Jun 23, 2009

டிவி சீரியல்களுக்கு நன்றி!!!

சமீபகாலமாக தொலைபேசியில், இமெயிலில் விசாரிக்கும் நண்பர்கள் எல்லோருமே என்னிடம் கேட்கும் கேள்வி,

" எப்படி உன்னால் பிஸியான வேலைகளுக்கு நடுவில் ப்ளாக்கில் எழுதமுடிகிறது?" என்பதுதான்.

பதில் ரொம்ப சிம்பிள். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அதில் தூங்க ஒரு ஆறு மணி நேரம், ஆபிஸ் வேலைகளுக்கு ஒரு பத்து மணி நேரம் செலவிட்டது போக மீதம் இருப்பது எட்டு மணி நேரம். அந்த எட்டு மணி நேரத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு பண்ண முடியும். எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது. அட்டவணை போட்டு இந்த சமயத்தில் இது, இது செய்யவேண்டும் என பட்டியலிட்டு செய்யலாம். ஆனால், ஒரேடியாக பட்டியலை பின்பற்றினாலும் போரடிக்க ஆரம்பித்துவிடும். கொஞ்சம் ரிலேக்ஸாக அவ்வப்போது பட்டியலை மறு பரிசீலனை செய்வதில் தவறில்லை.

நான் மேலே குறிப்பிட்ட நேரங்களை தவிர உடல் நலத்துக்கு என ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் ஒதுக்குகிறேன். காலையில் ஒண்ணரை மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும். என்ன செய்கிறேன் என சொன்னால் அது ஒரு தற்பெருமை பற்றிய பதிவாக மாறிவிடும். அதுவல்ல என் நோக்கம். நான் சொல்ல விரும்புவது டைம் மேனேஜ்மண்டை பற்றி. முதலில் ஒரு மனிதன் ஆறு மணி நேரத்துக்கு மேல் தூங்குவதை நிறுத்த வேண்டும். எனக்கு தெரிந்தவரை வாழ்க்கையில் ஜெயித்து மிக பெரிய இடத்தில் இருப்பவர்களையெல்லாம் கேட்டு பாருங்கள், அவர்கள் எல்லோருமே அதிகாலை எழுந்து வேலையை தொடர்பவர்களாக இருப்பார்கள். காலையில் ஒரு 5 மணிக்கு எழுந்து ஒரு நடைபயிற்சியோ, இல்லை யோகாவோ செய்து பாருங்கள். அதில் கிடைக்கும் அனுபவமே தனி. அதை அனுபவித்து பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.

தூக்கத்தை பற்றி பேசும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புதிது. நான் என் MD யுடன் சேர்ந்து வேலை செய்யும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. காலையில் வேலையை ஆரம்பித்தோம். MD, நான், ஒரு கன்சல்டண்ட், எங்கள் மார்கெட்டிங் ஆபிஸர் மற்றும் MDயின் செகரட்டரி. இது நடந்தது 1993ல் என நினைக்கிறென். காலையில் ஆரம்பித்த வேலை அன்று முழுவதும் தொடர்ந்து, இரவு வரை நீண்டு அதிகாலை ஒருவாறு மூன்று மணிக்கு முடித்தோம். காலை வந்து எல்லா பேப்பர்களையும் பார்த்து, சரி செய்து ஆஸ்திரேலியன் ஏஜன்சிக்கு அனுப்புவதாக ஏற்பாடு. மூன்று மணிக்கு கிளம்பி ரூம் சென்று தூங்கி எழுந்து நான் அலுவலகம் வர காலை மணி 9.30 ஆனது. அலுவலகம் காலை 8.30 மணிக்கு துவங்கும். நான் என்ன நினைத்தேன் என்றால் அதிகாலை 3 மணிக்குதானே போனோம், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் என்ன என்று? ஆனால், ஆபிஸ் வந்து பார்த்தால் எனக்கு முன்னே 8 மணிக்கு MD வந்திருந்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம்.

நான் கேட்டேன், " எப்படி சார், உங்களால இவ்வளவு சீக்கிரம் வர முடிஞ்சது?"

" ரொம்ப சிம்பிள். இது நம் வேலை இல்லை, மற்றவர்கள் வந்து முடிக்கட்டும், என நான் நினைக்கவில்லை. தாமதிக்காமல் அந்த வேலையை காலையில் சீக்கிரமே முடிக்க வேண்டும் என மனதில் அழுத்தமாக சொல்லிக்கொண்டேன், அந்த எண்ணமே என்னை சீக்கரம் வரத்தூண்டியது" என்றார்.

அவர் எங்கள் நிறுவனத்தின் MD. அவர் அப்படி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவரின் அந்த ஈடுபாடு என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது. என்னிடம் இருக்கும் அலுவலகம் சம்பந்தம் ஆன நல்ல பழக்கங்கள் எல்லாம் நான்அவரிடம் இருந்து பெற்றதே.

எதுவுமே முடியாது என்பதில்லை. எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது.

முன்பெல்லாம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை கோலங்களும், அரசியும் பார்த்து வந்தேன். இப்போது அடியோடு பார்ப்பதை நிறுத்தி விட்டேன். தொலைக்காட்சி எதற்காக பார்க்கிறோம்? கொஞ்சம் மனசு லேசாக ஆவதற்கும், நம் அலுவலக டென்சனை மறப்பதற்கும்தான். ஆனால், நடப்பது என்ன? இந்த நாடகங்கள் பார்ப்பதால், டென்சன் குறைவதற்கு பதில் அதிகம்தான் ஆகிறது. எந்த நாடகத்தை எடுத்தாலும் யாராவது யாரையாவது பழி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லா நாடகத்திலும் பெண்களை கேவலமாகத்தான் காட்டுகிறார்கள். எனக்கு அதில் துளிகூட உடன் பாடு இல்லை. பிடிக்காத நாடகத்தை பார்த்து குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட, பார்க்காமல் இருப்பதே நலம் என நினைத்து, நாடகங்கள் பார்ப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன்.

அந்த நேரத்தில் உருப்படியாக ஏதாவது பண்ணலாமே என நினைத்து தான் பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். இப்போது நாடகங்களினால் ஏற்படும் டென்சனோ, கோபமோ இல்லை. மாறாக பதிவுகள் எழுதுவதால் மகிழ்வாக உணர்கிறேன்.

என்னை இப்படி மாற்றிய டிவி சீர்யல்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்????

10 comments:

Beski said...

கொஞ்சம் கஸ்டம்தான்... பெரியவங்க சொல்றீங்க... கேட்டுக்குறேன்.

iniyavan said...

நன்றி

நண்பர் "எவனோ ஒருவன் அவர்களே"

Anonymous said...

நல்ல கருத்து நண்பரே

வடுவூர் குமார் said...

சரி தான்,எல்லாம் நம் கையில் தான் இருக்கு.

iniyavan said...

பின்னூட்டத்துக்கு நன்றி வடுவூர் குமார்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

சரியான கருத்து. நானும் அதிகாலை நேரத்திலோ அல்லது முன்னிரவு நேரத்தில்தான் பதிவுகள் எழுதுகிறேன் - தொடர்ந்து எழுதுவதில்லை எனினும் - எழுதும் போதெல்லாம். நேரத்தை சரியாக கணக்கிட்டு வாழ்க்கை நடத்தும் முறை மற்றவர்களால் கொஞ்சம் கிண்டல் செய்யபட்டாலும் - இப்போது பெரும்பாலும் பலர் கடைபிடிப்பது சந்தோஷம். டிவி பார்பதுக்கு நல்ல புத்தகங்கள் படிக்கலாம். வாரம் 2 பழைய நண்பர்களை தொலைபேசியிலாவது அழைத்து பேசலாம். இணையத்தில் தேடி, 40 ரூபாய்க்கு காசு கொடுத்து வாங்கி நல்ல உலக திரைப்படங்களை கணிப்பொறியிலாவது பார்கலாம்... ம்ம்ம்..

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'டிவி சீரியல்களுக்கு நன்றி!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th June 2009 04:54:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/76777

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.

Anonymous said...

Very Useful article for people who are wasting their life by watching T.V. serial they forget that serial is a business and actors and producers are making their life but viewers are ruining their life.

Congrats and thanks.

சகாதேவன் said...

டிவி சீரியல்கள் பற்றி
"கிரியேட்டிவ் ஹெட்களே....." என்று என் பதிவில் பாருங்களேன்.

சகாதேவன்

ponnusamy said...

tv serials have turned many people to
change theirpast time activities-for better