

KL Tower Petronas Twin Towerஐவிட உயரமானது. ஏன் என்றால், KL Tower இருப்பதே ஒரு ஹில்லின் மேல். 421 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 515 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலேசியாவில் இந்த டவரை டெலி கம்யூனிகேஷனுக்காகவும், ஒளிபரப்பிற்காகவும் பயன் படுத்துகின்றார்கள். KL Tower தான் உலகத்திலேயே நான்காவது உயரமான telecommunications tower. இவ்வளவு உயரமான கட்டிடத்தை, நான்கு வருடத்தில் கட்டி முடித்துள்ளார்கள். இந்த டவர் 90mph wind pressures தாங்குகின்ற அளவிற்கு வடிவமைத்திருக்கிறார்கள்.
டவரின் மேல் ஒரு observation deck உள்ளது. கீழே லிப்டில் ஏறினால் சில நொடிகளில் observation deck ஐ அடைந்து விடலாம். அங்கே இருந்து கோலாலம்பூர் முழுவதையும் பார்க்கலாம். மேலே சென்றவுடன் அனைவருக்கும் ஒரு ஹெட்போனும், ஒரு சின்ன வீடியோவும் கொடுக்கின்றார்கள். அதில் மலாய், ஆங்கிலம், சைனீஸ், தமிழ் மொழிகளில் ஒவ்வொரு இடத்தையும் பற்றி சொல்கிறார்கள். நாம் நமக்கு விருப்பமான மொழியினை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மொத்தம் 12 ஸ்டேஷன்களாக பிரித்து கோலாலம்பூர் முழுவதையும் bird's eye view வால் பார்க்க முடியும்.
அங்கே இருந்து கீழே கோலாலம்பூரை பார்க்கும் அனுபவமே தனிதான். அங்கெங்கே டெலஸ் ஸ்கோப் வசதியும் உண்டு. நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கே செலவிடலாம். மற்றொரு தளத்தில் ரிவால்விங் ரெஸ்டாரண்ட் உள்ளது. அங்கே சென்று சாப்பிடுவதற்கு முன்பதிவு செய்து இருக்க வேண்டும். மேலிருந்து கீழே வந்தவுடன், எப்படி இந்த டவரை கட்டினார்கள் என்பதை ஒரு 15 நிமிட வீடியோவாக காண்பிக்கின்றார்கள். அஸ்திவாரம் போட்டதில் ஆரம்பித்து, திறப்பு விழாவரை காண்பிக்கின்றார்கள்.
மலேசியா வரும் நண்பர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் KL Tower.
கீழே வந்தவுடன் போக வேண்டிய இன்னோரு இடம் Jungle Walking. சிட்டிக்கு நடுவே KL Towerவை சுற்றி ஒரு காடு. அதில் நடப்பதே ஒரு திரில்லான அனுபவம். நாங்கள் அங்கே சென்ற போது, பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டது. பிறகு ஒரு வழியாக கெஞ்சி, எங்களை அனுமதித்தார்கள். ஆனால், கைட் வரவில்லை. நாங்களே சென்றோம். யாருமே இல்லை. நாங்கள் மட்டும்தான். பிறகு நாங்கள் வந்த வழியை தவறவிட்டு லேசான இருட்டில் ஒரு வழியாக மேலே வந்து சேர்ந்தோம்.
நான் எடுத்த மேலும் சில போட்டாக்கள் இங்கே:
8 comments:
Nalla irukku Iniyavan-ji.
Good information.
நல்ல தகவல் பகிர்வு
நிச்சயம் வந்தால் பார்த்துடவேண்டியதுதான்
சிங்க நடை போட்டு சிகரத்துல ஏறு -நு தலைவர் சொன்னபடி சிகரம் சிகரமா ஏறரிங்க....
சிகரம் ஏறியாச்சு ...அடுத்து வானுத்துல ஏற போரிகளா.....
//Nalla irukku Iniyavan-ji.//
வருகைக்கு நன்றி குமார்.
//Good information//
நன்றி ரமேஷ்.
//நல்ல தகவல் பகிர்வு
நிச்சயம் வந்தால் பார்த்துடவேண்டியதுதான்//
வருகைக்கு நன்றி அபுஅஃப்ஸர்.
//சிங்க நடை போட்டு சிகரத்துல ஏறு -நு தலைவர் சொன்னபடி சிகரம் சிகரமா ஏறரிங்க....
சிகரம் ஏறியாச்சு ...அடுத்து வானுத்துல ஏற போரிகளா.....//
வருகைக்கு நன்றி சுதந்திர யோகி.
Post a Comment