May 6, 2011

மிக்ஸர் - 06.05.2011


பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் கேட் (Kate Middleton) திருமணத்தை எல்லோரும் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் திருமணத்தன்று யாருமே டயனாவை நினைக்காமல் யாருமே இருந்திருக்க முடியாது. சார்லஸ் டயானா திருமணம் நடந்த போது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். டயனா இறந்தபோது மிகவும் வேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன். டயானவின் பெர்சனல் வாழ்க்கை அப்படி ஒன்றும் நன்றாக அமையவில்லை. அவரைப் போகும் இடம் எல்லாம் துரத்தி துரத்தி கடைசியில் சாகடித்துவிட்டார்கள். 

வில்லியமும், கேட் மிடில்டனும் தேன்நிலவு சென்றுவிட்டார்கள். அவர்கள் எந்த நாட்டிற்கு சென்று உள்ளார்கள் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்கள். கேட் மிடில்டனுக்கு மிகவும் முக்கியமான கடமை ஒன்று இப்போது இருக்கிறதாம். என்னத் தெரியுமா? அவர் இன்னும் 9 மாதத்திற்குள் கர்ப்பமாக வேண்டுமாம். இல்லை என்றால் பிரிட்டிஷ் அரசக் குடுமபத்தில் 200 வருடமாக கட்டிக்காத்து வந்த பழக்கமே மாறிப் போய்விடுமாம். இப்படி சொல்வது நான் அல்ல? 

ஆண்ட்ரு மார்டன், டயானவின் வாழ்க்கையை புத்தகமாக எழுதியவர் சொல்கிறார். வில்லியமிற்கு முன்னால் யாருமே இந்த விசயத்தில் நேரத்தை வீணடித்ததே இல்லையாம். எல்லோருமே டக் டக் என்று அடுத்த வருடமே குழந்தை பெற்றிருக்கின்றார்கள். சார்லஸ்,டயானா திருமணம் நடந்தது 1981. பதினொரு மாதத்தில் வில்லியம் பிறந்தாராம். பிரின்ஸ் பிலிப் , ராணி எலிசப் திருமணம் நடந்தது 1947லில். சார்லஸும் அடுத்த வருடத்திலேயே பிறந்தாராம். ம்ம்ம், வில்லியமுக்கும் அடுத்த வருடமே குழந்தை பிறக்க வாழ்த்துவோம்.

****************************************************

சமீபகாலமா என் வயதில் உள்ளவர்கள் யாராவது பெரிய பாடகராகவோ அல்லது பெரிய ஸ்போர்ட்ஸ்மேனாகவோ அல்லது பெரிய பிஸினஸ்மேனாகவோ இருப்பதைப் பார்த்தால், நம்மால் அவ்வாறு வரமுடியவில்லையே என்ற ஏக்கமும், வருத்தமும் வருகிறது. பெரியவர்கள் சொல்வதுபோல் நமக்கு கீழே உள்ளவர்களை நினைத்து என்னால் சந்தோசப்பட முடியவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது மற்றவர்களுக்கும் அப்படித் தோன்றுமா? எனத்தெரியவில்லை.

****************************************************

ஆபிஸ்ல வேலைப்பார்த்துக்கொண்டு, மற்ற வேலைகளுக்கிடையே தினமும் எழுதுவது என்பது மிகவும் கஷ்டமானக் காரியம். எனக்கு தினமும் ஒரு பக்கம் எழுதவே அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. சுஜாதா எப்படி இத்தனை வருடம் இவ்வளவு புத்தகங்கள் எழுதினார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு குறுநாவலோ அல்லது ஒரு தொடர்கதையோ எழுதலாம் என்று ஆரம்பிக்கையில் ஆயிரத்தெட்டு தடங்கல்கள் வருகிறது. அவர் எப்படி ஒரே வாரத்தில் ஆறு பத்திரிகைகளில் எல்லாம் தொடர்கதை எழுதினார் என்பதை என்னால் நினைத்தே பார்க்கமுடியவில்லை. இன்னும் எத்தனை தலைமுறை ஆனாலும் அவரின் புகழ் அப்படியே மாறாமல்தான் இருக்கும். ரியலி க்ரேட் மேன்.

****************************************************

பிஸா சாப்பிடுவதை பிள்ளைகள் ஏதோ தைப்பொங்கல் சாப்பிடுவது போல சந்தோசப்படுவார்கள். அதிலும் அவர்களே நெட்டில் போய் பார்த்து அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை செலக்ட் செய்து ஆன் லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் ஒருமுறை கூட ஆன்லைனில் ஆர்டர் செய்வது அப்படியே வருவது கிடையாது. ஏதாவது ஒன்று எடுத்துவர மறந்திருப்பார்கள். ஆனால், அடுத்த 15 நிமிடத்தில் கொண்டு வந்து கொடுப்பார்கள், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு பிஸாவோ அல்லது கார்லிக் பிரட்டோ இருக்கும். நான் அடிக்கடி நினைப்பதுண்டு இது ஒருவேளை மார்கெட்டிங் உத்தியோ என்று! 

ஒரு மாறுதலுக்காக பிஸா ஹட் சென்று சாப்பிட முடிவெடுத்து கடைக்கு சென்றோம். நாங்கள் ஆர்டர் செய்ததைவிட கூடுதலாகவும், பெப்ஸி எல்லாம் இலவசமாகவும் கொடுத்தார்கள். 'நான் ஆர்டர் பண்ணவில்லையே?' என்றால், 'பரவாயில்லை, சாப்பிடுங்கள்' என்கிறார்கள். பில் வரும் வரை எனக்கு கொஞ்சம் டவுட்டாகவே இருந்தது. நல்ல வேலை அதிகம் சார்ஜ் செய்யவில்லை. 

நிச்சயம் இது எல்லாம் ஒரு வியாபார உத்தி என்றுதான் நினைக்கிறேன்.

****************************************************

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது ஏதோ எங்கள் வீட்டில் உள்ள யாரோ ஒருவர் ஆஸ்பத்திரியில் இருப்பது போல் இருக்கிறது. இதைப் பற்றி நேற்று ஒரு உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் என்னைக் கண்டபடி திட்டினார், "என்ன இப்படி இருக்கீங்க? ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க? அவரு கோடி கோடியா சம்பாரிச்சு அவர் சேர்த்தாரு, உனக்கா கொடுத்தார்?" 

ஆனா, என்னால அப்படி நினைக்க முடியலை. அவரை சினிமாவில் பார்த்து நிறைய சந்தோசப்பட்டிருக்கேன். நமக்கு சந்தோசத்தை கொடுத்த ஒருவர் முடியாமல் இருக்கும் போது கொஞ்சம் மனசு கஷ்டப்படுகிறது, அவ்வளவுதான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல திருப்பதி ஏழுமலையானைப் பிரார்த்திக்கிறேன்.

****************************************************

சிறுகதைகளை, கட்டுரைகளை புத்தகங்களாக கொண்டு வர நினைக்கும் புதியவர்களுக்கு ஒரு ஆலோசனை. புத்தகம் கொண்டுவருவது நல்ல விசயம்தான். ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் அம்மா, அப்பா மற்றும் முன்பின் அறிமுகம் இல்லாத, பழக்கம் இல்லாதவர்களைத் தவிர யாரிடமும் உங்கள் புத்தகத்தைப்பற்றி கருத்து கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் பதிலால், நீங்கள் நொந்து போய் எழுதுவதையே நிறுத்தும் ஆபத்து இருக்கிறது. உண்மையாகவே நாம் எழுதியது பிடிக்காமல் அவர்கள் விமர்சித்தால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் சிலர்.......

என்னிடம் பேசியவர்களின் உரையாடல்கள் சில உங்கள் பார்வைக்கு:

"அட்டைப்படம் நல்லா இருக்கு. படிக்க ஆரம்பிச்சேன், அதுக்குள்ள வேற வேலை வந்துடுச்சு. எப்ப படிச்சு முடிக்கிறேனோ அப்ப சொல்றேன்"

(இவரு எப்ப படிச்சு முடிச்சு எப்ப சொல்வாரு?)

"புத்தகத்தை படிக்கலான்னு நினைச்சு உட்கார்ந்தேன். அதுக்குள்ள ஒரு போன் வந்துடுச்சு, கண்டினியூ பண்ண முடியலை"

(இவர் ஒரு மாசாமா இன்னும் போன் பேசிட்டே இருக்கார் போல)

"எங்க சார், ஆரம்பிச்சேன், அதுக்குள்ள ஒரே பிஸியாயிட்டேன். சொல்றேன், முழுசும் படிச்சிட்டு சொல்றேன்"

"டூர் போயிட்டேன், வந்தவுடன் வேற வேலையில உட்கார்ந்துட்டேன். படிச்சிட்டு கூப்புடறேன்"

நல்லா யோசிச்சுப்பாருங்க, எவ்வளவு ஆர்வத்தோட நீங்க புத்தகத்தை கொடுத்து, அவங்க ஒரு வார்த்தை நம்ம புத்தகத்தைப் பத்தி பேசமாட்டாங்களானு இருப்பீங்க, இப்படி அவங்க சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்.

அவங்க எல்லாம் காசு கொடுத்து புத்தகம் வாங்கலை எல்லாமே ஓசில கொடுத்ததுதான் எனபதையும் உங்ககிட்ட சொல்ல கடமைப்பட்டுருக்கேன்.

****************************************************


13 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

தலைவரே ஓசில வாங்குனா எந்தப்பொருளுக்குமே அருமை தெரியாது..

Ravisankaranand said...

//ஏக்கமும், வருத்தமும் வருகிறது.// - அதான் எழுத்தாளர் உலகநாதன் யாரும் இல்லையே நீங்க ஒருத்தர் தானே இருக்கீங்க :)

Anonymous said...

//"என்ன இப்படி இருக்கீங்க? ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க? அவரு கோடி கோடியா சம்பாரிச்சு அவர் சேர்த்தாரு, உனக்கா கொடுத்தார்?" //
நானும் திட்டறேன். ஹி ஹி.


//ஆனா, என்னால அப்படி நினைக்க முடியலை. அவரை சினிமாவில் பார்த்து நிறைய சந்தோசப்பட்டிருக்கேன். நமக்கு சந்தோசத்தை கொடுத்த ஒருவர் முடியாமல் இருக்கும் போது கொஞ்சம் மனசு கஷ்டப்படுகிறது, அவ்வளவுதான்.//
இது புதுசு.யாரும் இப்படி சொல்லிக் கேட்டதில்லை.

vasan said...

/சமீபகாலமா என் வயதில் உள்ளவர்கள் யாராவது பெரிய பாடகராகவோ அல்லது பெரிய ஸ்போர்ட்ஸ்மேனாகவோ அல்லது பெரிய பிஸினஸ்மேனாகவோ இருப்பதைப் பார்த்தால், நம்மால் அவ்வாறு வரமுடியவில்லையே என்ற ஏக்கமும், வருத்தமும் வருகிறது. பெரியவர்கள் சொல்வதுபோல் நமக்கு கீழே உள்ளவர்களை நினைத்து என்னால் சந்தோசப்பட முடியவில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது மற்றவர்களுக்கும் அப்படித் தோன்றுமா? எனத்தெரியவில்லை./
Psychologically when one crosses the age of 50, these thoughts will cross, since one feels more of the home coming than the outgoing.

பரிசல்காரன் said...

முதல் கமெண்ட்டுக்கு

:-))

ரஜினி பத்தின பத்திக்கு - ரிப்பீட்டிக்கறேன்..

என். உலகநாதன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
தலைவரே ஓசில வாங்குனா எந்தப்பொருளுக்குமே அருமை தெரியாது..//

தலைவரே, வருகைக்கு நன்றி.

என். உலகநாதன் said...

Ravisankaranand said...
//ஏக்கமும், வருத்தமும் வருகிறது.// - அதான் எழுத்தாளர் உலகநாதன் யாரும் இல்லையே நீங்க ஒருத்தர் தானே இருக்கீங்க :)

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பா.

என். உலகநாதன் said...

அனாமிகா துவாரகன் said...
//"என்ன இப்படி இருக்கீங்க? ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க? அவரு கோடி கோடியா சம்பாரிச்சு அவர் சேர்த்தாரு, உனக்கா கொடுத்தார்?" //
நானும் திட்டறேன். ஹி ஹி.


//ஆனா, என்னால அப்படி நினைக்க முடியலை. அவரை சினிமாவில் பார்த்து நிறைய சந்தோசப்பட்டிருக்கேன். நமக்கு சந்தோசத்தை கொடுத்த ஒருவர் முடியாமல் இருக்கும் போது கொஞ்சம் மனசு கஷ்டப்படுகிறது, அவ்வளவுதான்.//
இது புதுசு.யாரும் இப்படி சொல்லிக் கேட்டதில்லை//

வருகைக்கிற்கும் கருத்திற்கும் நன்றி அனாமிகா.

என். உலகநாதன் said...

//Psychologically when one crosses the age of 50, these thoughts will cross, since one feels more of the home coming than the outgoing.//

வாசன் சார், நான் இன்னும் 50ஐ கடக்கவில்லை. வருகைக்கிற்கு நன்றி சார்.

என். உலகநாதன் said...

பரிசல்காரன் said...
முதல் கமெண்ட்டுக்கு

:-))

ரஜினி பத்தின பத்திக்கு - ரிப்பீட்டிக்கறேன்..

நன்றி பரிசல்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரஜினி சாருக்காக நானும் பிரார்த்திக்கிறேன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..அருமையா இருக்கே....இது!

என். உலகநாதன் said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'என். உலகநாதன்: மிக்ஸர் - 06.05.2011' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 6th May 2011 07:21:01 AM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/469948

Thanks for using Indli

Regards,
-Indli