Dec 31, 2010

நீங்கள் எப்படி?

ஜாதகம், ஜோதிடம் இதில் எல்லாம் ஓரளவு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்து வந்தேன். சமீபத்தில் கேள்விபட்ட சம்பவங்களால், உண்மைதானோ என எண்ணத்தோன்றுகிறது.

ஏற்கனவே இதைப்பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.


இரண்டு நண்பர்கள் அவர்களின் எதிர்காலம் சம்பந்தமாக தெரிந்து கொள்ளவும், அவர்கள் ஆரம்பிக்க போகும் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஜோசியரைப் பார்க்க போனார்கள். ஜாதகத்தை வாங்கி பார்த்த ஜோசியர்,

"உங்கள் இருவரின் ஜாதகப்படி, நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கவே முடியாதே? சொன்னால் கோபித்துக்கொள்ளக் கூடாது. ஏதேனும் உயிர்பலி ஏற்படனுமே?"

இதைக்கேட்ட நண்பனின் அம்மா, உடனே எழுந்து கோபித்துக்கொண்டு வந்து விட்டார்கள்.

இரண்டாவது சம்பவம்:

அதே இரண்டு நண்பர்களும் இந்த மாத ஆரம்பத்தில் அந்த ஜோதிடரிடம் சென்றார்கள். முதல் நண்பர் நல்ல பணக்காரர். அவர் ஒரு வீடு மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருந்தார். அதற்காக அந்த வீட்டின் ராசி பார்ப்பதற்காக அவரிடம் சென்றார்.

மீண்டும் ஜோசியம் பார்த்த அவர்,

"ஏன் இந்த வீட்டை வாங்கினீர்கள்? நிச்சயம் ஒரு உயிர்பலி உங்கள் வீட்டில் நடக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.

நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ? அவர் சொன்னது அப்படியே நடந்துவிட்டது. நண்பரின் மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இரண்டாம் நண்பர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார்.

இதைப்பற்றி ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன் "குடி! குடி!! குடி!!! "


மூன்றாவது சம்பவம்:

என் நண்பர் ஒருவர் கார் ஓட்டிச் செல்லும்போது ஆக்ஸிடண்ட் ஆகி, கால் எலும்பு முறிந்து அவதிப்படுகிறார். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், "எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஜாதகப்படி அவருக்கு இந்த மாதத்தில் கண்டம் இருந்தது"

என்னால் நம்புவதா? வேண்டாமா? எனக்குழப்பமாக உள்ளது. எல்லாமே ஜாதகப்படியும், விதிப்படியும் நடக்கிறது என்றால், கீழே எனக்குத்தோன்றும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

01.இங்கே நன்றாக இருப்பவருடைய ஜாதகம் போல், அதாவது அதே நட்சத்திரம், ராசி, ஜாகப்பலன்களுடன், காஷ்மீரிலோ அல்லது இஸ்ரேலிலோ கூட இருக்கலாம் இல்லையா? இவர் இங்கே நன்றாக இருக்கும் போது அவர்கள் இறந்துபோகிறார்களே எப்படி?

02. டிரெயின் விபத்தோ, அல்லது சுனாமி போன்றோ விபத்துக்களோ நடக்கும்போது ஆயிரக்கணக்கானவர்கள் சாகும்போது, அத்தனை பேருடைய ஜாதகமும் சரியில்லை என எடுத்துக்கொள்ள வேண்டுமா? அது எப்படி ஒரே நாளில் விதி முடிந்த அத்தனை பேரும் ஒரே நாளில் ஒரே இடத்தைல் கூடினார்கள்?

எனக்கு புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


3 comments:

உருத்திரா said...

நீங்க இவ்வளவு படித்திருந்தும் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விட்டீர்கள்,வான மண்டலத்தில் ஊர்களுக்கு மேல் இருக்கும் அட்சாம்சர ரேகைகள்,தீர்க்காம்ச ரேகைகள் Logtitude,latitudeஇவைகள் மூலமாகத்தான் கிரகங்களின் பார்வைகள் தீர்மானிக்கப் படுகிறது.இது தெரிந்திருந்தால் ஊர்களின் பெயர்கள் தேவையில்லை.இது இடத்துக்கிடம் வேறு படும்.காஸ்மீரில் இருப்பவனுக்கும்,பிறந்தவனுக்கும்,கன்னியாகுமரியில் பிறந்தவனுக்கும் சூரிய உதயம் வேறுபடுவதை அவதானியுங்கள்.நமது முன்னோர்கள் கணணியும் இல்லாமல் கல்குலேட்டரும் இல்லாமல் எவ்வளவோ சாதித்து
விட்டார்கள்.நம்மளால் அதை ஒழுங்காக வாசிக்கவும் முடியவில்லை அதுதான் பிரச்சினை.

உருத்திரா said...

இந்த வலைப் பூவில் இன்னும் விளக்கமுள்ளது சென்று பார்க்கவும்
http://classroom2007.blogspot.com/2007/02/3.html

என். உலகநாதன் said...

//நம்மளால் அதை ஒழுங்காக வாசிக்கவும் முடியவில்லை அதுதான் பிரச்சினை.//

தங்கள் வருகைக்கிற்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.