Apr 8, 2009

எது சந்தோசம்?.

என் நண்பன் ஒருவன், அவ்வளவு சரியாக படிக்கமாட்டான். எல்லா நல்ல பழக்கங்களும் அவனுக்கு உண்டு. நல்ல பழக்கம் என்றால், நீங்கள் நினைக்கும் நல்ல பழக்கங்கள் என்றால், அதற்கு நான் பொறுப்பல்ல. அவனுக்கு எப்போதும் குடி, சிகரட், பெண் சகவாசம். பெண்களை தேடி அவன் போக வேண்டிய அவசியமேயில்லை. எல்லாம் அவனை தேடி வருவார்கள். அவன் அனுபவிக்காத பெண்களே இல்லை எனலாம். நல்ல மனைவி அவனுக்கு அமைந்தார்கள். ஆனாலும், அவன் திருந்தவில்லை. அவன் மனைவியாலும் அவனை திருத்த முடியவில்லை. பிஸினெஸ் வேறு ரொம்ப நன்றாக அமைந்தது. பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. எதை தொட்டாலும் பணம். நினைத்தபடி நல்ல குழந்தைகள் வேறு. ஆனாலும், அவனால் பெண்கள் சகவாசத்தை அவனால் விட முடியவில்லை. அவன் விட்டாலும், பெண்கள் அவனை விடுவதில்லை. ஆனால், ஒரே பெண் இல்லை. வேறு வெறு பெண்கள். அவன் விபச்சாரியை தேடி போவதில்லை. நான் பல முறை அவனை கண்டித்திருக்கிறேன். ஆனால், அவன் திருந்தவில்லை.

அவன் எப்போதும் என்னிடம் சொல்வது இதுதான்;

"உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அதனால் அப்படி பேசுகிறாய். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லோரும் நல்லவர்களே. உனக்கு வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க தெரியவில்லை"

இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னொறு நண்பன், அவன் எப்போதும் விபச்சாரியிடம்தான் செல்வான். என்னடா இப்படி அலைகிறாய்? என்றால், வாழ்க்கையினா, அனுபவிக்கனும் மாப்பிள்ளை? எப்பவும் சந்தோசமாக இருக்கனும் மாப்பிள்ளை என்பான். இவனும் அதிகமாக படிக்கவில்லை. இவனும் நன்றாகவே உள்ளான்.

இன்னொறு நண்பன், அவன் நல்லவன்தான். ஆனால், சில சமயங்களில் அவன் பேசுவதை நம்மால், சகித்துக்கொள்ள முடியாது. அவனுக்கு திருமணம் ஆகியது. 15 வருடமாகிறது. ஆனால், இன்னும் குழந்தைகள் இல்லை. இவன் அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசுவெதென்றால், அவனுக்கு கொள்ளை இன்பம். அதுதான் சந்தோசம் என நினைப்பவன்.

என்னுடைய அடுத்த நண்பனை பார்ப்போம். மிக நன்றாக படிப்பான். ஒரு கெட்ட பழக்கம் இல்லை. இவனை பற்றி என்
மிக்ஸர். பகுதியில் ஏற்கனவே குறிப்ப்ட்டுள்ளேன். இப்போது, மனைவியை இழந்து, வேலை போய் கஷ்டப்பட்டுகொண்டு இருக்கிறான். நல்ல இறை நம்பிக்கை உள்ளவன். இவன் படிப்பு மட்டுமே சந்தோசம் என நினைப்பவன், என்னைப்போல.

இன்னொறுவன் நன்றாக சாப்பிடுவதை இன்பம் என்று நினைப்பவன், இன்னொறுவன் சொத்து, சொத்து என அலைபவன், இன்னொறுவன் புகழ், புகழ் என அலைபவன்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. சந்தோசம் என்பதற்கு ஒரு சரியான அர்த்தம் கிடையாது. ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. நாமே தீய விஷ்யங்களை சந்தோசம் என நினைத்து நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்பதே உண்மை.

முதல் நண்பன் பெண்களிடம்போய் அவன் மட்டுமே சந்தோசம் அனுபவிக்கிறான். அவன் மனைவி வாழ்நாள் முழுவதும் அவனை நினைத்து உருகியே செத்து செத்து போகிறாள். அடுத்தவர்களை அழ விட்டு வாழ்வதா வாழ்க்கை.

அடுத்த நண்பன் விபச்சாரியிடம் சென்று என்றாவது ஒரு நாள் நோய்வாய் பட போகிறான், பிறகு அப்பாவியான மனைவிக்கும் அந்த நோயை பரப்ப போகிறான். கடைசியில் நான் திருந்திவிட்டேன் என சொல்ல போகிறான். கடைசியில் எல்லோப் போய், மானம் மரியாதை போய் திருந்தி என்ன பண்ண?

அடுத்த நண்பன் புத்தகம் படித்த அளவு வாழ்க்கையை படிக்காதவன். அதனால், கோபப்பட்டு ஒரு வார்த்தை சொல்லி, அதனால் மனைவி தற்கொலை பண்ணபோக, இப்போது வாழ்க்கையை இழந்து தவிக்கிறான்.
ஆண்டவன் ஏன் இப்படி எல்லோரையும் வித விதமாக படைத்தான்.

தசாவதாரம் படத்தில் கமல் சொல்வதுபோல, "ஆண்டவன் இருப்பது உண்மையானல், ஏன் இப்படி என்னைபோல் விஞ்ஞானியை படைக்கவேண்டும். பிறகு சுனாமி வந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, எங்களுக்கு அந்த எண்ணமே வராமல் இருந்திருக்கலாம் இல்லையா?"

இதற்கு விடை தேடி அலைந்தபோது, ' அர்த்தமுள்ள இந்து மதத்தில்' கவிஞர் கண்ணதாசன் கூரியது நினைவுக்கு வந்தது. என்ன? கீழே படியுங்கள்;

"பிறக்கும்போது ஒவ்வொறு குழந்தையும் தெய்வமாக அவதரிக்கிறது. பிறகு ஏன் சில குழந்தைகள் திருடர்களாகவும், சில குழந்தைகள் அறிஞர்களாகவும் வளர்கின்றன.

இறைவன் உலகத்தில் உணர்ச்சிக்களத்தை உருவாக்க விரும்புகிறான், உலகத்தை இயக்க விரும்புகிறான்.

எல்லாக் குழந்தைகளும் பிறந்தபோது இருந்தது போலவே வளரும்போதும் இருந்துவிட்டால், உலக வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

மாறுபட்ட உணர்ச்சி இல்லை என்றால், மோதல்கள் இல்லாமற் போய்விடும்.
மோதல்கள் இல்லையென்றால், உண்மை என்ற ஒன்று அறியப்படாமற் போய்விடும்"

ஆனால், என்னை பொறுத்தவரை சந்தொசம் என்றால் என்ன?

நாலு பேருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெட்டது செய்யாமல் இருப்பது, இருப்பதை வைத்து சந்தோசப்படுவது.

மொத்ததுல இதாங்க:

படுத்தா உடனே தூக்கம் வரனும், 10 வருசம் வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம வாழணும்.

அடுத்தவங்கள கஷ்டப்படுத்தாம சாகனும்.

4 comments:

ச.பிரேம்குமார் said...

//நாலு பேருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெட்டது செய்யாமல் இருப்பது, இருப்பதை வைத்து சந்தோசப்படுவது//

எல்லோரும் இப்படி இருந்துட்டாவே போதும்னு நினைக்கிறேன்.
நாடு சுபிட்சமாயிடும் :)

Anonymous said...

நல்ல கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.
உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள். ரொம்ப நல்லவனா இருந்து வாழக்கையை தொலைத்தவர்களில் நானும் ஒருவன். விடியலுக்காக காத்திருக்கிறேன்

விக்னேஷ்வரி said...

படுத்தா உடனே தூக்கம் வரனும், 10 வருசம் வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம வாழணும்.

அடுத்தவங்கள கஷ்டப்படுத்தாம சாகனும். ///

ம், இது மேட்டரு..... சரியா சொன்னீங்க இனியவன்.

அவங்கவங்க நினைக்குறதை செய்யறது தான் சந்தோஷம்னு நினைச்சிட்டு இருக்காங்க. எல்லாரும் திருந்த ஒரு நாள் வரும். ஆனா, அப்போ திருந்தி எந்த பிரயோஜனமும் இல்லைனும் தெரியும். நீங்க வருத்தப்படாதீங்க.

iniyavan said...

பிரேம்குமாருக்கும், பேர் தெரியாத அந்த நண்பனுக்கும்,தோழி விக்னேஷ்வரிக்கும் நன்றி