருக்கு கோபம் தலைக்கு மேல் ஏற,

" ஏண்டி உனக்கு நான் என்ன குறை வைச்சேன். ஏன் இப்படி அலையிற"

" என்ன குறை வைச்சியா. நீ பாட்டு என்னை கிளப்பி விட்டுட்டு போயிட்ட. என்னால 'அது' இல்லாம இருக்க முடியல. அதான் எனக்கு புடிச்சவங்களோட படுக்க ஆரம்பிச்சேன்"

" இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லை?"

" இதுல என்ன வெட்கம்"

" சீ! நீயும் ஒரு பெண்ணா?"

" இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. நீ இங்க இருந்து தினமும் என்னை நல்லா கவனி. நான் யார் கிட்டயும் போக மாட்டேன்"

" அது ஒண்ணுதான் வாழ்க்கையா"

"ஆமாம்", என்று சொல்லி விட்டு அவள் செய்த செயல் அவனை திக்குமுக்காட வைத்து விட்டது.

அவன் காலில் விழுந்தவள் கதறி கதறி அழ ஆரம்பி விட்டாள். குமாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

" உண்மையில் எனக்கு தினமும் வேண்டும்ங்க. என்னால அது இல்லாம வாழ முடியலைங்க" என்று கதறி அழுதவளை என்ன செய்வது, அவளைத் தேற்றுவதா? இல்லை அவள் பேசிய பேச்சுக்கு அவளை அடிப்பதா? என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் குமார். 'ஒரு பெண்ணுக்கு இத்தனை உணர்ச்சிகள் இருக்குமா?' என குழம்பி தவித்தான்.

பிறகு குமார் அவளிடம் சொன்னவைகள் யாருமே எந்த மனைவியிடமும் சொல்லக் கூடாதது,

" சரி. நீ எப்படியோ இருந்துட்டு போ. ஆனா, நான் வரும்போது என்னுடன் மட்டும் தான் இருக்கணும். சரியா?"

(பின்பு ஸ்டேசனில் அவனிடம், " ஏன் அவ்வாறு சொன்னாய்?" என்று கேட்டதற்கு, " சார், நான் அவள் மேல் உயிரையே வைத்து இருந்தேன். என்னைப்போல இருக்கும் ஒருவனுக்கு கிடைத்த தேவதை சார் அவள். என்னுடைய சந்தோசத்தை விட அவள் சந்தோசத்தை தான் பெரிதாக நினைத்தேன் சார். அதனால், அவளின் ஆசைக்கு நான் தடை போட விரும்பவில்லை. எந்த காரணம் கொண்டும் அவளை நான் இழக்க விரும்ப வில்லை சார்" என்று பதில் சொன்னானாம்.)

" சரி" என்று அவனை கட்டிபிடித்து அழ ஆரம்பித்தாள். பிறகு அந்த ஒப்பந்தத்துடன் மிலிட்டரி போனான் குமார். நாட்கள் ஓடியது. மாதங்கள் ஓடியது. அடுத்த லீவும் வந்தது.

வீட்டிற்கு வந்தான் குமார். தடபுடலாக எப்பவும் போல் அவனை நன்கு கவனித்தாள் வள்ளி. எல்லாம் நல்லபடியாகத்தான் போனது. 'எல்லாம்' என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாள் நண்பன் ஒருவனைப் பார்க்க சென்றவன் வேலை சீக்கிரம் முடியவே இரவே வீடு திரும்பினான். வீட்டில் வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் வள்ளி இல்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் வந்தாள்.

" எங்கே போய் விட்டு வருகிறாய்" எனக் கேட்டான்.

" (ஒருவன் பெயரைச் சொல்லி) அங்கே போய்விட்டு வருகிறேன்" என்றாள்.

" நான் தான் சொல்லி இருக்கேன்ல. நான் இருக்கும்போது நீ யாரிடமும் போகக் கூடாது என்று"

அவள் சொன்ன பதில்தான் இந்த பதிவு எழுத காரணமாகி விட்டது.

" ஆமாம், நீ வருசத்துல ஒரு மாசம் வருவ. வந்து என்னோட 'இருந்துட்டு' போயிடுவ. அவன் வருசம் முழுதும் என்னை கவனிக்கிறான். நீ வந்துட்ட அப்படிங்கறதுக்காக அவனைப் பட்டினி போட முடியுமா என்ன?"

வந்த கோபத்தில் அவளை அடுத்து பேச விடாமல் அவளை கன்னத்தில் அறைய ஆரம்பித்தான் குமார். நடு ரோட்டில் யாரோ தன்னை நிர்வாணமாக நிற்க வைத்து செருப்பால் அடிப்பது போல் உணர்ந்தான் குமார். ஏதும் பேசாமல் ரூமில் போய் தூங்கி விட்டான். அவளின் அழுகைச் சத்தம் ஹாலில் நீண்ட நேரம் கேட்டது. எப்படித் தூங்கினான், எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலையில் எழுந்தபோது மணி 7. 'வள்ளி' என்று கூப்பிட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தவன் அதிர்ந்தான்.

ஹாலில் அவள் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் பெற்றோர்கள் குமார்தான் அவளை கொலை செய்து விட்டதாக அவன் மேல் கேஸ் போட்டு விட்டார்கள்.

"அவன் மேல் தவறு உள்ளதா? யார் மேல் தவறு? குமார் கொலை செய்து இருப்பானா? அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று எங்களிடம் கேட்டார் டி எஸ் பி.

நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே! யார் மேல் தவறு? தவறு குமார் மேல் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

நான் என் கருத்தினை சொன்னதற்கு அப்புறம் டி எஸ் பி என்ன முடிவு எடுத்தார்? என்பதை பிறகு சொல்கிறேன்.

14 comments:

Cable Sankar said...

இந்த விஷயத்தை பற்றி நீங்கள் இப்படி கேட்டிருக்ககூடாது..? ஏனென்றால் இது ஒரு நுணுக்கமான உணர்வுகளை கொண்ட விஷயம். அதனால் தான் குமார் வள்ளீயிடம் அப்படி சொல்லியிருக்கக்கூடும்..

பொத்தாம்பொதுவாய் பார்த்தால் வெட்டி போடணும் கூறு கெட்டவளை என்று ஆணாதிக்க சமுதாயம் சொல்லும்.. நிறைய விஷயஙக்ள் இருக்கிறது உலக்ஸ்..:)

MSK said...

ஒரு படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. செந்திலிடம் கடன் வாங்கியவர் இறந்து விட, கடன்கரரின் மனைவி செந்தில்டம் தவிலை கொடுத்து விட்டு அவர் கொழுந்தனை வைத்து கொண்டு விட்டதாக சொல்லுவார். அதற்கு கவுண்டமணி 'இது ஒரு கதைனு சொல்லி வியாபாரத்த கெடுத்துட்டு ஏடா' என்று புலம்புவார். நீங்களும் இத ஒரு கதைனு சொல்லி எங்கள் ????

அதி பிரதாபன் said...

அவர் செய்தது தப்பு. பிடிக்காவிட்டால் விலகியிருக்க வேண்டும். பொறுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

தண்டனை பற்றி சொல்லத் தெரியவில்லை. தற்கொலையா கொலையா என்பதை போலீஸ் விசாரணை தெளிவுபடுத்திவிடும். சட்டம் பற்றி அவ்வளவாகத் தெரியாது.

அபுஅஃப்ஸர் said...

இதன் மூலம் நிறைய யோசிக்கவெச்சிட்டீங்க உலக்ஸ்

||| Romeo ||| said...

என்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே !!!! குமார் மீது தான் தலைவரே தவறு. அவன் மனைவியை அதிகமாக காதலிதான் அதன் விளைவு தான் இது..

BONIFACE said...

//என்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே !!!! //அதே அதே

என். உலகநாதன் said...

//பொத்தாம்பொதுவாய் பார்த்தால் வெட்டி போடணும் கூறு கெட்டவளை என்று ஆணாதிக்க சமுதாயம் சொல்லும்.. நிறைய விஷயஙக்ள் இருக்கிறது உலக்ஸ்.//

வருகைக்கு நன்றி கேபிள்.

என். உலகநாதன் said...

//நீங்களும் இத ஒரு கதைனு சொல்லி எங்கள் ????//

நடந்ததைச் சொன்னேன் நண்பா!

என். உலகநாதன் said...

//அவர் செய்தது தப்பு. பிடிக்காவிட்டால் விலகியிருக்க வேண்டும். பொறுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதி பிரதாபன்.

என். உலகநாதன் said...

//இதன் மூலம் நிறைய யோசிக்கவெச்சிட்டீங்க உலக்ஸ்//

வருகைக்கு நன்றி அபுஅஃப்ஸர்.

என். உலகநாதன் said...

//என்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே !!!! குமார் மீது தான் தலைவரே தவறு. அவன் மனைவியை அதிகமாக காதலிதான் அதன் விளைவு தான் இது..//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரோமியோ.

என். உலகநாதன் said...

//என்ன தலைவரே மட்டமான குடும்பமா இருக்கே !!!! //அதே அதே

வருகைக்கு நன்றி நண்பா!

Selva Kumar said...

sir, matter simple. Kumar mela than thappu.

தமிழ். சரவணன் said...

//அவளின் பெற்றோர்கள் குமார்தான் அவளை கொலை செய்து விட்டதாக அவன் மேல் கேஸ் போட்டு விட்டார்கள்.

"அவன் மேல் தவறு உள்ளதா? யார் மேல் தவறு? குமார் கொலை செய்து இருப்பானா? அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று எங்களிடம் கேட்டார் டி எஸ் பி.//

அவன் இது​போல் ம​னைவி​யோடு வாழந்த​தே வாழ்நாள் முழுக்க அவனுக்கு ​பெரிய தண்ட​னை. இ​தெ இந்தியாவாக இருந்ததால் வரதட்ச​ணை ​கேட்டு ​கொடு​மை ​செய்து​கொ​லை​செய்தான் என்று ​பொய்வழக்கு ​போட்டு குமா​ரை மட்டுமல்ல அவ​னோடு பிறந்த ​பெற்ற உறவுகள் அ​னைவ​ரையும் உள்ள​ளே பிடித்து ​போட்டிருப்பார்கள். இதில் அந்த கற்புகரசியின் நடத்​தை பற்றி ஊர்உலகம் அறிந்திருந்தாலும் சாட்டிசகள் இல்லாதல் இவருக்கு சட்டப்படி ம​னைவி​யை தற்​கொ​லைக்கு துண்டியாதாக தண்ட​னை நிச்சயம்.

இது​போல் தண்ட​னைகளில் இருந்து அவர் நிரபராதி என்று ​வெளிவந்தால் அது நீதிக்கு கி​டைத்த ​வெற்றி