நண்பர் கலையரசன் என்னையும் ஒரு ஆளாக மதித்து சங்கிலித்தொடருக்கான பதில்களை எழுத அழைத்திருந்தார். இதோ, அதற்கான பதில்கள்:
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றோர்கள் வைத்த பெயர் என். உலகநாதன். நான் இனிமையாக பெசுவதால் "இனியவன்" என பெயர் வைத்துக்கொண்டேன். (அதற்காக என் வீட்டில் செக் செய்ய வேண்டாம் உண்மையாலுமே நான் இனிமையாக பேசுகிறேனா என்று)
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
விவாகரத்து என தம்பி முடிவு பண்ணியபோது. கண்கலங்கியது மாவீரனைப்பற்றிய செய்திகள் வந்தபோது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
முன்பு ரொம்ப பிடிக்கும். இப்போ என் தலையெழுத்துத் தான் ரொம்ப பிடிக்கும்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
அரிசி சாதம். இரண்டு காய்கள் - ஒன்று கூட்டு, ஒன்று பொறியல், அப்பளம், ஊறுகாய், சாம்பார், ரச்ம் அல்லது தயிர். மதியானம் மட்டும் அதிகம் சாப்பிடுவேன்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
மற்றவர்கள் என்னுடன் 5 நிமிடம் பேசினாலே நட்பாகிவிடுவார்கள். நான் கொஞ்சம் யோசித்து ஆரம்பிப்பேன். ஆனால், அது கடைசி வரை நீடிக்கும். நான் நிறைய சேர்த்த சொத்தே என் நண்பர்கள்தான்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி குளியல் பிடிக்கும். நீச்சல் தெரியாததால் கடலில் குளிக்க பயம். காவிரியும், கொள்ளிடமும் ஓடும் ஊரில் பிறந்து நீச்சல் தெரியாமல் இருப்பது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆண்களாய் இருந்தால், எப்படி நாகரிகமாக பேசுகிறார்கள் என பார்ப்பேன்.
பெண்களாய் இருந்தால், வேண்டாம் பாஸ், சொன்னா வீட்டுல அடி விழும்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: என் தன்னம்பிக்கை
பிடிக்காத விஷயம் : என் தலை கனம்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: என்னை, அவர்கள் உயிராய் நினைத்து நேசிப்பது. என்னை முழுமையாக புரிந்து கொண்டு நடப்பது.
பிடிக்காத விஷயம் : எதுவுமே இல்லைங்க.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மாவும், அப்பாவும்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல கலர் பேண்ட், லைட் நீல கலர் சர்ட்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
"அம்மா உன் பிள்ளை நான்" - நான் கடவுள் பாடல்
நீண்ட தூர கார் பயணத்தின்போது, சூல மங்களம் சகோதரிகளின் " கந்த சஷ்டி கவசம்"
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.
14.பிடித்த மணம்?
ஊதுபத்திம், சாம்பிராணி, சூடம் கலந்த பூஜை ரூம் வாசம்.
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
பரிசல்: நான் முதலில் இணையத்தில் படித்தது இவர் எழுத்துக்களைத்தான். சுஜாதாபோல் எழுதுவதால் அவரை எனக்கு ரொம்ப புடிக்கும்.
நர்சிம்: நல்ல இலக்கிய நடைக்கு சொந்தக்காரர். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். எல்லோரையும் எழுத ஊக்குவிப்பவர்.
செல்வேந்திரன்: நல்ல கவிதை படைப்பவர். வளர்ந்துவரும் நட்சத்திரம்.
இவர்கள் மூவரும் ஏற்கனவே இந்த தொடரை எழுதி விட்டார்களா? எனத்தெரியவில்லை.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கலையரசன் அவர்களின்,
"நானும், செயின் ரியாக்சஷனும்" ஏன்னா, அதுலதானே என்னைப்பற்றி எழுதியிருக்கிறார்.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
18.கண்ணாடி அணிபவரா?
இதுவரை அந்த குடுப்பினை இல்லை!
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காதல் கலந்த காமடி கதை
20.கடைசியாகப் பார்த்த படம்?
தீ எனும் பாடாவதி படம்.
21.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலத்தில் வந்த டீன் ஏஜ் பருவகாலம்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
எப்போதுமே அர்த்தமுள்ள இந்து மதம். இன்று காலை படித்தது, மீண்டும், நர்சிமின், பரிசலின், செல்வேந்திரனின், அதிஷாவின், கேபிள் சங்கரின், வடகரை வேலனின், ஆதியின் கதைகள், கவிதைகள் வந்த "ஆவி"க்களை..
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அலுவலகத்திலும், என் லேப் டாப்பிலும் மாற்ற மாட்டேன். ஆனால், என் வீட்டில் உள்ள கம்யூட்டரில் என் மகள் தினமும் மாற்றுவார்.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : இளையராஜாவின், ரகுமானின் அனைத்து சத்தங்களும்.
பிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மலேசியா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நல்லா பாட முயற்சி பண்ணுவேன், கதை எழுதுவேன், கீ போர்ட் வாசிக்க நினைப்பேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் தங்கையின் அகால மரணம். அப்பாவின் மரணம். கஷ்டங்களை மட்டுமே சுமந்து எங்களை ஆளாக்கிவிட்டு, நாங்கள் நல்லா இருக்கும்போது எதையும் அனுபவிக்காமல் அவசரப்பட்டு சொர்க்கம் போனவர்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
உள்ளே எங்கே இருக்கு? அதான் வெளியிலேயே சுத்துதே.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல் (ஹனிமூன் சென்ற இடம் என்பதால்).
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
என்னைப்போலவே.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதுவுமே இல்லை. எதையுமே மனவியில்லாமல் செய்ய விரும்ப வில்லை.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
மனிதப்பிறவி கிடைத்திருப்பதே மிகப்பெரிய வரம். அதை ஒவ்வொரு நிமிசமும் சந்தோசமாக அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள். சுகம், சோகம் இரண்டையுமே சமமாக பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்க்கையை முறையுடன் வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.
May 31, 2009
May 29, 2009
இது காமம் அல்ல! கருமம்!! கருமம்!!!
சமீபத்தில் ஒரு இணைய நண்பர் ஒரு ரேபிட் ஷேர் லிங்கை கொடுத்து, அதில் உள்ள வீடியோ படத்தை பார்த்தவுடன் தோன்றும் என் உணர்வுகளை ஒரு பதிவாக வெளியிடச்சொன்னார். நானும் பார்த்தேன். மொத்தம் ஒரு 45 நிமிடம் ஓடக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அதில் என்ன அப்படி ஒரு செய்தி என்கிறீர்களா?
தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி. ஒரு மேடை. அதில் ஆறு பெண்கள். மேடையைச் சுற்றிலும், முன்பும் , பின்பும் ஏகப்பட்ட ஆண்கள். நிகழ்ச்சி சாதாரணமாய் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கிறது. ஒரு 1000 ஆண்களுக்கு முன்னால், மேடையில் ஆறு பெண்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை அவிழ்க்கிறார்கள். கூட்டம் ஒரே சத்தமிடுகிறது. மட்டமான அங்க அசைவுகள். அப்படியே கொஞ்ச நேரம் கழித்து, வெறும் பாவாடை தாவணி மட்டும். அவர்கள் பாவாடை தாவணியில் செய்ததை நாகரிகம் கருதி என்னால் இங்கே எழுதமுடியவில்லை. மொத்த கூட்டமும் பெண்களின் "அந்த" இடத்தையே பார்க்கிறது. பிறகு மேடையிலேயே அனைவருக்கும் முன்னால் குளிக்கிறார்கள். அடுத்த அரை மணி நேரத்தில், ஆறு பெண்களும் முழு நிர்வாணம் ஆகிவிட்டார்கள். மட்டமான, நினைத்து பார்க்க முடியாத அங்க அசைவுகள். ஆர்ப்பரிக்கிறது கூட்டம். ஆடும் பெண்களிடம் சிகரட்டை, தர்பூசணி பழத்தை கொடுத்து வாங்குகிறார்கள். அவர்கள் சிகரட்டையும், தர்பூசணியையும் என்ன செய்தார்கள், அதை எப்படி கொடுத்தார்கள் திருப்பி என்பதை சொல்ல என் நாக்கு கூசுகிறது.
இதை பார்த்தவுடன் எனக்கு ஒன்றும் காம உணர்ச்சி தோன்றவில்லை. மாறாக கோப உணர்வுகள்தான் எழுந்தன. என்ன உலகம் இது? பெண்கள் எவ்வளவு மென்மையானவர்கள். நம் தாயும் ஒரு பெண்ணல்லவா? எப்படி பெண்களை இப்படி பார்க்க மனம் இடம் கொடுக்கிறது. நான் அந்த பெண்களை நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். எந்த பெண்ணும் வேண்டும் என்றே இந்த வேலைகளை செய்வதில்லை. அவர்கள் இவ்வாறு ஈடுபடுவதில் ஏழ்மையை தவிர வேறு என்ன இருக்க முடியும்? 99% சதவிதம் பெண்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறர்கள். எனக்கு ஏற்பட்ட கோபம் எல்லாம் இந்த பாழாய் போன சமுதாயத்தின் மீதுதான்.
ஏன் நமக்குள் இத்தனை ஏற்ற தாழ்வுகள்? அதனால்தானே ஏழைகளெல்லாம் இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எப்படி அடுத்த பெண்களை இப்படி பார்க்க தோன்றுகிறது. நீலப்படங்கள், விபச்சாரம் அதையெல்லாம் விட்டு விடுங்கள். அதெல்லாம் ஒரு தனி ரகம். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அது ஒரு தொழில்போல ஆகிவிட்டது. அதனால் அவைகளை சரி என்று சொல்ல வில்லை. மகா பாவமான செயல்தான்.
ஆனால், நான் மேலே குறிப்பிட்ட அந்த நிகழ்வில் ஆயிரம் பேர் சேர்ந்து அந்த பெண்களின் அந்தரங்களை காட்சிப்பொருளாக நினைத்து கை தைட்டி பார்த்து ரசித்தது என்னை மிகவும் பாதித்து விட்டது. அதற்காக நான் ஒன்றும் ஒரு ஞானியைப்போல ஒரு யோக்கிய தோற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
நானும் இளமைபருவத்தை கடந்து வந்தவன்தான். அந்த வயதில் காம உணர்வுகள் எனக்கும் ஏற்படத்தான் செய்தது. அந்த காலங்களில் ஏற்படும் காம உணர்வுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால், அதிலிருந்து நாம் எப்படி விடுபடுகிறோம் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.
இன்றும் வீட்டில் அனைவருடன் சேர்ந்து டிவி பார்க்கும்போது, சினிமா நடிகைகள் தோன்றும்போது நம் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது உணமைதான். ஆனால் அது சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள்தான். ஏனென்றால், நம் மனதிற்கு தெரிகிறது. இது தவறு என்று. சில நிமிடங்களிலேயே மனம் தெளிவடைந்துவிடுகிறது. அப்படியில்லாமல் உடனே கிளம்பி மெட்ராஸ் போகிறோமா என்ன?
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு"
" They lead a high - souled manly life
The pure who eye not another's wife"
" வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டும்ன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்"
- திருக்குறள் 148.
மேலே குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சியை பார்த்த பிறகு "திருவள்ளுவர் பிறந்த மண்ணில்தான் நாமும் பிறந்திருக்கிறோம் என நினைத்து சந்தோசப்படுவதா, இல்லை வெட்கப்படுவதா" எனத்தெரியவில்லை.

May 27, 2009
பதிவு என்னும் நோய்!!! - நர்சிமும், பரிசலும்தான் காரணம்!!!!
நல்லாத்தாங்க இருந்தேன் ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி. நான் உண்டு, என் வேலை உண்டு, யோகா உண்டு, ஜிம் உண்டு என்று. தெரியாத்தனமா ஒரு நாள் என் மகள்,
"அப்பா, நான் கடவுள் படத்துல உள்ள 'அம்மா உன் பிள்ளைதான்' பாட்டு வரிகள் வேணும்பா?"
"ஏண்டா?"
" பாட்டு போட்டியில கலந்துக்கணும் அதுக்குத்தான்"
சரினு இணையத்துல தேடுனா, பரிசல் பக்கம் கிடைச்சது, என்னடா இது புதுசா இருக்கேனு படிச்சா, மனுசன் நல்லா இன்ட்ரெஸ்டா எழுதியிருந்தார். அப்பறம் நர்சிம் பக்கம்னு போய், பல மணி நேரத்துக்கு பிறகு பாட்டை கண்டு பிடிச்சு எடுத்து, என் பொண்ணு ஒரே நாள்ல பாட்டைக்கற்றுக்கொண்டு, தமிழையும் சேர்த்து கற்றுக்கொண்டு, பள்ளில பாடி பரிசு வாங்குனது எல்லாம் ஒரு சந்தோசமான விசயம். அத விடுங்க.
அப்பறம் வேற என்ன சொல்ல வரேணு கேட்கறீங்களா? நான் அதோட விட்டுருக்கணும். என்னாச்சு, எல்லா வலைத்தளத்தயும் படிக்க ஆரம்பிச்சு, எனக்கும் அந்த ஆசை வந்து நானும் இரெண்டு மாசத்துக்கு முன்னாடி வலைப்பூ ஆரம்பிச்சு, இப்போ பதிவு நோய் வந்து தவிக்கறேங்க.
பரிசலோட முக்கியமான பக்கங்களையும், நர்சிம்மோட பக்கங்களையும் படிச்சு, விமானத்துல போகும்போது ஒரு டிக்கட் வாங்கி, மூன்று பேர் பிரயாணம் செஞ்சோங்க, நான் பரிசலின், நர்சிமின் பக்கங்களுடன்.
நேற்று அப்படித்தான், " ஏதாவது செய்யணும் பாஸுனு" மனசுக்குள்ளயே நினைசுக்கிட்டு இருந்ததுல, வெளிலயும் அப்படியே சொல்லிக்கிட்டு இருந்துருக்கேன் போல.
எங்க வீட்டுல கேட்டாங்க , தயவு செய்து நம்புங்கப்பா, நான் சொல்லப்போறது உண்மையா நடந்தது.
" ஏதாவது செய்யணும்னு சொன்னீங்களே, நைட் டிபன் என்ன செய்யட்டும்?"
" கொத்து புரோட்டா செய்யேன்"
" தொட்டுக்க?"
" அவியல் பண்ணு"
" கொத்து புரோட்டாக்கு அவியலா?"
" அப்போ குவியல் பண்ணு"
" இல்லைனா, முதல்ல காக்டெயில் குடு"
" என்னங்க சொல்லறீங்க?"
" சரி, எதுவும் இல்லைனா மிக்ஸுடு ஊறுகாய் கொடுப்பா, அது போதும்"
உடனே என்னவள் என் பிள்ளைகளிடம் கூறியதுதான், இங்கே கவனிக்க பட வேண்டியது.
" பாப்பா, தம்பி, அப்பாக்கு என்னமோ ஆயிடுச்சு"
" என்னப்பா ஆச்சு?" - பிள்ளைகள்.
" என்னாச்சுங்க உங்களுக்கு?"
" ஐ, இந்த தலைப்பு நல்லா இருக்கே,
" என்னாச்சு உங்களுக்கு? இதுல ஒரு பதிவு போட வேண்டியதுதான்".
குடும்பமே என்னை ஒரு மாதிரி பார்த்தது.
ஆமா, அப்பறம் என்னங்க, கண்ண மூடுனா "தமிழ் மணம்" பக்கம்தான் கண்ணுக்கு வருது, அதுல வலது பக்கம், இடது பக்கம் , எந்த பக்கம் திரும்புனாலும் நண்பர்கள், நர்சிம், பரிசல், ஆதி, கேபிள் சங்கர், கார்க்கி, லக்கிலுக், அதிஷா (ரெண்டுபேரும் ஒண்ணா? ஏன்னா, நேற்று முன் தினம் அதிஷாவின் பக்கத்தில் லக்கிலுக்கின் கட்டுரை), சுரேஷ், இராகவன் நைஜீரியா, மாதவ ராஜ், டாகடர் புரூனோ, டோண்டு, இப்படி பலர்.
சரினு தூங்க கண்ண மூடப்போனா, " குசும்பன் புக்கோட புக்கா படுத்து பக்காவா போஸ் குடுக்குறாருங்க"
இரண்டு மாசமா, நான் நானாவே இல்ல? ஒரே பதிவு பதிவு அப்படீனு பதிவுமேனியா புடிச்சு அலையறேங்க.எதாவது எழுதணும், எதாவது எழுதணும்னு பைத்தியம் புடிச்சு அலையறேன். ஏதோ நான் எழுதாததால உலகமே ஸ்தம்பிச்சு நிக்கறா மாதிரி.
நான் இப்போது என் குடும்பத்துடன் மட்டும் வாழ வில்லை. பதிவுலகத்துடன் சேர்ந்தே என் வாழ்க்கை பயணமும் தொடர்வதுபோல் தெரிகிறது. என்னுடைய பலத்த வேலைகளுக்கிடையே, இது ஒரு இன்ப வலியாக தெரிகிறது.
என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிய பரிசலுக்கும், நர்சிமுக்கும் நன்றி.
நேற்று வீட்டுல கேட்டாங்க,
" பதிவு, பதிவுனு பைத்தியமா மன நோய் புடிச்சா மாதிரி அலையறீங்க, அடுத்த தடவ இந்தியா போகும்போது, டாக்டர் ருத்ரன் கிட்ட உங்கள் கூட்டிட்டிடு போகணும்ங்க"
" தாராளமா கூட்டிட்டு போ"
" என்ன அதிசயமா உடனே ஒத்துட்டீங்க"
" உனக்குத் தெரியாதா, அவரும் இரண்டு வலைத்தளம் வைச்சிருக்காரு"
உடனே அவங்க என்ன பார்த்த பார்வை "ங"னு இருந்துச்சு (இராஜேந்திரகுமார் பாணியில் சொல்ல இ கலைப்பையில் எப்படி டைப் அடிப்பது என்று தெரியவில்லை).
டாக்டர் புரூனோ சார், இந்த வியாதிக்கு ஏதாச்சும் மருந்துருக்கா???

May 24, 2009
குங்குமத்திற்கும், யூத்புல் விகடனுக்கும், தமிழிஷ் வாசகர்களுக்கும் நன்றி!, நன்றி!!, நன்றி!!!

01.குங்குமம்
எனக்கு நண்பர் கண்ணன் முருகன் மூலமாகத்தான் என்னுடைய கட்டுரை குங்குமத்தில் வெளிவந்தது தெரியும். ஆனால், இன்றுதான் என்னால் பார்க்க முடிந்தது. யார் குங்குமத்திற்கு அனுப்பினார்கள் என்று தெரியாது. என்னுடைய கட்டுரையை வெளியிட்ட குங்குமம் இதழுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
02. யூத்புல் விகடன்
என்னுடைய பெரும்பாலான கட்டுரைகளை "குட் blog" பகுதியில் வெளியிடும் யூத் விகடனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
03. தமிழிஷ்
என்னை எப்பொழுதும் ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, என் பெரும்பாலான பதிவுகளை பிரபலபகுதிக்கு கொண்டு செல்லும் தமிழிஷ் வாசகர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
பலத்த வேலைகளுக்கிடையே, நேரமே கிடக்காமல் இருக்கும்போது,
"ஏண்டா ப்ளாக் ஆரம்பித்தோம், நம்மால் எழுத முடியுமா?" என நினைத்ததுண்டு.
ஆனால், நாம் எழுதுவதையும் படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போதும், நம் எழுத்து படித்து சில பின்னூட்டங்கள் வரும்போதும், அதை படிக்கும்போதும் உடனே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.
நண்பர் நர்சிம் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்,
" ஏதாவது செய்யணும் பாஸ்" என தோன்றுகிறது.
ஆமாம்,
நானும் ஏதாவது செய்யணும் பாஸ் இந்த சமுதாயத்திற்கு.
Labels:
கட்டுரை,
குங்குமம்,
செய்திகள்,
தமிழிஷ்,
யூத்புல் விகடன்
May 22, 2009
மிக்ஸர்- 22.05.09 - நினைச்சா உடனே செஞ்சுடுங்க!
எங்கள் தெருவில் ஒரு வயதான மனிதர் இருந்தார். அவருக்கு சரியாக காது கேட்காது. அவரின் தொழில் அந்த தெருவிலுள்ளவர்களின் வீட்டில் உள்ள துவைத்த துணிகளை வாங்கி அயர்ன் பண்ணி தருவதுதான். நான் இந்தியா செல்லும்போதெல்லாம் அவரிடம் என் துணிகளை அயர்ன் செய்ய குடுப்பதுதான் வழக்கம். ஆனால் கொஞ்சம் அதிகமாக என்னிடம் மட்டும் பணம் கேட்பார். கொடுக்கவில்லையென்றால் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். எவ்வளவு நேரமானாலும் அந்த இடத்திலேயே இருப்பார். காது வேற கேட்காது. அவர் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் கோபப்படுவார்.
" ஏங்க இவ்வளவு பணம் கேட்கறீங்க" எனக் கேட்டால், அவர் சொல்லும் பதில்,
" ரொம்ப சம்பாதிக்கற இல்ல. கொஞ்சம் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவ" என ரொம்ப உரிமையுடன் கேட்பார்.
கோபம் வருவதற்கு பதில் சில நேரம் அவர் மேல் பரிதாபமே மேலிடும். அவர் ஒன்றும் ரொம்ப அதிகமாக கேட்கமாட்டார். ஆனால், மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது அதிகம். நம்மைப் பற்றித்தான் தெரியுமே? கஷ்டப்பட்டு உழைப்பவர்களுக்கு ஒரு நயா பைசா கொடுக்க மாட்டோம், மற்ற விசயங்களுக்கு நிறைய செலவு செய்வோம். நான் "நம்மை" எனக்குறிப்பிட்டது, என்னைப்பற்றி மட்டுமே. சில சமயங்களில் நான் அவர் கேட்டதை கொடுத்துவிடுவதுண்டு.
இந்த முறை இந்தியா செல்லுமுன் என்னுடைய துணிகளை அயர்ன் செய்ய எங்கள் ஊரில் உள்ள (மலேசியாவில்) லாண்டரியில் கொடுத்தேன். இந்தியா செல்லும் முதல் நாள், துணி வாங்க சென்றபோது,
" சார், இனி ஒரு சட்டைக்கு 0.80 செண்ட்" என்றார் கடைக்காரர். 0.80 செண்ட் என்றால், நம்ம ஊர் மதிப்புக்கு, ரூபாய் 11.20. ஒன்றும் பேச முடியவில்லை. கேட்டவுடன் கொடுத்து விட்டேன்.
அப்போதுதான், எங்கள் ஊர் பெரியவரின் நினைவு வந்தது. இங்கே கேட்டவுடன் கொடுக்கிறோம். அதுவும் பெரிய கடைக்கு. அங்கே அவர் தெருவில் தள்ளு வண்டியில் வந்து அயர்ன் செய்து கொடுக்கிறார், அவரிடம் ரொம்ப கறாராக நடந்து கொள்கிறோமே? என ஒரு மன உறுத்தல்.
உடனே மனதில் ஒரு முடுவு எடுத்தேன். இந்த முறை இந்தியாவில் அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என.
போனவுடன் அம்மாவிடம் சொன்னேன்,
" அம்மா, அந்த அயர்ன் பண்ணவர் வந்தா சொல்லும்மா, நிறைய அயர்ன் பண்ண வேண்டியுள்ளது"
" யாரு, அந்த பெரியவரா?"
" ஆமாம்மா"
" உனக்கு, விசயம் தெரியாதா, அவர் இறந்து மூன்று மாதம் ஆயிடுச்சு"
மனசு வலிச்சது.
-------------------------------------------------------------------------------------------------
சில செயல்களுக்கு, சில நிகழ்வுகளுக்கு நாம் விதியை காரணம் செல்வோம். அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு நடந்த சில விசயங்கள் அது உண்மையோ என நினைக்க தோன்றுகிறது.
MCOM கடைசி செமஸ்டர் கடைசி பரிட்சைக்கு முதல் நாள். நானும் நண்பர்களும் காலேஜிலிருந்து அன்றைய பரிட்சை கேள்விகளைப் பற்றி பேசிக்கொண்டே வருகிறோம். ரோட்டின் ஒரத்தில்தான் சென்று கொண்டிருந்தோம். நான் முதலில், இரண்டு நண்பர்கள் அடுத்தடுத்து.
அதில் இரண்டாவது வந்த நண்பர் ராஜமாணிக்கம் என் கையைப் பிடித்து இழுத்து,
" ஏய், நான் சொல்லரதக் கொஞ்சம் கேளுடா?" என இந்த பக்கம் இழுத்து, நான் இருந்த இடத்தில் அவனும், அவன் இருந்த இடத்தில் நானும் இடம் மாறி பேசிகொண்டே நடந்தோம். ஒரு நிமிடம் ஆகியிருக்காது. ஒரு ஆட்டோ வந்து அவன் மேல் மோதி, ஏறி மிகப்பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகி, உடனடியாக அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ஆப்பரேசன் செய்து, நினைக்கவே இன்றும் என் உடல் நடுங்குகிறது.
ஒரே ஒரு நிமிட இடைவெளியில், என்னை அவன் இழுத்துவிட்டு, என் இடத்துக்கு அவன் வந்து, ஆக்ஸிடெண்ட் ஆகி..........................
இது விதியில்லாமல் வேறு என்ன????

நாங்கள் எங்கள் தெரு நண்பர்களுடன் சுற்றுலா சென்றோம். சென்றபோது நடந்த ஒரு விசயம் இன்னும் என் நினைவில் பசுமையாக இடம்பிடித்துள்ளது.
நாங்கள் போகும் வழியில் நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை வழிப்பட்டோம். அங்கு என் நண்பரின் உறவினர் வீடு ஒன்று உள்ளது. அவரிடம் பேசிக்கொண்டே என் நண்பர் ஒருவர் அந்த ஆஞ்சனேயர் சிலையை போட்டோ எடுத்தார்.
உடனே அந்த உறவினர், என் நண்பரிடம்,
" வேணாம் தம்பி போட்டோ எடுக்காதீங்க"
" ஏன் சார்"
" நீங்க போட்டோ எடுத்தாலும், சாமி போட்டால வர மாட்டார்"
" ஏன் சார்"
" அப்படித்தான். சொல்லரத கேளுங்கோ, எடுக்காதீங்கோ"
என் நண்பர் அவர் பேச்சை மீறி புகைப்படம் எடுத்தார். அப்போது எல்லாம் டிஜிட்டல் கேமரா கிடையாது, எடுத்த உடனே பார்க்க.
ஊருக்கு வந்தவுடன் பிரிண்ட் போட்டு பார்த்தால்,
எல்லா படங்களும் தெளிவாக வந்திருந்தது " ஆஞ்சநேயர் படத்தைத் தவிர"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில சமயம் நான் தீவிரமாக இது நடக்கும் என நினைத்தால் அது உடனே நடந்துவிடுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள். CII Malaysiaவிலிருந்து ஒரு போன். எங்கள் CEOவை மலேசியா ASTRO TVயில் பேட்டி எடுப்பதற்காக வரச்சொல்லி. அவர் என்னையும் அழத்துக்கொண்டு கோலாலம்பூர் சென்றார். அவருக்கு தமிழ் தெரியாது.
பேட்டியின் தலைப்பு " இந்திய மலேசிய வாணிப உறவு" பற்றி.
அந்த டிவி நிறுவனத்தில் நுழைந்தவுடன் எனக்கும் ஆசை மனதில் துளிர்விட்டது. நமக்கு இந்த மாதிரி வாய்ப்பு வராதா என்று.
"ஏன் வராது என மனதிற்குள் ஒரு தன்னம்பிக்கை சொல்"
மதியம் மூன்று மணிக்கு படப்பிடிப்பு. அவர் கோட் சூட்டில், நான் நார்மல் ட்ரெஸ்ஸில்.
அவர் மேக்கப் ரூமில் இருக்கும்போது அந்த செய்திபிரிவின் ஆசிரியர் என்னுடன் உரையாடிகொண்டிருந்தார். திடீரென என்ன நினைத்தாரோ, என்னிடம் இப்படி சொன்னார்,
" ஏன் சார், உங்கள் பாஸ் வேண்டுமானால், ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுக்கட்டும், நீங்கள் தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுங்களேன்"
என்ன ஒரு சந்தோசமான செய்தி. ஆனால், பயம் ஒரு பக்கம், சந்தோசம் ஒரு பக்கம்.
பயம், "நாம் ஒன்றுமே தயார் செய்யவில்லையே"
சந்தோசம், "நாம் நினைத்தது உடனே நடக்க போகிறதே"
அடுத்த 10 நிமிடத்தில் மேக்கப். என்னையும் பேட்டியெடுத்தார்கள்.
அந்த வாரத்தில் இரு முறை என் பேட்டி ASTRO வானவில்லில் வெளியானது.
மலேசியா முழுவதும் நான் தெரிந்தேன்.
ஆனால், அந்த நேரத்தில் என்னுடைய பேட்டிக்கும் "அனுமதியளித்த" எங்கள் CEOவை நான் பாராட்டியே ஆக வேண்டும்.
இதை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை.
நம்மால் முடியுமென நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என சொல்வதற்காகத்தான் என் அனுபவத்தையும் சொல்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------

May 21, 2009
என்னுடைய சந்தேகங்களை பதிவுலக நண்பர்கள் தீர்த்து வைப்பார்களா?
நான் பதிவுலகுக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆக போகிறது. ஆனால், இன்னும் சில சந்தேகங்கள் மனதில்.
தயவு செய்து பதில் தெரிந்தவர்கள் என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைக்கவும்.
01. "தமிழ்மணம்" லோகோவை என்னுடைய டெம்ப்லேட்டில் கொண்டுவருவது எப்படி?
02. என்னுடைய டெம்ப்லேட்டில் "திரட்டி" லோகோ உள்ளது, நான் எழுதும் பதிவுகள் எழுதி முடித்தவுடனே திரட்டி. காம் சென்று விடுகிறது. அதே போல் ஏன், தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்10 ஆகிய தளங்களுக்கு தானாக நம் பதிவுகள் செல்வதில்லை. ஒவ்வொரு முறையும் நான் அங்கு சென்று இணைக்க வேண்டியுள்ளது. ஏன் திரட்டி போல், நாம் இணைக்காமலே, மற்ற தளங்களில் தெரிவதில்லை?
03. என்னுடைய பதிவின் முடிவில் "தமிழிஷ்"ன் வோட்டுடன் கூடிய லோகோவை எப்படி இணைப்பது?
04. பின்னூட்டத்தில் " :)) " இப்படி வந்தால் இதனுடைய அர்த்தம் என்ன?
05. என்னுடைய டெம்ப்லேட்டில், ஒவ்வொரு முறை புது காட்கேட் ( Add a Gadget) என்னுடைய டெம்லேட்டின் மேல்தான் வருகிறது. அதை கீழே தெரியும்படி செய்யவோ, அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவோ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
06. தமிழ் தளங்களை Googleன் Adsense Account ல் பதிவு செய்ய முடியுமா?
தயவு செய்து பதில் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?????

May 19, 2009
சிகரட் எனும் நல்ல பழக்கம்!!!
எனக்கு சிகரட் குடிக்கும் நல்ல பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் சிகரட் பிடிப்பதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சிகரட் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரி படிக்கையில் நானும் என் நண்பனும் ஒரு பந்தயம் வைத்தோம். என்னவென்றால், யார் மூன்று வருடமும் சிகரட் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று.
"நான் அப்படி இருந்து காட்டுகிறேன்" என்றேன். என் நண்பனும் சிகரட் பிடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்றான். ஆனால், அவன் சொன்ன ஒரு விசயம் வேடிக்கையாக இருந்தது. என்னவென்றால், அவன் அப்படி சிகரட் பிடிக்காமல் இருந்தால், கல்லூரி கடைசி நாள் அன்று சிகரட் பிடிப்பதாக கூறினான்.
மூன்று வருடமும் நானும் சிகரட் பிடிக்கவில்லை, அவனும் பிடிக்கவில்லை. கடைசி நாள் அன்று அவன் சொன்ன படியே சிகரட் பிடித்தான். என்னையும் பிடிக்கச் சொன்னான். எவ்வளவோ முயன்றும் என்னால் மட்டும் முடியவில்லை.
பிறகு MCOM படித்தபோது, நாங்கள் எல்லோரும் கோவா டூர் சென்றோம். இரயில் திருச்சி ஜங்ஷனை தாண்டியதுமே எல்லோர் கையிலும் சிகரட், என் கையிலும்தான். ஆனால், என்னால் மட்டும் அந்த சுவையை உணரமுடியவில்லை.
இராணிப்பேட்டையில் என் நண்பன் ஒருவன், திடீரென 555 சிகரட் பாக்கெட் வாங்கினான்.
ஏனென்று கேட்டேன். அவன் கூறினான், " மாப்ளே, பையில 555 சிகரட் பாக்கெட் இருந்தா ஒரு ஸ்டேடஸ்டா" என்றான்.
அப்படி விளையாட்டாக ஆரம்பித்த அவன் பழக்கம் இப்போது விடமுடியாத பழக்கமாக மாறிவிட்டது. இன்னொறு வயதான நண்பருக்கு சிகரட்டே சரியாக பிடிக்க தெரியாது. ஆனால், பிடிப்பார். எப்படியென்றால், அவர் புகையை உள்ளே இழுக்க மாட்டார். ஆனாலும் ஒரு ச்செயின் ஸ்மோக்கர் போல் தன்னை காண்பித்துக்கொள்வார்.
ஒரு முறை நான் ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது என்னை மிகவும் வற்புறுத்தி என்னை சிகரட் பிடிக்க வைத்தார்கள். நான் மீண்டும் முயற்சித்தேன். ஒரே இருமல் தொடர்ந்து. இரண்டு சிகரட் பிடித்தேன். பிறகு என்னவோ எனக்கு அந்த நல்ல பழக்கம் வாய்க்க வில்லை.
எனது பெரியப்பா ஒருவர் சாகும் வரை சிகரட் பிடித்தார். அவர் சிறு வயதிலிருந்தே சிகரட் பிடித்ததாக என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு சிகரட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்கு அந்த கால உடம்பு. அதனால், பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது சிகரட்டினால் ஏற்படும் தீமைகளை பார்க்கும்போது, படிக்கும்போது மிகவும் பயமாக உள்ளது.
ஏன் சிகரட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்?
01. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரட் பிடிப்பதால் இறக்கிறார்கள்.
02. வாழ்நாள் முழுவதும் சிகரட் பிடிக்கும் இருவரில் ஒருவர், இந்த பழக்கத்தினாலேயே இறக்கிறார். பாதி பேர் மிக குறைந்த வயதிலேயே இறக்கிறார்கள்.
03. நிறைய பேருக்கு புற்று நோய் சிகரட் பிடிப்பதால் வருகிறது.
04. ஹார்ட் அட்டாக் வருவதற்கும், ஸ்ட்ரோக் வருவதற்கும் காரணமாகிறது.
05. உயர்ந்த இரத்த அழுத்தம் வருவதற்கும் காரணமாகிறது.
06. லங்க் கேன்சர் வருவதற்கும் நெக் கேன்சர் வருவதற்கும் காரணமாகிறது.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்றவாரம் கோலாலம்பூரில் ஒரு மீட்டிங்கில் ஒரு சுவீடன் நாட்டு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. மலேசியாவில் இப்போது ஒவ்வொறு சிகரட் பாக்கெட்டிலும் ஒரு போட்டோ போட்டுள்ளார்கள். அதில் ஒருவருடைய தொண்டையில் கேனசர் உள்ளதை படமாக சிகரட் பாக்கெட்டின் அட்டையில் போட்டுள்ளார்கள்.
அவர் என்னிடம் கேட்டார்,
" உங்கள் நாட்டில் இப்படி சிகரட் பாக்கெட் அட்டையில் போட்டோ உண்டா?" என்று.
" இல்லை என்றுதான் நினைக்கிறேன்" என்றேன்.
" என் மனைவிக்கு தெரியாமல் சிகரட் பாக்கெட் மறைப்பது கஷ்டமாக உள்ளது" எனக்கூறினார்.
நான் கேட்டேன், " ஏன் சார், அப்படி மனைவிக்கு பயந்து, கேன்சர் வரும் என்று தெரிந்தும் சிகரட் பிடிக்க வேண்டுமா?"
அதற்கு அவர் கூறிய பதில்:
" SOMETIMES CANCER CURES SMOKING"
May 11, 2009
மிக்ஸர் - 11.05.09 - பிறவியின் நோக்கம்
சமீபத்தில் என் அலுவலக நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் எப்பொழுதும் ரொம்ப ப்ரீயாக பேசக்கூடியவர். அவர் ஒரு மலேசியர். பேச்சுவாக்கில் நான் கேட்டேன்:
" ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போனதும் என்ன பண்ணுவிங்க?"
" குளிச்சிட்டு சாப்பிடுவேன்"
" அப்பறம்?" - நான்
" கொஞ்ச நேரம் டிவி பார்ப்பேன்"
" அப்பறம்?"
" கொஞ்ச நேரம் குழந்தைகளோட விளையாடுவேன்"
" அப்பறம்?"
" தூங்க போய்டுவேன்"
" அப்பறம்?"
" காலைல எழுந்து ஆபிஸ் வருவேன்"
" அப்பறம்?"
" சாயந்தரம் வீட்டுக்கு போவேன் .... தூங்க போய்டுவேன்"
" எதுக்காக தூங்க போறீங்க"
" காலைல எழுந்துருக்கணும்ல"
" அப்போ காலைல எழுந்துருக்கரதுக்காக தான் தூங்கறீங்களா?"
" ஆபிஸ் போய்ட்டு வந்து என்ன பண்ணுவீங்க?"
" இரவு தூங்க போவேன்"
" ஆபிஸ் போறது, போய்ட்டு வந்து தூங்கரதுக்காக, இரவு தூங்கரது, காலைல எழுந்துருக்கரதுக்காக, அப்போ, உங்க வாழ்க்கையோட நோக்கம் என்ன? வெறும் தூங்கரதும், ஆபிஸ் போரதும்தானா? அதுக்காகவா பொறந்தீங்க?"
- இந்த உரையாடலுக்கு அப்புறம் என் கூட பேச மாட்டேன் என்கிறார்ங்க? என்ன பார்த்தாவே ஓட்டம் பிடிக்கிறாருங்க.
நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்?
உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன்??? - பிறவியோட நோக்கம் என்ன?
-------------------------------------------------------------------------------------------------
என்னோட பழைய பாஸ் எஸ். ராஜகோபால் அடிக்கடி சொல்லுவார்,
" நாம யாரையும் ரொம்ப நோகடிக்க கூடாது. குறிப்பா நமக்கு கீழ வேலை செய்யரவங்கள!, ஏன்னா, எல்லாத்துக்கும் ஒரு நாள் நாம அனுபவிக்க வேண்டி வரும்"
இதுக்காக ஒரு சம்பவம் ஒன்றை சொல்லுவார்.
ஒரு மிலிட்டரி மேஜர். அவருக்கு கீழ ஒரு உதவியாளர், அவரே சமையல்காரரும் கூட. மேஜர் எப்பவும் சமையல்காரரை அவமானப்படுத்திகொண்டே இருப்பார். ரொம்ப கேவலமாக திட்டுவது. சாப்பாட்டை தூக்கி வீசுவது. கெட்ட வார்த்தைகளில் திட்டுவது என்று.
சமையல்காரர் அவ்வளவிற்கும் ரொம்ப பொறுமையாக இருப்பாராம்.
அப்படியே ஐந்து வருடம் போனதாம். மேஜர் ஓய்வுபெறும் நாளும் வந்ததாம்.
கடைசி நாள் அன்று மேஜர் சமையல்காரரை அழைத்து சொன்னாராம்,
" உன்ன நான் ரொம்ப கொடுமை படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடுப்பா?"
சமையல்காரர் சொன்னாராம், " சார், நீங்களும் என்ன மன்னிச்சிடுங்க?"
" நீ என்னப்பா செஞ்ச, நான் உன்ன மன்னிக்க?"
" நான் இவ்வளவு நாளா உங்களுக்கு கொடுத்த காபி, டீயில கொஞ்சம் சாணி தண்ணி கலந்துதான் கொடுத்தேன்"
மேஜர் அதிர்ச்சில அப்படியே நின்றாராம்.
இப்போ புரியுதா, நம்முடைய எல்லா செயலுக்குமே, ஒரு எதிர் செயல் உண்டுனு?
------------------------------------------------------------------------------------------- -----
சமீபத்தில் ஆபிஸ் வேலையாக சென்னை சென்றபோது, தி நகரில் உள்ள Quality in Sabari யில் தங்க நேர்ந்தது. மாலையில் சிறிது நேரம் வாக்கிங் சென்றபோது கண்ணில் பட்டது, " காமராஜர் நினைவு இல்லம்".
உள்ளே சென்றேன். பெருந்தலைவரை பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தாலும், அங்கே படித்தவைகள், பார்த்த படங்கள் நெஞ்சை நெகிழ்விப்பதாய் இருந்தன. என்ன மாதிரி ஒரு தலைவர். நாட்டுக்காகவே வாழ்ந்த உன்னத தலைவர். படிக்காத மேதை. அவர்போல் இன்னொருவர் பிறக்க முடியுமா? மகாத்மா காந்திமேல் அதிக பற்றுக்கொண்டவர். காந்தியின் பிறந்தநாள் அன்று இறந்தவர்.
அவர் இறக்கும்போது அவர் பையில் இருந்தது, வெறும் ஒன்னரை ரூபாய் மட்டுமே?
பெருந்தலைவர் கூறியவற்றிலிருந்து சில உங்கள் பார்வைக்கு:
" சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்"
" நாட்டின் ஐக்கியத்தை பாதுக்காப்பதிலும், ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் உள்ளது"
" அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும், கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்துவிடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்"
" நாடு முன்னேற வறுமையும், அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது"
" பெண்கள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும்; கிராமங்கள் முன்னேறும்; தேசமே முன்னேறும்"
நேரம் கிடைத்தால் எல்லோரும் ஒரு முறை காமராஜர் நினைவு இல்லம் சென்று வாருங்கள்.

எங்கேயாவது போகணும்னு நினைச்சா உடனே போயிடுங்க. தயவு செய்து தள்ளிப் போடாதீங்க.
தள்ளிப்போட்டதால நான் பார்க்கமுடியாமல் போனது, சந்திக்க முடியாமல் போனது நிறைய.
உதாரணத்திற்கு, நான் இராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது, எல்லோரும் சங்கராச்சாரியாரை (பெரியவர்) சந்திக்க கிளம்பினார்கள். எனக்கு அவரை பார்க்க அவ்வளவு விருப்பம். ஆனால், ஏதோ காரணத்தினால், நான் அடுத்த வாரம் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போங்கள் என நண்பர்களை அனுப்பி வைத்தேன்.
அவர்களும் சென்று வந்தார்கள்.
அடுத்த வாரமும் வந்தது. ஆனால், பெரியவர்தான் இல்லை. அதற்குள் தெய்வத்திடம் சென்று விட்டார்.
அதனாலதான் சொல்லுறேன்,
எங்கேயாவது போகணும்னு நினைச்சா உடனே போய்டுங்க. தயவு செய்து தள்ளி போடாதீங்க.

சரி அப்பறம் பார்க்கலாமா?

May 10, 2009
அம்மாவிற்கு ஒரு கடிதம்.
என் இனிய அம்மாவிற்கு,
ஆயிரம் வணக்கங்கள்.
எப்படி அம்மா இருக்கீங்க? நலமா?
மாத்திரைகள் சாப்பிடுவது அதிக சோர்வா இருக்காமா? சரியாயிடும், கவலைபடாத அம்மா? நீதானேம்மா அடிக்கடி சொல்வ, எதையும் தைரியமா எதிர்கொள்ளனும் அப்படீனு? எனக்கு நல்லா நினைவிருக்கிறதும்மா, நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எனக்கு உடம்பு சரியில்லைனா, கூடவே சோறு தண்ணி இல்லாம இருப்பியே, பக்கத்துலேயே இருந்து கவனிப்பியே, அது மாதிரி என்னால உனக்கு செய்ய முடியலையே ஏம்மா?
நான் மலேசியாலேர்ந்து இந்தியா வந்தவுடன், நான் உன் உடல் நிலைய விசாரிக்கரதுக்கு முன்னாடி, என் உடல் நிலைய விசாரிக்க எப்படிமா உன்னால மட்டும் முடியுது. ஏம்மா, முடியாத இந்த சமயத்திலேயும், " ஏம்பா, சாப்புட்டியா, என்ன காய் வாங்கட்டும்? அப்படினூ கேட்டு கேட்டு எப்படிம்மா, உன்னால மட்டும் முடியுது?"
எனக்கு ஒரு 12 வயசு இருக்கும். அப்போ வீட்ல சமைக்க அரிசி இல்ல. அப்பா, எங்கோ யாருட்டேயோ கடன் வாங்க போயிருந்தாங்க. அப்போ நீ என்ன மட்டும் கூப்பிட்டு, ஒரு ட்ரெங்க் பெட்டிலேந்து, ஒரு பழைய 5 ரூபா எடுத்து, ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வானு சொன்னீயே, உனக்கு மட்டும் எப்படிமா அந்த அன்பு வந்தது? நானும், தம்பி, தங்கை, அக்காவ பத்தி நினைக்காம, போய் சாப்பிட்டேனேமா? உன்னோட அந்த அன்புக்கு நான் எப்படிம்மா கைமாறு செய்யப்போறேன்?
அம்மா, நான் +2 படிக்கும்போது ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்டு, அது ஒரு பெரிய பிரச்சனையா உருவெடுத்தப்போ, அப்பா என் மேல கோபமா இருந்தப்போ, நீ மட்டும்தானேமா, என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த!. என் பிரச்சனைய புரிஞ்சு, எனக்கு எடுத்து சொல்லி, என்ன அந்த நினைவுகளிலிருந்து விடுபட வைச்ச?
எந்த படம் பார்த்துட்டு வந்தாலும், நான் கதைய அப்படியே சொல்லுவேன், நீயும் கேப்ப, " ஏண்டா, படத்துக்கெல்லாம போற அப்படீனு கேக்காம, அதிகமா படத்துக்கு போகாதனு" நாசுக்கா சொல்லி திருத்துவியேம்மா?
நீ எட்டாம் வகுப்புத்தான் படிச்சிருக்க. ஆனா ஒரு மெத்த படித்த மேதை மாதிரி எங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுப்பியேம்மா. தினமும் காலைல 4 மணிக்கு அலாரம் வச்சு எழுந்து, எனக்கு காபி போட்டு கொடுத்து, நான் படிக்கிற வரை பக்கத்துலேயே இருப்பியே, என்னால எதையும் மறக்க முடியலைம்மா?
நீ அடிக்கடி ஒண்னு சொல்லுவியே நினைவிருக்காமா? " நமக்குனு ஒரு சொத்து கிடையாது. படிப்பு ஒண்ணுதான் மூலதனம். அதை வைச்சுதான் முன்னேறனும். அதனால படி". நீ சொன்ன அந்த வார்த்தைகள் தானேமா, என்ன இந்த அளவுக்கு உயர்ந்த நிலையில வைச்சிருக்கு.
ஒரு முறை அப்பா உன்ன கெட்ட வார்த்தை சொல்லி ஏதோ கோபத்தில் உன்னை திட்டி விட்டார். அதற்கு நான் அப்பாவை பார்த்து," அடுத்த பிறவியிலாவது மனுசனா பொறங்க" அப்படீனு சொல்லிட்டேன். அப்பா என் கூட ஒரு வாரம் பேசலை. எல்லோரும் என்ன அப்பாட்ட மன்னிப்பு கேட்க சொன்னாங்க, நான் அப்பா பண்னது தப்பு, மன்னிப்பு கேட்கமாட்டேனு சொன்னேன். அப்போ, நீ என்ன அழகா, கணவன் மனைவி உறவுன்னா என்ன? அதுல பிள்ளைகள் எது வரை தலையிடலாம்னு சொல்லி நான் பண்ண தப்ப உணர வைச்சியேம்மா? மறக்க முடியலம்மா?
நீ என்னைக்குமே எனக்கு அம்மாவாவும் இருந்த, ஒரு சிறந்த தோழியாவும் இருந்த? அது எவ்வளவு விஷயத்துல எனக்கு உதவுச்சு தெரியுமா? பல பெண்களோட பழகற வாய்ப்பு கிடைச்சப்ப எல்லாம், சில தவறுகள் செய்ய கூடிய வாய்ப்புகள் வந்த போதெல்லாம், நீ தோழி போல் சொன்ன அறிவுரைகள் தானேம்மா, என்னை தவறு செய்யவிடாமல் தடுத்தது.
எனக்கு ஒரு சொல்ல முடியாத பிரச்சனை வந்த போது, நியாயமா நான் ஆண்கள் கிட்டதான் சொல்லனும், அப்பாக்கிட்ட தான் சொல்லனும். ஆனா நான் உன்கிட்டதான் சொன்னேன். நினைவு உள்ளதாம்மா? அதை எவ்வளவு அழகா அப்பாட்ட சொல்லி என்னை சரி பண்ணுன?
சில சமயம் அப்பா மேல கோபம் கோபமா வரும். இவ்வளவு கஷ்டத்துல ஏன் இத்தனை குழந்தை பெத்துக்கிட்டாங்கன்னு. ஒரு முறை எருமை மாடு வயசு ஆனதுக்கப்புறமும் நான், உன்னையும், அப்பாவையும் பார்த்து, " ஏன் இத்தனை குழந்தைகள் பெத்துக்கிட்டீங்கனு?"
கேட்டதுக்கு, நீ கோபமே படாம ஒண்ணு சொன்னியே ஞாபகம் இருக்காம்மா?
" இல்லைடா கண்ணு, இரண்டு குழந்தையோட நிறுத்தியிருந்தா, நீ எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டியே" என்னம்மா அப்படி ஒரு அன்பு என்மேல?
எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுலேந்து, நீ எங்கும் ஊருக்கு போய் நான் பார்த்ததில்லை. உன் வாழ்நாள் முழுக்க எங்களுக்காகவும், அப்பாவுக்காகவும் வாழ்பவள் நீ? உன் கல்யாணம் ஆன புதிதில், அப்பாவுக்கும், உன் உறவினர்களுக்கும் ஏதோ சண்டையானதால், அப்பா உன் வீட்டு உறவே வேண்டாம் என ஒதுக்கியதால், நீ இன்று வரை உன் உறவினர் வீட்டுக்கே போகாமல், கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு, எப்படி அம்மா, உன்னால் மட்டும் இருக்க முடிகிறது? இப்போ என் மனைவியை நான் அடிக்கடி அவள் வீட்டிற்கு கூட்டி செல்லும்போதெல்லாம், உன் நினைவுதானம்மா எனக்கு வருகிறது?
எனக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பமான போது, நான் மார்க்கட் வேல்யூவை இழந்தபோது, அப்பா ஒரு பெண்ணை பார்த்து, எல்லோருமே பெண்ணின் வீட்டிற்கு சென்று, என்னுடைய அனுமதியில்லாமல் அப்பா அந்த பெண்ணை நிச்சயம் செய்ய முயன்றபோது, நான் பிடிக்கவில்லை என சொன்னபோது, நாசுக்காக அப்பாவிடம் எடுத்து சொல்லி என்னை காப்பாற்றிய உன்னை எப்படிம்மா மறப்பது?
அடுத்த ஆறு மாதத்தில் எனக்கு பிடித்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தாயே? நீ தெய்வத்துக்கும் மேல் இல்லையா? உன்னால் இப்போது குழந்தகளை தூக்கி கொஞ்ச முடியவில்லை. அதற்காக நீ எவ்வளவு வருத்த படுகிறாய் என எனக்கு மட்டும்தான் தெரியும்.
நான் ஒவ்வொரு முறை மலேசியா கிளம்பும்போது, கடைசி நாள் அதிகமாக கடுப்படிப்பேன். நீ கூட நினைத்திருக்கலாம். "என்ன இவன் எப்பவும் சிடு சிடுனு இருக்கான்" எனறு. ஆனால், உண்மை என்ன தெரியுமா? உன்னை பிரியப்போகிறோம் அப்படிங்கற எண்ணம்தான் நான் கோபமாக இருப்பது என உனக்குத் தெரியுமா அம்மா?.
நீ எனக்கு செஞ்ச அனைத்திற்கும் நான் எப்படி உனக்கு திருப்பி செய்வேனு நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால், நீ சொன்னமாதிரி நான் வளர்ந்த்ததால் தானே நான் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன். என் பிள்ளைகளையும் அப்படியே வளர்ப்பேனு உனக்கு உறுதி அளிக்கிறேன் அம்மா.
அடுத்த பிறவிலேயும், நீதான்மா, எனக்கு அம்மாவா வரணும்.
கடைசியா ஒண்ணும்மா!. இன்னைக்கு அன்னையர் தினம். நீ எனக்கு ஒரு வரம் தரணும். என்ன தெரியுமா?
" அப்பா எப்ப கூப்புட்டாலும், கூப்புட்ட குரலுக்கு ஓடி போய், என்னங்க அப்படினு அப்பாட்ட போய் நிப்ப"
" இப்போ அப்பா கூப்பிட்டார்னா, உடனே போகாதம்மா! அப்பறம் வரேனு சொல்லு"
ஏன்னா அப்பா இருக்கரது சொர்க்கத்துல இல்லையா?

Subscribe to:
Posts (Atom)