Jul 11, 2009

சிறு பிள்ளைத்தனம்..?

சிறு வயதில் நடந்த சில விசயங்களை இப்போது நினைத்தால் சிரிப்பும், சில சமயம் என் மீதே கோபமும் வருகிறது. நான் +2 படித்த சமயத்தில் நடந்த சம்பவம். ஒரு நாள் இரவு நண்பர்கள் அனைவரும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் அட்டானமஸ் காலேஜில் படித்தேன். சில நண்பர்கள் யுனிவர்சிட்டி காலேஜில் படித்தார்கள். பேசிகொண்டே இருந்த போது, எந்த காலேஜ் சிறந்தது என்று எங்களுக்குள் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. சாதாரணமாக ஆரம்பித்த வாக்குவாதம், பெரிதாக ஆரம்பித்து சண்டை போடும் அளவுக்கு வந்தது. சத்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்தால் இரண்டு போலிஸ் எங்களை நோக்கி வந்தார்கள். எங்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு, ஏதோ பெரிய ரவுடிகளை அழைத்துச்செல்வது போல " தம்பிங்களா, வாங்க ஐய்யா கூட்டிட்டு வரச் சொன்னார்" னு சொல்லி போலிஸ் ஸ்டேசன் கூட்டி சென்றார்கள்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், நாங்கள் போய் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் ஒருவன் தப்பிக்க பார்க்க, நான் ஒரு போலிஸ்காரரை கூப்பிட்டு, "சார், இங்க பாருங்க, அவன் தப்பிச்சு ஓடுரான்" எனச் சொல்ல, அவர் அவனை துரத்திப் பிடித்து, பிறகு ஸ்டேசன் போய், இன்ஸ்பெக்டர், நாங்கள் எல்லாம் யாரென்று விசாரித்து, எங்களை கண்டித்து, "இனிமேல் பொது இடத்துல இது மாதிரி நடக்காதீங்க. படிக்கர பையன்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுகிறேன்" என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

அன்னைக்கு இரவு நாங்க யாருமே தூங்கல. ஒரே பயம். வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ? அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோனு?
காலைல ஒரு நண்பர் மூலமா அப்பாவுக்கு தெரிஞ்சு ஒரே திட்டு வாங்கி அப்பா அவோரட ஜீப்புல போலிஸ் ஸ்டேசன் கூட்டி போய், " என்ன பிரச்சனை, ஏன் கூட்டி வந்தீங்கன்னு" கேட்டார். நான் உடனே, ஒருவரை காமிச்சு 'இவர் தான்பா எங்களை கூட்டி வந்தார்னு' மரியாதை குறைவாய் சொல்லி, கொஞ்சம் அங்கே பதட்டம் ஏற்பட்டு, பிறகு, அந்த இன்ஸ்பெக்டர், " சாரி சார், உங்க பையனு தெரியாதுனு" சொல்லி, அப்புறம் அப்பா சமாதானம் ஆயி ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டோம்.

இதை இப்போ இங்கே சொல்லும் காரணம்,ஒருவன் தப்பி போகும்போது அவனை பிடித்துக்கொடுத்த அந்த செயலும், போலிஸ் ஸ்டேசனில் நான் நடந்து கொண்ட முறையும், இன்னமும் என் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்கிறது என்பதால்தான். இன்னமும் அந்த நண்பன் அந்த சம்பவத்தை நினைவில் வைத்துள்ளான். பார்க்கும்போதெல்லாம் என்னைக் கேட்கிறான்.

******************************************************************

எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் கோவா டூர் சென்றிருந்தோம். அப்பொது கல்லூரியின் சார்பாக எங்களோடு ஒரு புரபசரும் வந்திருந்தார். மிகவும் நல்ல மனிதர் அவர். ஆனால், அவர் செய்த ஒரே தவறான செயல் மாணவர்களை பீர் அடிக்க அனுமதித்துதான். மொத்தம் 11 நாள் டூர். ஒரு நாள் இரவு, மாணவர்கள் சிலர் ரொம்ப போதையில் அவரை மட்டமாக பேசி, அவர் ரூமிற்கு சென்று, லைட்டை அணைத்து விட்டு, அவரை அடித்து அவரின் சட்டையை கிழித்து, பாவம் அவர் அன்று கண்கலங்கி என்னை பார்த்த பார்வையும், அவரின் நிலையும், இன்னும் என் மனதை உறுத்திக் கொண்டு உள்ளது. சத்தியமாக நான் அந்த செயலில் ஈடுபடவில்லை. அடித்த அந்த மாணவர்களை எனக்கு தெரிந்திருந்தும் நான் காட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், பிறகு அவர்கள் யார் என்று தெரிந்தாலும், அவர் அவர்களை திட்டவும் இல்லை, எதுவும் கேட்கவும் இல்லை..

ஆனால், அதே புரபசர், கடைசிநாள் அன்று, ட்ரெயின் கிளம்பும் வரையில் அவரை அடித்த அந்த இரண்டு மாணவர்கள் நேரத்திற்கு வராமல் இருந்தபோது, அந்த டென்சனில் அவர் கண்கலங்கியதும், அவர் பட்ட வேதனையும் இன்னும் என் நினைவில் உள்ளது. அதுதான் நல்ல ஆசிரியரின் குணம் என்பதை நான் உணர்ந்து கொண்ட நாள் அது.

இந்த சம்பவமும் இன்னும் என் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.

************************************************************

நான் எட்டாவது வகுப்பு படித்த போது நடந்த ஒரு சம்பவம். எனது பள்ளியில் என் நண்பனின் அப்பாவும் ஒரு ஆசிரியர் . ஒரு முறை என் வகுப்பு நண்பன் என்னிடம் ஏதோ காரணத்திற்காக என்னிடம் தகராறு செய்தான். நான் உடனே அவனை என் நண்பனின் அப்பாவிடம் போட்டு கொடுக்க, அவர் அவனை விசாரிக்காமல், அவனை அடித்து நொறுக்க, அவன் அழுது கொண்டே என்னை பார்த்த சம்பவமும் இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டுள்ளது.

மேலே உள்ள மூன்று சம்பவங்களிலும் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தபட்டிருக்கிறேன். என்னதான் அது அறியாத வயது தெரியாத வயது என்றாலும், என் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டுதான் உள்ளது.

*************************************************************

நான் எனக்கு வந்த சில கடிதங்களை வைத்து இன்று ஒரு பதிவு ரெடி பன்ணி வைத்திருந்தேன். ஆனால், சில பல காரணங்களால், அந்த பதிவை வெளியிட வேண்டாம் என நினைத்து, வேறு பதிவை இங்கே பதிவிடுகிறேன்.

***********************************************************

7 comments:

Beski said...

தங்களது பதிவு, எனது கல்லூரி டூரை ஞாபகப்படுத்திவிட்டது. 10 நாட்கள், வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். இப்ப என்னதான் டூர் போனாலும், அப்போது, எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாது, கவலைகளும் இல்லாது, ’பணமும்’ இல்லாது, சந்தோசமாய் இருந்ததைப்போல வரவே வராது.
---
//...கடிதங்களை வைத்து இன்று ஒரு பதிவு ரெடி பன்ணி வைத்திருந்தேன். ஆனால், சில பல காரணங்களால், அந்த பதிவை வெளியிட வேண்டாம் என நினைத்து...//
நாட்டு நடப்பை அறிந்து வைத்திருக்கிறீர்கள். ஓக்கே ஓக்கே.
---
பதிவு அருமை.
இதைத்தான் மெச்சுரிட்டி என்கிறார்களோ?

iniyavan said...

Service to me
show details 12:51 AM (7 hours ago) Reply
Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'சிறு பிள்ளைத்தனம்..?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th July 2009 04:51:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/82627

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Anonymous said...

Im reading all your posts. It is really very nice. Keep writing..

Thanks.

Karthik

தமிழ். சரவணன் said...

// " தம்பிங்களா, வாங்க ஐய்யா கூட்டிட்டு வரச் சொன்னார்" னு சொல்லி போலிஸ் ஸ்டேசன் கூட்டி சென்றார்கள். //

இங்கு செல்வதென்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.. இவர் இங்கு செய்யும் காமேடிகளினால் திசைமாறிக்போன இளைஞர்கள் ஏராளம்... யாராவது அப்பாவி மாட்டிக்கொண்டால் கொண்டாட்டம் தான் இவர்களுக்க அடித்து நாரடித்துவிடுவார்கள்.. அதேசமயம் அதியாமாக சில காவல்நிலையமத்தில் மிக நல்ல மனிதர்களும் அரிதாக இருப்பார்கள்...

Raja said...

Sir, St.Joseph's College - a?

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்
நன்றி கார்த்திக்
நன்றி தமிழ் சரவணன்
நன்றி ராஜா. ஆமாம், பிகாம் ஜோசப் காலேஜ், எம் காம் நேஷனல் காலேஜ்

Anonymous said...

குற்ற உணர்ச்சி ஆதாரமான உணர்வு.
ஒவ்வொருவரும் அரை கிலோ குற்ற
உணர்ச்சியுடன் தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். நல்ல பதிவு.