Apr 16, 2009

மிக்ஸர் - 15.04.09 - கொஞ்சம் சிரிக்கலாமே?

மனசத்தொட்டு சொல்லுங்க, நாம யாரையாவது எதிரில் பார்த்தா, ஒரு சின்ன சிரிப்போ, இல்ல புன்முறுவலோ செய்வோமா? தெரிஞ்சவங்களை பார்த்தாலே, தெரியாதமாதிரி போவோம். எங்கே, ஏதாவது உதவி கேட்டுவிடுவாங்களோ என்ற பயத்தில், திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். ஆனா, மலேசியால, யாரபார்த்தாலும், ஒரு சிறு புன்னகை செய்வாங்க. நமக்கு அப்படியே ஒரே சந்தோசமா இருக்கும். நம்ம அவங்களுக்கு தெரிஞ்சிருக்கனும்னு அவசியம் இல்ல. எல்லோரையும் பார்த்து ஒரு புன் சிரிப்பு. பெண்களும் அப்படித்தான். தெரியாத பெண்கள் கூட நம் எதிரில் வந்தால், அப்படியே ஒரு புன்னகை செய்வாங்க. நாம அதைப்பார்த்தவுடனும், ஒரு சந்தோசமும், மன மகிழ்ச்சியும் தான் வருமே தவிர, வேறு எண்ணமே தோன்றாது. நல்ல ஒரு ஆரோக்கிய சூழல்தான் தோன்றும். அதுதானே நமக்கு வேணும். அதே போல் கார் ஓட்டும்போது யாருக்கேனும் வழி கொடுத்தாலோ, அவர்கள் கடந்து செல்லும்போது, நாம் அவர்களை அனுமதித்தாலோ, திரும்பி கை காமித்து, ஹாரன் அடித்து நமக்கு நன்றி சொல்வார்கள். நமக்கும் சந்தோசமாக இருக்கும்.

நாம் ஏன் அப்படியில்லை. நாம் ஏன் யாரையும் பார்த்து புன்னகைக்க மறுக்கிறோம். ஒரு புன்னகையால் என்ன குறைந்துவிட போகிறது. நாமும் முயற்சிக்கலாமே?

ஆனால், ஒரு கஷ்டம் நம் நாட்டில். மலேசியாபோல ஏதேனும் ஒரு நம் நாட்டு பெண் நம்மை கடந்து செல்லும்போது, ஒரு புன்சிரிப்பு சிரித்தால், அவ்வளவுதான், அப்புறம் அவள் சிரிப்பையே மறக்க வேண்டியதுதான்.

என்ன நான் சொல்வது, சரிதானே?
-------------------------------------------------------------------------------------------------

நேற்று மலேசியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடினார்கள். நாங்களும்தான்!

ஊரில் இருந்து, நேற்று என் நண்பர் போன் செய்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறினார்.

நான் கேட்டேன், " என்ன இன்னைக்கு போன் செய்து வாழ்த்து சொல்லர? புத்தாண்டுதான், பொங்கல் அன்றைக்கே முடிஞ்சு போச்சே?"

அவர் கூறினார், " திடீர்னு, அப்பாவை, சித்தப்பானு கூப்பிடுனு சொன்னா, ஒத்துக்க முடியுமா, என்ன?"

அவர் கேட்பதும், சரிதான் இல்லை?

-------------------------------------------------------------------------------------------------

மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர் என் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தார்.

என் பெண்ணை பார்த்து, " என்னம்மா, நல்லா படிக்கிறாயா?" எனக்கேட்டுக் கொண்டிருந்தார்.

என் மகளும், பதில் சொன்னாள்.

நான் அவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்தேன்.

அடுத்து, அவர் கேட்டார், " ஏம்மா, நீ எத்தனையாவது ரேங்க் உன் வகுப்பில?"

என் பெண் சொன்னாள், " முதல் ரேங்க், அங்கிள்"

உடனே, அடுத்த கேள்வி கேட்டார், " உங்க வகுப்பில, மொத்தம் எத்தனை பேர்?"

அவர் கேட்டதுதான் தாமதம், என் மகள் பதில் சொல்வதற்கு முன் நான் பதில் கூறினேன், அவருக்கு, இப்படி:

" சார், அவங்க வகுப்புல மொத்தம், ஆயிரம் பேர் சார்"

அவருக்கு முகம் உடனே மாறி விட்டது. பின்ன, என்னங்க, ஒரு குழந்தை சொன்னா, அதை பாரட்டரத விட்டுட்டு, வகுப்புல எத்தனை பேர்னு கேட்டா, என்ன நியாயம். ஆயிரம் பேர் உள்ள வகுப்புல முதல் ரேங்க் எடுத்தாதான், ஒத்துக்குவாரா, என்ன?

முதல்ல, நாம எல்லோரையும் மனசு திறந்து பாராட்டக்கத்துக்கணும்.

-------------------------------------------------------------------------------------------------

நம்ம ஊர்ல சிக்னல் போட்டிருந்தா, எத்தனை பேர் அதை மதித்து, காரை நிறுத்துவோம். எனக்கு தெரிஞ்சு ரொம்ப கம்மி.

ஆனா, மலேசியால, அன்றக்கு ஒரு நாள் வேலை விஷயமா, கோலால்ம்பூர் செல்ல அதிகாலை 4 மணிக்கு காரை கிலப்பினேன். ரோட்டில் யாரும் இல்லை. சிறிது பயணத்திற்கு பிறகு, ஒரு சிக்னல் வந்தது. எனக்கு அடுத்த லேனில் இரண்டு கார். எதிரில் ஒரு கார் இல்லை. சிக்னல் விழுந்தது. யாரும் நகரவில்லை. இரண்டு, மூன்று நிமிடம் அனைவரும் காத்திருந்து, ஒரு காரும் ரோட்டில் எதிரில் இல்லாதபோது கூட, அவர்கள் அந்த ரூலை மதித்தது என்னை ரொம்பவே பாதித்து.

நம் நாட்டில் நம் நல்லதிற்கு ஹெல்மெட் போடச்சொன்னால்கூட, நம்மால் அதை ஒத்துக்கொள்ளமுடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------------------

எனக்கு ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பி இருந்தார் இன்று.

என்னவென்றால், " என்ன நீ, எப்போதும், உன் வாழ்க்கையை பற்றியே எழுதிக்கொண்டுள்ளாய்?, உன் பெர்சனல் டைரி போல் அல்லவா உள்ளது? யாராவது ப்ளாக்கில் இப்படி எழுதுவார்களா? அப்படி என்ன எதையோ சாதித்து விட்ட மாதிரி எழுதுகிறாய்?"

அவருக்கு நான் சொன்ன ஒரே பதில் இதுதான்:

" சாதித்தவர்கள் மட்டும் தான் எழுத வேண்டும் என்றால், எழுதுபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். மற்றவர்கள் போல் இல்லாமல் துணிந்து நாம் எழுதுவதே ஒரு சாதனைதானே. நாம் ஒரு கருத்து கூறும்போது, நம் வாழ்வில் நடந்த விஷயங்களை பற்றியோ, அல்லது படித்தவைகளை பற்றியோதானே கூறமுடியும்"

அப்படியே மனதில் எல்லாமே தோன்றி, எல்லாமே அறிவுப்பூர்வமான கருத்துக்களா சொல்ல, நான் ஒன்றும், புத்தரோ, ராமகிருஷ்ணரோ, விவேகானந்தரோ இல்லையே?

-------------------------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஹை கூ. திடீரனெ மனதில் உதித்தது. ஏற்கனேவே யாருக்கானும் இது யாருக்கேனும் தோன்றியிருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல:

" ரோட்டின் மேல்
பிச்சைக்காரி
பெயர் தனலட்சுமி"
-------------------------------------------------------------------------------------------------

7 comments:

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

butterfly Surya said...

தெளிவான கருத்துகள்.

நல்ல பகிர்விற்கு நன்றி நண்பரே.

dondu(#11168674346665545885) said...

//நாம் ஏன் அப்படியில்லை. நாம் ஏன் யாரையும் பார்த்து புன்னகைக்க மறுக்கிறோம். ஒரு புன்னகையால் என்ன குறைந்துவிட போகிறது. நாமும் முயற்சிக்கலாமே?//
மத்தவங்களை பத்தி தெரியாது. ஆனால் வெளிநாடுகளில் ஒரு தமிழர் முன்பின் தெரியாத இன்னொரு தமிழரை பார்த்து புன்னகைத்தால், அவரும் யதார்த்தமாக எதிர் புன்னகை செய்து விட்டால், அடுத்த ஸ்டெப்பாக மல்டிலெவல் மார்க்கெடிங் வேலையை காட்ட முயற்சிப்பதாக படித்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்னப் பையன் said...

அப்பா, சித்தப்பா -> :-))))))))))))

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர் - 15.04.09 - கொஞ்சம் சிரிக்கலாமே?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th April 2009 11:15:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/53232

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Cable சங்கர் said...

//" ரோட்டின் மேல்
பிச்சைக்காரி
பெயர் தனலட்சுமி//

ஹைக்கூ.. அருமை. இனியவன்.

Anonymous said...

//" ரோட்டின் மேல்
பிச்சைக்காரி
பெயர் தனலட்சுமி//


இது ஹைக்கூ கிடையாது ... (நல்ல)புதுக் கவிதை என்று வேண்டுமானாலும்
வைத்துக் கொள்ளலாம். ஹைக்கூவுக்கென்று சில
விதி முறைகள் உண்டு,