Apr 26, 2009

பணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை?

கடந்த ஒரு வாராமாக இந்தியாவில் இருப்பதாலும், நேரமின்மையாலும் என்னால், எழுதமுடியவில்லை. ஆனால், எதுவுமே எழுதாமலிருப்பது, எதையோ இழந்தால் போல் இருக்கிறது.

எப்போதுமே ஊருக்கு வரும்போது மிக சந்தோசமாக இருக்கும். போகும்போது மிக வருத்தமாக இருக்கும். இந்த முறை வித்தியாசமாக இருக்கிறது. நல்ல விசயங்கள் காதில் விழுவது மிக அபூர்வமாக உள்ளது.

எனக்கு எப்போதுமே சும்மாயிருப்பது பிடிக்காது. ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். என்னதான் சுறுசுறுப்பாக இருந்தாலும், மனம் பணம் சேர்ப்பதிலும், சொத்து சேர்ப்பதிலுமே எப்போதும் ஈடுபடுவதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

ஒரு மனிதன் ஏழையாக இருந்துவிட்டால் ரொம்ப நல்லது. பணக்காரனாக பிறந்து இருந்தாலும் ஒன்றும் வித்தியாசம் தெரியாது. ஆனால், சாதாரணமாக பிறந்து, கஷ்டப்பட்டு முன்னேறி, கொஞ்சம் பணம் சேர்த்து, பிறகு அதிலிருந்து விலகிவருவது என்பது மிக மிக கஷ்டமான ஒன்று. நானும் அப்படித்தான்.

ஆனால், பணம், சொத்து ஒன்று மட்டும் வாழ்க்கையில்லை, அதைவிட வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எவ்வளவோ உள்ளது என்பதை உணர்ந்துமே, என்னால அதிலிருந்து மீள முடியவில்லை.

நாம் அடிக்கடி சொல்வதுபோல், "நமக்காக இல்லாவிட்டாலும், நம் குடும்பத்திற்காகவாவது உழைக்கவேண்டும்" என நம்மை நாமே ஏமாற்றி சந்தோசத்தை தொலைக்கிறோம்.

அதற்காக யாரையும் உழைக்க வேண்டாம், சம்பாதிக்க வேண்டாம் என சொல்லவில்லை. பொன், பொருள், பதவியை நோக்கி எப்போதும் அலைய வேண்டாமே எனத்தான் சொல்கிறேன்.

இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் எழுதிகொண்டிருக்கிறேன்.

எனக்கு எப்போதுமே, பெரிய பதிவியில் இருக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், எல்லோரும் நம்மை மதிக்க வேண்டும் என எப்போதுமே எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த இந்திய பிரயாணம் என்னை சிறிது ஆட்டிப்பார்த்து விட்டது.

அதற்கு காரணம் இரண்டு நபர்கள். ஒன்று என் அம்மா. இன்னொருவர் என் நண்பன்.

அம்மாவிற்கு 78 வயதுவரை ஒரு குறையில்லை. சின்ன சின்ன தொந்தரவுகள் வரும் போகும். ஆனால், திடீரென ஒரு போன்கால், ஒரு நாள். அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என. என்ன பெரிதாக ஒன்றுமில்லை. வயது முதிர்ச்சி பிரச்சனைதான். சக்கரை, கொலஸ்ட்ரால்..... இதில் என்ன வருத்தம். இது மற்றவருக்கு வந்தால் நாம் அதிகம் கவலைப் படுவதில்லை. ஆனால், சொந்த அம்மா எனும்போது ஒரு மனக்கஷ்டம். அவர்கள் ஏகப்பட்ட மாத்திரை சாப்பிடுவதை பார்க்கும்போது, அவர்கள் சாப்பிட கஷ்டப்படுவதை பார்க்கும்போது மிக வேதனையாக இருக்கிறது. ஆனால், அவர்களை கிட்டே இருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழல்.

ஏன்?

கிட்டே இருந்து கவனிக்க வேண்டுமென்றால், உடனே வேலையை விட்டு மலேசியாவிலிருந்து வர வேண்டும். முடியவில்லை. ஏன்?

நீதான் அம்மா மீது அதிக பாசம் உள்ளவனாயிற்றே? ஏன் வர மறுக்கிறாய்?
உண்மை என்ன? பணம், பதவி.

இந்தியாவிற்கு வந்தால் இவையெல்லாம் கிடைக்காதே? என்ன செய்ய என்ற நிலை. இந்த நிலையில் நான் உள்பட எல்லோரும் எதில் அடிமையாக உள்ளோம் என, நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?

எத்தனை கஷ்டப்பட்டு என்னை வளர்த்து ஆளாக்கியிருப்பார்கள்?

இதில், நான் என்னை சமாதனப்படுத்திக்கொண்டது, இரண்டு வகையில்,

1) நல்ல மெடிக்கல் ட்ரீட்மெண்ட் என்னால் கொடுக்க முடிகிறது. நான் தான் அருகில் இல்லையே தவிர, மற்றவர்களின் அருகாமையை உறுதி செய்தது.

2) எக்காரணத்தைக் கொண்டும், என் வயதான காலத்தில், எனக்கு முடியாமல் போனால், என் குழந்தைகளின் அருகாமையை எதிர்பார்க்காமலிருப்பது. நான் என் பெற்றோர்கள் அருகிலிருந்து அவர்களுக்கு பணிவிடை செய்யாமல், நான் அதை என் குழந்தைகளிடத்தில் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

இன்னொரு சம்பவம். என் நண்பன் ஒருவன். மிக நன்றாக இருப்பான். பரம்பரை சொத்துக்கள் அதிகம். எந்த வேலைக்கும் செல்லவில்லை. கேட்டால் நான் ஏன் செல்ல வேண்டும்? என்பான்.

எப்போதுமே, ஒரு திமிரான பேச்சு. பணக்காரன் என்ற கர்வம். பணம் உள்ளவர்களிடத்திடம் மட்டுமே பேச்சு. 95 கிலோ எடை இருப்பான். அவன் ஒன்றும் கெட்டவனில்லை. நல்லவன் தான். அவன் சூழ்நிலை அவனை அப்படி பேச வைக்கும்.

மலேசியாவிலிருந்து வந்தவுடன், இன்னொரு நண்பன் என்னை தேடி வந்து சொன்னான்,

" வாடா, அவனை போய் பார்த்து வரலாம்?"

" ஏண்டா, என்னாச்சு, அவனுக்கு?"

" இல்லைடா, அவனுக்கு உடம்பு சரியில்லை"

" சரி, வா, போகலாம்"

அன்று இரவு போனோம். அவனை பார்த்த்வுடன், நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

95 கிலோ எடை உள்ள என் நண்பனின் தற்போதைய எடை வெறும் 45 கிலோ மட்டுமே. இடையில் என்ன ஆயிற்று?

உடம்பு எல்லாம், நன்றாகத்தான் உள்ளது. ஏதோ பிரச்சனையாம். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மாதிரி ஏற்படுமாம். சுத்தமாக, கொழுப்பே இல்லையாம். உயிருக்கு ஒன்றும் ஆபத்து இருப்பதாய் தெரியவில்லை. அன்று இரவு முழுவதும் நான் தூங்க வில்லை. அந்த நிலையில் அவன் மனம் என்ன பாடு படும். வெறும் பணம் மட்டுமே காப்பாற்றுமா, என்ன?

அன்றைய தினத்திலிருந்து, அவனுக்கு விரைவில் குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன்.

நீங்களும், கொஞ்சம் வேண்டுங்களேன், ப்ளீஸ்!

பணம், புகழ், சொத்து மட்டுமே வாழ்க்கையில்லை, என இப்போது புரிகிறதல்லவா?????

10 comments:

Vishnu - விஷ்ணு said...

// சாதாரணமாக பிறந்து, கஷ்டப்பட்டு முன்னேறி, கொஞ்சம் பணம் சேர்த்து, பிறகு அதிலிருந்து விலகிவருவது என்பது மிக மிக கஷ்டமான ஒன்று //

உண்மை உண்மை. மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினால் நமக்கு கிடைக்கின்ற மதிப்பு மரியாதை கிடைக்குமா என்றோரு பயம் வேறு தொற்றிக்கொள்ளும்.

இராகவன் நைஜிரியா said...

// அவனுக்கு விரைவில் குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன். //

நிச்சயம் வேண்டிக் கொள்கின்றேன் நண்பரே.

இராகவன் நைஜிரியா said...

// "பணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை?" //

நிச்சயமாக இல்லை. வாழ்க்கைக்கு பணம் தேவை, ஆனால் பணம் மட்டும் வாழ்க்கையில்லை.

iniyavan said...

நன்றி விஷ்ணு அவர்களே!

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

iniyavan said...

என்னை படிக்க வந்த என் இனிய நண்பர் "இராகவன் நைஜிரியா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

N Suresh said...

Anbulla Iniyavan,

Sorry for my feedback in english.

To be candid with you, I have wept after reading your article.

Shall surely pray for your loving Mother and Friend.

May God bless you, friend.

Anbudan - N Suresh

jothi said...

மிக சரி நண்பரே. மனமே பணத்திற்கு காரணம்,.. இந்த பணம் எனக்கு போதும் என நினைத்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் நாமும் நினைப்பதில்லை சூழ்நிலையும் அமைவதில்லை. புத்தர் சொன்னது போல ஆசையே துன்பங்களுக்கு காரணம். ஆனால் நம் எல்லாம் புத்தர் இல்லையே? பணம் இல்லாமல் ஒரு மருத்தவமனை செல்லுங்கள். That will give 1000 lessons learned.

Sasirekha Ramachandran said...

//நீங்களும், கொஞ்சம் வேண்டுங்களேன், ப்ளீஸ்!//

நிச்சயம் வேண்டிக் கொள்கின்றேன்!!!

iniyavan said...

பின்னூட்ட மிட்ட நண்பர்கள், என்.சுரேஸ், ஜோதி, சசிரேகா ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

Unknown said...

Dear Vishnu
sorry for writing in english. i have known lot of stories like this. people dont and never realize the reality. we know every one cannot take anything with us.. but still we want more and more.. never to be satisfied. i feel very sorry for ur friend and hope and wish he will be recover soon. pls go and visit him whenever u get time and talk to him and it makes him more happy and understand how important is ur friendship more than money. i like to have friends in india and other parts of the world. pls. contact me if u like.
Vasanthi725@hotmail.com
with regards
vasanthi Ganesan