Jul 9, 2009

தாழ்வு மனப்பான்மையைப் பற்றி...

தாழ்வு மனப்பான்மையைப் பற்றி ரொம்ப நாளா எழுதனும்னு நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் அதற்குறிய சந்தர்ப்பம் அமைந்தது. எனக்கு 10 வது படிக்கும் வரையில் இரண்டு விசயத்தில் அந்த பிரச்சனை இருந்தது. ஒன்று ஆங்கில அறிவு, இரண்டாவது என்னுடைய நிறம். ஆங்கில அறிவு பிரச்சனையை ஓரளவு கடந்து வந்து விட்டேன். ஆனால், அந்த கறுப்பு நிறம் பிரச்சனையால் அந்த வயதில் மனதளவில் நிறைய காயம் பட்டிருக்கிறேன். ஒரு முறை என் வகுப்பில் என்னை ஒரு நண்பன் என் நிறத்தை வைத்து கிணடல் செய்ய அவனை நான் அடித்து, சட்டையை கிழித்து பிரச்சனை தலைமை ஆசிரியர் வரை சென்றது.

அன்று இரவு என் அப்பாவிடம் கேட்டேன், "நான் மட்டும் ஏன் அப்பா இந்த நிறம்?''

" நான் கறுப்பு, அதனால் நீயும் இந்த கறுப்பு. எந்த கலரில் பிறக்கிறோம் என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான், வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது. நீ எந்த விசயத்திலாவது சிறந்து விளங்கினால், உன்னை இந்த உலகம் தூக்கி வைத்து கொண்டாடும். அப்போது அந்த கொண்டாட்டமெல்லாம் நிறத்தை வைத்து வருவதில்லை. உன் அறிவை வைத்து, திறமையை வைத்து, நீ வாழும் வாழ்க்கையை வைத்துத்தான் வரும். இன்றிலிருந்து இந்த தாழ்வு மனப்பான்மையை விட்டு ஒழி. உலகத்தில் யாருமே யாரையும் விட தாழ்ந்தவர் இல்லை. உன்னை உன் கலரை வைத்து கேலி செய்பவர்களை விட்டு விலகு. அவர்கள் உன்னை தேடி வர ஏதாவது ஒரு வகையில் உன் திறமையை வளர்த்துக் கொள்"

அன்றிலிருந்து இன்று வரை நான் என் கலர் பிரச்சனையைப் பற்றி நினைப்பதே இல்லை. என்னுடைய நடவடிக்கைகளால், என் பேச்சுக்களால், என் படிப்பால் எனக்குத்தான் அதிக நண்பர்கள். என்னிடம் நல்ல விதத்தில பழகும் அனைவரையும் உயிருக்கு உயிராக நேசிப்பேன். என்னை யாரேனும் அவமதிக்க நினைத்தால், சாதாரணமாக நான் விடுவதில்லை. உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் மறு வேலை. என்னை யாரும் கேவலமாக பேசுவதையோ, மட்டப்படுத்துவதையோ விடுவதில்லை. அதனால், என்னை ரொம்ப தலை கனம் பிடித்தவன் என்று சில பேர் சொல்வதுண்டு. அதைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. சில சமயம் அந்த தலை கனம் அவசியம் என்பதை உணர்கிறேன்.

ஏன் அப்படி இருக்கிறேன் என்றால், நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலேயே, சிறு வயதிலிருந்தே, என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன் படியே வாழ்ந்தும் காட்டிகொண்டிருக்கிறேன். நினைத்தால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை. பகவத் கீதையில் கண்ணபிரான் சொல்வது போல், " நீ நல்லது நினைத்தால், நல்லதே நட்க்கும். நீ என்னவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகி விடலாம்". ஆனால், என்ன ஒன்று. அதற்கு உரிய முயற்சியை சரியாக எடுக்க வேண்டும். நான் ஏதோ நிறைய சாதித்து விட்டது போலவோ, பெரிய ஆளாகி விட்டது போலவோ நினைத்து இதை சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். எந்த மனிதனும் அவ்வாறு கூற இயலாது. நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால், மற்றவர்களை வைத்து கம்பேர் செய்து பார்க்கும் போது ஓரளவு எல்லா விதத்திலும் சிறந்து இருக்கிறேன் என்பதை, எனக்கே உரிய கர்வத்துடன் நான் இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதைப் படிக்கும் யாருக்காவது இது உதவலாம் இல்லையா? இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், தாழ்வு மனப்பான்மையை விட்டொழிந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதுதான்.

அதே நிறப் பிரச்சனை +2 படிக்கும் போதும், பெண்களை பார்க்கும் போதும் வந்தது. அதை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. அந்த வயதில் ஏறபடும் சாதாரண விசயம்தான் இது. ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த வயதிலிருந்தே எனக்குத்தான் பெண் நண்பர்கள் அதிகம். உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு உண்மையை சொல்கிறேன். நிறைய சிகப்பான பெண்களுக்கு, ஒரளவு கறுப்பான ஆண்களைத்தான் பிடிக்கும். அதுதான் உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன். இது ஒரு பெரிய விசயம்னு இதை போய் இந்த கட்டுரையில் சொல்கிறீர்களா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த வயதில் இது கண்டிப்பாக ஒரு பெரிய விசயம் தான். கல்லூரியில், வகுப்பில் எல்லா பெண்களும் எல்லோரிடமும் பேசும்போது, உங்களிடம் மட்டும் பேசாவிடால், எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்?. இங்கும் நான் தெரியப்படுத்துவது என்ன என்றால், தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தான்.

ஒரு முறை நாங்கள் தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்கு திருச்சிக்கு சென்றோம். அப்போது நான் நல்ல உடை அணிந்து, சட்டையெல்லம் இன் பண்ணி சென்றேன். அதை பார்த்த என் நண்பன் ஒருவன், " ஏண்டா, இப்படி பந்தவா வர? உன்கிட்ட யாருடா வந்து பேசப்போறா?"

ஆனால், திருச்சிக்கு சென்று கடைக்கு சென்றவுடன் என்னிடம் ஓடி வந்து முதலில் ஜொள்ளு விட்டு பேசியது அவன் தங்கை. அப்போது அவன் மூஞ்சி போன போக்கை பார்க்க வேண்டுமே?

அதே போல் உடை விசயத்திலும் நிறைய பேர் என்னிடம் சொல்வார்கள், "ஏன் இந்த கலர்?"

நான் கூறும் பதில், " நீங்களா வாங்கி கொடுத்தீர்கள்?"

அதன் பிறகு அவர்கள் என்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. எனக்கு பிடிக்கும் உடைகளை நான் அணிகிறேன். நான் எதற்கு அடுத்தவர்களை பற்றி கவலைப் பட வேண்டும்? எனக்கு பலதரப்பட்ட நண்பர்கள் உண்டு. ஏகப்பட்ட பிரிவுகளில் நண்பர்களை வைத்திருக்கிறேன். மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே என்னிடம் ஜாலியாக பேசவோ, கிண்டல் பண்ணவோ அனுமதிப்பேன். மற்றவர்களை ஒரு தொலைவிலேயே நிறுத்தி வைத்துள்ளேன்.

ஒரு முறை எங்கள் ஊரில் மிகப் பெரிய பணக்காரரின் மகன், என் நண்பர்களுடன், நான் பேசிக்கொண்டிருந்த கடைக்கு அருகில் உள்ள கடையில் பேசிக் கொண்டிருந்தார். நான் இருந்த கடையில் இருந்த நண்பன் ஒருவன் அவனை பார்க்க சென்றான். பார்த்து விட்டு வந்தவன், "உலக்ஸ், உன்னை அவர் (அந்த நபரின் பெயரைச் சொல்லி) வரச்சொன்னாருடா?"

" எதற்கு?" நான்.

" ஏதோ மலேசியாவுக்கு வரணுமாம். உன் கிட்ட அதைப் பத்தி பேசனுமாம்"

" அவர் தானே மலேசியா பத்தி தெரிஞ்சுக்கணும், அவர வந்து என்னை பார்க்க சொல்லு"

" மாப்பிள்ள, அவர் எவ்வளவு பெரிய ஆளு"

" அது உனக்கு, எனக்கல்ல "

இது சில பேருக்கு தலைக் கனமாக தெரியலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தலை வலி இருப்பவன் தான் மாத்திரை சாப்பிடனும்? அவருக்குத்தானே, காரியம் ஆக வேண்டும்? அதனால், அவர்தான் என்னிடம் வர வேண்டும்? நாம் ஏன் அடுத்தவர்கள் முன்னே தாழ்ந்து போக வேண்டும்? நாம் எந்த விதத்தில் குறைச்சல்? நான் இப்படி கூறுவதால், எனக்கு நண்பர்களே இல்லை என்று நினைத்து விடாதீர்கள்!. எனக்குத்தான் அதிகம். எல்லோரும் என்னைப் பற்றி நன்கு புரிந்தவர்கள்.

இதைப் பற்றி சொல்ல நிறைய விசயங்கள் என்னிடம் உள்ளது. அதை பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்.

அதனால்தான் மீண்டும் சொல்கிறேன், தாழ்வுமனப்பான்மையை மட்டும் விட்டொழித்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று!

13 comments:

Beski said...

நல்லாருக்கு சார்.
---
சில விசயங்கள் நமக்குள்ள ஒத்துப் போகுது, ஆனா சில விசயங்கள்ல நான் உங்கள மாதிரி இல்ல.

dondu(#11168674346665545885) said...

தாழ்வு மனப்பான்மை பற்றி நான் இட்ட பதிவைப் பார்க்க http://dondu.blogspot.com/2006/11/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு.

அன்புடன் அருணா said...

ரொம்ப அழகா விரிவா எழுதிருக்கீங்க.....பூங்கொத்து!

அப்துல்மாலிக் said...

//அதனால்தான் மீண்டும் சொல்கிறேன், தாழ்வுமனப்பான்மையை மட்டும் விட்டொழித்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்று!/

நிச்சயமா

எத்தனையோ நபர்கள் இதனால் இன்னும் தாழ்ந்துப்போய் வாழ்துக்கொண்டிருக்காங்க‌

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்
நன்றி டோண்டு சார். படித்தேன் நன்றாக இருந்தது.
நன்றி விக்னேஸ்வரி மேடம்
நன்றி அருணா பூங்கொத்துக்கு
நன்றி அபுஅப்ஸர்

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'தாழ்வு மனப்பான்மையைப் பற்றி...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th July 2009 09:40:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/81742

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே என்னிடம் ஜாலியாக பேசவோ, கிண்டல் பண்ணவோ அனுமதிப்பேன்//

இது தெரியாம ரொம்ப தமாசா நீங்க எழுதிருந்த ஒரு பதிவ படிச்சிட்டுதான், ஜாலி பெர்சென்னு நினச்சி ஜாலியா கமெண்ட் போட்டுட்டுடேன் -:(

iniyavan said...

//இது தெரியாம ரொம்ப தமாசா நீங்க எழுதிருந்த ஒரு பதிவ படிச்சிட்டுதான், ஜாலி பெர்சென்னு நினச்சி ஜாலியா கமெண்ட் போட்டுட்டுடேன் -:(//

நண்பா, நான் ஜாலி பெர்சன்தான். நீங்க என்னை தப்பா புரிஞ்சிட்டீங்க போல.

நீங்க ஜாலியா எழுதலாம்.

iniyavan said...

grs to me
show details 7:04 AM (1 hour ago) Replygrs has left a new comment on your post "தாழ்வு மனப்பான்மையைப் பற்றி...":

ரொம்ப அழகா எழுதறீங்க
பெரும்பாலும் என் மனதோட பிரதிபலிப்பு போல உள்ளது.
உங்கள் தந்தைக்கு நடந்தது போல் எனுக்கும் ஒரு நிகழ்வு.
http://grsuresh.blogspot.com/2008/05/tribute-to-my-dad.html
Keep it up.

Anonymous said...

கலக்கல் இடுகை...

Vijayashankar said...

பெரியவர்கள் கூப்பிட்டு பேசுவது என்பது தலைக்கனம் இல்லை. ( சிலர் வேண்டுமென்ற கூட செய்யலாம், அது வேறு.. ). பவ்யம் என்பது பார்த்தாலே தெரியும். நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்தால், அந்த சமயம் சிலர் ( உங்களுக்கு தெரியாத ) நபர்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவியிருந்தால் அவர்கள் பேச விளிக்கலாம்!

சரி உடை விசயத்தில், ஊருக்கு தகுந்த உடைகள் அணிவது மரபு. ( அப்புறம் , சாமியார்கள் ஒரு கெட்டப் வேறு வைத்துக்கொள்ள வேண்டும்! மொட்டை அல்லது முடி... தாடி மற்றும் காவி ).

சிறு வயதில் திருப்பூரில் நண்பர்கள் எல்லாம், லுங்கி மற்றும் டி ஷர்ட் தான் விளையாடும் சமயத்தில், பருவ வயதில்... அப்போது விடாப்பிடியாக பேன்ட்ஸ் தான் அணிவேன்... அது ஒரு காலம்.

அமேரிக்காவில் சில நண்பர்கள் கல்யாணத்தில் கோட்டு சூட்டு அணிந்து தான் செல்ல நேரிடும். கட்டாயம் வேறு.... ( டக்சிடோ ) நம் மனப்பிராந்தியை அப்போது மனப்பான்மையாக வெளியிடக்கூடாது..

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
http://www.vijayashankar.in

CHANDRA said...

இதே குணநலத்துடன் தான் நான் இருக்கிறேன்.சில நன்மைகள் (யாரும் தொந்தரவு செய்வதில்லை),சில நஷ்டங்கள் (அதிக நண்பர்களும் இல்லை).