"மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு".
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெறவேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
The blameless ones as friends embarace;
Give something and give up the base.
- திருக்குறள் 800
நான் அதிகமாக சொத்து சேர்த்ததே நண்பர்களைத்தான். ஆனால், சில சொத்துக்கள் என்னை விட்டு பிரியும் நிலையில் இருக்கின்றன. பிரிவதால் அவர்களுக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எனக்கு?
முதல் நண்பர்:
என்னை ஏர்போர்ட்டில் சந்தித்தார். அவர் ஒரு தனித்தொழிற்சாலை சிறிய அளவில் ஆரம்பித்திருந்தார். அவருக்கு நான் வாழ்த்துக்கூறிய சமயத்தில், அவர் என்னிடம் சொன்னார்,
"மாப்பிள, எனக்கு உன்கிட்ட ஒரு உதவி தேவைப்படுது. இப்ப சொல்லலாம்னு பார்த்தா, நீ மலேசியாக்கு கிளம்பிட்டு இருக்க, அதனால நீ போய் சேர்ந்தவுடன் எனக்கு போன் பண்ணு"(இங்கதான் நீங்க ஒண்ண கவனிக்கனும். உதவி தேவைப்படறது அவருக்கு, என்னை போன் பண்ண சொல்லறார்)
"சரிடா" என சொல்லிவிட்டு மலேசியா வந்துவிட்டேன். பிறகு ஒரு மூன்று நாள் கழித்து போன் செய்தேன்.
ஆரம்ப விசாரிப்புக்கு அப்பறம் ,"என்ன உதவி வேண்டும்?" எனக்கேட்டேன்.
"டேய், எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது, குடுக்க முடியுமா?"
ஏதோ 25000 ரூபாயோ இல்லை 50000 ரூபாயோ அவசரத்தேவைக்கு கேட்கிறார் என நினைத்து, " எவ்வளவு வேண்டும்?" என்றேன்.
" ஐந்து லட்ச ரூபாய் வேண்டும், ஒரு வருடத்தில் திருப்பி கொடுத்துவிடுகிறேன்" என்றார். எனக்கு மயக்கம் வராத குறை. ஐந்து லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை. எப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் கேட்கிறார் என மெல்லிய கோபம் மனதின் ஓரத்தில் எட்டி பார்த்தது.
"மாப்பிள அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை, கோபப்படாத, உனக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறேன்" என்றேன்.
பதில் பேசாமல் போனை 'டக்' என வைத்தவர், அடுத்த நாள் ஒரு மெயில் அனுப்பினார், இப்படி:
" தயவு செய்து இனி எக்காரணம் கொண்டும் எனக்கு மெயில் அனுப்ப வேண்டாம்"
இரண்டாவது நண்பர்:
ஒரு நாள் காரில் நானும் என் அலுவலக நண்பரும் பயணம் செய்த போது போன் செய்தார். அவர் என்னிடம் பேசியதை அப்படியே கீழே தருகிறேன்.
" உலக்ஸ், அம்மாட்ட உடனே போன் பண்னி சொல்லு, இப்போ உங்க வீட்டுக்குத்தான் போய்ட்டு இருக்கேன், ஒரு 2 லட்ச ரூபாய் அவசரமா தேவைப்படுது"
- இதுல நீங்க கவனிக்க வேண்டிய செய்தி, நான் எப்படி இருக்கிறேன் என்று என்னை விசாரிக்காதது, 2 லட்ச ரூபாய் பணத்தை ஏதோ 2000 ரூபாய் போல் நினைத்து கேட்டது, ஏதோ என் குடும்பத்தை அம்பானி குடும்பம் போலவும் நாங்கள் 2 லட்ச ரூபாயை வீட்டில் சாதரணமாக வைத்திருப்பது போலவும் நினைத்து கேட்டது.
நான் கூறினேன், " நான் இப்போது டிரவிங்கல இருக்கேன், எதுக்கு உனக்கு வேண்டும், எப்போ திருப்பி தருவனு சீக்கிரம் சொல்லு"
"நான் உங்கிட்ட பணத்தை வாங்கி பிஸினஸ்ல போட்டு லாபம் வந்தோன தரேன்"
என்ன ஒரு கொள்கை பாருங்க. உடனே இல்லை என சொல்ல விருப்பம் இல்லாமல், நாளை சொல்லுகிறேன் என போனை வைத்துவிட்டேன். அடுத்த நாள் போன் செய்தார்.
நான் சொன்னேன், " என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல, வேணும் என்றால், ஒரு சிறு தொகை தரேன்" என்றேன்.
" எனக்கு 2 லட்சம்தான் வேண்டும். கொடுக்க முடியலை பரவாயில்ல, கொஞ்சமா குடுத்து என்ன அவமானப்படுத்தாத"
" என்கிட்ட 2 லட்சம் இல்லை"
" உன் பணத்தை நீயே வைச்சிட்டு நல்லா இரு"
மூன்றாவது நண்பர்:
"உலக்ஸு, எனக்கு அர்ஜெண்டா, ஒரு லட்ச ரூபாய் கொடு, ரொட்டேசன்ல விட்டுட்டு, அப்பறமா தரேன்"
" ஏண்டா, கடனா வாங்கர, வேணும்னா என்னையும் உன் பிஸினஸ்ல பார்ட்னரா சேத்துக்கோயேன்"
" சாரிடா, அது சரிபடாது"
எது சரிப்படாதுனு இந்த நிமிசம் வரைக்கும் எனக்கு அவர் சொல்லலை.
மேலே குறிப்பிட்ட அந்த மூவரும் என் பால்ய காலத்து நண்பர்கள். நான் பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்தால் என்னுடன் பேசுவதியே நிறுத்தியவர்கள். இதில் என் தவறு என்ன என்று இந்த நிமிடம் வரை யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
என் உறவினர் ஒருவர் என்னிடம் பணம் கேட்ட முறை கொஞ்சம் வித்தியாசமானது. கணவனும், மனைவியும் சேர்ந்து வந்து அவர்களின் பையனை என்னிடம் காண்பித்து,
"இங்க பாருடா, இனிமே இவன் இன்னையிலிருந்து உன் தம்பி. பொறுப்ப உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன். அவன இன்ஜீனியராக்குவது உன் பொறுப்பு. அவ்வளவுதான் சொல்வேன்"
என்ன ஒரு உரிமை பாருங்க. மேலே குறிப்பிட்ட அனைவருமே பணம் இல்லாத ஏழைகள் அல்ல. எல்லோரிடமும் பணம் இருக்கிறது. இந்த கடனை நான் கொடுக்காமல் இருந்ததால், எந்த விதத்திலும் அவர்கள் வாழ்க்கை முறை மாறவில்லை. நான் வட்டி வாங்குபவனும் அல்ல, கொடுப்பவனும் அல்ல. அதனால், அவர்கள் வட்டியில்லாமல் லோன் கிடைக்கலாம் என எண்ணியிருக்கலாம்.
ஏழைகளுக்கு உதவுவதில் எனக்கு எந்த விதத்திலும் மாற்று கருத்தில்லை. ஆனால், பணம் வைத்துக்கொண்டே அடுத்தவர் பணத்தின் மூலம் லாபம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு, நான் என்றைக்குமே உதவி செய்ய விரும்பியதில்லை. நான் ஒன்றும் அவ்வளவு பெரிய பணக்காரனும் இல்லை.
நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்றால், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம், ஏதோ ரோட்டில் பணம் நிறைய கொட்டி கிடப்பது போலவும், தினமும் நாம் அதில் அள்ளி சேர்த்து வைப்பது போலவும் நினைக்கிறார்கள். அந்த பணத்தை சம்பாதிக்க வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் எத்தனை சந்தோசங்களை தொலைக்கிறார்கள் என யாருக்கும் தெரிவதில்லை. கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களுக்கு மட்டுமே பணத்தின் மதிப்பு தெரியும்.
எனக்கு அதன் மதிப்பு தெரியும்.
"ஆயிரம் வாசல் இதயம், ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும்
தெரியாது, நம் பாலோயர்களைப்போல"
"நான் அதிகமாக சொத்து சேர்த்ததே நண்பர்களைத்தான். ஆனால், சில சொத்துக்கள் என்னை விட்டு பிரியும் நிலையில் இருக்கின்றன".
பிரிந்து போகும் சொத்துக்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படபோவதில்லை.

20 comments:
நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html
அட விடுங்க பாஸீ.
இதெல்லாம் உண்மையான நட்பே அல்ல (அப்டினு நாமளே சமாதானமாகிக்கிற வேண்டியதான், வேற என்ன செய்ய, பழகித் தொலச்சிட்டமே).
//மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்//
நீங்க சொல்றத பாத்தா, குடுக்காம இருந்தாலே விலகிடுவங்க போல இருக்கே...
//சில சொத்துக்கள் என்னை விட்டு பிரியும் நிலையில் இருக்கின்றன//
இதெல்லாம் சொத்துக்களா... சொத்தைகள்.
என்னிடம் நிறைய பணம் இல்லாததுக்கு இப்போது சந்தோசமா இருக்கு.
நன்றி,
'எவனோ ஒருவன் அவர்களே'
ஆஹா.... நீங்கதானா அது!
எச்சூஸ்மி பாஸ்.. ஒரு பத்து லட்ச ரூபா அர்ஜண்டா தேவைப்படுது.. எப்ப தர்றீங்க?
Jokes Apart..
சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் பதட்டமாய் நானிருந்த போது பதிவுலக நண்பர்கள் எத்தனையோபேர்.. ‘பணம் இருக்கா? அரேஞ்ச் பண்ணியாச்சா’ என்று மாறி மாறி கேட்டது மறக்கவே முடியாதது. அதிலும் ஒருவர் “என்னால ******ரூபாதான் தரமுடியும்டா.. ப்ளீஸ்.. அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்றேன். நம்பர் சொல்லு.. வாங்கிக்க.. ஏன் கேட்கமாட்டீங்கற?’ என்றபோது கலங்கிப் போனேன். சுற்றியிருந்த பலரையும் விட பெரும் செல்வந்தனாய் உணர்ந்த தருணம் அது!
நல்ல பதிவு நண்பரே.
//ஆஹா.... நீங்கதானா அது!
எச்சூஸ்மி பாஸ்.. ஒரு பத்து லட்ச ரூபா அர்ஜண்டா தேவைப்படுது.. எப்ப தர்றீங்க?//
உங்களுக்கு இல்லாததா, எப்போவேணா தரேன் பாஸ்!!
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'நண்பர்கள்தான் என் சொத்து!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th June 2009 09:11:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/72051
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் நன்றி.
u r right..
not only frnds... relatives too like this..
idiotic people.. i hate them..
ரொம்ப உண்மைங்க! பலருடைய நட்பில், பாசத்தை விட பணம் தன் பெருசா இருக்கு. எதோ குடுத்து வாசத்தை கேக்கறா மாதிரி யும், ஏதோ பணம் காய்க்கிற மரம் வச்சிருக்க மாதிரியும் தன் இருக்குஅவங்க கேக்கறது!
good
good
நண்பரே நீங்க சொன்னது சரிதான். வெளிநாட்டில் வேலைப் பார்த்தால், அவங்ககிட்ட பணம் கொட்டி கிடைப்பதாகத்தான் அனைவரும் நினைக்கின்றார்கள்.
அவர்கள் நம்மிடம் கொடுத்து வைத்ததுப் போல் கேட்பார்கள்.
பணத்துக்காக, நம்மிடம் நட்பை, உறவை முறித்துக் கொள்பவர்கள் பற்றி கவலையில்லை. சரியான முடிவுதான் எடுத்துள்ளீர்கள்.
சகிப்பு தன்மை இல்லாதவர்கள் எதனோடும் அனுசரித்துப் போக முடியாது. சாதாரணநிலையில் இருந்து தனித்த சிந்தனைகளோடு புறப்படும்போது அடுத்தவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உணர்வுகள் வருவதில்லை. அடுத்தவர்கள் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது தான் அதிகமான அனுபவ அறிவும், ஞானமும் இயல்பாகவே நம்மிடம் வந்துவிடுகிறது.
பழைய நன்பன்!
நன்றி பரிசல், நர்சிம்.
பெயர் சொல்லாத இனிய நண்பர்களுக்கும், நண்பர்கள் மொளனமான நேரம், கவாஸ்கர், இராகவன் நைஜீரியா ஆகியோருக்கு ந்ன்றி.
//பழைய நன்பன்!//
யாரு பாஸி நீங்க?????
நண்பரே,என் மனதில் குமிறி கொண்டிருந்த அனைத்து குமுறர்களையும் கொட்டி தீர்த்து விட்டீர்கள்.நீங்கள் சொல்வது போல் வெளி நாட்டில் இருப்பவர்களிடம் பணம் கொட்டியா இருக்கு ..
நண்பரே , இந்த ரணங்களை உங்களோடு நானும் பகிர்ந்து கொள்கிறேன். நானும் பாதிக்கப்பட்டவன் தான். நீங்கள் சொல்வது போல் வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் அம்பனியா அல்லது டாட்டா வா ?
உலக்ஸ் நலமா? மன்னிக்கவும், அலுவலக வேலை மாற்றி விட்டதால் , கடந்த பத்து நாட்களாக பதிவேதும் பார்க்க இயலவில்லை.
Post a Comment