Jul 7, 2009

மிக்ஸர் - 07.07.09 - பாஸிட்டிவ் அப்ரோச்?

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியான முறைகளை செய்து கொண்டிருந்தவர், திடீரென வேறு ஒரு தியான வகுப்பில் சேர்ந்தார். நான் ஒன்னும் அவரை தவறாக நினைக்க வில்லை. காரணம், எல்லோரும் ஏதோ ஒரு தியானம் செய்து அமைதியாக சந்தோசமாக வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த தியான வகுப்பில் சேர்ந்தவுடன் அவரிடம் பல வித மாற்றங்கள். நிறைய நல்ல விசயங்கள் வாழ்வில் நடப்பதாக மிகுந்த சந்தோசப்பட்டார். எனக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே. அவர் 24 மணி நேரமும் அந்த தியானத்தைப் பற்றிய சிந்த்னையிலே இருந்தார். அந்த தியானம் செய்தால் எந்த கெடுதலும் நடைபெறாது, அப்படியே நடப்பதாக இருந்தாலும் அதனை என் மந்திரத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் கட்டுப் படுத்தி விடுவேன் எனக்கூறினார். அவர் நான் வெஜ் அயிட்டங்கள் சாப்பிடுவதைக்கூட உடனே நிறுத்தி விட்டார். அந்த அளவிற்கு அந்த தியானத்தில் உறுதியாக இருந்தார்.

அவர் ஒரு நாள் எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள அந்த தியான மையத்திற்கு மதியம் செல்வதற்காக காரில் கிளம்பிய சிறிது நேரத்தில், அவரின் கார் எதிரில் வந்த காரில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஆகிவிட்டது. இடுப்பு எலும்பும். தொடை எலும்பும் முறிந்து விட்டது. படுத்த படுக்கை ஆகி விட்டார். ஏறக்குறைய இரண்டு மாதம் ஆஸ்பத்திரி வாசம். இப்போது வீட்டில் படுக்கையில். இன்னும் ஒரு இரண்டு மாதம் ஆகலாம், அவர் பூரண குணமடைய. நான் அவரை ஆஸ்பத்திரியிலும் சந்தித்தேன், பிறகு வீட்டிலும் பல முறை சந்தித்தேன்.

கேட்கலாமா, வேண்டாமா என நினைத்து நான் அவரை பார்த்து கேட்டேவிட்டேன்,

" நீங்க அந்த தியானத்தின் மேலேயும், அந்த மந்திரத்தின் மூலமும் அவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தீர்கள். ஏன் அந்த மந்திரமும், தியானமும் உங்களை விபத்திலிருந்து காப்பாற்ற வில்லை? நீங்கள் அந்த தியான வகுப்பிற்கு சென்றதால்தான் விபத்து ஏற்பட்டது. நீங்கள் போகாமல் இருந்தால், விபத்து ஏற்பட்டு இருக்காது அல்லவா?"

அதற்கு அவர் கூறினார் இப்படி,

" சார், அந்த காரை பார்த்தீங்கள்ள. எப்படிப்பட்ட மோசமான விபத்து. நான் இந்த தியானம் செய்ததால்தான் என்னால் உயிர் பிழைக்க முசிந்தது. இல்லாவிட்டால், நடந்திருப்பதே வேறு"

என்ன ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் பாருங்க!. உண்மைதான். " ஐய்யோ, இந்த மாதிரி நடந்து விட்டதே, அந்த தியான வகுப்பிற்கு சென்றதால் தானே விபத்து நடந்தது என நினைக்காமல்" அதையே எப்படி பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டார் பாருங்கள்.

எதையுமே நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.

====================================================

சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு லேட்டஸ்ட் லேப்டாப் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். சாதரணமாக ஆர்டர் செய்த ஒரு வாரத்தில் லேப்டாப் வந்து விடும். எனக்கு வரவில்லை. ஆன்லைனில் சரிபார்த்தால், வருவத்ற்கு இன்னும் 15 நாட்கள் ஆகும் என வந்தது. நான் சரி ஏதோ பிரச்சனை போல் என விட்டு விட்டேன். பிறகு 15 நாட்களாகியும் லேப்டாப் வரவில்லை. பின்புதான் எனக்கு லேசாக கோபம் வர ஆரம்பித்தது. எனக்கு கோபம் வந்த காரணம், கம்ப்யூட்டர் தாமதமானது கூட இல்லை, அதைப்பற்றி அந்த நிறுவனம் எனக்கு எந்த ஒரு தகவலும் அனுப்பவில்லை என்பதுதான். உடனே அந்த நிறுவனத்துக்கு போன் செய்து விசாரித்தபோது, ஏதோதோ காரணம் சொன்னார்கள். "உங்களுக்கு நாங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், நீங்கள் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்துவிடுங்கள்" என்றார்கள்.

எனக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. நான் கூறினேன், " நான் கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்ய மாட்டேன். நான் உங்கள் நிறுவன மேல் அதிகாரியிடம் முறையிடுவேன். ஒரு வேலை அவர் சொல்லும் காரணம் எனக்கு சரியாகப்பட வில்லையென்றால், கன்சுயூமர் கோர்ட்டுக்கு செல்வேன்"

உடனே அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசினார். பல காரணங்களைச் சொன்னார். நான் அனைத்தையும் கேட்டுவிட்டு, " எல்லாம் சரி, நீங்கள் சரியாக திட்டமிடாததால் இந்த குழப்பம். எனக்கு ஒரு மாதம் ஆகியும் கம்ப்யூட்டர் வராதது ஒரு குறையாக உள்ளது" என்றேன்.

உடனே, " உங்களுக்கு கம்ப்யூட்டருடன் ஒரு பிரிண்டரும் (three in one - printer, copier & scanner) தருவதாக உள்ளோம். அதனால் தயவு செய்து கோபம கொள்ள வேண்டாம்" என்றார். சொன்ன தேதியில் லேப்டாப் வரவில்லை. நண்பர்களிடம் சொன்னதற்கு, " இதை இப்படியே விடாதீர்கள், மீண்டும் ஏதாவது காம்பன்சேசன் கேளுங்கள்" என்றார்கள்.

நான் மீண்டும் அவர்களிடம் பேசினேன். இந்த முறை நான் தாமதத்திற்காக காம்பென்சேசன் கேட்டேன்.

முடிவில் சென்ற ஞாயிறு லேப்டாப் வந்தது, 5000ரூபாய் மதிப்புள்ள பிரிண்டருடனும், 3000ரூபாய் மதிப்புள்ள கேரி பேக்குடனும். நான் அவர்களிடம் காரணம் கேட்டதால் மட்டுமே அவைகள் கிடைத்தன. Only Crying baby will get milk என்பதை உணர்ந்தேன்.

இன்னும் இரண்டு மாதம் தாமதமாக வந்திருந்தால், ஒரு வேளை இன்னொரு லேப்டாப் ஓசியில் கிடைத்திருக்குமோ?

====================================================

5 comments:

Beski said...

பாஸிட்டிவ் அப்ரோச் சூப்பர்.
---
//Only Crying baby will get milk //
நான் பிழைக்கத் தெரியாதவன்.
---
//இன்னும் இரண்டு மாதம் தாமதமாக வந்திருந்தால், ஒரு வேளை இன்னொரு லேப்டாப் ஓசியில் கிடைத்திருக்குமோ?//
ஹி ஹி ஹி...
---
மிக்சர் நல்லாருக்கு.

jothi said...

//எதையுமே நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.//

ரொம்ப சரி. பார்வை ஒன்றே போதுமே,..

நிகழ்காலத்தில்... said...

\\என்ன ஒரு பாஸிட்டிவ் அப்ரோச் பாருங்க!. உண்மைதான். " ஐய்யோ, இந்த மாதிரி நடந்து விட்டதே, அந்த தியான வகுப்பிற்கு சென்றதால் தானே விபத்து நடந்தது என நினைக்காமல்" அதையே எப்படி பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டார் பாருங்கள்.\\

இது பாஸிடிவ் அப்ரோச் என்பதை விட, உண்மையே அதுதான் என்று உணர்வதே சிறப்பு,

ஆன்மீக வழியில் வரும்போது வினைப்பதிவுகள் உடனே கழியும்,

வேதாத்திரியம் இதையே சொல்கிறது

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்
நன்றி ஜோதி - அந்த படம் உங்க சின்ன வயசு படமா?
நன்றி நிகழ்காலத்தில்

jothi said...

//அந்த படம் உங்க சின்ன வயசு படமா?//
இல்ல இப்ப சின்ன வயசில இருக்குற என் பையன் படம்