Mar 25, 2009

மிக்ஸர் - 25.03.09

நான் ரொம்ப புதுசு வலைத்தளத்துக்கு (இந்த மாதிரி வலைத்தளத்துகுதாங்க). மத்ததெல்லாம் என்னன்னு கேக்காதீங்க.
எப்படி எனக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது? எப்பொழுது எழுத தொடங்கினேன் என்பதை பிறகு நான் தனியாக எழுத உள்ளேன். அதற்கு முன்பு ஒரு தகவல். நான் ஒரு மூன்று பதிவுகள் பதித்துவிட்டு, ஏதேனும் பின்னூட்டம் வந்துள்ளதா என நானே என் வலைத்தளத்தை 50 முறை பார்த்துவிட்டு, விரக்தியுடம் படுக்க போகையில், ஒரு போன்கால், நண்பர் ஒருவரிடமிருந்து, " என்னையா எழுதியிருக்க, இதெல்லாம், ஒரு பதிவா?, உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? உனக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது? அந்த நேரத்துல வேற வேலை ஏதாவது பார்க்கலாம் இல்ல?
அவருக்கு எப்படி நான் புரிய வைப்பது என்னுடைய எழுத்து ஆர்வத்தை?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று குடும்பத்துடன் ஹோட்டல் சென்றோம். சாப்பிட்டு முடித்தவுடன் பில்லை பார்த்தேன். 25 வெள்ளி என்று இருந்தது. எனக்கு கோபம், என்னடா என் பையன் கொஞ்சம்தானே சாப்பிட்டான், பாதிதானே சார்ஜ் பண்ண வேண்டும், ஒரு வேளை அதற்கும் முழுவதுமாக பில் போட்டு விட்டார்களோ? கோபம் வந்தது, எப்படி கேட்பது என்று தயக்கம். இப்படி கேட்டேன், " ஏங்க என் பையன் சாப்பிடதிற்கும் சேர்த்துதானே பில் போட்டீங்க?" (ரோம்ப யோக்கியன் போல) அதற்கு அவர் சொன்னார், " ஏங்க சின்ன பையனுக்கு போய் பணம் கேப்பேனா? அவனுக்கு எப்பவும் ப்ரீதான்" மன சங்கடத்துடன் வெளியே வந்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் பெண் கேட்டாள்" டாடி, அம்மாவுக்கு இன்னொறு குழந்தை பிறக்க போவுதா"
"ஏண்டா கேக்கற"
" இல்ல டாடி அம்மா வாந்தி எடுத்துட்டே இருக்க்காங்க?"
" வாந்தி எடுத்தா குழந்த பொறக்கும்னு யாருடா சொன்னா?"
" அன்னிக்கு கோலங்கள் நாடகத்துல ஆர்த்தி ஆண்டி வாந்தி எடுத்தப்ப அதானே சொன்னாங்க எல்லாரும்"
நான் என்ன சொல்லி புரிய வைப்பேன் என் பெண்னுக்கு. இதனால்தான், செக்ஸ் கல்வி தேவை என்கிறார்களோ"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களால ஜெயா டிவி பார்க்கும்போது, சன் டிவி விளம்பரம் பார்க்க முடியுமோ? என்ன ஆச்சரியமா இருக்கா?
ஆனா, எங்களால பார்க்க முடியுமே?
மலேசியால எல்லாத்தையும் ஒரே நிறுவனம் ஒளிபரப்புரதுனால, விளம்பரம் இஷ்டத்துக்கு வரும். எந்த டிவி சேனல்லயும், எந்த விளம்பரத்தையும் பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் எங்க ஊர்ல அந்த அளவுக்கு நான் கடவுள் ஓடலைனு இப்போதான் தெரியுது. ஏன்னா, நான் இருக்குற இடத்துல பிச்சைக்காரங்களே இல்லைப்பா? அப்புறம் எப்படி அனுதாபம் வரும்? அந்த படத்த எப்படி பார்ப்பாங்க?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நேற்று ரசித்த ஜோக்,
மக்கள் டிவியில் அண்ணன் விடாது கருப்பு மூவர் அணியை பற்றி கிண்டல் அடிக்கையில்,
" எங்களுக்கு நான்கு தொகுதி போதுங்க. ஐந்து தொகுதி வேணாங்க, ஏன்னு கேக்கரீங்களா? ஏங்க எங்க கட்சியிலே இருக்கறதே னான்கு பேர்தான், இன்னொறுத்தறுக்கு நாங்க எங்க போறது?"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மலேசிய வானொலியில் எப்பொழுதுமே, ' பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்பதற்கு பதில் "பிறந்த நாள் வாழ்த்துகள்" என்கிறார்கள்.
எது சரி? வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

6 comments:

sankarkumar said...

உங்க ப்லாக் அருமை
sankarkumarpakkam.blogspot

iniyavan said...

என்னுடைய பக்கத்திற்கு முதல் பின்னூட்டமிட்ட நண்பர் சங்கர்குமார் அவர்களுக்கு நன்றி. நான் எழுதலாமா? இல்லை நிறுத்திவிடலாமா? என எண்ணியிருந்த வேலையில் உங்கள் பின்னூட்டம் எனக்கு முகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

பின்னுட்டம் முக்கியமில்லை உங்களின் திருப்பிதி இருந்தாலே பொதும். தொடர்ந்து உங்களின் அனுபவங்களை எழுதுங்கள்... வருகால சந்னதிக்கு விட்டு சென்ற கருகுலமாக இருக்கலாம்,,,, மனம்தளராமல் எழுதுங்கள் இனியவான்..

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

iniyavan said...

நன்றி, பாலராஜன்கீதா.

Anonymous said...

//எது சரி? வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?//

வாழ்த்துகள்தான்.

விருதின் பன்மை என்ன என்று யோசியுங்கள். விருதுகள்தானே?

விருதுக்கள் என்று யாராவது சொலிறார்களா?

இன்ரண்டுமே 'து'வில் முடியும் வார்த்தைகள்.