Jul 15, 2010

வேதனையும் எரிச்சலும்!

இன்று காலை எங்கள் ஊரில் இருந்து கிளம்பி அலுவலக விசயமாக கோலாலம்பூர் வந்தேன். தொடர்ந்து மீட்டிங். மீட்டிங் எல்லாம் முடித்துவிட்டு பங்ஸார் என்ற இடத்திலிருந்து ப்ரிக்பீல்ட் வந்து ஆனந்தவிகடன் வாங்கி விட்டு ஹோட்டலை நோக்கி வந்து கொண்டிருந்தேன். நான் எப்போது தமிழ் டிரவர்களுடைய டாக்ஸியில் ஏறுவதுதான் வழக்கம். ஏதோ நம்மால் ஆனது, நமது மக்கள் பிழைக்கட்டுமே என்ற நப்பாசையில். இன்றும் ஒரு தமிழ் டிரைவர்தான் டாக்ஸி ஓட்டி வந்தார். நன்றாக பேசிக்கொண்டு வந்தார்.

நான் மீட்டிங்கிலிருந்த போது நிறைய போன்கால்கள் வந்தன. பொதுவாக மீட்டிங்கில் இருக்கும்போது நான் போன் அட்டண்ட் செய்வதில்லை. மீட்டிங் முடிந்தவுடன் போனை எடுத்து ஒவ்வொரு நம்பராக பார்த்துக்கொண்டு வந்தேன். அதில் அட்ரஸ் புக்கில் இல்லாத ஒரு நம்பர் இருக்கவே அந்த நம்பருக்கு கால் பண்ணினேன். போன் எடுத்தது என் அம்மா. அத்தையின் போனில் இருந்து பேசி இருக்கிறார்கள். பிறகு போன கையில் வைத்துக்கொண்டு வந்தேன்.

எப்போதும் எந்த தமிழ் டிரைவராக இருந்தாலும் அவர்களுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து அடுத்த முறை வந்தால் கூப்பிடுங்கள் சார், என்பார்கள். இந்த டிரைவர் தரவில்லை. ஹோட்டல் வந்தவுடன் லக்கஜை எடுத்து வைத்துவிட்டு காரை விட்டு இறங்கியதும், ஏதோ தோன்றவே, பையில் செக் செய்தேன். என் போனை காணவில்லை.

உடனே காரை நோக்கி ஓடினேன். நிற்காமல் போய்விட்டது. உடனே நண்பரின் போன் மூலம் என் நம்பருக்கு தொடர்பு கொண்டேன். போன் ரிங் ஆனது, ஆனால் அவர் எடுக்கவில்லை. எஸ் எம் எஸ் மூலம் என் நண்பரின் நம்பர், ரூம் நம்பர் கொடுத்து போனை என்னிடம் சேர்த்துவிடுங்கள் தெரிவித்தேன். டிரைவர் என்னிடம் பேசிய உரையாடல்கள் மூலம் அவர் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். போன் ரிங் ஆகும் வரை எனக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் போனில் வாய்ஸ் மெயில் மட்டுமே வந்தது.

அப்படி என்றால் போனை எடுத்து சிம் கார்டை தூக்கி வீசிவிட்டார் என்றுதானே அர்த்தம். ஒரு தமிழ் டிரைவர் தமிழனுக்கே இப்படி செய்யலாமா?

சாதாரணமான போன் என்றால் கவலைப்பட மாட்டேன். போன வாரம்தான் வாங்கினேன்.

BlackBerry 9700 Bold

விலை 25000 ரூபாய்.

சரி, இனி சாதாரண போன் உபயோகிக்கலாம் என என்னால் நினைக்க முடியாது. ஏனென்றால், செல்போன் நிறுவனத்துடன் ஒருவருட காண்ட்ரெக்ட் போட்டுள்ளேன். மாதம் கமிட்மெண்ட் தொகையாக குறைந்தது 2000ரூபாய் இன்னும் ஒரு வருடத்திற்கு கட்ட வேண்டும்.

வேதனையில் இருக்கிறேன்.

போனை என்னிடம் திருப்பி தராத அந்த டாக்ஸி டிரைவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

12 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

மலேசியா டக்சிகாரர்கள் மட்டுமல்ல, அங்கு பெரும்பாலும் திருட்டு அதிகம், என் நண்பர் உணவகத்தில் சாப்பாட்டு மேஜையில் போனை வைத்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க லவட்டிக்கொண்டு ஓடிவிட்டனர் புது ஐபோன், அதுவும் சிங்கப்பூரில் காண்ட்ராக்டில் எடுத்ததுதான்...

puvanes said...

as a malaysian indian sorry to hear this...valkaiyil ethanaiyo vishyanggal ilakka kudum athil ithuvum ondrru...panam ippadi than virayam aganum enbathu unggalin ippothaiya vithi...take it easy..pa

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

திருட்டும், திருடர்களும் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

உலக்ஸ்.. டோண்ட் வொர்ரி.. இந்த 25000 ரூபாயை வேற ஏதாவது ஒரு வழில முருகன் நிச்சயமா திருப்பிக் கொடுப்பான்..!

வெயிட் அண்ட் ஸீ..!

Vijay Anand said...

//போனை என்னிடம் திருப்பி தராத அந்த டாக்ஸி டிரைவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.//
உங்களுக்கு நல்ல மனசு, சார்.

நிகழ்காலத்தில்... said...

சரி, தலைக்கு வந்தது செல்போனோட போச்சு அப்படின்னு நினைச்சுக்குங்க...

என். உலகநாதன் said...

//மலேசியா டக்சிகாரர்கள் மட்டுமல்ல, அங்கு பெரும்பாலும் திருட்டு அதிகம், என் நண்பர் உணவகத்தில் சாப்பாட்டு மேஜையில் போனை வைத்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க லவட்டிக்கொண்டு ஓடிவிட்டனர் புது ஐபோன், அதுவும் சிங்கப்பூரில் காண்ட்ராக்டில் எடுத்ததுதான்...//

தங்கள் முதல் வருகைக்கு நன்றி செந்தில்.

என். உலகநாதன் said...

//as a malaysian indian sorry to hear this...valkaiyil ethanaiyo vishyanggal ilakka kudum athil ithuvum ondrru...panam ippadi than virayam aganum enbathu unggalin ippothaiya vithi...take it easy..pa//

வருகைக்கு நன்றி புவனா.

என். உலகநாதன் said...

//உலக்ஸ்.. டோண்ட் வொர்ரி.. இந்த 25000 ரூபாயை வேற ஏதாவது ஒரு வழில முருகன் நிச்சயமா திருப்பிக் கொடுப்பான்..!

வெயிட் அண்ட் ஸீ..!//

ரொம்ப நன்றி அண்ணே.

என். உலகநாதன் said...

//உங்களுக்கு நல்ல மனசு, சார்.//

வருகைக்கு நன்றி விஜய் ஆன்ந்.

என். உலகநாதன் said...

//சரி, தலைக்கு வந்தது செல்போனோட போச்சு அப்படின்னு நினைச்சுக்குங்க...//

வருகைக்கு நன்றி சிவா.

Kumar said...

உங்களுக்கு நல்ல மனசு, சார்.

Anonymous said...

Great read! Maybe you could do a follow up on this topic :)

Sincere Regards,
Amparo