நான் பதிவுலகுக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆக போகிறது. ஆனால், இன்னும் சில சந்தேகங்கள் மனதில்.
தயவு செய்து பதில் தெரிந்தவர்கள் என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைக்கவும்.
01. "தமிழ்மணம்" லோகோவை என்னுடைய டெம்ப்லேட்டில் கொண்டுவருவது எப்படி?
02. என்னுடைய டெம்ப்லேட்டில் "திரட்டி" லோகோ உள்ளது, நான் எழுதும் பதிவுகள் எழுதி முடித்தவுடனே திரட்டி. காம் சென்று விடுகிறது. அதே போல் ஏன், தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்10 ஆகிய தளங்களுக்கு தானாக நம் பதிவுகள் செல்வதில்லை. ஒவ்வொரு முறையும் நான் அங்கு சென்று இணைக்க வேண்டியுள்ளது. ஏன் திரட்டி போல், நாம் இணைக்காமலே, மற்ற தளங்களில் தெரிவதில்லை?
03. என்னுடைய பதிவின் முடிவில் "தமிழிஷ்"ன் வோட்டுடன் கூடிய லோகோவை எப்படி இணைப்பது?
04. பின்னூட்டத்தில் " :)) " இப்படி வந்தால் இதனுடைய அர்த்தம் என்ன?
05. என்னுடைய டெம்ப்லேட்டில், ஒவ்வொரு முறை புது காட்கேட் ( Add a Gadget) என்னுடைய டெம்லேட்டின் மேல்தான் வருகிறது. அதை கீழே தெரியும்படி செய்யவோ, அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவோ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
06. தமிழ் தளங்களை Googleன் Adsense Account ல் பதிவு செய்ய முடியுமா?
தயவு செய்து பதில் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?????
7 comments:
//01. "தமிழ்மணம்" லோகோவை என்னுடைய டெம்ப்லேட்டில் கொண்டுவருவது எப்படி?//
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html
//02. என்னுடைய டெம்ப்லேட்டில் "திரட்டி" லோகோ உள்ளது, நான் எழுதும் பதிவுகள் எழுதி முடித்தவுடனே திரட்டி. காம் சென்று விடுகிறது. அதே போல் ஏன், தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்10 ஆகிய தளங்களுக்கு தானாக நம் பதிவுகள் செல்வதில்லை. ஒவ்வொரு முறையும் நான் அங்கு சென்று இணைக்க வேண்டியுள்ளது. ஏன் திரட்டி போல், நாம் இணைக்காமலே, மற்ற தளங்களில் தெரிவதில்லை?/
தமிழ் மணம் கருவிப்பட்டையை இணைத்தவுடன் நீங்கள் அந்த கருவிப்பட்டையிலிருந்தே உங்கள் இடுகையை இணைக்கலாம்.
தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி ஆகியவை “திரட்டிகள்” aggregators
தமிழிஷ், தமிழ்பெஸ்ட், என்தமிழ், நியூஸ்பானி ஆகியவை bookmarking services
இரண்டிற்கும் வித்தியாசங்கள் பல
//03. என்னுடைய பதிவின் முடிவில் "தமிழிஷ்"ன் வோட்டுடன் கூடிய லோகோவை எப்படி இணைப்பது?//
http://blog.tamilish.com/pakkam/7
//04. பின்னூட்டத்தில் " :)) " இப்படி வந்தால் இதனுடைய அர்த்தம் என்ன?//
தமிழ்மணம் கருவிப்பட்டையை சரியாக இணைக்கவில்லை என்று பொருள்
//05. என்னுடைய டெம்ப்லேட்டில், ஒவ்வொரு முறை புது காட்கேட் ( Add a Gadget) என்னுடைய டெம்லேட்டின் மேல்தான் வருகிறது. அதை கீழே தெரியும்படி செய்யவோ, அல்லது வேறு இடங்களுக்கு மாற்றவோ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?//
(எலியின் வலது விசையை அழுத்தி) அதை கீழ் இழுத்து விடுங்கள்
//06. தமிழ் தளங்களை Googleன் Adsense Account ல் பதிவு செய்ய முடியுமா?//
விண்ணப்பத்து பாருங்கள்
http://kricons.blogspot.com/
இந்த பதிவுக்கு போய் பாருங்கள் ஓரளவுக்கு தெளிவா விளக்கிருப்பார், உங்க கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்று நம்புகிறேன்.
தெளிவாக விளக்கம் அளித்த நண்பர் புருனோ அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
என்னுடைய பதிவு ஒன்றுக்கு இப்படி :)) பின்னூட்டம் வந்திருந்தது.
அதற்கு என்ன அர்த்தம்?
பின்னூட்டமிட்ட நண்பர் அபு அப்ஸர் அவர்களுக்கு நன்றி.
நண்பர் புரூனோவுக்கு,
இதனை நான் ஏற்கனவே செய்து முடித்துவிட்டேன்.
நான் கேட்பது, Gadgetல் "ங் தமிழ்மணம்" லோகோவை என்னுடைய டெம்ப்லேட்டில் கொண்டுவருவது எப்படி? எனபதை பற்ற்றித்தான்.
இந்த சந்தேகங்கள் அனைத்தும் எனக்கும் இருந்தது. இப்பொழுது தெளிவடைந்து விட்டேன் ஆகவே இந்த பதிவை வெளியிட்ட நண்பர் இனியவனுக்கும் அதற்கு சரியான வழிகளை காட்டிய மற்றைய நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்
இந்த சந்தேகங்கள் அனைத்தும் எனக்கும் இருந்தன. இப்போது தெளிவடைந்து விட்டேன். ஆகவே இந்த பதிவை வெளியிட்ட நண்பர் இனியவனுக்கும், அவற்றுக்கு சரியான வழிகளை காட்டிய மற்றைய நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
Post a Comment