Jun 3, 2009

பரிசலுடன் ஒரு அனுபவம்

இரண்டு வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்தினருடன் எங்கள் ஊரிலிருந்து பினாங்கு மற்றும் லங்காவி சுற்றுலா சென்றேன். மொத்தம் ஆறு நாள் பயணம். மறக்க முடியாத அனுபவம். மொத்தம் 9 மணி நேர கார் பயணம். நான் தான் காரை ஓட்டிச்சென்றேன். மலேசியாவின் அழகான ரோட்டில் கார் ஓட்டுவது ஒரு சுவையான அனுபவம். மூன்று நாள் பினாங்கை சுற்றி பார்த்துவிட்டு காரை ஹோட்டலிலேயே விட்டுவிட்டு, நாங்கள் லங்காவி கிளம்பினோம். 3 மணி நேர பெரி(சிறு கப்பல்) பயணம்.

ரொம்ப ஜாலியாக ஆரம்பித்த பயணம், கொஞ்ச நேரத்தில் மிக மோசமான கட்டத்தை நெருங்கியது. நாங்கள் பெரியின் உள்ளே நுழைந்ததுமே எல்லோருக்கும் ஒரு பிளாஸ்டிக் பை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் எங்களுக்கு காரணம் தெரியவில்லை. பிறகுதான் காரணம் தெரிந்தது. என்னவென்றால், சில பேருக்கு சீ (sea) சிக்னெஸ் வந்தால் வாந்தி வருமாம். அப்போது உதவியாக இருக்கட்டுமே என கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாமே நல்லாதான் போயிகிட்டு இருந்தது. திடீரென பெரி தூக்கி போட்டது பாருங்கள், ஒரு 5 அடி மேலே தூக்கி, திடீரென பொட்டுனு கடலில் விழும். எங்களைத்தவிர எல்லோரும் வாந்தி. கொஞ்ச நேரத்தில் ஒரே சத்தம். அன்று அமாவாசைக்கு அடுத்த நாள் வேறு. ஊழியர்களிடம் கேட்டால்,

"இன்னைக்கு கடல் கொஞ்சம் கடுமையா (rough) இருக்குங்க. ஆனா, இன்னைக்குனு பார்த்து ரொம்ப அதிகமா இருக்கு, ஏன்னு தெரியலனு" பீதிய கிளப்பி விட்டுட்டாங்க.

எல்லோர் சத்தமும் அதிகமாகவே, நான் வேண்டாத தெய்வமில்லை. அன்றைக்கு "எல்லா மதமும் எங்களுக்கு சம்மதமே" என்று, இந்து கடவுள், யேசு, அல்லா னு எல்லா கடவுளையும் துணைக்கு அழைத்தோம்.

பயங்கரமான த்திரில்லிங் அனுபவம். இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு. ஒரு மணி நேரம் அந்த கொடுமையை அனுபவித்தோம். 5 நிமிசத்துக்கு ஒரு முறை தூக்கி போடும். கத்தியே ஆகணும். கத்தல ஏதாவது உடம்புக்கு ஆகலாம். மொத்த பயணிகளுமே கத்தினா எப்படி இருக்கும்னு நினைச்சு பாருங்க. எல்லா கடவுளும் எங்களை அன்னைக்கு காப்பாத்துனதால இன்னைக்கு இதை உங்களிடம் சொல்லக்கூடிய நிலையில் இருக்கேன்.

இதனால உங்களுக்கு நான் சொல்ல விரும்புறது என்னன்னா, "அமாவாசை, பொளர்ணமி அன்று கடல் பயணம் செய்வதை தவிறுங்கள். அன்று கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்".

அந்த நேரத்தில் என் நண்பர் ஒருத்தர் செல் போனில் கூப்பிட்டார்.

" எப்படி இருக்கு கடல் பயணம்?"

" பயமா இருக்கு" என விசயத்தை விளக்கினேன்.

" அப்படியே, சுனாமி வந்தா எப்படி உணர்வீங்க?" என என் பயத்தை பொருட்படுத்தாமல், ஆறுதல் சொல்லாமல் கேட்டார்.

" நீங்க ரோட் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டா மாதிரி உணர்வேன்" என்றேன்.

போனை கட் செய்தவர் இன்று வரை என்னிடம் பேசுவதில்லை.

தலைப்ப வேற மாதிரி வச்சிட்டு, என்னமோ சொல்லுறேன் அப்படீங்கறீங்களா? இதோ விசயத்துக்கு வரேன்.

அப்போ, எனக்கு ஆறு வயசு இருக்கும். எங்க அத்தை ஒருத்தங்க கல்லணை தாண்டி திருக்காட்டு பள்ளியிலே இருந்தாங்க. ஏதோ ஒரு விஷேசத்துக்கு அப்பா எங்களை அத்தை வீட்டுக்கு கூட்டி போனார். அப்போ எல்லாம் பஸ் வசதி கிடையாது. எங்க ஊர்ல இருந்து கிளம்பி அவங்க ஊருக்கு போக காலைலே கிளம்பினோம்.

"எப்படிப்பா போகப்போகிறொம்?" என்றேன்.

"இரு, சொல்கிறேன்" என்றவர் ஒரு இடம் கூட்டிச்சென்றார். அன்றுதான் நான் முதலில் பரிசலை பார்த்தேன்.

நாங்கள் அனைவரும் ஒரு பரிசலில் ஏறினோம். ஒரு அரை மணி நேரப்பயணம். சுத்தி, சுத்தி சென்றது. அது ஒரு இனிமையான பயணம். என்னால் அந்த பயணத்தை மறக்கவே முடியாது.

பரிசலுடன் ஏற்பட்ட இனிய அனுபவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை.

" நீங்கள் பரிசலுடன் ஒரு அனுபவம் என்றவுடன், பரிசல்காரன் கிருஷ்ணாவுடன் என் அனுபவம் என நினைத்து படிக்க வந்திருந்தால், சாரி, பாஸ்! என்ன மன்னிச்சிடுங்க. இப்போதான் நான் பழக ஆரம்பிச்சிருக்கேன். கொஞ்ச நாள் ஆகும் அவருடன் ஏற்படும் அனுபவத்தை எழுத"

சரி, அப்பறம் பார்க்கலாமா??

11 comments:

சென்ஷி said...

//" நீங்கள் பரிசலுடன் ஒரு அனுபவம் என்றவுடன், பரிசல்காரன் கிருஷ்ணாவுடன் என் அனுபவம் என நினைத்து படிக்க வந்திருந்தால், சாரி, பாஸ்! என்ன மன்னிச்சிடுங்க. இப்போதான் நான் பழக ஆரம்பிச்சிருக்கேன். கொஞ்ச நாள் ஆகும் அவருடன் ஏற்படும் அனுபவத்தை எழுத"/

:-))

Athisha said...

நல்லா கிளப்புறாங்கையா பீதிய..

நான் கூட என்னமோ ஏதோனு பதறிப்போய் வந்தேன்

selventhiran said...

:)

iniyavan said...

நண்பர்கள்,

சென்ஷி,
அதிஷா,
செல்வேந்திரன்
ஆகியோருக்கு
நன்றி! நன்றி!!!, நன்றி!!!

பரிசல்காரன் said...

இனியவா..

கஷ்டத்தில் கைகொடுத்த பரிசல்ன்னு சொல்ல வர்றீங்க இல்லையா? ஹி..ஹி...

பரிசல்காரன் said...

// அதிஷா said...

நல்லா கிளப்புறாங்கையா பீதிய..

நான் கூட என்னமோ ஏதோனு பதறிப்போய் வந்தேன்//

அனுபவம்ன்ன உடனே ஓடி வந்தியாக்கும்? ங்கொய்யாஆஆல...

வெற்றி-[க்]-கதிரவன் said...

பெரியின் மேல்தளத்தில் அமர்ந்துகொண்டு... பெரி கொஞ்சம் தொலைவு சென்றவுடன் பெனாங்கு நகரத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சி, இன்னும் சற்று தொலைவு சென்றவுடன் கண்ணுக்கெட்டியதூரம் கடல்... இதமான காற்று... நினைத்தாலே இனிக்கும் பயணம்.

ஆனா புலாவ் பயர் மட்டும் போர் :(

கலையரசன் said...

கொஞ்சம் இளைப்பாரிட்டேன்.. அப்புறமா அடுத்த பதிவுக்கு வர்றேன்!

cheena (சீனா) said...

அன்பின் இனியவன்

பரிசலுடன் அனுபவ்ம என்ற உடன் எதிர் பார்த்துத்தான் வந்தேன் - ஆனாலும் உள்மனது கூறியது - இல்லையென.

அனுபவம் நன்கு விவரிக்கப்பட்டிருக்கிறது - நல்வாழ்த்துகள்

iniyavan said...

பின்னூட்ட மிட்ட நண்பர்கள்,

பரிசல்,
பித்தன்,
கலையரசன்,
சீனா

ஆகியோருக்கு நன்றி

கார்த்திக் சரவணன் said...

தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html