என்ன வேண்டும் எனக்கு.
சிறு வயதில் எல்லாவற்றிலும் ஆசை. துணி மணியில் ஆரம்பித்து சாப்பாடு வரை. கஷ்டப்பட்டு படித்தேன். அப்பொழுது இருந்த மன நிலை என்ன? எப்படியாவது நனறாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும். படித்து வந்தாச்சு. அப்புறம் என்ன? நல்ல டிகிரி படிக்கனும், நிறைய படிக்கனும். நிறைய படிச்சாச்சு. படிச்சு என்ன பண்ண, நல்ல வேலை கிடைக்கணும். நல்ல வேலைல சேந்தாச்சு. இந்தியால வேலை பார்த்து என்னைக்கு பணக்காரனாவது, வெளிநாடு போக வேண்டாமா? அதுவும் போயச்சு. வெளிநாட்டு வேலை கிடைச்சாச்சு, பெரிய போஸ்ட் வேணாமா? அதுவும் வந்துடுச்சு. கம்பனி கார், வீடு இத்யாதி, இத்யாதி.......
நல்ல அழகான மனைவி அமையனும், சிகப்பா? (நான் கொஞ்சம் கருப்புனு தெரிஞ்சு போச்சோ) அதுவும் ஆண்டவன் குடுத்துட்டான்? அது எப்படி, இதோட ஆசைகள் முடியுமா? என்ன வேணும்? குழந்தைகள் வேண்டாமா? ஆச்சு, ஒரு பெண் பிறந்தாச்சு? அது எப்படி, பெண் குழந்தை மட்டும் போதுமா? ஆண் குழந்தை வேண்டாமா? ஏழுமலையான், அதுவும் குடுத்துட்டான்.
அதோட நம்ம ஆசைய நிறுத்துரதா என்ன?, அன்பு மனைவி கேட்டாள், "நமக்குன்னு ஒரு வீடு வேண்டாமா, நம்ம சொந்த ஊர்ல?, கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன? நண்பன் கேட்டான், நல்ல ஒரு நிலம், ஒரு ஏக்கர் விலைக்கு வருதான், வாங்கரீயா? ஆசை யார விட்டது (நமக்கு தேவை கடைசியில ஒரு ஆறு அடி நிலம்தான் தேவை என்று தெரிந்தே, நிலமும் வாங்கியாச்சு) அப்புறம் அது வாங்குறோம், இது வாங்குறோம்.......
இப்போது நான் என்ன செய்வது? ஏதாவது ஒன்று தேவை என எண்ணும்போது அதை நோக்கியே மனம் செல்கிறது. அது முடிந்தவடன் மற்றதை நோக்கி செல்கிறது? முடிவில் எதை நோக்கி போகிறோம்.
இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறது அது என்ன? எதை நோக்கி நான் அல்ல நாம் போகிறோம்? என்ன வேண்டும் எனக்கு? எதற்காக நான் பிறந்தேன்? என்னுடைய குறிக்கோள் என்ன? என்னுடைய பிறப்பின் நோக்கம் என்ன?
70 வயதில் (ரொம்ப அதிகமோ) இறந்தாலும், இறந்துவிடுவோம், என தெரிந்தே, தினமும் யோகா செய்கிறேன், வாக்கிங் போகிறேன், ஜிம் போகிறேன், தியானம் செய்கிறேன். சந்தோசமாகத்தான் இருக்கிறேன். ஆனாலும் ஏதோவொறு தேடுதல் எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது என்ன? அதை எப்போது நான் அடைய போகிறேன்?
அதை அடைய நான் என்ன செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டுமா? நான் அவ்வளவு பண்க்காரனும் இல்லையே? என்னால் முடிந்த உதவி செய்து கொண்டுதானே இருக்கிறேன்.
அப்போ என்ன வேண்டும் எனக்கு?
5 comments:
கல்விக்கு உதவுங்களேன்..
நிச்சயம் உதவுகின்றேன்.
உங்கள்ள் ஆலோசனைக்கு நன்றி
ungal pathivugalai padithen. miga arumaiyaga ullathu ungal eluthu nadai (mannikavum tamil il type panna mudiya villai)
அன்புள்ள இனியவன் அவர்களுக்கு!
உங்களின் தேடல் ஒரு வேளை உங்களை அருமை பெருமையாக உருவாக்கிய உங்களின் அம்மாவின் அருகே இருந்து, நலிந்திருக்கும் அவர்களுக்கு நேரிடையான அன்பு காட்டுதலினால் கிடைக்கக்கூடிய நிம்மதியாக இருக்கலாம்.
ஒரு தாய்க்கு மட்டுமே இன்னொரு தாயின் தேடுதல், ஏக்கம் புரியும். அந்த வகையில்தான் நான் இதை எழுதியிருக்கிறேன்.
உங்களின் அனுபவங்களின் வாயிலாக வெளிவரும் மன உனர்வுகள், ஒரு தாயின் அன்பை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட ஒரு மகனின் தவிப்பு,, வாழ்வின் நிதர்சனங்கள் தரும் வலிகள்-எல்லாமே என் மனதையும் பாதித்தது. மிக அருமையாக எழுதி வரும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!
திருமதி..சாமிநாதன்
ஓரளவு வாழ்வில் திருப்தி வந்ததும் அனைவருக்கும் இந்த தேடல் தொடங்கிவிடும்...
திருச்சி செந்தில்குமாருக்கு வந்தது போல...
மகிழ்ச்சி வாழ்த்துகள்.
Post a Comment