Oct 30, 2011

பாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


எனக்கு பாக்யராஜ் என்றால் அவ்வளவு பிரியம். சிறு வயதில் அவருடைய அனைத்து படங்களையும் பல முறை பார்த்து ரசித்திருக்கின்றேன். இந்தியாவிலேயே அவர் அளவு ஸ்கிரின் ப்ளேயில் கொடிக்கட்டி பறந்தவர் யாரும் இல்லை எனலாம். அவருடைய படங்களின் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாரதிராஜாவுடன் இருந்த சமயங்களில் வந்த படங்கள் அற்புதமானவை எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது நம்மை புதுப்பாடல்கள் ஆக்கிரமித்து விட்டன. என்னதான் A R ரகுமான் ஆஸ்கார் அவார்ட் வாங்கி இந்தியாவை பெருமை படுத்தி இருந்தாலும், என்னால் இன்னமும் இளையராஜாவை விட்டு வெளியே வர முடியவில்லை.

இன்னமும் என் வீட்டில், காரில் என் செவிகளை இனிமையாக்குவது இளையராஜாவின் பாடல்கள்தான். ஏறக்குறைய அனைத்து பாடல்களும் என் வசம் இருந்தாலும், இல்லாத சில பாடல்களும் அவ்வவ்ப்போது நினைவுக்கு வருகின்றன. அவைகளை தேடித்தேடி டவுண்ட்லோட் செய்கிறேன்.

ஆகஸ்டில் இந்தியா சென்ற போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அதிகாலை விமானம் என்பதால் வீட்டிலிருந்து இரவே கிளம்ப வேண்டி இருந்தது. அதனால் இரவில் ஒரு டாக்ஸியில் சென்றோம். நான்கு மணி நேர பயணம். டாக்ஸி ஓட்டியவர் ஒரு மலேசியர். பெயர் யாசின். கார் வீட்டை விட்டு கிளம்பியதுமே என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிட்டார்.  இளையராஜாவின் அற்புதமான பழைய பாடல்கள் அடங்கிய ஆடியோ சிடியை ஆன் செய்தார். சந்தோசத்துடனும், கொஞ்சம் அதிர்ச்சியுடனும் அவரைப் பார்த்து கேட்டேன், 

"நீங்கள் எப்படி இந்த பாடல்களை எல்லாம்?"

"ஏன் கேட்கக்கூடாதா? அற்புதமான இசை அமைப்பாளர் உங்கள் இளைய ராஜா" என்றவர் சில பாடல்களை தமிழில் பாடி ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் இளையராஜா. ஒரு மலாய் பேசும் நபரையும் தன் இசையால் கட்டிப் போட முடியும் என்று நிரூபித்து விட்டார்.  அன்றுதான் மறந்து போன பல இளையராஜா பாடல்களை மீண்டும் கேட்டேன். அன்றைய இரவை ஒரு அற்புதமான இரவாக மாற்றி எங்களை சந்தோசத்தினால் ஆழ்த்தினார் அந்த டாக்ஸி டிரைவர்.

மலேசியாவுக்கு திரும்பி வந்தபோதும் அவரையே ஏற்போட்டுக்கு வரச்சொல்லி இருந்தேன். இந்த முறை வேன் எடுத்து வந்திருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், வேனில் ஒரு டிவியும் DVD ப்ளேயரையும் எங்களுக்காக ஏற்பாடு செய்து இளையராஜா பாடல்களை எல்லாம் எங்களுக்காக பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த சமயத்தில் பார்த்த பாடல் இந்த பாடல். அதன் பிறகு தினமும் குறைந்தது ஐந்து முறையாவது பார்க்கிறேன், கேட்கிறேன்.

ஆடியோ மட்டும் கேட்டால், ஜானகியின் அற்புதமான தேன் கலந்த குரலையும், மலேசியா வாசுதேவனின் மயக்க வைக்கும் குரலையும், இளையராஜாவின் தேனிசையையும் கேட்டு மகிழலாம்.

வீடியோவில் பார்த்தால் என் அன்புக்குறிய பாக்யராஜின் நடையையும், ரத்தி அக்னிஹோத்திரியின் மழலையான வாயசைப்பையும் காணலாம். இதோ உங்களுக்காக அந்த பாடல்:


7 comments:

சண்முகம் said...

எனக்கும் பாக்கியராஜ் படங்கள் பிடிக்கும்.

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

என். உலகநாதன் said...

//சண்முகம் said...
எனக்கும் பாக்கியராஜ் படங்கள் பிடிக்கும்//

வருகைக்கு நன்றி சண்முகம்

என். உலகநாதன் said...

நன்றி ஷஹி

Jayadev Das said...

பழைய பாடல், ஆனாலும் இன்னைக்கு கேட்டப்போ, என்னை எங்கே கூட்டிகிட்டு போயிடிச்சு. இளையராஜா legend தான், ஆனா இப்போ அவுட் ஆப் fashion ஆயிட்டார். What do to? நன்றி நண்பரே.

Jayadev Das said...

.

என். உலகநாதன் said...

//Jayadev Das said...

பழைய பாடல், ஆனாலும் இன்னைக்கு கேட்டப்போ, என்னை எங்கே கூட்டிகிட்டு போயிடிச்சு. இளையராஜா legend தான், ஆனா இப்போ அவுட் ஆப் fashion ஆயிட்டார். What do to? நன்றி நண்பரே.//

வருகைக்கு நன்றி நண்பா