Jun 19, 2013

நாக்குல சனி!

நான் மிக ஓப்பனாக பேசக்கூடியவன். இதை என்னுடன் பழகியவர்கள் மட்டுமே அறிய முடியும். அதிலும் பயம் என்றால் என்னவென்று கேட்பவன். மிகவும் போல்டாக பேசுபவன். எதையும் யோசித்து பார்க்காமல் படார் என்று முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிடுவேன். இது அப்பாவிடம் இருந்து எனக்கு வந்த பழக்கம். இதனால் நிறைய நன்மைகள் என்றாலும், அதே அளவிற்கு பாதிப்பும் உள்ளது. இதனால்தான் நிறைய நண்பர்கள் முதலில் என்னிடம் நெருங்குவதற்கே யோசிக்கிறார்கள். ஆனால் பழகி பார்த்தவர்கள் நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.

மனைவியும் இதே கருத்தை பல முறை சொல்லி இருக்கிறார். "ஏதோ உங்கள் ஜாதகம் நன்றாக இருப்பதால் பிரச்சனை இல்லாமல் இருக்கின்றீர்கள். இல்லை என்றால் உங்கள் வாய்க்கு...."

சொல்வது என் காதலி என்பதால் ஒரு புன்முறுவலுடன் கடந்து சென்றுவிடுவேன்.

இதை நான் இங்கே சொல்வதற்கு காரணம், சமீபத்தில் நண்பர் ஒருவருடன் நடந்த வாக்குவாதம்தான். நண்பர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் பேசும் போது, "நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. உங்கள் நல்லதுக்காத்தான் சொல்கிறேன்" என்றார்.

"திடீரென எதற்காக இப்படி சொல்கிறீர்கள்?" என்றேன்.

"சமீபகாலமாக நீங்கள் பேசுவதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. யாருக்கும் நீங்கள் பயப்படுவதில்லை. அதனால் சொன்னேன்" என்றார்.

"அப்படியா?"

"இதை ஒரு நண்பனின் அறிவுரையாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் வளர வேண்டி இருக்கிறது" என்றார்.

"இதற்கு மேலும் வளர்ந்து நான் என்ன செய்ய போகிறேன்?" என்றேன் கிண்டலாக.

அவரும் "இன்னும் இருபது வருசம் நீங்கள் உழைக்கலாம். சிறுவயதிலேயே பெரிய பதவிக்கு நீங்கள் வந்துவிட்டதால்தான் இப்படி பேசுகின்றீர்கள்" என்றார்.

உடனே நான், "நானும் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றேன்.

"என்ன?"

"தயவு செய்து நீங்கள் யாருக்கும் அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் முதுகை நீங்கள் பார்த்துக்கொள்வது நல்லது" என்றேன்.

அவர் முகத்தில் ஈயாடவில்லை. நல்ல வேளை அவர் எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை. அவர் ஒரு பொதுவான நண்பர்தான். நான் சொல்லியதை கூட நண்பர்கள் அவர் சொன்னதில் என்ன தவறு? நல்லதுக்குத்தானே சொன்னார் என்று யோசிக்கலாம். ஆனால் சொல்வது யார் என்பதில்தான் பிரச்சனை.

சொன்னவர் ஒன்றும் யோக்கியர் அல்ல. அவர் சரியான சொம்பு பார்ட்டி. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர். சுயநலவாதி. 

சில பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தன்னை பற்றி அறிந்து கொள்ளாமல் உடனே அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள். யார் என்ன அறிவுரை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடியவன் தான் நான். ஆனால் அதற்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா? ஒருவன் கடைசி வரை அவனை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், நம்மை பற்றியும் எந்த புரிதலும் இல்லாமல் நமக்கு அறிவுரை சொன்னால் அதை கேட்க வேண்டுமா என்ன?

ஆனால் என்ன சொன்னாலும், நான் என்ன எழுதினாலும் 'நான் கொஞ்சம் போல்டாகவும், அதிகமாகவும், யோசிக்காமலும், பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமலும், முகத்தில் அடித்தால் போல் பதில் சொல்கிறவன்தான்' என்ற உண்மையை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.


8 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

அதென்ன எந்த பக்கம் பார்த்தாலும் இந்த பேச்சு பற்றிய பதிவே என் கண்ணுக்கு படுகின்றது. நானும் உங்களைப் போலத்தான். ஆனா இப்ப பேசுறதுனாவே பயமா இருக்கு உலகநாதன். அந்தஅளவுக்கு பாடங்கள் கிடைத்து விட்டது. நமக்கான மகிழ்ச்சி நம்முடைய தனிப்பட்ட குணநலன்களில் தான் இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

// மூடர்களே... பிறர் குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்...
முதுகினில் ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்...

சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்.... மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினை காட்டுதடா... //

வரிகள் : கண்ணதாசன்

உண்மையை ஒத்துக் கொள்வது பெரிய விசயம்...

நேரம் கிடைப்பின் : இன்றைய பகிர்வு...

பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?
http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

வாழ்த்துக்கள்... நன்றி...

Never give up said...

epporul yaar yaar vaai ketpinum apporul
meiporul kaanpadhu arivu

I dont know you but idhu chattunu thonithu.....

Geetha Ramkumar

கவிப்ரியன் said...

இதனால நெறைய கெட்ட பேர்தான். எனக்கு யாரைப்பற்றியும் கவலை இல்லை என்று இருக்கவும் முடியாது. சமூகத்தில் நாம் தனித்து இல்லை. நண்பர்களையும் உறவினர்களையும் நாம் இழக்க விரும்புவதில்லைதானே?

என். உலகநாதன் said...

//ஜோதிஜி திருப்பூர் said...
அதென்ன எந்த பக்கம் பார்த்தாலும் இந்த பேச்சு பற்றிய பதிவே என் கண்ணுக்கு படுகின்றது. நானும் உங்களைப் போலத்தான். ஆனா இப்ப பேசுறதுனாவே பயமா இருக்கு உலகநாதன். அந்தஅளவுக்கு பாடங்கள் கிடைத்து விட்டது. நமக்கான மகிழ்ச்சி நம்முடைய தனிப்பட்ட குணநலன்களில் தான் இருக்கு.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜோதிஜி.

என். உலகநாதன் said...

//பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?
http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

வாழ்த்துக்கள்... நன்றி...//

படித்துவிட்டு சொல்கிறேன் தனபாலன்.

என். உலகநாதன் said...

//epporul yaar yaar vaai ketpinum apporul
meiporul kaanpadhu arivu

I dont know you but idhu chattunu thonithu.....

Geetha Ramkumar//

நீங்கள் சொல்வது உண்மைதான் மேடம்.

என். உலகநாதன் said...

//கவிப்ரியன் said...
இதனால நெறைய கெட்ட பேர்தான். எனக்கு யாரைப்பற்றியும் கவலை இல்லை என்று இருக்கவும் முடியாது. சமூகத்தில் நாம் தனித்து இல்லை. நண்பர்களையும் உறவினர்களையும் நாம் இழக்க விரும்புவதில்லைதானே?//

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிப்ரியன்.