நான் பதிவுலகத்துக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. ஏறக்குறைய 48 பதிவுகள் முடித்துவிட்டேன். இது 49வது பதிவு. நிறைய நண்பர்கள் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள்........? அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன? ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிக்காமல் சாதரணமாகவே படுத்து யோசித்து பார்த்தேன்.
பிரபலமான பதிவர்களுக்கு எப்படியும் ஒரு 50 நபர்களாவது கமண்ட் எழுதுகிறார்கள். அவர்கள் எவ்வளவு நாள் கழித்து வந்து எழுதினாலும், காத்திருந்து நிறைய விமர்சனங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் எழுதாவிட்டால், சில பேர் நீங்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை? எனவும் கேட்கிறார்கள். என்னை அல்ல, அந்த பிரபல பதிவர்களை!!. அப்படியென்றால், அவர்களின் எழுத்து எந்த அளவிற்கு வாசகர்களை கவர்ந்து இருக்க வேண்டும்? அதன்பின்னே எத்தனை உழைப்பு இருக்க வேண்டும்? அவர்கள் போல் நிறைய எழுதி, நன்றாக எழுதி நிறைய நபர்களை படிக்க வைக்க வேண்டும் என்றும், நிறைய பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என்றும், இந்த கணத்தில் நான் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்.
அதே போல நமது மக்களும் ஏன் புதிதாக வருபவர்களை ஊக்குவித்து நிறைய கமண்ட் எழுதமாட்டேன் என்கிறார்கள்? எனத்தெரியவில்லை. பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை? இந்த சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. படித்து முடித்தவுடன் நண்பர்கள் ஒரு நான்கு பேர் ஒரு வேலைக்கான நேர்காணல் சென்று இருந்தோம். அப்போது என் நண்பனின் நேர்காணல் முடிந்தவுடன் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்,
" உங்களுக்கு எத்தனை வருடம் அனுபவம் உள்ளது?"
" நான் இப்போதுதான் படிப்பு முடித்தேன் சார். இன்னும் அனுபவம் எனக்கு இல்லை"
" நாங்கள் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை தருவோம்"
உடனே என் நண்பனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் உடனே அந்த அதிகாரியிடம் சண்டைக்கு போய் விட்டான்.
" சார், முன் அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வேலை என்றால், நாங்கள் என்றைக்கு வேலைக்கு செல்வது? எங்களுக்கும் வேலை குடுத்தால் தானே நாங்களும் முன் அனுபவம் பெற முடியும்" என கேட்டு ஒரே சண்டையாகிவிட்டது.
இதை எதற்கு இங்கே கூறுகிறேன் என்றால், எல்லா பிரபல பதிவர்களுமே ஒரு காலத்தில் சாதாரண பதிவர்களாய் இருந்தவர்கள்தானே? மக்கள் குடுத்த பின்னூட்ட ஊக்கத்தினால்தானே அவர்களால் நல்ல நல்ல பதிவுகளை தர முடிந்தது.
நான் முன்பெல்லாம், என் பதிவுகளை மற்றவர்கள் படித்தால் மட்டும் போதும், பின்னூட்டம் பற்றியெல்லாம் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நண்பர்களின் பின்னூட்டம் வரும்போது ஏற்படும் சுகமே தனிதான். அது திட்டாக இருந்தாலும், பாராட்டாக இருந்தாலும்.
அதே சமயம் இன்னும் ஒரு உண்மையையும் நேற்றுதான் நான் உணர்ந்தேன். என்ன அது?
நான் எத்தனை பேருக்கு பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்?
நானும் மேலே சொன்னமாதிரியே நடந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். நான் பின்னூட்டம் எழுதியதே மிகவும் குறைவு. அதிலும் நான் பின்னூட்டம் எழுதியது பிரபல பதிவர்களுக்கு மட்டுமே? நானே இவ்வாறு இருந்துவிட்டு நான் எப்படி மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்க முடியும்? எதனால் அந்த தவறு ஏற்பட்டது? என்று தெளிவாக யோசித்தால், இரண்டு விசயம் தெரிந்தது:
01. நான் பின்னூட்டமிடும் நேரங்களிலும் அதிக பதிவுகளை படித்திருக்கிறேன்.
குறைந்த பட்சம் "மி த பர்ஸ்ட் அல்லது ரிப்பீட்டேய்" யாவது போட்டுருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.
02. பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டால், நம்மீது அவர்கள் கவனம் விழும் எனவும் நான் நினைத்திருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட.
ஆனால், நான் இப்போது நினைப்பது போல் தானே, வளர்ந்து வரும் பதிவர்களும் நினைப்பார்கள். பின்னூட்டங்களை விரும்பாத மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டா என்ன? ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவனுடைய உழைப்பு மட்டும் காரணமல்ல, சரியான நேரத்தில் மற்றவர்களால் அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் ஒரு முக்கிய காரணம்.
அதனால் இந்த பதிவு உலகத்திற்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இன்றிலிருந்து நான் படிக்கும் அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய விமர்சனங்களை எழுதப்போகிறேன்.
என்னுடைய பதிவுகளுக்கு? அது உங்கள் இஷ்டம்!!!!
57 comments:
உண்மை
:-) kandippa naanga comment poduvom:-))))
//நான் பதிவுலகத்துக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. ஏறக்குறைய 48 பதிவுகள் முடித்துவிட்டேன். இது 49வது பதிவு. நிறைய நண்பர்கள் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள்........? அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன? ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிக்காமல் சாதரணமாகவே படுத்து யோசித்து பார்த்தேன்.
//
நம்முடைய எழுத்தைப் பலர் படித்து பாராட்ட வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. நமக்கு பின்னூட்டம் வரவில்லை என்றால் நாமும் பலருடைய பதிவுகளை பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்தவில்லை என்பதே முதன்மைக் காரணம். அதையும் மீறி பின்னூட்டமிடுபவர்களுக்கு பொறுப்பாக மகிழ்வுடன் பதில் அளித்தால் மீண்டும் மீண்டும் பின்னூட்ட மழைதான்.
:)
//01. நான் பின்னூட்டமிடும் நேரங்களிலும் அதிக பதிவுகளை படித்திருக்கிறேன்.
குறைந்த பட்சம் "மி த பர்ஸ்ட் அல்லது ரிப்பீட்டேய்" யாவது போட்டுருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.
//
அதே அதே !
:)
புரிஞ்சிக்கிட்டிங்க, பொழைச்சிகுவிங்க !
நன்றி பனையூரான், இயற்கை
கோவிக்கண்ணன் சார், ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு.
நானெல்லாம் பதிவு போட ஆரம்பித்து ரெண்டு வருடம் ஆச்சு.இன்னமும் நம்ம பக்கம் காத்துவாங்கிட்டுதான் இருக்கு.
:(
சரி நான் பின்னூட்டம் போட்டுத்தன் தல...
இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. :))
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட நண்பர்கள், நாடோடி இலக்கியன், மயாதி மற்றும் TBCD ஆகியோருக்கு நன்றி.
me 2 :)
நீங்கள் இருப்பதை தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்!!
நீங்கள் எனக்குப் பின்னூட்டமிடவில்லையே!!!( நான் இன்னும் பிரபலமாகவில்லை என்பதை உணர்த்திவிட்டீர்கள்!!!)
வடிவேலுவிடம் பார்த்திபன் சொல்லும் give and take பாலிஸி
அதாவது போட்டு வாங்குதல், நீங்க 40 பேருக்கு 40 பின்னூட்டம் போட்டா அது திரும்ப உங்களுக்கு வட்டியோட வரும், ஆனா என்ன கொஞ்ச காலம் எடுக்கும் :))
நான் பிரபல பதிவர் இல்லைங்க..பின்னூட்டம் போட்டுட்டேன் பாருங்க...
பாஸ் போட்டாச்சு ..
நான் பின்னூட்டம் போட்டுவிட்டேன் :)
இப்பாதான் பாய்ண்ட்க்கே வந்துள்ளீர்கள்.தொடருங்கள். வாழ்த்துகள்.
நாந்தான் பன்னிரண்டேய்ய்ய்ய்ய்...
Present Sir!
பின்னூட்ட மிட்ட நண்பர்கள்,
ஸ்ரீ,
தேவன் மாயம்,
குசும்பன்,
நான் ஆதவன்,
அதிஷா,
சென்ஷி,
ராம் CM,
நிகழ்காலத்தில்,
பரிசல்காரன்
ஆகியோருக்கு நன்றி.
//நீங்கள் இருப்பதை தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்!!
நீங்கள் எனக்குப் பின்னூட்டமிடவில்லையே!!!( நான் இன்னும் பிரபலமாகவில்லை என்பதை உணர்த்திவிட்டீர்கள்!!!)//
என்ன இப்படி சொல்லீட்டிங்க. உங்கள் பதிவுகள் ஓரளவு படித்துள்ளேன். உங்கள் வலைப்பூவின் ரேங்கும் எனக்குத்தெரியும்.
நான் பின்னூட்டமிடவில்லை என்பதால் நீங்கள் பிரபலம் இல்லை என்றாகி விடுமா என்ன?
நீங்கள் எங்கேயோ இருக்கின்றீர்கள்.
பெரிய பெரிய தலைங்கள் எல்லாம் இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போறா?
நிஜத்தில் ஓரளவு நடுநிலையாக சிந்தித்திருக்கிறீர்கள். நானும் ஆரம்பத்தில் இப்படி சிந்தித்திருக்கிறேன். சுவாரசியமான தகுதியான எழுத்தே வாசகர்களையும், பின்னூட்டங்களையும் கொண்டு வருகிறது.
போலியான பதில் பின்னூட்டங்களும், பதில் ஃபாலோ அப்பும் அல்ல. ஒவ்வொரு பதிவுக்கும் சுமார் 40 பின்னூட்டங்களை வாங்கும் அளவில் வந்தபிறகும் ஏதாவது பதிவு சொதப்பி 10 பின்னூட்டங்களோடு நிற்கும் போது வருத்தம் வரத்தான் செய்கிறது.
பொதுவாக இது போன்ற பதிவுகளில் பிரபல(?) பதிவர்களை குற்றம்தான் சொல்வார்கள். அவர்கள எழுதிய மொக்கைப்பதிவு ஒன்றைக்கூறி இதற்கெல்லாம் இவ்வளவு பின்னூட்டங்களா என்று வாதிடுவார்கள். வசதியாக ஒரு விஷயத்தை மறந்திடுவார்கள், அது அவர்களது உழைப்பு மற்றும் சில குறிப்பிடத்தகுந்த பதிவுகளை. எல்லா பதிவர்களின் எல்லா பதிவுகளுமே சிறப்பாக அமையவேண்டும்/ பிடித்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லைதானே.?
வாழ்த்துகள்.!
நன்றி ஆதி.
நான் எழுதிய 48 பதிவுகளில் ஏறக்குற்றைய 90 சதவிகித பதிவுகள் தமிழிஷ்.காமில் அதிக ஓட்டுக்கள் வாங்கி பிரபலமான பகுதிக்கு சென்ற்றவைகள்தான். அதனால், ஓரளவுக்கு நன்ற்றாகத்தான் எழுதுகிறேன் என நினைக்கிறேன். பின்னூட்டம் அதிகம் இல்லாதது ஒரு குறையாக இருந்தது. அந்த குறை இன்று தீர்ந்து விட்டது.
தெளிவான விளக்கத்துக்கு நன்றி ஆதி.
சர்ச்சைக்குரிய பதிவுகளைப் படிக்கும்போது நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை, காரணம் அந்த சர்ச்சைக்குரியவர்கள் தீர்த்துக்கொள்ளட்டும் என்பதுதான் எனது நிலை. பல வருடங்களாக வலைத்தளத்தில் எழுதி வரும் நான் 'எழுதுவதே ஒன்றே எனது குறிக்கோள்' என்று மட்டுமே இயங்கி வருகிறேன்.
பின்னூட்டம் எழுதும்போது மனதில் படும் கருத்துக்களைத் தெளிவாக எழுதிவிடுவது எனது வேலை. பல நேரங்களில் எனது நேரமின்மை என்னை பின்னூட்டம் இடச் செய்வதில்லை, பல பதிவுகளைப் படிக்கச் செய்ய விடுவதில்லை.
தமிழ்மணம் மூலம் படிப்பதால் பல பின்னூட்டங்கள் பெறும் பதிவுகள் கண்ணில் படும். அவர் பிரபலமோ, பிரபலம் இல்லையோ தெரியாது, வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே பின்னூட்டம் எழுதி விடுவேன். இங்கே நான் வருவது இரண்டாவது தடவை என நினைக்கிறேன். நீங்கள் பிரபல பதிவர் இல்லை என உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் உங்கள் இடுகைகள் 'நான் படித்த இரண்டும்' மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டு இருக்கின்றன. நீங்களும் பிரபலமாவீர்கள், அப்பொழுதும் ஒரு ஓரத்தில் இருந்து பின்னூட்டம் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்.
''எழுதுபவர்கள் தங்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும், பிறரது உற்சாகத்தினால் மட்டுமே எழுதினால், அந்த உற்சாகம் கிடைக்காதப் பட்சத்தில் எழுத்தின் உத்வேகம் குறையும்'' இந்தக் கருத்தை மட்டுமே எனது நினைவில் எப்போதும் நான் நிறுத்துவது, பிறருக்கும் சொல்வது.
மிக்க நன்றி.
//நீங்கள் பிரபல பதிவர் இல்லை என உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் உங்கள் இடுகைகள் 'நான் படித்த இரண்டும்' மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டு இருக்கின்றன. நீங்களும் பிரபலமாவீர்கள், அப்பொழுதும் ஒரு ஓரத்தில் இருந்து பின்னூட்டம் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்.//
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இராதாகிருஷ்ணன் சார்.
மீ த 27.,
அண்ணே ஓக்கே வா???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
உங்கள் கருத்தோடு நூத்துக்கு, நூரு ஒத்துப் போகிறேன்.
ஆனால் வலையுலகம் கிவ் அண்ட் டேக் பாலிசியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது!
நீங்கள் உண்மையில் உங்கள் கருத்தில் உறுதியாக இருந்தால், பின்னுஉட்டத்தையோ, வாககுகளையோ எதிர்பார்க்கக் கூடாது?
நான் அப்படித்தான்!
நீங்கள் எப்படி????
//நான் பதிவுலகத்துக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது. ஏறக்குறைய 48 பதிவுகள் முடித்துவிட்டேன். இது 49வது பதிவு. நிறைய நண்பர்கள் படிக்கிறார்கள். ஆனால், பின்னூட்டங்கள்........? அவ்வளவு வருவதில்லை. காரணம் என்ன? ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசிக்காமல் சாதரணமாகவே படுத்து யோசித்து பார்த்தேன்.//
neenga sollavanthathu roma correct na....
-:)
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பின்னூட்டங்கள் பற்றி.....' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th July 2009 10:23:20 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/80502
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
//பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை? //
ஏழை வீட்டு கல்யாணத்திற்கு செல்லுங்க கவனிக்கும் விதம் தனியே, அதே பணக்காரவீட்டு கல்யாணத்திற்கு செல்லுங்கள் கண்டுக்கவே மாட்டார்கள்..
மேலே சொன்ன காரணம்தான் ஞாபகம் வருது...
புதிய பதிவர்களுக்கு ஆதரவு கொடுங்க
Nanbar ulaks, thankalathu pathivukalai naan thodarnthu padikiren. unmai thaan oruvarathu seyalai paarattum poluthu kidaikkum inbam thaniye. idhanal irandu nanmaikal. onru unkalukku sandhosam. irandu antha urchakathil enkaluukum nalla saithikal kidaikkum...
Illai nanbare, naan thankalathu anathu pathivukalaiyum thavaramal padithullen... mika nanraka ullathu...Kungumam mulam thankalathu pathivukalai padikiren...sila pathivukalai padikkum pothu vaav super ena manathil rasithu vittu povathodu sari...utharanam AMMAVAI parri elthiyathu....Ok ini kandippaka pinnuttam idukiren. Kaaranam idhanal thankalathu manam sandhosa padukirathu enraal enkalukku thaan nanmai...neenka sandhosamaka irndhal dhaan nalla padhivukal enkalukku kidaikkum...
பிரபல பதிவராயிட்டீங்க
திரு.உலகநாதன்.
50 வது பதிவை சிறப்பாக செதுக்குங்கள்.
இனிமேல் பின்னூட்ட மழைதான்..
pings commented on your story 'பின்னூட்டங்கள் பற்றி.....'
'நானும் இன்றிலிருந்தே துவங்கிவிட்டேன் நான் படிக்கும் எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் எழுத.'
- Hide quoted text -
Here is the link to the story: http://www.tamilish.com/story/80502
Thank your for using Tamilish!
- The Tamilish Team
நெத்தியடியாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வரப்போகும் ஐம்பதிற்கு வாழ்த்துக்கள். பின்னூட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மந்தையில் இன்னொரு ஸாதா!
குசும்பன் சொன்னது தாங்க நானும் சொல்றேன்.
கிவ் அன்ட் டேக் பாலிசி..நானெல்லாம் சில பேர் பதிவில மூவாயிரத்துக்கு மேல பின்னூட்டம் போட்டிருக்கேனு
சொனனா நம்புவீங்களா ??
//பின்னூட்ட மிட்ட நண்பர்கள்,
ஸ்ரீ,
தேவன் மாயம்,
குசும்பன்,
நான் ஆதவன்,
அதிஷா,
சென்ஷி,
ராம் CM,
நிகழ்காலத்தில்,
பரிசல்காரன்
ஆகியோருக்கு நன்றி.//
பரவயில்லை இனியவன். பிரபல பதிவர்கள் எழுதுவது போல் எல்லோருக்கும் ஒரே கும்பிடாய் போட்டுவிட்டீர்கள். இதனால் நீங்களும் பிரபல பதிவர் ஆவதிற்கு தகுதி பெற்றுவிட்டீர்கள். அடுத்தவன் மாங்கு மாங்கென்று எழுதி, இப்படி நீங்கள் பின்னூட்டம் போட்டால் அடுத்தமுறை எழுதுவேன்???. வெறும் ஸ்மைலிதான் :)
பாஸ்... உங்க பேரே இவ்வளவு பெருசா இருக்கா... அதை சொல்லி பின்னூட்டம் போடறது ரொம்ப கஷ்டம்... அஜித், விஜய், சூர்யா மாதிரி பேரை கொஞ்சம் ஷார்டா வெச்சுக்கோங்க ;)
//அபுஅஃப்ஸர் said...
//பிரபல பதிவர்களுக்கு மட்டும் பின்னூட்டம் இடும் அவர்கள் ஏன் எல்லோருக்கும் எழுதவதில்லை? //
ஏழை வீட்டு கல்யாணத்திற்கு செல்லுங்க கவனிக்கும் விதம் தனியே, அதே பணக்காரவீட்டு கல்யாணத்திற்கு செல்லுங்கள் கண்டுக்கவே மாட்டார்கள்.//
கலக்கல் பாஸ் :-)
வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் பணி தொடரட்டும்.
பித்தன் - உங்கள் கருத்துக்கு நன்றி.
அபு அப்ஸர் - ஆதரவுக்கு நன்றி.
கண்ணன் - எல்லா பதிவுகளுமா குன்குமத்துல வருது?
சாரதி - நன்றி
சங்கா - நன்றி
அ.மு.செய்யது - நன்றி
//பரவயில்லை இனியவன். பிரபல பதிவர்கள் எழுதுவது போல் எல்லோருக்கும் ஒரே கும்பிடாய் போட்டுவிட்டீர்கள். இதனால் நீங்களும் பிரபல பதிவர் ஆவதிற்கு தகுதி பெற்றுவிட்டீர்கள். அடுத்தவன் மாங்கு மாங்கென்று எழுதி, இப்படி நீங்கள் பின்னூட்டம் போட்டால் அடுத்தமுறை எழுதுவேன்???. வெறும் ஸ்மைலிதான் :)//
கருத்துக்கு நன்றி ஜோதி. நீங்க சொன்னமாதிரி நன்றி சொல்ல ஆர்ம்பிச்சிட்டேன், பார்த்தீங்களா?
ஒழுங்கா அடுத்த பதிவுக்கு வெறும் ஸ்மைலி இல்லாம பின்னூட்டம் எழுதனூம் ஓக்கேயா?
//பாஸ்... உங்க பேரே இவ்வளவு பெருசா இருக்கா... அதை சொல்லி பின்னூட்டம் போடறது ரொம்ப கஷ்டம்... அஜித், விஜய், சூர்யா மாதிரி பேரை கொஞ்சம் ஷார்டா வெச்சுக்கோங்க ;)//
இப்போத்தான் இனியவன்ங்கற பேர "இனியவன் உலகநாதன்னு மாத்தி வைச்சிருக்கேன். நம்ம ஒரிஜினல் பேர் போல வருமா பாஸ்?
எஸ்.ஜி ரமேஷ் உங்கள் கருத்துக்கு நன்றி.
நல்லா எழுதினால் கண்டிப்பா அந்த பதிவு படிக்கபடும் போது எல்லாம் அவர்கள் மனதில் ஒரு உந்துதல் ஏற்ப்பட்டும் எப்படியாச்சும் ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று போடுபவர்களும் உண்டு..
நண்பர்கள் பின்னூட்டங்கள் போடுவது தவிர்த்து எத்துனை புதிய பதிவர்கள், வாசிப்பாளர்கள் போடுகிறார்கள் என்பதே பதிவின் வெற்றி
வாழ்த்துகள் இனி உங்களுடன் இணைய பயணத்தினை தொடர்கிறேன் .. தொடர்ந்து உங்களை பாலோ செய்கிறேன் ;)
"தல"
இனிமே உங்கள் வண்டிக்கு வரும் பிரயாணிகளின் எண்ணிக்கை கூடி கொண்டே போகும்.... கவலை வேண்டாம்......
நீங்கள் சொல்லும் அதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது...... நானும் www.edakumadaku.blogspot.com மற்றும் www.jokkiri.blogspot.com என்ற இரண்டு BLOGSPOTS எழுதி கொண்டு இருக்கிறேன்.....
ஆனாலும், பெரிய அளவில் வலையில் பிரபலமாகவில்லை..... ஒரு நண்பர் சொன்னது போல், அது சிறிது நாள் பிடிக்கும். காத்திருப்போம்......
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Kungumam moolamaka thankalin blog therinthu kondean....Kannan
பின்னூட்டதைப் பற்றி நல்ல அலசல்! வாழ்த்துக்கள்!
அருமை, சரியான யூகம்.
---
இந்த மாதிரி எண்ணங்கள் நமக்கும் வரும். அப்போதெல்லாம்,
‘நேத்து வந்த நமக்கே ஒரு நாளைக்கி 50 புதிய பதிவுகள் கூகுள் ரீடர் ல வருது. அதுவே 2,3 நாள் வெளியூர் பொய்ட்டு திரும்பி வந்தா, 100, 150 அன்ரீட் ஆய்ருது. அப்றம் அத 0 ஆக்குறதுக்கு 1 வாரம் ஆகுது. அப்போ, பிரபல பதிவர்கள் எல்லாம் எத்தன பேர பாலோ பண்ணுவங்க? ஒரு நாளைக்கி எத்தன புது பதிவுகள் வரும்? அத்தனைக்கும் பின்னூட்டம் போடனும்னா எல்லா வேலையும் விட்டுட்டு இதே பொழப்பா பாக்கவேண்டியத்தான்’, எனத் தோன்றும். அதுக்காக புதுசெல்லாம் அவங்க படிக்க மாட்டாங்கன்னு இல்ல, படிப்பாங்க, பின்னூட்டம் போடுறதுக்குத்தான் நேரம் இருக்காது. இது நான் கண்ட உண்மை.
ஒரு பிரபல பதிவருக்கு, வேறு ஒரு விசயத்திற்காக போன் செய்தேன். அவர் எடுத்தவுடன் நான் கடைசியாக எழுதிய பதிவைப் பற்றி மளமளவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். அப்புறம் ரூட்ட மாத்தி என் மேட்டருக்கு கொண்டுவந்தேன். (அவர் அதற்கு பின்னூட்டமிடவில்லை). இதிலிருந்துதான் சொல்கிறேன்.
---
ஆனா அவங்களும் ஒரு சில இடங்கள்ல பின்னூட்டம் போட்டுட்டுதான் இருக்கங்க. அவங்கள்லாம் க்ளோஸ் பிரண்டு போல இருக்கும்னு நெனச்சுக்குவேன்.
---
50 க்கு வாழ்த்துக்கள்.
இன்னொரு விசயம். பின்னூட்டம் அதிகமாக வர, நல்லா எழுதினா மட்டும் போதாது. பதிவர் சந்திப்புகளில் பங்கெடுக்கனும், நேரில் சந்தித்து நட்பு வட்டத்தை பலப்படுத்திக்கனும்.
---
இது எனது யூகமே, அனுபவித்தவர்கள்தான் உண்மையைச் சொல்லனும்.
//01. நான் பின்னூட்டமிடும் நேரங்களிலும் அதிக பதிவுகளை படித்திருக்கிறேன்.
குறைந்த பட்சம் "மி த பர்ஸ்ட் அல்லது ரிப்பீட்டேய்" யாவது போட்டுருக்கலாம் என இப்போது உணர்கிறேன்.
//
ரிப்பீட்டேய்
//ஒழுங்கா அடுத்த பதிவுக்கு வெறும் ஸ்மைலி இல்லாம பின்னூட்டம் எழுதனூம் ஓக்கேயா?//
என்ன கேள்வி இது?? கலக்கிறமாட்டோம்???
படிச்சு பிடிச்சு இருந்தா கமென்ட் போட நான் தயங்குனது இல்லை.
Your comment has been saved and will be visible after blog owner approval.//
இதை முதலில் தூக்குங்கள். கமென்ட் தானா வரும்.
நல்ல பதிவு
Post a Comment