நான் நேற்று சன் டிவியின் "அசத்தப் போவது யாரு" நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வில் இந்த பதிவினை எழுதுகிறேன். நேற்றைய (இந்தியாவில் போன வார நிகழ்ச்சி) நிகழ்ச்சியில் நடிகர் சத்யன் அவர்கள் சிறப்பு விருந்தினர். நிகழ்ச்சியின் நடுவில், மதன் பாபு அவரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,
"சத்யன் சார், நீங்க இரண்டு படம் ஹீரோவா நடிச்சிருக்கீங்க. இப்போ காமடி நடிகரா நடிக்கறீங்க. எது பெட்டரனு நினைக்கறீங்க?. எது உங்களுக்கு புடிச்சிருக்கு?"
"சார், நான் இரண்டு படம் ஹீரோவா பண்ணுனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, மக்களுக்கு பிடிக்கல. அதனால காமடி ரோல் பண்ண ஆரம்பிச்சேன். இது மக்களுக்கு பிடிக்குது. அதனால இப்போ அதையே கண்டினியூ பண்ணறேன். ஏன்னா, மக்களுக்கு பிடிக்கலைனா ஹீரோவா நடித்து என்ன பயன்?"
என்ன அற்புதமான பதில் பாருங்க. நான் ஹீரோவா தான் நடிப்பேன்னு மல்லு கட்டிட்டு நிக்காம, தனக்கு எது வருமோ, அதை தான் நான் பண்ணுவேனனு சொன்னது, எனக்கு அவர் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்தி விட்டது. நாம எத்தனை பேர் இவ்வாறு உண்மையை ஒப்புக்கொள்கிறோம்?
எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. எனக்கு கிரிக்கட் என்றால் உயிர். நான் ஆறாவது படிக்கும்போது இருந்தே கிரிக்கட் விளையாடினேன். பெரிய பிளேயர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், ஆசை மட்டும் இருந்து என்ன பயன்? அதற்கான சரியான முயற்சி எடுக்க வேண்டாமா? சரியான முயற்சி என்றால் முறைப் படி பயிற்சி எடுக்க வேண்டும். ஆட்டத்தின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி பல. இது கிரிக்கட்டுக்கு மட்டுமல்ல. எந்த ஒரு கேமோ இல்லை கலையோ, எது கற்றுக் கொள்வதென்றாலும் அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ஆனால், நான் அப்படி செய்ய முடியவில்லை. ஏனென்றால், எனக்கு படிப்பு ஒன்றே முக்கியம் என்று பட்டதால், சரியாக நெட் ப்ராக்டிஸ் போக மாட்டேன். இதனால், எங்கள் டீமின் கேப்டன் என் மீது கோபம் கொள்வான். இது அடிக்கடி நடைப்பெற்ற ஒரு விசயம்தான். நான் அதற்காக ஒரு மோசமான பிளேயர் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஸ்டார் ப்ளேயரும் இல்லை. ஆனால், எனக்கு சரியாக மற்றவர்கள் போல விளையாடத் தெரியாது என்ற உண்மையை நான் கடைசி வரை ஒப்புக்கொள்ள வில்லை.
ஒரு முறை நாங்கள் எங்கள் அணி YCC சார்பாக ஒரு கிரிக்கட் டோர்னமெண்ட் நடத்தினோம். அப்போதுதான் செமெஸ்டர் முடிந்த சமயம். அதனால், என்னால் சரியாக ப்ராக்டிஸ் செய்ய முடியவில்லை. அதனால், என்னை டீமில் சேர்க்க வில்லை. நான் தான் ஒப்புக்கொள்ள மாட்டேனே? எனக்கு ப்ராக்டிஸ் போதாது என்று? உடனே என்ன செய்தேன் தெரியுமா? எங்கள் அணியை எதிர்த்து ஒரு டீமை களத்தில் இறக்கினேன். பல டீம் ப்ளேயர்களை ஒருங்கிணைத்து ஒரு டீம் ரெடி பண்ணினேன். ஒரு சில மேட்சுகள் ஜெயித்தோம். ஆனால், எங்கள் டீமை வெல்ல முடியவில்லை. பிறகு அதே டீமில் சேர்ந்து விளையாடி, திருச்சி நான்காவது டிவிசன் லீகில் விளையாடி, தோற்று பிறகு டீமையே கலைத்து விட்டோம். அதன் பிறகு கம்பெனியில் சில முறை ஆடியதுண்டு.
ஆனால், அன்று என்னை விட நன்றாக ஆடியவர்கள், நான் அவர்களை போல ஆட வில்லை என கேலி செய்தவர்கள் எல்லாம், ஏதோ இந்திய கிரிக்கட் அணியில் ஆடுகின்றார்கள் என நினைக்காதீர்கள். யாரும் அதற்கு பிறகு விளையாடவே இல்லை. கிரிக்கட் விளையாடி பெரிய ஆளாகி சம்பாதிப்பேன் என சொன்னவர்கள் எல்லாம்.....? வேணாம், எதற்கு விடுங்கள்.
இதன் மூலம் இரண்டு உண்மைகள் எனக்கு விளங்கின:
01. நல்ல வேளை கிரிக்கட் முக்கியம் என்று படிப்பை கோட்டை விட வில்லை.
02. நமக்கு என்ன வருகிறதோ, என்ன தெரிகிறதோ அதில் மட்டுமே கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். வராத விசயத்தில் மல்லு கட்டி நிற்க கூடாது.
ஏனென்றால் சிறு வயதில் அனைத்து விசயங்களிலும் நமது நாட்டம் இருக்கும். பெற்றோர்கள் தான், " நம் குழந்தைக்கு என்ன வரும், என்ன வராது" என்று பார்த்து அதில் திறமையை வளர்க்க செய்ய வேண்டும். சில பேருக்கு ஸ்போர்ட்ஸ் வரும், சில பேருக்கு பாட்டு, நடனம், மியூஸிக்கல் கருவிகள் கற்றுக் கொள்வது இப்படி பல. சரியான பாதைக்கு வழி நடத்துவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம்.
இருந்தாலும், இன்னும் கண்ணை மூடினால், ஏதோ ஸ்கொயர் கட் பண்ணுவது போலவும், fலிக் ஆடுவது போலுமே நினைவுகள் வந்து கொண்டிருக்கின்றது. என்ன செய்ய? கிரிக்கட் ரத்தத்தில் ஊறி விட்டது.
எனவேதான், உண்மையை ஒத்துக் கொண்ட நடிகர் சத்தியனை எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
******************************************************
சில நாட்களுக்கு முன்னால், "அசத்த போவது யாரு" புகழ் கோவை ரமேஷ் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாக ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அது உண்மையா? ஏனென்றால், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற ஒரு காட்சி வந்தது. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் எனக்கு மிகுந்த சந்தோசம்.
*****************************************************

14 comments:
//நாம எத்தனை பேர் இவ்வாறு உண்மையை ஒப்புக்கொள்கிறோம்?
//
அதானே
ஓவரா பந்தாவுலே பண்ணுவோம்....
நல்ல கட்டுரை
Sathyan made a practical decision in his own interest. It is purely selfish idea. We cant read any philosophy more than that in his decision.
As a teenager, in our circumstances, one does not know his mind. For what he is suitable for is not clearly known to him. Psychometric tests can help him, yet, how many have heard about that? And, how many can go to psychologist.
So, all desires at young age are vague. Your cricket desire is just an ordinary desire. If you had been brought up in a rural West Bengal where boys play only football, you would have done that.
This proves again that fact that our desires as children are vague.
Not all of us can take that job which suits us. Not all of us can end up fools for having taken a job to which we were driven by circumstances.
The Bibilical wisdom alone is true; and that you need to accept:
WHATEVER THY HAND FINDETH TO DO, DO IT WITH ALL THY MIGHT.
You will be happy. Life is not philosophy or abstract thinking, but hard reality.
Think still better, dear boy!
//இருந்தாலும், இன்னும் கண்ணை மூடினால், ஏதோ ஸ்கொயர் கட் பண்ணுவது போலவும், fலிக் ஆடுவது போலுமே நினைவுகள் வந்து கொண்டிருக்கின்றது. என்ன செய்ய? கிரிக்கட் ரத்தத்தில் ஊறி விட்டது.//
ரத்ததில் ஊறிவிட்டதா?? அப்ப ப்ளட் குரூப் என்ன ’சி’ -யா?
I appreciate Sathyan. We should accept the truth and accept our mistakes.
நல்ல பதிவு.
தலைப்பே அனைத்து விசயத்தையும் சொல்லிவிடுகிறது.
---
அவர் இறந்துவிட்டதாக நானும் பேப்பரில் படித்தேன். அவர்தானா இவர் என்று தெரியவில்லை.
கோவை ரமேஷ் இறந்தது உண்மைதான் நண்பரே
//Think still better, dear boy!//
தன்னைப்பற்றி வெளியில் சொல்ல முடியாத பயந்தாங்கோளிகள் தத்துவம் சொல்லுது.
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் நண்பரே, வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு.
நல்ல பகிர்வு
//
சில நாட்களுக்கு முன்னால், "அசத்த போவது யாரு" புகழ் கோவை ரமேஷ் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டதாக ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். அது உண்மையா? ஏனென்றால், நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற ஒரு காட்சி வந்தது. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் எனக்கு மிகுந்த சந்தோசம்.//
என்னங்க இந்தியாவில இருந்துகிட்டு தெரியலகின்றீங்க,.. தெய்வம் அவரை அழைத்துகொண்டுவிட்டது. பெப்சி உமா போல் அவரைபோல் பெப்சி உமாவே பேசமுடியாது. காலத்தின் கட்டாயம். திறமையான கலைஞர்.
சரி, எல்லோரும் உங்க வீட்டுக்கு வந்துட்டு வெல்லம் சாப்பிட்டு போறோம். நீங்க ஏன் யார் வீட்டுக்கும் வர மாட்டிங்கிறீங்க?? பின்னூட்டம் உங்களுக்கு மட்டும் தேவை இல்லை. அது எல்லாருக்கும் தேவையான அளவுகோல்,..
நன்றி அபு அப்ஸர்
நன்றி அப்பாவி முரு
நன்றி குப்பன்
நன்றி எவனோ ஒருவன்
//கோவை ரமேஷ் இறந்தது உண்மைதான் நண்பரே//
வருத்தமாய் உள்ளது நண்பரே
//தன்னைப்பற்றி வெளியில் சொல்ல முடியாத பயந்தாங்கோளிகள் தத்துவம் சொல்லுது.
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் நண்பரே, வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு//
வாழ்த்துக்கும், கருத்துக்க்கும் நன்றி ஜோ?
//என்னங்க இந்தியாவில இருந்துகிட்டு தெரியலகின்றீங்க,.. தெய்வம் அவரை அழைத்துகொண்டுவிட்டது. பெப்சி உமா போல் அவரைபோல் பெப்சி உமாவே பேசமுடியாது. காலத்தின் கட்டாயம். திறமையான கலைஞர்//
ஜோ, நான் இருப்பது மலேசியாவில், இந்தியாவில் இல்லை.
//சரி, எல்லோரும் உங்க வீட்டுக்கு வந்துட்டு வெல்லம் சாப்பிட்டு போறோம். நீங்க ஏன் யார் வீட்டுக்கும் வர மாட்டிங்கிறீங்க?? பின்னூட்டம் உங்களுக்கு மட்டும் தேவை இல்லை. அது எல்லாருக்கும் தேவையான அளவுகோல்,..//
ஜோ, போன வாரம் நான் தான் பின்னூட்டத்தை பற்றி எழுதினேன். எழுதிய அடுத்த நாளிலிருந்து, திரட்டி.காம் நட்சத்திரம், தினமும் ஆபிஸ் வேலைகளுக்கிடையே பதிவு எழுதினேன். அதனால் சுத்தமாக எதையும் படிக்க இயலவில்லை.
இனி பின்னூட்டம் தான் ஜோ.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'உண்மையை ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th July 2009 02:00:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/82924
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment