எனக்கு நல்லா அந்த நாளை ஞாபகம் இருக்கு. அது 15.05.1992. அந்த நாள்தான் என் வாழ்வில் ஒளியேற்றிய நாள். நான் போஸ்ட் க்ரேஜிவேட் முடித்து, தேவையான ப்ரொபசனல் கோர்ஸ் படித்தும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காத சமயம் அது. இரண்டு வேலைகளில் சில நாட்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு, உடனே வேலையை விட்டு நின்ற காலம் அது. அப்போதுதான் எனக்கு எங்கள் நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான கடிதம் வந்தது. நானும், என் நண்பன் பசுபதியிம் ராணிப்பேட்டையை நோக்கிப் புறப்பட்டோம். காலையிலேயே கம்பனிக்கு சென்றுவிட்டோம். ராகு காலம் முடிந்து, கம்பெனியின் உள்ளே சென்றோம்.
முதலில் பெர்சனல் மேனேஜர் என்னை இண்டர்வியூ செய்தார். பிறகு அக்கவுண்ட்ஸ் மேனஜர். முடிந்தவுடன் எங்கள் MDயின் அறைக்கு கூட்டி சென்றார்கள். என் MDயை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் நான் வணங்கும் தெய்வங்களுல் ஒருவர். ஒரு 40 நிமிட நேரம் நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிக்கும் தருவாயில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நான் பதில் சொன்ன உடனே, அவரின் காரியதரிசியை கூப்பிட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் வேலைக்கான கடிதம். நான் கேட்ட சம்பளத்தில். இதோ நான் கம்பனியில் சேர்ந்து 17 வருடம் முடியப்போகிறது. அதில் 12 வருடம் மலேசிய வாழ்க்கை அதே கம்பெனியில். எத்தனையோ பதவி,......இன்னும், இன்னும்.....
அவர் என்ன கேள்வி கேட்டார்?
"ஏம்பா, இவ்வளவு படிப்பு தகுதி வைச்சிருக்க, ஏன் உனக்கு ஒரு நல்ல கம்பெனியில வேலை கிடக்கல?"
" உண்மையான காரணம் சொல்லட்டா, சார்?"
" சொல்லுப்பா"
" எனக்கு இங்கிலீஸ் தெரியாது சார், அதனால குழு கலந்துரையாடல்கள்ள (Group Discussions) என்னால சரியா, கலந்துக்க முடியல சார்!"
அன்னைக்கு நான் வெட்கப்படாமல், அரை குறை ஆங்கிலத்தில் பேசாமல் சொன்ன உண்மை, என்னை இன்னும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
மூன்று நாட்களுக்கு முன் ஒரு நாள் என் மனைவி அலுவலகத்திற்கு தொலைபேசினாள்.
"என்ன என்றேன்?".
"ஏங்க இன்னைக்கு ஸ்கூல் வேன்ல தம்பிக்கு (என் பையனுக்கு) இடம் இல்லைங்க. ட்ரைவர் சீட்டுக்கு பின்னால உட்கார்ந்து போனாங்க, லக்கேஜ் வைக்கிற இடத்துல, ஆனா, பாப்பாக்கு இடம் இருந்துச்சுங்க, ஸ்கூல்ல பேசரிங்களா?"
"சரிம்மா, பேசரேன்"
உடனே, ப்ரின்ஸிபாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், விஷயத்தை சொல்லி, வேறு ஏற்பாடு செய்யுங்கள் என்று.
அடுத்த நாளும், அதே போல் பையனுக்கு இடம் இல்லை என்று மனைவி கூறினாள். இந்த முறை கொஞ்சம் கோபமாக ப்ரின்ஸிபாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பின்பு மறந்துவிட்டேன்.
அடுத்த நாள், காலை மனைவியிடமிருந்து ஒரு போன்.
" ஏங்க, இன்னைக்கு தம்பிக்கு இடம் இருந்துச்சுங்க, நடு சீட் காலியா இருந்துச்சுங்க"
" அப்படியா, சந்தோசம்"
" ஆனா, தம்பி கிளாஸ்(LKG) இன்னொறு பையன் ட்ரைவர் சீட்டுக்கு பின்னால உட்கார்ந்து போனாங்க"
கேட்டவுடன், மனசு வலித்தது. அந்த பையனும் என் பையன் வயதுதானே?????????
-------------------------------------------------------------------------------------------------
கடந்த டிசம்பரில், அலுவலக வேலை காரணமாக கோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலில் ஒரு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது காலை உணவு அருந்தும்போதுதான் கவனித்தேன், எனக்கு அடுத்த டேபிளில், நடிகர் சர்த்குமார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர். ஜக்குபாய் சூட்டிங்கிற்காக வந்துள்ளார்கள் என பின்பு அறிந்தேன். எனக்கு சரத் ரொம்ப பிடிக்கும் அவரின் அட்டகாசமான உடம்பிற்காக. அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திகொண்டு பேச ஆரம்பித்தேன்.
ஒரு பத்து நிமிசம் பேசியிருப்பேன். நன்றாக பேசினார். சிறிது நேரம் கழித்துதான் நானே என்னை உணர்ந்தேன்.
நான் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தேன். நாம்தான் தமிழர்களை பார்த்தால் கூட அரை குறை ஆங்கிலத்தில் பேசுவோமே? (நாம் என்று சொன்னது, என்னை மட்டுமே)
ஆனால், சரத் அருமையான தமிழில் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் உரையாடியது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது.
நான் பின்பு அசடு வழிந்தேன் யாருக்கும் தெரியாமல்.
-------------------------------------------------------------------------------------------------
ஜோக் 1
காசியிலிருந்து வந்த ஒருவரை பார்த்து அவர் நண்பர் கேட்டார்.
" என்ன சார், இப்போதான் வருங்களா, காசிலேந்து? "
" ஆமாம்"
" எங்க போகும்போது உங்க மனைவியை கூட்டி போனீங்க, இப்போ நீங்க மட்டும் வருங்க?"
" காசிக்கு போய்ட்டு வந்தா, எதையாவது, விட்டுட்டு வரணுமாமே"
-------------------------------------------------------------------------------------------------
ஜோக் 2
என் நண்பன் ஒருவன் R & D டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
என்னடா, எப்போ பார்த்தாலும் ஒரே பிஸியாக இருக்க? என்று கேட்டால், அவன் சொல்லும் பதில்,
"R & D டிபார்ட்மெண்ட்னா சும்மாவா, நாங்க ஏதாவது, கண்டுபுடிச்சிட்டே இருப்போம். உங்க அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரியா? எப்பவும் ஒரே வேலைய செஞ்சுக்கிட்டு? "
எங்களுக்கு கோபம் கோபமாய் வரும். ஒரு முறை அவனை வம்பிழுப்பதற்க்காக, எல்லோரிடம் சொல்லிவிட்டு, போனில் கூப்பிடேன்,
" என்னடா?" என்றான்.
" ஏய் நீதான், தினமும் ஏதாவது கண்டுபிடிக்கறீயாமே, நம்ம ஸ்ரீதரோட ஸ்டேப்ளர் பின் காணோமாம், கொஞ்சம் கண்டுபிடிச்சு தர முடியுமா?' என்றேன். டிப்பார்ட்மெண்ட் முழுவதும் ஒரே சிரிப்பு.
அதன் பிறகு அவன் அவ்வளவாக, அவன் டிப்பார்ட்மெண்ட் பற்றி பெருமை பேசுவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------
ஜோக் 3
அனைத்திந்திய நாடாளுவோர் கட்சி தலைவர் கார்த்திக் சொன்னது:
" இந்த தேர்தல்ல ஆட்சிய முடிவு செய்யரதுல்ல, நாங்க ஒரு தவிர்க்க முடியாத சக்தியா இருப்போம்"
-------------------------------------------------------------------------------------------------
10 comments:
நான் கம்பனியில் சேர்ந்து 17 வருடம் முடியப்போகிறது. அதில் 12 வருடம் மலேசிய வாழ்க்கை அதே கம்பெனியில். எத்தனையோ பதவி,......இன்னும், இன்னும்.....//
ஆஹா நம்ம வயசையே ஒருத்தர் எக்ஸ்பிரீயன்ஸாக வைத்திருக்கிறாரே:))
நன்றாக இருக்கு மிக்ஸர்!
பின்னூட்டம் போட இந்த Word Verification தடையாக இருக்கு அதை கொஞ்சம் எடுத்துவிடுங்களேன்!
முதலில் சொல்லி இருக்கும் மேட்டருக்கும் மூன்றாவதாக சொல்லி இருக்கும் மேட்டருக்கும் பெரும் வித்தியாசம் அதுக்கு இடையில் மனைவி வந்தது ஒரு காரணமா?:))))
(புரியவில்லையா???? நல்லா படிச்சு பாருங்க:)
நண்பனே,
Word Verification எடுத்துட்டேன்
(புரியவில்லையா???? நல்லா படிச்சு பாருங்க:)
புரிஞ்சிருச்சு. எந்த அளவுக்கு கூர்மையா கவனிச்சு படிச்சிருக்கீங்க.
நன்றி குசும்பன்.
அனைத்திந்திய நாடாளுவோர் கட்சி தலைவர் கார்த்திக் சொன்னது:
" இந்த தேர்தல்ல ஆட்சிய முடிவு செய்யரதுல்ல, நாங்க ஒரு தவிர்க்க முடியாத சக்தியா இருப்போம்" //
இது தான் டாப் ஜோக். :)))))
நன்றாக இருக்கு மிக்ஸர்!
ஹாய், Mixture நன்றாக இருந்தது... Hope you remember me... me Renga from Lalgudi... still I am remembering good old days in புதுத்தெரு..
Currently, I am working in Singapore.. hope we will meet sometime..
Tamilish Service to me
show details 8:00 PM (12 hours ago) Reply
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'மிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th April 2009 12:00:08 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/50793
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Kummachi commented on your story 'மிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க!'
'வாய்மையே சில சமயம் வெல்லும்.
அப்படியே நாம பதிவையும் படிச்சு, பிடித்தால் வோட்டப் போடுங்க
http://kummachi.blogspot.com/2009/04/blog-post_07.html
'
Here is the link to the story: http://www.tamilish.com/story/50793
பின்னூட்டமிட்ட நண்பர்கள் குசும்பனுக்கும்,விக்னேஷ்வரிக்கும்,ச்சின்னபையனுக்கும்,ரெங்காவுக்கும்,கும்மாச்சிக்கும்,இதை பிரபலமாக்கிய டமிலிஷ் வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment