பிரியமானவளே!
திடீரென ஒரு நாள்
பிடித்திருக்கிறதென்றாய்,
எதை? என்றேன்
என் எழுத்துக்களை என்றாய்.
பார்க்கவேண்டுமென்றாய்
படத்தை அனுப்பினேன்
பிடித்திருக்கிறதா? என்றேன்,
பதில் சொல்லாமல்
நீ மொளனமானாய்.
கலக்க வேண்டுமென்றாய்
கலகம் வருமென்றேன்
உன் உடம்பில்லையென்றால்
உயிரைவிடுவேன் என்றாய்,
நான் மொளனமானேன்.
பிரியமனமில்லாமல்
பிரிந்து சென்றாய்
தொலைபேசியை
தொல்லை பேசியாக்கினாய்.
வீட்டிற்கு வந்தாய்
நல்ல வேலையிலிருக்கும்
என் தம்பியை பார்த்தவுடன்
நான் வேலையற்றவன்
என்றாய், தமையனை விட
கருப்பு என்றாய்.
சூரியன் சுட்டெரிக்கும்
நாட்டின் தேசிய நிறம்
நான் என்றேன்
தம்பி மட்டும் சிகப்பு
எப்படி என? குடும்ப
ஆராய்ச்சி செய்தாய்.
ஏண்டி கல்யாணத்திற்கு
தேவை சிகப்பு கலரா
இல்லை
வெள்ளை மனமா?
திடீரேன விவாகரத்து
கேட்கின்றாய்?
அடி, கூறுகெட்டவளே?
கல்யாணம் ஆனால் சரி!
உன் மேல உள்ள
காதலுக்கு எப்படிடி
விவாகரத்து தருவது?????
- இந்த கவிதை (புதுக்கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொண்டால்) யாருக்கு என கேட்பவர்களுக்கு, வடிவேலு ஸ்டைலில் "யாருக்கோ"
11 comments:
tholikka ...kathalikka?
any way kavithai nice..thalaippu thaan konjam idikkuthu:-)
நண்பரே,
நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் தோழியாகிப்போன காதலிக்கு என நினைத்துப்பாருங்கள், சரியாக வரும்.
நன்றி இயற்கை.
அட சூப்பரு!
இது உங்க அனுபவமா சார்? ஹி ஹி ஹி...
//இது உங்க அனுபவமா சார்? ஹி ஹி ஹி...//
ஐய்யா, இது என் அனுபவமில்லை.
வீட்டுல மாட்டிவிட்டரதுனு முடிவு பண்ணீட்டிங்களா?
நல்லாத்தான் சார் இருக்கு, வீட்ல இதப் பாத்தாங்களா? என்ன சொன்னாங்க?
காதலில் தெரியாதது கல்யாணத்தில் தெரிந்தால்...
அந்த காதல் காதலே அல்ல...
இல்லையா?
ஏன் என்னாச்சி
ஏன் இப்படி
நன்றி
மொளனமான நேரம்
அபு அப்ஸர்
//ஏன் என்னாச்சி
ஏன் இப்படி//
ஒன்னுமில்லை. சும்மா கவிதை, கவிதை.
pings commented on your story 'இனிய தோழிக்கு!'
'நல்ல கற்பனை.நான் புது பதிவாளர் என் blog http://tamilmuthirai.blogspot.com'
Here is the link to the story: http://www.tamilish.com/story/79161
Thank your for using Tamilish!
- The Tamilish Team
Post a Comment