நண்பர் கலையரசன் என்னையும் ஒரு ஆளாக மதித்து சங்கிலித்தொடருக்கான பதில்களை எழுத அழைத்திருந்தார். இதோ, அதற்கான பதில்கள்:
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பெற்றோர்கள் வைத்த பெயர் என். உலகநாதன். நான் இனிமையாக பெசுவதால் "இனியவன்" என பெயர் வைத்துக்கொண்டேன். (அதற்காக என் வீட்டில் செக் செய்ய வேண்டாம் உண்மையாலுமே நான் இனிமையாக பேசுகிறேனா என்று)
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
விவாகரத்து என தம்பி முடிவு பண்ணியபோது. கண்கலங்கியது மாவீரனைப்பற்றிய செய்திகள் வந்தபோது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
முன்பு ரொம்ப பிடிக்கும். இப்போ என் தலையெழுத்துத் தான் ரொம்ப பிடிக்கும்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
அரிசி சாதம். இரண்டு காய்கள் - ஒன்று கூட்டு, ஒன்று பொறியல், அப்பளம், ஊறுகாய், சாம்பார், ரச்ம் அல்லது தயிர். மதியானம் மட்டும் அதிகம் சாப்பிடுவேன்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
மற்றவர்கள் என்னுடன் 5 நிமிடம் பேசினாலே நட்பாகிவிடுவார்கள். நான் கொஞ்சம் யோசித்து ஆரம்பிப்பேன். ஆனால், அது கடைசி வரை நீடிக்கும். நான் நிறைய சேர்த்த சொத்தே என் நண்பர்கள்தான்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி குளியல் பிடிக்கும். நீச்சல் தெரியாததால் கடலில் குளிக்க பயம். காவிரியும், கொள்ளிடமும் ஓடும் ஊரில் பிறந்து நீச்சல் தெரியாமல் இருப்பது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆண்களாய் இருந்தால், எப்படி நாகரிகமாக பேசுகிறார்கள் என பார்ப்பேன்.
பெண்களாய் இருந்தால், வேண்டாம் பாஸ், சொன்னா வீட்டுல அடி விழும்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: என் தன்னம்பிக்கை
பிடிக்காத விஷயம் : என் தலை கனம்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம்: என்னை, அவர்கள் உயிராய் நினைத்து நேசிப்பது. என்னை முழுமையாக புரிந்து கொண்டு நடப்பது.
பிடிக்காத விஷயம் : எதுவுமே இல்லைங்க.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மாவும், அப்பாவும்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நீல கலர் பேண்ட், லைட் நீல கலர் சர்ட்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
"அம்மா உன் பிள்ளை நான்" - நான் கடவுள் பாடல்
நீண்ட தூர கார் பயணத்தின்போது, சூல மங்களம் சகோதரிகளின் " கந்த சஷ்டி கவசம்"
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.
14.பிடித்த மணம்?
ஊதுபத்திம், சாம்பிராணி, சூடம் கலந்த பூஜை ரூம் வாசம்.
15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
பரிசல்: நான் முதலில் இணையத்தில் படித்தது இவர் எழுத்துக்களைத்தான். சுஜாதாபோல் எழுதுவதால் அவரை எனக்கு ரொம்ப புடிக்கும்.
நர்சிம்: நல்ல இலக்கிய நடைக்கு சொந்தக்காரர். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். எல்லோரையும் எழுத ஊக்குவிப்பவர்.
செல்வேந்திரன்: நல்ல கவிதை படைப்பவர். வளர்ந்துவரும் நட்சத்திரம்.
இவர்கள் மூவரும் ஏற்கனவே இந்த தொடரை எழுதி விட்டார்களா? எனத்தெரியவில்லை.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
கலையரசன் அவர்களின்,
"நானும், செயின் ரியாக்சஷனும்" ஏன்னா, அதுலதானே என்னைப்பற்றி எழுதியிருக்கிறார்.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்
18.கண்ணாடி அணிபவரா?
இதுவரை அந்த குடுப்பினை இல்லை!
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
காதல் கலந்த காமடி கதை
20.கடைசியாகப் பார்த்த படம்?
தீ எனும் பாடாவதி படம்.
21.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலத்தில் வந்த டீன் ஏஜ் பருவகாலம்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
எப்போதுமே அர்த்தமுள்ள இந்து மதம். இன்று காலை படித்தது, மீண்டும், நர்சிமின், பரிசலின், செல்வேந்திரனின், அதிஷாவின், கேபிள் சங்கரின், வடகரை வேலனின், ஆதியின் கதைகள், கவிதைகள் வந்த "ஆவி"க்களை..
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அலுவலகத்திலும், என் லேப் டாப்பிலும் மாற்ற மாட்டேன். ஆனால், என் வீட்டில் உள்ள கம்யூட்டரில் என் மகள் தினமும் மாற்றுவார்.
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : இளையராஜாவின், ரகுமானின் அனைத்து சத்தங்களும்.
பிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மலேசியா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நல்லா பாட முயற்சி பண்ணுவேன், கதை எழுதுவேன், கீ போர்ட் வாசிக்க நினைப்பேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் தங்கையின் அகால மரணம். அப்பாவின் மரணம். கஷ்டங்களை மட்டுமே சுமந்து எங்களை ஆளாக்கிவிட்டு, நாங்கள் நல்லா இருக்கும்போது எதையும் அனுபவிக்காமல் அவசரப்பட்டு சொர்க்கம் போனவர்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
உள்ளே எங்கே இருக்கு? அதான் வெளியிலேயே சுத்துதே.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல் (ஹனிமூன் சென்ற இடம் என்பதால்).
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
என்னைப்போலவே.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதுவுமே இல்லை. எதையுமே மனவியில்லாமல் செய்ய விரும்ப வில்லை.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
மனிதப்பிறவி கிடைத்திருப்பதே மிகப்பெரிய வரம். அதை ஒவ்வொரு நிமிசமும் சந்தோசமாக அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள். சுகம், சோகம் இரண்டையுமே சமமாக பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்க்கையை முறையுடன் வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.
13 comments:
//பிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...//
ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது எந்த சத்தமும் கேட்காது என்று கூறுவார்கள் :)
//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என் தங்கையின் அகால மரணம். அப்பாவின் மரணம். கஷ்டங்களை மட்டுமே சுமந்து எங்களை ஆளாக்கிவிட்டு, நாங்கள் நல்லா இருக்கும்போது எதையும் அனுபவிக்காமல் அவசரப்பட்டு சொர்க்கம் போனவர்.//
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post_31.html
இத படிச்சிட்டு எதாவது மாற்றுகருத்து இருந்தா சொல்லுங்க... ஏன்னா நிறைய வருடம் மலேசியால பணிபுரியுரதுனால இன்னும் அதிகமா உங்களுக்கு தெரிய வாய்பிருக்கு.
-பித்தன்
01. //பிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...//
ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது எந்த சத்தமும் கேட்காது என்று கூறுவார்கள் :)
- நண்பரே,
நான் யோகா என்று தியானத்தை குறிப்பிடவில்லை.
யோகாசனத்தைக் குறிப்பிடேன்.
02. பதிவை படித்துவிட்டு கூறுகிறேன்.
//நான் யோகா என்று தியானத்தை குறிப்பிடவில்லை.
யோகாசனத்தைக் குறிப்பிடேன்.//
பொதுவா இப்ப எல்லாரும் தியானத்த, யோகான்னுதான் சொல்லுறாக அதனால் தவறாநினைத்துவிட்டேன்... மன்னிக்கவும்,
****
எங்க இருக்கிங்கன்னு கண்டுபுடிச்சிட்டேன் :) ஆனா அது நான் வராத இடம் :(
நன்று தல..,,
//நண்பர் கலையரசன் என்னையும் ஒரு ஆளாக மதித்து சங்கிலித்தொடருக்கான பதில்களை எழுத அழைத்திருந்தார்//
நீங்க சொன்ன பதில்ல எனக்கு புட்ச பதிலு இதான்!
//பிடிக்காத விஷயம் : என் தலை கனம்//
தலையில ஏன் பாஸ் வச்சிக்கிட்டு..
கீழ எறக்கி வைய்யிங்க!
//ஊதுபத்திம், சாம்பிராணி, சூடம் கலந்த பூஜை ரூம் வாசம்//
ரொம்ப பக்தி கொட்டையோ.. சாரி பழமோ?
//இவர்கள் மூவரும் ஏற்கனவே இந்த தொடரை எழுதி விட்டார்களா?//
கவலை படாதீங்க.. கண்னை தெடச்சிகோங்க..
யாரும் எழுதல!
//நர்சிமின், பரிசலின், செல்வேந்திரனின், அதிஷாவின், கேபிள் சங்கரின், வடகரை வேலனின், ஆதியின் கதைகள், கவிதைகள் வந்த "ஆவி"க்களை.//
ஓவர் பொகையா இருக்கே! கண்னு தெரிய மாட்டுது!
சாம்பிராணியா? போடுங்க.. போடுங்க!
நேரடியான பதில்கள்!!!
ரசித்தேன்!!
வருகை புரிந்த நண்பர்கள்,
பித்தன்,
சுரெஷ்,
கலையரசன்,
இனியா
ஆகியோருக்கு நன்றி.
உங்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி
ரசனையான பதிலகள்!
நண்பர்கள்,
அபுஅப்ஸர்,
கவின்
ஆகியோருக்கு
நன்றி.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
மனிதப்பிறவி கிடைத்திருப்பதே மிகப்பெரிய வரம். அதை ஒவ்வொரு நிமிசமும் சந்தோசமாக அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள். சுகம், சோகம் இரண்டையுமே சமமாக பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்க்கையை முறையுடன் வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.
ithuthan oru variya?
அடடே இனியவன், நீங்க அழைத்ததைக் கவனிக்கவில்லை. தாமிரா இணையத்திலும், தொலைபேசியிலும் அழைத்தார்.
"பதிவரின் உண்மை முகம்" அப்படின்னு தலைப்பு வச்சிருந்தா இன்னும் அள்ளி இருக்கும்.
Post a Comment