Jul 14, 2009

மிக்ஸர் - 14.07.09 - சிறுகதை போட்டி முடிவு!!!

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதை போட்டி முடிவு நாளை வெளிவரும் என நினைக்கிறேன். வெற்றிப் பெற போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

******************************************************************

நிறைய நண்பர்கள் மெயில் மூலம் அவர்களின் சிறுகதைகளையும், கவிதைகளையும் என்னை படிக்கச்சொல்லி கருத்துக்கள் கேட்கிறார்கள். வேலை பளுவினால் உடனே கருத்துக்கள் சொல்ல முடியாத நிலை. படித்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனைவருக்கும் நிச்சயம் பதில் அனுப்புகிறேன். முதலில் என்னை ஒரு ஆளாக நினைத்து கருத்துக்களை கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.

******************************************************************

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த சம்பவம். அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் இருப்பது வெளி நாட்டில். கணவன் மனைவி மட்டுமே அந்த வீட்டில். ஒரு நாள் ஏதோ ஒரு விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை முற்றிவிட்டது. கோபத்தில் கணவர், மனைவியை பிடித்து தள்ள, அவர் கீழே விழ, தலையில் பலத்த அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அதை பார்த்த அந்த கணவர், குற்ற உணர்ச்சியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நினைக்கவே வேதனையாக உள்ளது. இதை விதி என்பதா? என்ன சொல்வது? சாதாரண விசயத்தில் ஆரம்பித்த சண்டையில் அநாவசியமாக இரண்டு உயிர்கள் போய் விட்டது.

******************************************************************

நான் எழுதி ஆனந்த விகடனில் வெளியான முதல் சிறு கதை அதாவது ஒரு பக்க கதையில் குழந்தை தத்து எடுப்பதை பற்றி எழுதியிருந்தேன். அதற்கு ஏகப்பட்ட பாரட்டு கடிதங்கள் வந்தன. அந்த சந்தோசத்தில் நாமே ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க கூடாது? என நினைத்து, வீட்டில் ஆலோசித்தேன். என் மனைவி ஒத்துக்கொண்டாலும், என் பிள்ளைகள் ஒத்துக்கொள்ள வில்லை. பெண்ணுக்கு நல்ல விபரம் தெரியும். பையன் சின்ன பையன். இருந்தாலும் அவர்களை எதிர்த்து நான் அந்த செயலில் இறங்க முற்படவில்லை. ஆனால், இப்போது என்ன தோன்றுகிறது என்றால், நாம் எடுத்து வளர்ப்பதற்கு பதில், ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு அந்த பணத்தை செலுத்தி ஒரு குழந்தைக்கான செலவை ஏற்கலாமா? என யோசித்து வருகிறேன். எனக்கு உதவும் கரங்கள் அமைப்பை பற்றி தெரியும். வேறு ஏதாவது நிறுவனங்கள் தெரிந்தால், மெயிலிலோ, பின்னூட்டத்திலோ நண்பர்கள் தெரிவிக்கவும்.

*********************************************************************

நான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை பழைய துணிகளை தூக்கி போடுவது வழக்கம். இந்தியாவில் என்றால், யாருக்காவது கொடுக்கலாம். இங்கே தூக்கித்தான் போட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், போன வருடம்தான் தெரிந்தது. இங்கே ஒவ்வொரு சாப்பிங் காம்ளக்ஸிலும் ஒரு பெரிய பெட்டி மாதிரி வைத்துள்ளார்கள். நமக்கு தேவையில்லாத துணிகளை அங்கே போட்டு விட்டால் அவர்கள் அதை உடை வாரியாக பிரித்து மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இந்த முறை இந்தியாவில் உள்ளதா எனத் தெரியவில்லை. ரொமப நல்ல விசயமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

********************************************************************

சமீபத்தில் என் நண்பரிடம் இருந்து வந்த மெயில். மிகவும் பயனுள்ள விசயமாக இருப்பதால் இங்கே வெளியிடுகிறேன்:

Dear Friends,

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.Please ask the students to contact the people mentioned below to get the form #580,shubhakar, 44th cross,1st main road,jayanagar

7th block Bangalore-

Mob no- 9900906338(saraswat i)
Mr.Shivkumar( 9986630301) - Hanumanthnagar office
Ms.Bindu(9964534667 )-Yeshwantpur office

Even if you dont know anyone, please pass on this info, some one might be in need of this help desperately.

*******************************************************************

12 comments:

கோவி.கண்ணன் said...

மிக்ஸர் சுவையாக இருக்கு !

iniyavan said...

கோவி.கண்ணன் சார் ரொம்ப நன்றி.

நீங்க எல்லாம் என்னை படிப்பது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது.

நன்றி சார். நீங்க சிங்கப்பூர்லயா இருக்கீங்க?

Beski said...

//...சிறுகதை போட்டி முடிவு நாளை வெளிவரும் ...//
அய்யய்யோ மறந்தே போச்சு.

Beski said...

//என்னை ஒரு ஆளாக நினைத்து கருத்துக்களை கேட்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி//
நான் கேக்கலயேன்னு வருத்தப்பட்டுறாதீங்க சார்...
http://www.yetho.com/2009/06/blog-post_333.html

Beski said...

‘விடியல்’...ஒரே ஒரு ரூபாய் கொடுங்கள் போதும்...

படித்தீர்களா?

Beski said...

நல்லாருக்கு.

Anonymous said...

Sir

You can contact SOS villages (Save our Souls).. If I am right, it is located in Thambaram, Chennai

seenu

Anonymous said...

Sir

You can contact SOS villages (Save our Souls).. If I am right, it is located in Thambaram, Chennai

seenu

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களுக்கும் ஈ மெயில் வருதா..............

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்
நன்றி சீனு

iniyavan said...

//உங்களுக்கும் ஈ மெயில் வருதா..............//

உங்களுக்கும் நிறைய வருதோ?

கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன் சார் ரொம்ப நன்றி.

நீங்க எல்லாம் என்னை படிப்பது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது.
//

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி !

//நன்றி சார். நீங்க சிங்கப்பூர்லயா இருக்கீங்க?
//

ஆமாம் கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூர் வாழ்க்கைதான்.