Nov 20, 2013

எல்லா ஊரிலும் இப்படித்தானா?


இந்த முறை நான் இந்தியா சென்ற போது எங்கள் ஊரிலிருந்து கடைசி விமானத்தில் கோலாலம்பூர் சென்றடைந்தேன். அப்பொழுது மணி இரவு 10 இருக்கும். என்னுடைய விமானம் காலை 7.40க்குத்தான். அதுவரை என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடியாததால் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தேன். என்னை போல பல பயணிகள் அங்கங்கே அமர்ந்து இருந்தார்கள். சிறிது நேரத்தில் யாரோ என்னைக் கூப்பிடுவது போல தோன்ற கண் விழித்துப்பார்த்தேன். என்னை அழைத்தது மிக அழகிய ஒரு யுவதி. வயது ஒரு 30க்குள் இருக்கலாம். டைட் ஜீன்ஸும், லூஸ் டி சர்ட்டும் அணிந்திருந்தார். அவர் குனிந்த போது எல்லாமே தெரிந்தது. பெண்கள் இந்த மாதிரி உடைகள் அணிவது இங்கே மிகச் சாதாரணம் என்றாலும், இந்த உடையில் அந்த பெண் மிக கவர்ச்சியாக இருந்தாள்.

“என்ன?” என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன். அவள் சுத்தமான ஆங்கிலத்தில், என் காலை தொட்டு, “வேண்டுமானால் உங்கள் கால்களை தாராளமாக இங்கே நீட்டிக்கொண்டு தூங்குங்கள்” என்று தன்னுடைய லக்கேஜ் அடங்கிய டிராலியை காண்பித்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன ஒரு கரிசனம் என் மேல் என்று ஆச்சர்யம் அடைந்து, “பரவாயில்லை” என்றேன். பின் அவள் வற்புறுத்தவே, கால்களை நீட்டிக்கொண்டேன். மனம் கெட்டவிதமாக அலைய ஆரம்பித்தது. ஏறக்குறைய ஏற்போர்ட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பக்கத்தில் மிக அழகான ஒரு இளம் பெண். அதுவும் மிக அருகில். போர்வையை வேறு போத்திக்கொண்டு இருக்கிறாள். நன்றாக வேறு இருக்கிறாள். ஏதேனும் செய்தால் கூட அவள் அனுமதிக்க கூடும் என்று மனம் தப்புக்கணக்கு போட்டது. இருந்தாலும் எப்பொழுதும் போல மனதிலேயே அந்த ஆசையை போட்டு அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

பின் மெல்ல பேச ஆரம்பித்தாள். நானும் பேசலானேன். நான் பொதுவாக யாராக இருந்தாலும் உடனே பேசிவிடுவது வழக்கம். என்னால் சிறிது நேரம் கூட பேசாமல் இருக்க முடியாது. அது என் இயல்பு. அதுவும் பேசுவது பெண் என்றால்…

பரஸ்பர அறிமுகத்துப்பிறகு அவள் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன். அவளின் அருகாமை எனக்கு ஒரு வித கிரக்கத்தையும், ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. படிக்கும் நண்பர்கள் “நீ இவ்வளவு கேவலமானவனா?” என்று நினைக்கலாம். அந்த கணத்தில் என் மனதில் தோன்றிய உணர்வுகளை சொல்கிறேன். அவ்வாறு தோன்றியது நியாயமா? என்று நீங்கள் கேட்டீர்களானால் என்னிடம் எந்த பதிலும் இல்லை.

பின் பேச்சு வளர்ந்தது. இருவருமே தூங்கவில்லை. ஆனால் அந்த பெண்ணிடம் பேசிய பிறகு மூன்று நாட்கள் தூக்கம் வராமல் தவித்தேன்.
இதோ எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடலின் சிறு பகுதி:

“எதுக்காக மலேசியா வந்தீங்க?”

அதுவரை மலர்ச்சியாக இருந்த அவர் முகம் வாடத்துவங்கியது. முகத்தில் இருந்த சந்தோசம் போய் சோகம் அப்பிக்கொண்டது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. இது ஒரு சாதாரண கேள்விதானே? ஏன் இந்த சோகம்?
அவரே பேச்சை ஆரம்பித்தார்.

“நான் மலேசியாவை சுற்றிப்பார்க்க வரவில்லை?”

“பின் எதற்கு….?”

“நான் என் அம்மாவை பார்க்க வந்தேன்”

“அம்மா எங்கே இருக்கிறார்கள்?”

“பினாங் ஆஸ்பத்திரியில்”

“அம்மாவுக்கு என்ன?”

“அம்மாவுக்கு ப்ரஸ்ட் கேன்சர்”

சொல்லும் போதே அவர் கண்கள் கலங்கிவிட்டது.

“இப்போது எப்படி இருக்கிறார்கள்”

“அப்படியேத்தான்”

“இப்போ யார் அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்”

“யாரும் இல்லை”

“என்னது? யாரும் இல்லையா?” அதிர்ந்த நான் “எப்படி தனியா அவங்க இருப்பாங்க”

“வேற வழி?”

அந்த நேரம் பார்த்து ஏற்போர்ட்டில் கொசு மருந்து அடிப்பதற்காக அனைவரையும் ஏற்போர்ட்டை விட்டு வெளியேர சொன்னார்கள், அந்த பெண்ணுக்கு ஒன்றும் தெரியாததால் அவரை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஃபுட் கோர்டுக்கு சென்றேன். அதிகாலை 2 மணி இருக்கும். மிகவும் வற்புறுத்தி மைலோ வாங்க்கிக்கொடுத்து குடிக்கச்சொன்னேன்.
பின் கேட்டேன்,

“ஏன் அவங்க தனியா இருக்காங்க? உங்க அப்பா எங்கே?”

“அப்பா மிகவும் வயதானவர். அவரால் வர முடியாது. மேலும் எங்கள் வீட்டிலேயே ஒரு மளிகை கடை வைத்துள்ளோம். அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அதுதான் எங்களுக்கு வருமானம்”

“உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?”

“ஆமாம்”

“எத்தனை குழந்தைகள்”

“இரண்டு குழந்தைகள்?”

“கணவர் என்ன செய்கிறார்?”

“நான் கணவருடன் இல்லை”

நான் அதிர்ந்து போய், “ஏன் என்ன ஆச்சு?”

“காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பின்னால் தான் தெரிந்தது, அவர் இன்னொரு பெண்ணுடனும் வாழ்க்கை நடத்துகிறார் என்று. கோபப்பட்டு சண்டை பிடித்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம்…??”

“அப்படி என்ன சொன்னார்?”

“நான் அழகு இல்லையாம். அதுவும் “அந்த” விசயத்தில் நான் சரியில்லையாம்?”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் எப்படிப்பட்ட மனிதன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு அழகு தேவதையை எப்படி அவனால் புறக்கணிக்க முடிந்தது?

அதுவரை அந்த பெண்ணின் அருகாமையால் என் மனதில் இருந்த கெட்ட எண்ணம் அழிந்து அவர் மீது ஒரு மரியாதை கலந்த அன்பு வர ஆரம்பித்தது.

“நீங்கள் ஏன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?”

“அவன் சொன்ன ஒரு வார்த்தையால் என் மனம் சுக்கு நூறாகிவிட்டது. இனி ஒட்டுவது கடினம்”

“இன்னும் சொச்ச காலம் எப்படி தனிமையில் வாழ்வீர்கள்?”

“இனி என் பிள்ளைகளுக்காக வாழ்வேன். நீங்கள் செக்ஸை நினைத்து இந்த கேள்வி கேட்டு இருந்தீர்களானால், என்னுடைய பதில், எனக்கு அது தேவையில்லை”

அதன் பிறகு என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. தனியாக கேன்ஸரில் வாடும் அவர் அம்மா ஒரு பக்கம் என் மனதை ஆக்கிரமித்து இருந்தார்கள். மறுபக்கம், அவரின் வயதான அப்பா, அவரின் குழந்தைகள், குறைந்த வருமானத்தில் அவர் எப்படி வாழ்க்கையை நடத்த போகிறார் என்று என் மனம் சிந்திக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இப்படிப்பட்ட அழகான பெண்ணின் மனதில் வாழ்க்கையில் இத்தனை சோகங்கள். என்னை மிகவும் கேவலமாக உணர்ந்த நாள் அது. எதுவுமே அந்த பெண்ணைப் பற்றித் தெரியாமல் அருகில் வந்து அமர்ந்தாள் என்பதற்காக என் மனம் எவ்வளவு கேவலமாக அவளை எடைப்போட்டு விட்டது?

அதன் பிறகு அவ(ள்)ர்தான் நிறைய பேசினார். அவர் இமிகிரேஷன் செல்லும் வரை அவர் கூடவே இருந்தேன். போகும் போது சொன்னார்,

“இன்று ஒருவித மன அமைதியுடன் செல்கிறேன். என் மனதில் இருந்ததை எல்லாம் உங்களீடம் இறக்கி வைத்துவிட்டேன். எந்த ஒரு ஆணும் உங்களைபோல் இப்ப்டி பொறுமையாக என் சோகங்களை கேட்தில்லை. நன்றி. அவர்களின் பார்வை எல்லாம் வேறு இடத்தில்தான் இருக்கும்” என்று சொல்லி விடை பெற்றார்.

உண்மையில் ஆரம்பத்தில் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அறிந்திருந்தாரானால் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்?10 comments:

கவிப்ரியன் ஆர்க்காடு said...

சுவாரஸ்யமான சம்பவம்! மற்றவர்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்பது ஒருவகையில் அவர்களின் மனசு லேசாக ஆக உதவி செய்கிறது. நம்மால் முடிந்த உதவிதானே. எண்ணங்களுக்கு கடிவாளமில்லை. பக்கத்திலிருப்பவர் நல்லவரோ கெட்டவரோ எப்படி நம்மால் அறிய முடியாதோ அப்படித்தான் நம் மன எண்ணங்களை மற்றவர் அறியமுடியாமலிருப்பது. இல்லையென்றால் யாருடனாவது பேச முடியுமா அல்லது நட்பு பாராட்ட முடியுமா?

சேக்காளி said...

சந்தோசம் "ரொம்ப நல்லவர்"

ராஜி said...

உலகத்தின் எந்த மூலையில் பெண் இருந்தாலும் அவளுக்கு துன்பம்தான் போல! நீங்க ஆறுதலா சில வார்த்தைகள் சொல்லி, நல்ல ஃப்ரெண்டா உங்க நட்பை தொடர்ந்திருக்கலாம். ஆனா, உங்க வீட்டுல ஒத்துக்கனுமே!

Bagawanjee KA said...

உங்கள் விமான சிநேகம் தொடர வாழ்த்துக்கள் !
த.ம +1

Anonymous said...

வணக்கம்
மிக சுவாரஸ்யமான விடயம் அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சக்தி முருகேசன் said...

classic...

surya prakash said...

thanking you sir changing my thinking sir

Prathap J said...

Nan soldren sir neenga roomba roomba nalaver,

Prathap J said...

Kandepa neenga nalla manasu ullaver

நம்பள்கி said...

Tamilmanam +1