என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணம் ஆனது. அவரின் கணவர் ஒரு ஆசிரியர். கல்யாணம் ஆகி ஒரு வருட வாழ்க்கை. அந்த ஒரு வருடத்தில் ஒரு குழந்தை. கல்யாணமான நாளிலிருந்தே அவருக்கு உடல்நலம் சரியில்லை. முடிவில் அவருக்கு ஏதோ நோய் ஏற்கனவே இருந்திருப்பது தெரியவந்தது. ஒரு வருட கல்யாண வாழ்க்கை ஒரு நாளில் முடிந்து போனது. ஆம், அவர் நோயின் கொடுமையால் இறந்து போனார்.
இன்னொரு நெருங்கிய உறவினர். அவருடைய கணவர் ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். திருமணம் ஆன ஒரே மாதத்தில் கணவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மருத்துவரிடம் போய் பார்த்ததில் அவருக்கு ஏற்கனவே ஒரு நோய் நீண்ட வருடமாக இருப்பது தெரிய வந்தது. பல டாக்டரிடம் காண்பித்தார்கள். மூன்று மாதம் மருத்துவமனையில். முடிவில் ஒரு நாள் நோயின் கொடுமையால் இறந்து போனார். அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது மொத்தம் ஆறுமாதம். குழந்தை இல்லை.
நண்பன் ஒருவன். நிறைய பெண்கள் சகவாசம். கல்யாணமான ஆறு மாதத்தில் அவனுக்கு எயிட்ஸ் வந்து இறந்து போனான். போகும்போது சும்மா போகாமல், நோயை மனைவிக்கும் கொடுத்து விட்டு போனான்.
இன்னொருவர், கல்யாணம் ஆன பிறகு அவருக்கு இருக்கும் நோயை மனைவிடம் சொல்லபோக, அவர்கள் வீட்டுக்கு தெரிந்து போக, முடிவில் விவாகரத்து ஏற்பட்டு இருவரும் பிரிந்து போனார்கள்.
மேலே கூறிய அனைத்து சம்பவங்களும் என் கண் முன்னே நடந்தவைகள். அனைத்து சம்பவங்களிலும், சம்பந்தபட்ட கணவர்களுக்கு, தங்களுக்கு உள்ள நோய் முன்பே தெரிந்திருக்கிறது. ஆனால், யாருமே கல்யாணம் பண்ணுவதற்கு முன், கல்யாணம் பண்ண போகும் பெண்ணிடமோ, இல்லை அவர்களின் உறவினர்களிடமோ, தனக்கு இருக்கும் நோயை பற்றிய செய்தியை கூறவே இல்லை. விளைவு மேலே குறிப்பிட்ட நான்கு பெண்களின் வாழ்க்கையுமே பாதிக்கபட்டு விட்டது.
மேலே குறிப்பிட்ட ஆண்கள் எல்லோருமே தங்கள் சந்தோசத்தை ஒன்றை மட்டுமே நினைத்து மற்றவர்களின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்கள். என்ன நியாயம் இது?
எனக்கு தெரிந்து நடந்த சம்பவங்கள் இவை. இதுபோல் கண்ணுக்கு தெரியாமல் நடப்பது பல. இதற்கு என்ன தீர்வு?
சம்பந்தப்பட்டவர்கள் உண்மையை கூறினால் பரவாயில்லை. யாருக்கும் உண்மையை சொல்ல விருப்பம் இல்லை. உண்மை சொன்னால் எங்கே பெண் கொடுக்க மாட்டார்களோ? என்ற பயம்.
எனக்கு தெரிந்த ஒரே வழி, கல்யாணத்திற்குமுன், அனைவரையும் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஜாதகம் பார்ப்பதற்கு முன் இதை செய்ய வேண்டும். எயிட்ஸ்தான் என்றில்லை. கண்ணுக்கு தெரியாத எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. அவைகள் சாதரணமாக வெளியே தெரிவதில்லை. முன்பே பரிசோதனையை செய்வதால், பிறகு சந்தோசமாக வாழ்க்கையை தொடங்கலாம் அல்லவா?
மக்களால் மட்டுமே இதை செய்யமுடியாது. அரசாங்கமே இதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைவருமே சந்தோசமாக வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை நாம் காண முடியும்.
மலேசியாவில் கல்யாணத்திற்கு முன் எய்ட்ஸ் உட்பட அனைத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அரசாங்கமே வலியிருத்துகிறது.
மேலே கூறிய சம்பவங்களை நேரில் பார்த்து வேதனைப்பட்டவன் என்பதாலும், அதனுடய வலி எப்படி இருக்கும் என தெரிந்ததாலும், சம்பந்த பட்டவர்களை அது எப்படி பாதிக்கும் எனபதை உணர்ந்திருப்பதாலும், இந்த செய்தியை இங்கே பதிக்கிறேன்.
8 comments:
ஏற்கனவே போஸ்ட் செய்து தவறுதலாக அழுத்துவிட்டதால், மீண்டும் போஸ்ட் செய்ய வேண்டியதாகிவிட்டது.
தவறுக்கு மன்னிக்கவும்.
//எனக்கு தெரிந்த ஒரே வழி, கல்யாணத்திற்குமுன், அனைவரையும் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஜாதகம் பார்ப்பதற்கு முன் இதை செய்ய வேண்டும். எயிட்ஸ்தான் என்றில்லை. கண்ணுக்கு தெரியாத எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. அவைகள் சாதரணமாக வெளியே தெரிவதில்லை. முன்பே பரிசோதனையை செய்வதால், பிறகு சந்தோசமாக வாழ்க்கையை தொடங்கலாம் அல்லவா? //
ரொம்ப கரெக்ட் ...
விஜய்
நன்றி விஜய் ஆனந்த்
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'கொஞ்சம் சீரியஸான விசயம், சிந்திப்போமா? நண்பர்களே???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th June 2009 08:15:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/70341
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
//அரசாங்கமே இதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்//
Good Point. Govt can implement by made Medical Cert is compulsory during the registration of marriage.
நல்ல சிந்தனை
வருகை புரிந்த நண்பர்கள்,
ராஜா, பனையூரான் அவர்களுக்கு
நன்றி.
//கல்யாணத்திற்குமுன், அனைவரையும் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஜாதகம் பார்ப்பதற்கு முன் இதை செய்ய வேண்டும். எயிட்ஸ்தான் என்றில்லை. கண்ணுக்கு தெரியாத எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. அவைகள் சாதரணமாக வெளியே தெரிவதில்லை. முன்பே பரிசோதனையை செய்வதால், பிறகு சந்தோசமாக வாழ்க்கையை தொடங்கலாம் //
இது தான் என்னுடைய கருத்தும், என் நண்பர்களுக்கும் நான் பரிந்துரைப்பது இதைத்தான்.
நல்ல கருத்து ! வாழ்த்துக்கள் !!
Post a Comment