1980ல் என நினைக்கிறேன். முதலில் எங்கள் ஊரில் என் நண்பன் சுரேஷ் வீட்டில்தான் டிவி வாங்கினார்கள். தெருவே சென்று அவன் வீட்டில் டிவி பார்த்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஆனால், அப்படி ஒன்றும் நன்றாக தெரியாது. ஒரே புள்ளி புள்ளியாகத்தான் தெரியும். அதை பார்த்துவிட்டு வந்து வீட்டிலிருக்கும் எல்லோரிடமும் 'நான் டிவி பார்த்தேனே!' பெருமையாக சொல்லுவேன். அப்போ சிலோன் ரூபவாஹிணி கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
பின்புதான் தூர்தர்ஷனில் தமிழ் சேனல் ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் அடுத்த தெருவில் உள்ள இன்னொரு நண்பன் வீட்டில் டிவி வாங்கினார்கள். எல்லா கிரிக்கட் மேட்சும், டென்னிஸ் மேட்சும் அவர்கள் வீட்டில்தான் பார்ப்போம். ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாரடோனா தலைமையில் அவர்கள் டீம் ஜெயித்தை காலையில் 3 மணிக்கு அலாரம் வைத்து பார்த்தது இன்றும் பசுமையாக நினைவுக்கு வருகிறது.
1985 ஷார்ஜா கோப்பை கடைசி நாள். அடுத்த நாள் செமெஸ்டர் எக்ஸாம், 'கம்பனி லா' பேப்பர் என நினைக்கிறேன். மேட்ச் முடிந்து படிக்கலாம் என எண்ணியிருந்தோம். இந்தியா பாகிஸ்தான் பைனலில். எல்லோருக்கும் நினைவை விட்டு விலகாத மேட்ச் அது. பாகிஸ்தான் இரண்டாவது பேட்டிங். சரியாக யோசிக்காமல் பொளலிங் ஆர்டரை மாற்றப்போய் கபில்தேவ் 49 வது ஓவர் போட்டு முடிக்க, 50 ஓவரை சேட்டன் சர்மா போட்டார் என நினைக்கிறேன். மியாண்டட் பேட்டிங். கடைசி பால். பாகிஸ்தான் ஜெயிக்க 4 ரன் தேவை. எங்கள் இதயமெல்லாம் "லப்டப், லப்டப்" என துடிக்க, சேட்டன் சர்மா ஓடி வர, எங்கள் இதயமும் வேகமாக துடிக்க, பந்து புல் டாஸாக மாற, மியாண்டட் அதை தூக்கி அடிக்க, பந்து சிக்ஸர் ஆக, பாகிஸ்தான் ஜெயிக்க, ஐய்யோ, அன்று இரவு முழுவதும் பட்ட வேதனை, வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. நாங்கள் யாருமே அன்று படிக்கவும் இல்லை, சரியாக தூங்கவும் இல்லை.
எங்கு இருந்தாலும் ஓடி வந்து பார்க்கும் நிகழ்ச்சி, ஒலியும் ஒளியும். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில். மொத்தம் ஆறு பாடல்கள் போடுவார்கள். சில சமயம் கருப்பு வெள்ளை காலத்து பாடல்கள், சில சமயம் கலர் பாடல்கள். அதை பார்க்க அப்படி ஒரு மகிழ்ச்சியாக இருக்கும். ஆறு பாடல் பார்க்கும் வரை யாரும் அதிகமாக பேச மாட்டோம். முடிந்தவுடன், அதை பற்றிய விமர்சனம் இருக்கும். திருப்பி ஒலியும் ஒளியும் வர ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். ஆனால், அந்த காத்திருத்தல் அந்த அளவு சுகமாக இருக்கும். ஒரு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி கூட நான் தவறவிட்டதில்லை. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மீது ஒரு வெறியாகவே இருந்தேன்.
ஞாயிறு ஆனால் போதும். தூர்தர்ஷனில் போடும் எந்த படம் ஆனாலும் பார்த்த காலம் அது. ஞாயிறு மாலை தெருவுக்கு வெளியே பார்த்தால், மொத்த தெருவும் அமைதியாக இருக்கும். எல்லோரும் டிவியின் முன்னாடிதான் இருப்பார்கள். அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு டிவி வாங்கினேன். கறுப்பு வெள்ளைதான், அதுவும் தவணை முறையில். அதை வாங்க திருச்சி சென்றபோது, அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினோம். ஆனாலும், எங்கள் வீட்டு டிவியில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் ரொம்ப குறைவு. எப்போதும் நண்பர்கள் வீட்டில்தான்.
அதேபோல் அந்த 8.30 இரவு செய்திகள் 'ஷோபனா ரவி' வாசிக்கும் அழகே தனி. அவருக்காகவே செய்திகள் பார்த்த காலம் அது. பெண்கள் எல்லோம், ஷோபனா இன்று என்ன சேலை கட்டி வருவார் என ஆவலுடன் தினமும் செய்திகள் பார்ப்பார்கள்.
நான் மேலே கூறிய அனைத்தும் நான் அனுபவித்து பார்த்த நிகழ்ச்சிகள். நீங்களும்தான்.
ஆனால் இன்று, திரும்பிய பக்கம் எல்லாம் சேனல். எங்கு பார்த்தாலும் பாடல்கள், எங்கு பார்த்தாலும் செய்தி சேனல்கள், அதுவும் பார்த்த செய்திகளையே திரும்ப திரும்ப.....
மனதை தொட்டு, உணமையை சொல்லுங்கள், " நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா?
16 comments:
உண்மைதான். என்னைக்கும் பழைய நினைவ அசை போடுறதே தனி சுகம்தான்.
அதிலும் அந்த மேட்ச், இன்னும் அந்த டென்ஷன் மனதில்.
ஒளியும் ஒலியும் பத்தி பல கதைகள் வருமே தல.. அதெல்லாம்போடுங்க..,
கொஞ்ச நாள் முன்னாடி தூர்தர்ஷன் பத்தி யூத்புல் விகடன்ல ஒருத்தர் ஒரு பெரிய ஆர்டிக்கிள் எழுதிருந்தாரே. அதே மாதிரி இருக்குதுங்களே.
//கொஞ்ச நாள் முன்னாடி தூர்தர்ஷன் பத்தி யூத்புல் விகடன்ல ஒருத்தர் ஒரு பெரிய ஆர்டிக்கிள் எழுதிருந்தாரே. அதே மாதிரி இருக்குதுங்களே//.
சாரிங்க. நான் அதை படிக்கல. இன்றைக்கு காலையில் என் மனதில் தோன்றியதை எழுதினேன்.
//ஒளியும் ஒலியும் பத்தி பல கதைகள் வருமே தல.. அதெல்லாம்போடுங்க..,//
டம் கிடைக்கும்போது எழுதலாம் தல.
சார், நீங்க டாக்டரா?
நல்ல படைப்பு, ஒலியும் ஒளியும் மாதிரியே மகிழ்ச்சியை அளித்தது
நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா? //
Sir ,
Oliyum Oliyum Paarka Nanga Vayalum Vaazhvum Podeyelaya vanthu ukkarnthuduvom
antha santhosam ippa suthama illai
Hi,
That is true, when you are talking about this one. I still remember i usually watch chitrakar, that time i was in love. Myself and my lover use to have an agreement that third song of the Chitrakar both has to say "LOVE YOU" till the end of the song. Then later when communicating with each other by letter in the weekend what song was that third one and how many time of times both said "Love You". Painful Joys!!!
//நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா?//
நிச்சயம் இல்லை.
Yes, i also remember that match, i was seen that match with one of my friend house.
still i remember the house owner kiss the tv screen after miandad six.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'ஒலியும் ஒளியும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th June 2009 01:54:01 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/77222
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
பின்னூட்டமிட்ட நண்பர்கள்,
உடன்பிறப்பு, பி.சிவா,துபாய் ராஜா, ராஜ்குமார் மற்றும் பெயர் தெரியாத நண்பருக்கும்
நன்றி.
மனதை தொட்டு, உணமையை சொல்லுங்கள், " நாம் அன்று ஒலியும் ஒளியும் பார்த்தபோது கிடைத்த சந்தோசம் இன்று பாடல்களை டிவியில் பார்க்கும்போது வருகிறதா? - kandipa illanga..
naanga kuda ipdi than oliyum oliyum, match, news, sobana ravi.. rasichi parpom..
andha sugam iniku
chance-e illa..
nice feeling..
அருமை சார்.
சொன்ன மாதிரி, இப்போ நெறையா இருக்கு, ஆனா எதுமே பாக்குறமாதிரி இல்ல.
என்னோட காலத்துல... வாரா வாரம் பிலிப்ஸ் சூப்பர் டென்ல வற்ர நம்பர் ஒன் பட்டுக்காகவும், பெப்சி உங்கள் சாய்ஸ் - அதிக மக்கள் கேட்ட பாட்டுக்காகவும், அரை மணி நேரம் மட்டுமே வரும் தமிழ் கார்டூனுக்காகவும், செவ்வாய் தோறும் வரும் நிஷாகந்திக்காகவும்... சன் டிவி முன்னாடி காத்துக் கிடப்போம்.
அந்த மாதிரி ஈடுபாடு இப்போ இல்ல, ஏன்னு தெரியல...
ஹாய் நண்பர்களே! என் பேரு எஸ்கா. யூத்புல் விகடன்ல தூர்தர்ஷன் பத்தி கட்டுரை எழுதின ஆளு. இங்க ஒரு பின்னூட்டத்தைப் பாத்தேன். என்னைக்குமே நம்ம தலைமுறையோட பிளாஷ்பேக் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அந்தக் கட்டுரையைப் பாக்க இங்க க்ளிக் பண்ணுங்க. http://youthful.vikatan.com/youth/yeskhastory20052009.asp
correct mr naadhan
mahendran ciembatore
Post a Comment