நல்லாத்தாங்க இருந்தேன் ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி. நான் உண்டு, என் வேலை உண்டு, யோகா உண்டு, ஜிம் உண்டு என்று. தெரியாத்தனமா ஒரு நாள் என் மகள்,
"அப்பா, நான் கடவுள் படத்துல உள்ள 'அம்மா உன் பிள்ளைதான்' பாட்டு வரிகள் வேணும்பா?"
"ஏண்டா?"
" பாட்டு போட்டியில கலந்துக்கணும் அதுக்குத்தான்"
சரினு இணையத்துல தேடுனா, பரிசல் பக்கம் கிடைச்சது, என்னடா இது புதுசா இருக்கேனு படிச்சா, மனுசன் நல்லா இன்ட்ரெஸ்டா எழுதியிருந்தார். அப்பறம் நர்சிம் பக்கம்னு போய், பல மணி நேரத்துக்கு பிறகு பாட்டை கண்டு பிடிச்சு எடுத்து, என் பொண்ணு ஒரே நாள்ல பாட்டைக்கற்றுக்கொண்டு, தமிழையும் சேர்த்து கற்றுக்கொண்டு, பள்ளில பாடி பரிசு வாங்குனது எல்லாம் ஒரு சந்தோசமான விசயம். அத விடுங்க.
அப்பறம் வேற என்ன சொல்ல வரேணு கேட்கறீங்களா? நான் அதோட விட்டுருக்கணும். என்னாச்சு, எல்லா வலைத்தளத்தயும் படிக்க ஆரம்பிச்சு, எனக்கும் அந்த ஆசை வந்து நானும் இரெண்டு மாசத்துக்கு முன்னாடி வலைப்பூ ஆரம்பிச்சு, இப்போ பதிவு நோய் வந்து தவிக்கறேங்க.
பரிசலோட முக்கியமான பக்கங்களையும், நர்சிம்மோட பக்கங்களையும் படிச்சு, விமானத்துல போகும்போது ஒரு டிக்கட் வாங்கி, மூன்று பேர் பிரயாணம் செஞ்சோங்க, நான் பரிசலின், நர்சிமின் பக்கங்களுடன்.
நேற்று அப்படித்தான், " ஏதாவது செய்யணும் பாஸுனு" மனசுக்குள்ளயே நினைசுக்கிட்டு இருந்ததுல, வெளிலயும் அப்படியே சொல்லிக்கிட்டு இருந்துருக்கேன் போல.
எங்க வீட்டுல கேட்டாங்க , தயவு செய்து நம்புங்கப்பா, நான் சொல்லப்போறது உண்மையா நடந்தது.
" ஏதாவது செய்யணும்னு சொன்னீங்களே, நைட் டிபன் என்ன செய்யட்டும்?"
" கொத்து புரோட்டா செய்யேன்"
" தொட்டுக்க?"
" அவியல் பண்ணு"
" கொத்து புரோட்டாக்கு அவியலா?"
" அப்போ குவியல் பண்ணு"
" இல்லைனா, முதல்ல காக்டெயில் குடு"
" என்னங்க சொல்லறீங்க?"
" சரி, எதுவும் இல்லைனா மிக்ஸுடு ஊறுகாய் கொடுப்பா, அது போதும்"
உடனே என்னவள் என் பிள்ளைகளிடம் கூறியதுதான், இங்கே கவனிக்க பட வேண்டியது.
" பாப்பா, தம்பி, அப்பாக்கு என்னமோ ஆயிடுச்சு"
" என்னப்பா ஆச்சு?" - பிள்ளைகள்.
" என்னாச்சுங்க உங்களுக்கு?"
" ஐ, இந்த தலைப்பு நல்லா இருக்கே,
" என்னாச்சு உங்களுக்கு? இதுல ஒரு பதிவு போட வேண்டியதுதான்".
குடும்பமே என்னை ஒரு மாதிரி பார்த்தது.
ஆமா, அப்பறம் என்னங்க, கண்ண மூடுனா "தமிழ் மணம்" பக்கம்தான் கண்ணுக்கு வருது, அதுல வலது பக்கம், இடது பக்கம் , எந்த பக்கம் திரும்புனாலும் நண்பர்கள், நர்சிம், பரிசல், ஆதி, கேபிள் சங்கர், கார்க்கி, லக்கிலுக், அதிஷா (ரெண்டுபேரும் ஒண்ணா? ஏன்னா, நேற்று முன் தினம் அதிஷாவின் பக்கத்தில் லக்கிலுக்கின் கட்டுரை), சுரேஷ், இராகவன் நைஜீரியா, மாதவ ராஜ், டாகடர் புரூனோ, டோண்டு, இப்படி பலர்.
சரினு தூங்க கண்ண மூடப்போனா, " குசும்பன் புக்கோட புக்கா படுத்து பக்காவா போஸ் குடுக்குறாருங்க"
இரண்டு மாசமா, நான் நானாவே இல்ல? ஒரே பதிவு பதிவு அப்படீனு பதிவுமேனியா புடிச்சு அலையறேங்க.எதாவது எழுதணும், எதாவது எழுதணும்னு பைத்தியம் புடிச்சு அலையறேன். ஏதோ நான் எழுதாததால உலகமே ஸ்தம்பிச்சு நிக்கறா மாதிரி.
நான் இப்போது என் குடும்பத்துடன் மட்டும் வாழ வில்லை. பதிவுலகத்துடன் சேர்ந்தே என் வாழ்க்கை பயணமும் தொடர்வதுபோல் தெரிகிறது. என்னுடைய பலத்த வேலைகளுக்கிடையே, இது ஒரு இன்ப வலியாக தெரிகிறது.
என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிய பரிசலுக்கும், நர்சிமுக்கும் நன்றி.
நேற்று வீட்டுல கேட்டாங்க,
" பதிவு, பதிவுனு பைத்தியமா மன நோய் புடிச்சா மாதிரி அலையறீங்க, அடுத்த தடவ இந்தியா போகும்போது, டாக்டர் ருத்ரன் கிட்ட உங்கள் கூட்டிட்டிடு போகணும்ங்க"
" தாராளமா கூட்டிட்டு போ"
" என்ன அதிசயமா உடனே ஒத்துட்டீங்க"
" உனக்குத் தெரியாதா, அவரும் இரண்டு வலைத்தளம் வைச்சிருக்காரு"
உடனே அவங்க என்ன பார்த்த பார்வை "ங"னு இருந்துச்சு (இராஜேந்திரகுமார் பாணியில் சொல்ல இ கலைப்பையில் எப்படி டைப் அடிப்பது என்று தெரியவில்லை).
டாக்டர் புரூனோ சார், இந்த வியாதிக்கு ஏதாச்சும் மருந்துருக்கா???
29 comments:
//டாக்டர் புரூனோ சார், இந்த வியாதிக்கு ஏதாச்சும் மருந்துருக்கா???//
:) :) :)
கலக்கல் இனியவன்.
இப்ப கணினி வச்சிருக்கவங்க நெரயாப் பேர் இப்படித்தான்.., அதும் இ-கலப்பை கிடைச்சிட்டா அவ்வளவுதான்,
haa..haa.. :)>):)
டாக்டர் புருனோ கூறியது போல்( :)) புன்னகையே மருந்து..
இனியவன்.. உங்களுக்கு நகைச்சுவை கலந்த நடை அருமையாக வருகிறது.. தொடர்ந்து எழுதவும்( உசுப்பேத்துறதுதானே நம்ம வேல)
அதுவும் டாக்டர் ருத்ரனிடம் போவதற்கு நீங்கள் கூறிய காரணம் மிக மெல்லிய,டைமிங்கான நகைச்சுவை. கலக்குங்கள் நண்பா.
வருகை தந்த நண்பர்கள் டாக்டர் புருனோ, முரளிகண்ணன், சுரேஷ், கேபிள் சங்கர் ஆகியோருக்கு நன்றி.
தலைவா, நான் போட வச்சிருந்த பதிவு நீ போட்டுட்ட...
இப்ப நா என்ன பன்றதுதுது... மரியாதையா நீ எனக்கு ஒரு பதிவெழுதி குடுத்துடு
இல்லனா... மண்டபம்தான்!
(ரூம் போடுறது ஓல்டு)
இப்படிக்கு,
பதிவுக்கு தலைப்புதேடி தலைசொறிவோர் சங்கம்
ஒண்டும் பிரச்சனையில்லை, ஊரில ( பதிவுலகம்னு ஒண்ணு இருந்தா அதில ஊருன்னும் ஒன்னு இருக்கத்தானே வேணும்) ரொம்ப몮பேர் இப்படித்தான் திரியறாங்க. போதாததுக்கு நமக்கு ஈ - கலப்பை வேற தெரியும் ம்ம்ம்ம்ம்....
//" உனக்குத் தெரியாதா, அவரும் இரண்டு வலைத்தளம் வைச்சிருக்காரு"
//
ஹா ஹா ரசிச்சேன் தல
நமக்கும் இதே டென்ஷந்தான்
நீங்க ரெண்டுவாழ்க்கை வாழுறீங்க
நான் நாலு வாழ்க்கை வாழுறேன்..... பதிவுலகம் பைத்தியம் அப்படி
உங்க எழுத்துநடை நல்லாயிருக்கு, கலக்குங்க (இப்படி உசுப்பேத்திதான் ரணகளமாகிப்போச்சு...)
ஓ.இதுக்கு பேர்தான் பின்னி பெடல் எடுக்கிறதா?
இனியவன் அங்கிள் (உங்கள அண்ணன்னு கூப்பிட்டா எனக்கு வயசாகிடுச்சின்னு நினைப்பாங்க)
இந்த நோய்க்கு பினாங்குல சித்தவைத்தியம் இருக்கான்னு விசாரிச்சிபாருங்கு... இருந்தா அப்படியே எனக்கும் சொல்லுங்க.
-பித்தன்
இதே போலத்தான் பல்பு வாங்கின கதையும்!!!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/05/blog-post_16.html
அன்புடன் அருணா
this is a net period, after 2 years automatically this craze will reduce.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பதிவு என்னும் நோய்!!! - நர்சிமும், பரிசலும்தான் காரணம்!!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th May 2009 10:00:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/67016
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
//உடனே அவங்க என்ன பார்த்த பார்வை "ங"னு இருந்துச்சு (இராஜேந்திரகுமார் பாணியில் சொல்ல இ கலைப்பையில் எப்படி டைப் அடிப்பது என்று தெரியவில்லை).//
ngee / ngE = ஙே
:-)
/இனியவன்.. உங்களுக்கு நகைச்சுவை கலந்த நடை அருமையாக வருகிறது.. தொடர்ந்து எழுதவும்/
என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திகொண்டிருக்கும் நணபர் நர்சிமுக்கு நன்றி! நன்றி!!
பின்னூட்டமிட்ட நண்பர்கள்,
கலையரசன்,
சுபாங்கன்,
அபுஅப்ஸர்,
தமிழ்நெஞ்சம்,
பித்தன்,
அன்புடன் அருணா,
குப்பன்,
பாலராஜன் கீதா
ஆகியோருக்கு நன்றி.
:-)
அட... இத்தனை நாள் இங்க வராம விட்டுட்டேனே.... உஙக்ளுக்கு நகைச்சுவை சரளமாக (கவனிக்க: சாளரமாக அல்ல) வருகிறது சகா
இப்படியும் ஒரு கலக்கலா
பின்னூட்டமிட்ட நண்பர்கள்,
சென்ஷி,
கார்க்கி,
ஆ. ஞானசேகரன்
ஆகியோருக்கு நன்றி.
:)-
:))
Nice, natural humour. Sorry Iniavan - No Tamil Font. Keep writing.
//டாக்டர் புரூனோ சார், இந்த வியாதிக்கு ஏதாச்சும் மருந்துருக்கா???//
கருங்குரங்கு இரத்தம்:)
மருந்து சொன்ன என்கிட்டேயே இரத்தம் கேட்டா என்ன செய்வது:))
ரொம்ப நல்லாருக்கு.,
நாம பதிவு எழுதினா எங்கே படிப்பாங்கன்னு நெனச்சேன்,
உங்களுக்கு கிடைச்ச ஹிட்டு நம்பிக்கையை கொடுத்திருக்கு.
புதுசா வாரவங்களை ஊக்கப்படுத்துவதில் நம்ம சீனியர்கள் கில்லாடி.
யப்பா..
கலக்கல் பதிவு இனியவா...!
இனியவா - இனி நீயும் வான்னு டைட்டா எழுதாம லைட்டா எழுதற சுவாரஸ்ய வலைப்பூ சங்கம் உங்களை வரவரவேற்கிறது!
யப்பா!
பரிசலோட பின்னூட்டம் வந்தாச்சு.
இனி எல்லாம் சுகமே!
இயல்பான நகைச்சுவை...
Post a Comment