ஒரு வருடம் இனிதே சென்றது!
ஆம். இன்று என் வலைப்பூவான www.iniyavan.com க்கு பிறந்த நாள். என் பிறந்த நாளும், என் வலைப்பூவின் பிறந்த நாளும் ஒரே மாதத்தில் வருவதை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.சென்ற வருடம் மார்ச் மாதம் இதே நாளில் (20ம் தேதி ) மாலையில் சின்னதாக மூன்று இடுகைகள் (இராகவன் சார், சரியா?) எழுதினேன். அதில் ஒன்று 'பரிசல்காரன் அவர்களுக்கு நன்றி' என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்.
"என்னுள் இருந்த எழுத்தாளனை வெளியில் கொண்டு வந்த பரிசல்காரனுக்கு நன்றி. அவர் ப்ளாக்கை பார்த்துதான் ஆசை வந்தது, எனக்கும் எழுத"
ஏனோ அப்போது இந்த இரண்டு வரி இடுகை அவரின் கவனம் பெறாமலே போனது. அதற்கு காரணம், தமிழ்மணம், தமிழிஷ் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை நான். அதனால் நான் எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை. படிப்பவர்கள் கூகிள் மூலம் தேடி வந்து படிப்பார்கள் என நினைத்து இருந்தேன். பின்புதான் திரட்டிகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். பரிசல் வலைப்பூவில் பின்னூட்டம் மூலமாக அவரின் நட்பை பெற்றேன். அவரை என் வலைபூவிற்கு இழுத்துவர ஏறக்குறைய மூன்று மாதம் ஆனது. இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், அவரால்தான் வலைப்பூவில் எழுதத் தொடங்கினேன் என்பதற்காக. அன்று அவரின் கவனம் பெறாமல் போய்விட்ட அந்த இடுகை, இன்று அவரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மீண்டும் அதே தலைப்பில் இன்றைய இடுகையை எழுதுகிறேன்.
எழுத வந்த அந்த நாளில் நான் எந்தவிதமான லட்சியத்துடனோ, கொள்கையுடனோ வரவில்லை. சும்மா எழுத ஆரம்பித்தேன். ஆனால், நாளாக நாளாக ஆசை அதிகம் ஆனது. 'அனைத்திற்கும் ஆசைப்படு' என்பதைப்போல அனைத்தையும் எழுத ஆசைப்பட்டேன். பின்பு ஒரு முடிவு எடுத்தேன். நான் எடுத்த எந்த முடிவுகளிலும் இது வரை தோற்றதே இல்லை. ஆனால், வலைப்பூ விசயத்தில் நான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. எழுத வந்த நாளில் எந்த லட்சியமும் இல்லையென்றாலும், பின்னாளில், எப்படியாவது ஒரு வருடத்திற்குள் 200 இடுகைகள் எழுத வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஹிட்டுகள் பெற வேண்டும் என்றும், குறைந்தது ஒரு 100 பாலோயராவது பெறவேண்டும் என்றும், வலைப்பூவில் எழுதுவதால் நம் எழுத்து கவரப்பட்டு அனைத்து பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுத என்னை அழைக்க வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டுவிட்டேன்.
ஆனால் நடந்தது வேறு. கடந்த வருடத்தில் இந்த இடுகையையும் சேர்த்து நான் எழுதிய இடுகைகள் மொத்தம் 153. இந்த நொடிவரை கிடைத்த ஹிட்டுகள் 66,908. கிடைத்த பாலோயர்க்ள் மொத்தம் 77. அனைத்து பத்திரிக்கைகளிலும் கதைகள் வரவில்லை என்றாலும், ஒரே ஒரு கதை ஆனந்த விகடனில் வெளியானது. ஆவிக்கு நன்றி.
நான் நினைத்தமாதிரி ஏன் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு எனக்கு காரணம் தெரிந்தே இருக்கிறது. பல விசயங்களையும் எழுதுபவர்களையே எல்லோரும் அதிகம் படிக்கிறார்கள். ஒரேவிதமான விசயத்தைப் பற்றி எழுதும் போது படிப்பவர்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். நான் அந்த தவறைத்தான் செய்திருக்கிறேன் போல. உண்மையா என்பதை என்னைப் படிப்பவர்கள்தான் விளக்க வேண்டும். பதிவர்கள் அல்லாதவர்கள்தான் என்னை அதிகம் படிக்கிறார்கள் என்ற உண்மையும் எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. என்னுடைய பதிவுகளுக்கு அதிக பின்னூட்டங்கள் கிடைப்பதில்லை. ஏறக்குறைய அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் நான் படித்தாலும் நான் பின்னூட்டமிடுவது மிகக் குறைவு. நான் பின்னுட்டமிட்டால் கொஞ்சம் விரிவாக எழுத நினைப்பேன். ஆனால் அதற்குறிய நேரம் கிடைப்பதில்லை. ஒரு வரியில் எழுதலாம் என்றால், அது டெம்ப்ளேட் பின்னூட்டம் போல் ஆகிவிடுகிறது. இனி படிக்கும் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிட முடிவு எடுத்திருக்கிறேன். இதே போல முன்பு ஒரு முறை முடிவு எடுத்தும் செயல் படுத்த முடியவில்லை. இனி நிச்சயம் அதன்படி நடப்பேன்.
17 லட்சம் ஹிட்டுகள் பெற்ற யுவகிருஷ்ணாவையும், அலக்ஸா ரேங்கில் நல்ல இடத்தில் இருக்கும் கேபிளையும், எழுதாவிட்டால் கூட தினமும் அதிகம் படிக்கிற பரிசலின் எழுத்துக்களையும், ஆயிரம் இடுகைகள் கண்ட கோவி கண்ணனையும் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அவர்கள் இந்த இடத்தை அடைய என்ன மாதிரி உழைத்திருக்க வேண்டும். அவர்களின் இந்த உழைப்பு வீணாக போய்விடாமல் அந்த உழைப்பிற்கான பயனை அவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
மேலே குறிப்பிட்டவர்கள் போல ஆக முடியாவிட்டாலும், அடுத்த ஆண்டு இதே நாள் நான் எழுதும் இரண்டாம் ஆண்டு வலைப்பூ பிறந்த நாளில், குறைந்தது;
01. இரண்டு லட்சம் ஹிட்டுகள்
02. 300 இடுகைகள்
03. 300 பாலோயகள்
பெற்றிருக்க வேண்டும் என்றும்,
அதற்குள்,
04. 5 சிறுகதைகள் ஆவது ஆனந்த விகடனிலோ அல்லது மற்ற பத்திரிக்கைகளிலோ வெளி வரவேண்டும் என்றும்
05. ஒரு புத்தகமாவது வெளிவர வேண்டும்
என்றும் இந்த நாளில் உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன். அதற்கு வாசகர்கள் ஆகிய உங்களின் முழு ஆதரவும் இருக்கும் என்று நம்பி இத்துடன் இந்த இடுகையை முடிக்கிறேன்.
பின் குறிப்பு; " இது தான் உங்கள் வாழ்க்கை லட்சியமா?" என்று கேட்ட என் மகளுக்கு என் பதில், " இது என் வலையுலக வாழ்க்கையின் லட்சியம். தனிப்பட்ட என் வாழ்க்கையின் லட்சியம், கனவு என்பது வேறு. அதை ஓரளவு நான் அடைந்து விட்டாலும், எப்போதும் அதை நோக்கித்தான் என் வாழ்க்கைப் பயணம் இருக்கும். வலையுலகத்தையும், வாழ்க்கையையும் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை"
45 comments:
//இது என் வலையுலக வாழ்க்கையின் லட்சியம். தனிப்பட்ட என் வாழ்க்கையின் லட்சியம், கனவு என்பது வேறு. அதை ஓரளவு நான் அடைந்து விட்டாலும், எப்போதும் அதை நோக்கித்தான் என் வாழ்க்கைப் பயணம் இருக்கும். வலையுலகத்தையும், வாழ்க்கையையும் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை"//
நல்லாயிருக்குங்க.. வலையுலகில் பெற்ற வெற்றியையடுத்து உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் உலகநாதன்..!
உங்களுடைய இலட்சியம் இந்தாண்டு நிச்சயம் நிறைவேற வேண்டும்..!
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துகள் ...
வாழ்த்துக்கள் அண்ணா...!
‘
பரிசல்காரன் ஒரு வலைப்பதிவராக எழுத்தாளராக நிறையபேருக்கு உத்வேகமா எழுத காரணமாக இருக்கிறார்...
வாழ்த்துக்கள் உலக்ஸ். அப்புறம் நீங்களும் பரிசல் போலவே நிறைய எழுதி அந்த கறுப்பு காரையும் சொந்தமாக்கி கொள்ளவும்...
ஒரு வருடத்திற்கு வாழ்த்துகள்
இலக்கை அடைய வாழ்த்துகள்
வலைப்பூவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
// சென்ற வருடம் மார்ச் மாதம் இதே நாளில் (20ம் தேதி ) மாலையில் சின்னதாக மூன்று இடுகைகள் (இராகவன் சார், சரியா?) எழுதினேன் //
கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர். என் தமிழ் ஆசிரியர், மூத்த பதிவர் பழமை பேசி அவர்கள்.
இந்த தருணத்தில் அவருக்கு நன்றி கூற கடமைப் பட்டு இருக்கின்றேன்.
// வலையுலகத்தையும், வாழ்க்கையையும் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை" //
மிக மிகத் தெளிவாக இருக்கின்றீர்கள்.
// 01. இரண்டு லட்சம் ஹிட்டுகள்
02. 300 இடுகைகள்
03. 300 பாலோயகள்
பெற்றிருக்க வேண்டும் என்றும்,
அதற்குள்,
04. 5 சிறுகதைகள் ஆவது ஆனந்த விகடனிலோ அல்லது மற்ற பத்திரிக்கைகளிலோ வெளி வரவேண்டும் என்றும்
05. ஒரு புத்தகமாவது வெளிவர வேண்டும்
//
ஒரு குறிக்கோளுடன் செயல்படுவது என்பது மிகப் பெரிய விஷயம். உங்களுக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்கு... நிச்சயம் வெற்றி அடைவீர்கள்... வாழ்த்துகள்.
என் குறிக்கோள் என்ன தெரியுமா... அதிகபட்ச பின்னூட்டங்களும், கும்மிகளும் போடணும் என்று இருக்கேன்..
கமெண்ட் மாடரேஷன் வைத்துள்ளதால் இதற்கு மேல் பின்னூட்டம் போட முடியலை... சாரி..
// ஒரு வரியில் எழுதலாம் என்றால், அது டெம்ப்ளேட் பின்னூட்டம் போல் ஆகிவிடுகிறது. //
ஒரு வரி பின்னூட்டமா... நானு ஒரு வார்த்தை பின்னூட்டம் போடுவது எப்படி என்று ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கும் போது, நீங்க ஒரு வரி பின்னூட்டம் போடுவது லக்சுரி... லக்சுரி ஐயா லக்சுரி..
வாழ்த்துக்கள் உலக்ஸ்!
நினைச்சதெல்லாம் நடக்கட்டும் மக்கா.
பிறந்த நாள் வாழ்த்துக்களும்!
//நல்லாயிருக்குங்க.. வலையுலகில் பெற்ற வெற்றியையடுத்து உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....//
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சென்ஷி.
//வாழ்த்துக்கள் உலகநாதன்..!
உங்களுடைய இலட்சியம் இந்தாண்டு நிச்சயம் நிறைவேற வேண்டும்..!//
முதல்முறையாக உங்களின் பின்னூட்டம். நன்றி உண்மைத்தமிழன் சார்.
//வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்//
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி எறும்பு.
//வாழ்த்துகள் ...//
வாழ்த்துக்கு நன்றி மோனி.
//வாழ்த்துக்கள் அண்ணா...!//
தங்களின் முதல் பின்னூட்டத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி வஸந்த்.
//வாழ்த்துக்கள் உலக்ஸ். அப்புறம் நீங்களும் பரிசல் போலவே நிறைய எழுதி அந்த கறுப்பு காரையும் சொந்தமாக்கி கொள்ளவும்...//
நன்றி மணிஜீ,
பெயரை மாத்திட்டிங்களா? நல்லா இருக்கு.
//ஒரு வருடத்திற்கு வாழ்த்துகள்
இலக்கை அடைய வாழ்த்துகள்//
நன்றி நர்சிம். ஆச்சர்யமும், அதிர்ச்சியும், ஆனந்தமும், மகிழ்ச்சியும் கலந்த நிலையில் நான். தங்களின் வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி நரிசிம்.
//வலைப்பூவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.//
தங்களின் அனைத்து பின்னூட்டங்களிற்கும், வாழ்த்திற்கும் என் இதயம் கனிந்த நன்றி இராகவன் சார்.
வாழ்த்துகள் உலகநாதன்
எண்ணிய அனைத்தும் நிறைவேற வாழ்த்துகிறேன்!
உங்களின் அனைத்து கனவுகளும் நிறைவேற வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!!!!!
எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு உங்கள் இலக்கு வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ஒரு வருட நிறைவிற்கும், தொடரப்போகும் வெற்றிக்கும் வாழ்த்துகள்.
ஏனுங்க, இந்தப் போடு போடுறீங்களே, பெரிய லட்சியவாதியா இருப்பீங்க போலருகே. என்னை மாதிரி கத்துக் குட்டிங்க, உங்க பதிவையெல்லாம் படிச்சுப் பாக்கணுமுங்க. நம்மளும் இப்படி எழுதக் கத்துக்கணும்னு ஒரு வெறி வருதுங்க! நல்லாயிருங்க!
ஒரு வருடம் முடிந்ததற்கு வாழ்த்துகள் உலக்ஸ். நிறைய பேருக்கு மனதில் இருக்கும் ஆசையை நீங்கள் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
இடுகைகள் எண்ணிக்கை உங்கள் கையில் தான் இருக்கு. நல்ல தரமானதாகவும், சுவாரஸ்யமாகவும், பல விஷயங்களையும் பேசுவதாகவும் எழுதுங்கள் - இப்போது போலவே.
மற்ற படி ஹிட்ஸ், ஃபாலோவர்ஸ் எல்லாம் ஒரு by-product. அவைகளை மட்டும் வைத்து அளவிட முயல்வதில் எனக்கு அவ்வளவு நாட்டமில்லை. உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்தால், அவை நிச்சயம் வந்தே தீரும். நீங்கள் குறிப்பிட்ட லக்கி, பரிசல், கேபிள் முதல் குறிப்பிடாத நர்சிம், கார்க்கி, ஆதி, உண்மைத் தமிழன், அதிஷா என்று இவர்கள் எல்லோருடைய பதிவிலும் இந்த அம்சங்களும், அவற்றுக்குப் பின் அபாரமான உழைப்பும் இருப்பது தெரியும். துறை சார்ந்த அபார இடுகைகள் எழுதும் பலரை (PKP, புருனோ, வாத்தியார் அய்யா, தேவன் மாயம் போன்றோர்) நான் இதில் சேர்த்துக் கொள்ளவே இல்லை :)
அடுத்த வருடம் இவங்க லிஸ்டில் நீங்களும் வர ஆல் த பெஸ்ட்.
அனுஜன்யா
Happy Birthday to http://www.iniyavan.com :))
//வாழ்த்துக்கள் உலக்ஸ்!
நினைச்சதெல்லாம் நடக்கட்டும் மக்கா.
பிறந்த நாள் வாழ்த்துக்களும்!//
வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ராஜாராம்.
//வாழ்த்துகள் உலகநாதன்//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி டிவி ஆர் சார்.
//எண்ணிய அனைத்தும் நிறைவேற வாழ்த்துகிறேன்!//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நாமக்கல் சிபி.
//உங்களின் அனைத்து கனவுகளும் நிறைவேற வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!!!!!//
வருகைக்கு நன்றி அருணா மேடம்.
//எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு உங்கள் இலக்கு வெற்றியடைய வாழ்த்துக்கள்.//
நன்றி கேபிள்.
//01. இரண்டு லட்சம் ஹிட்டுகள்
02. 300 இடுகைகள்
03. 300 பாலோயகள்//
Instead write some goodworthy post. that will get you more name than this.
these are mere figures. evena a passerby can add up the figures.
but a good post written neatly getsu more readers, silent though.
//ஒரு வருட நிறைவிற்கும், தொடரப்போகும் வெற்றிக்கும் வாழ்த்துகள்.//
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி அப்துல்லா.
//ஏனுங்க, இந்தப் போடு போடுறீங்களே, பெரிய லட்சியவாதியா இருப்பீங்க போலருகே. என்னை மாதிரி கத்துக் குட்டிங்க, உங்க பதிவையெல்லாம் படிச்சுப் பாக்கணுமுங்க. நம்மளும் இப்படி எழுதக் கத்துக்கணும்னு ஒரு வெறி வருதுங்க! நல்லாயிருங்க!//
வருகைக்கு நன்றி அக்னிசித்தன்.
//இடுகைகள் எண்ணிக்கை உங்கள் கையில் தான் இருக்கு. நல்ல தரமானதாகவும், சுவாரஸ்யமாகவும், பல விஷயங்களையும் பேசுவதாகவும் எழுதுங்கள் - இப்போது போலவே. //
ரொம்ப ரொம்ப நன்றி அனுஜன்யா சார். உங்களின் இந்த வரிகள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகின்றன.
//அடுத்த வருடம் இவங்க லிஸ்டில் நீங்களும் வர ஆல் த பெஸ்ட்.
அனுஜன்யா//
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மீண்டும் என் இதயம் கனிந்த நன்றி சார்.
//Happy Birthday to http://www.iniyavan.com :))//
நன்றி ரோமியோ.
Tamilish Support to me
show details 2:28 PM (32 minutes ago)
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பரிசல்காரன் அவர்களுக்கு நன்றி!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st March 2010 06:28:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/207437
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Tamilish Support to me
show details 2:28 PM (32 minutes ago)
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பரிசல்காரன் அவர்களுக்கு நன்றி!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st March 2010 06:28:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/207437
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் இனியவன்... !
Congrats Mr.Ulaks...
Wish you all the best...
Regards
Saran
Post a Comment