Jun 9, 2009

நமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது? உங்களுக்கு தெரியுமா?

ஞாயிறு இரவு 7G ரெயின்போ காலனி படம் சன் டிவியில் பார்த்தேன். இது அநேகமாக 10 தடவையாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த படமும், தவமாய் தவமிருந்து படமும் எத்தனை முறை பார்த்தாலும் என்னால் அழாமல் பார்க்க முடியவில்லை. நான் தியானம், யோகா செய்பவனாக இருந்தபோதும் என்னால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. எதனால் என ஆராய்ந்தேன். முதல் படத்தில் அவ்வளவு பிரியாமாக இருக்கும் ஹீரோ, கடைசியில் காதல் கைக்கூடும்போது, ஹீரோயின் இறப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் எப்போதும் சந்தோசமாக இருப்பதையே என் மனம் விரும்புகிறது. அது படம் தான் என்று தெரிந்தும்கூட என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்த படம், என் அப்பா என் மீது காட்டிய அன்பின் பாதிப்பை வெளிப்படுத்திய படமாக இருப்பதால் எனக்கு அழுகை வந்திருக்கலாம். ஆனால், மிகவும் உறுதியான மனிதன் என என்னை நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, இந்த அழுகை நான் ஒரு வேளை கோழையோ என நினைக்க தோன்றுகிறது.
சமீபத்தில் ஒரு ஆங்கில புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
புத்தகத்தின் பெயர்: EVOLVE YOUR BRAIN
எழுதியவர்: JOE DISPENZA, DC
இந்த புத்தகத்தில், நம் மூளையின் பவரை பற்றியும், அதனை சரியான முறையில் கையாண்டால், எதையும் சாதிக்கலாம் என்பதை பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார் புத்தக ஆசிரியர். நான் இன்னும் முழுமையாக படிக்க வில்லை.
புத்தக ஆசிரியர் ஒரு ஆர்த்தோ சர்ஜன். மிகப்பிரபலமான டாக்டர். ஸ்போர்ட்ஸில் ரொம்ப ஈடுபாடு. அவர் ஒரு முறை சைக்கிள் போட்டியில் கலந்து கொள்கிறார். வேகமாக சைக்கிளை ஓட்டி வந்தவர் எல்லைக்கோட்டை தொடும்போது, கண்ட்ரோல் இல்லாமல், எங்கெங்கோ ஓடி விபத்தில் மாட்டிக்கொள்கிறார். முதுகில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. டாக்டர் ஆப்பரேசன் செய்யலாம், ஆனால் கொஞ்சம் கஷ்டமான ஆப்பரசேன் என்கிறார்கள். இவரே ஒரு ஆர்த்தோ சர்ஜன் என்பதால், இவருக்கு அதன் டாக்டர்கள் சொல்லுவதிலிருக்கும் உண்மை தெரிகிறது. அப்போதுதான் இவர் அந்த முடிவை எடுக்கிறார்.
ஆபரேசனே இல்லாமல், தன் மனதை மூளையின் மூலம் முதுகு பகுதிக்கு செலுத்தி, ஒரு ஆப்பரேசன் செய்தால் என்னென்ன செய்வார்களோ அனைத்தையும், மூளையின் மூலம் இவர் கட்டளைகளாக பிறப்பித்து கொஞ்சம் கொஞசமாக தன் எலும்பு முறிவுகளை சரி செய்கிறார். பிறகு சிறிது நாளில் பூரண குணம் அடைந்துவிட்டதாக கூறுகிறார். டாக்டர்கள் எல்லாம் இவரின் சாதனையை பார்த்து மெடிக்கல் மிரேகிள் என்கிறார்கள். ஆனால், இவரோ, இது ரொம்ப சாதாரணம். அனைவராலும் முடியக்கூடிய ஒன்றே என்கிறார். இன்னும் பல உதாரணங்களை சொல்லுகிறார். முடிந்தால் படித்து பாருங்கள்.
இது உண்மைதான் என நினைக்கிறேன். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.
நீங்கள் ஒரு கல்லை எடுத்து, இதுதான் விநாயகர் சாமி என்று கும்பிட ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். நாளடைவில் நீங்கள் அதை சாமியாக நினைத்து நினைத்து அந்த கல்லை ஒரு சாமியாகவே பார்ப்பீர்கள். ஒரு நாள் அந்த கல்லை அல்லது சாமியை, உங்கள் காலால் எட்டி உதைத்து பாருங்கள். உங்கள் கால் உடனே முறிந்து ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் கிடப்பீர்கள்.
அதே சமயம், அதே சாமியை வேற்று மதத்தவரை கூப்பிட்டு எட்டி உதைக்க சொல்லுங்கள். அவருக்கு ஒன்னும் ஆகாது. காரணம் என்ன?
என்னவென்றால், நீங்கள் தினமும் அந்த கல்லை பார்த்து பார்த்து, உங்கள் மனதில் அதை சாமியாக நினைத்து நினைத்து, உங்கள் மனதில் அந்த கல் விநாயகராக மாறி விட்டது. விநாயகரை உதைத்தால், நம் கால் முறிந்து போகும் என்ற எண்ணம் உங்கள் மூளையில் அழுத்தமாக பதிந்து விட்டது. அதனால் தான், நீங்கள் உதைத்த உடன் உங்கள் மூளை உடனே செயல்பட்டு, உங்கள் காலை முறித்து விட்டது.
ஆனால், வேற்று மதத்து நண்பரோ, அதை சாமியாக பார்க்காமல், ஒரு கல்லாய் பார்த்ததால் அவருக்கு ஒன்றும் ஆக வில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. நாம் என்ன நினைக்கிறோமோ, அதுதான் நடக்கிறது என்பது தெளிவாகிறது அல்லவா?
சமீபத்தில் மலேசிய தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீக சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் இதே கருத்தை கூறினார். ஒரு சிறு செயல் மூலம் விளக்கினார். ஒரு சிறிய பென்சிலை ஒருவரை இரண்டு கைகளில் பிடித்துக்கொள்ள சொன்னார். பிறகு அடுத்தவரை கூப்பிட்டு மூளையின் முழு பவரையும் அவரது ஒரு விரலில் செலுத்தி, அந்த பென்சிலுக்கு நடுவில ஓங்கி அடிக்க சொன்னார். ஒத்தை விரல் அடியில் அந்த பென்சில் பீஸ் பீஸ் ஆனது. பிறகு நானும் வீட்டில் முயற்சி செய்தேன். என்னாலும் சுக்கு நூறாக உடைக்க முடிந்தது.
அடுத்த முறை 7G ரெயின்போ காலனி படத்தையும், தவமாய் தவமிருந்து படத்தையும் பார்க்கும் போது அழாமல் பார்க்க முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

7 comments:

Beski said...

புரியுது..... ஆனா, புரியல.

Beski said...

வயசானாலே... அழுகை சீக்கிரம் வந்துருமோ?!

iniyavan said...

உங்கள் கருத்துக்கு நன்றி,
"எவனோ ஒருவன் அவர்களே"

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'நமது மூளைக்கு எவ்வளவு பவர் இருக்கிறது? உங்களுக்கு தெரியுமா?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th June 2009 09:20:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/71653

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

நிகழ்காலத்தில்... said...

மூளையின், மனதின் ஆற்றலை பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியமைக்கு நன்றி

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நீங்கள் ஒரு கல்லை எடுத்து, இதுதான் விநாயகர் சாமி என்று கும்பிட ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். நாளடைவில் நீங்கள் அதை சாமியாக நினைத்து நினைத்து அந்த கல்லை ஒரு சாமியாகவே பார்ப்பீர்கள். ஒரு நாள் அந்த கல்லை அல்லது சாமியை, உங்கள் காலால் எட்டி உதைத்து பாருங்கள். உங்கள் கால் உடனே முறிந்து ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் கிடப்பீர்கள்//

எளிமையான விளக்கம்... அருமை

***

There is no external god, god is with in you...

"The Way you think.. the way you live.."

-பித்தன்

****

உங்கள் இடுகைக்கு ஓரளவுக்கு தொடர்புடைய இடுகைகள்

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post_12.html

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/04/blog-post_17.html

-

iniyavan said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள், 'நிகழ்காலத்தில்', பித்தன் அவர்களுக்கு ந்ன்றி.