நேற்று நண்பர் கார்க்கியின் ப்ளாக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாகவும், பிறகு திரும்ப கிடைத்து விட்டதாகவும் அவர் பதிவின் மூலம் அறிந்தேன். இதனால், எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றுகிறது. இதை பற்றி விசயம் தெரிந்தவர்கள் ஒரு பதிவினை எழுதுவார்களேயானால் என்னைப் போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.
என்னுடைய சந்தேகங்கள்:
01. ஹேக்கின் செய்வது என்றால் என்ன? எப்படி அவர்கள் நம் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியும்? இது சாத்தியமானால், ஆனந்த விகடன் போன்ற தளங்களை கூட ஹேக் செய்ய முடியுமா?
02. அப்படி அவர்கள் நம் ப்ளாக்கை திருடும் பட்சத்தில் நாம் எழுதிய அனைத்து பதிவுகளும் அவர்கள் அழித்து விட்டால் என்ன செயவது?
03. அப்படி அவர்கள் நம் பதிவுகளை அழிக்கும் பட்சத்தில் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற தளங்களிலிருந்து நம் பதிவுகளை பெற முடியுமா?
04. எப்படி ஹேக் செய்யப்பட்ட ப்ளாக்கை திரும்ப பெறுவது?
05. அவ்வாறு நம் ப்ளாக் கடத்தப் படாமல் இருக்க நாம் என்ன மாதிரி பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும்?
06. நம் ப்ளாக்கை ஹேக் செய்வதால் அவர்களுக்கு என்ன நன்மை?
07. அவர்கள் நம் ப்ளாக்கை கடத்தி ஏதேனும் தவறான செய்தி வெளியிட்டால், அதை எப்படி நாம் எழுதவில்லை என அடுத்தவர்கள் நம்புவார்கள்?
08. மொத்தத்தில் இதை தடுக்க என்னதான் வழி?
தயவு செய்து விசயம் தெரிந்தவர்கள், ஒரு பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தெரிவியுங்கள். நான் வேண்டுமென்றால் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக எழுதுகிறேன்.
இதனை நண்பர் கார்க்கி படித்தால் அவர் எப்படி அவர் ப்ளாக்கை திருமப பெற்றார் என தெரிவிக்கவும்.
11 comments:
யாராவது பதில் சொல்லுங்கப்பா..?
கார்க்கி அளவுக்கு கணினி தெரிந்தவர்களால் மட்டுமே திரும்ப பெற முடியுமா? எங்களாலும் முடியுமா? அதற்கு ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கை வேண்டுமா?
//ஆனந்த விகடன் போன்ற தளங்களை கூட ஹேக் செய்ய முடியுமா?//
ஏன் ஹேக் செய்யப்போறீங்களா? :))
திரும்ப பெறுவது எப்படி என்று இன்னும் தெரியவில்லை.
ஆனால்
பாதுகாக்க இயலும்
நல்ல கேள்விகள். பதில்தான் நம் நண்பர்கள் யாராவது சொல்ல வேண்டும்
இது இன்னாடா கொடும, செரி , டவுசரு ப்ளாக்க போய் திருடுவாங்களா இன்னா, நம்புளுக்கு இன்னா வந்துது, தங்கத்த தான் திருடுவாங்கோ !! தகரத்த யாரது கொள்ள அடிப்பாங்களா இன்னா ? இர்ந்தாலும் அண்ணாத்தே சொன்னா மேரி , ( தங்கமா கீரவங்களுக்கு ) பாத்து எதுனா பண்ணு
தலீவா !!!
விரைவில் எனக்கு தெரிந்த பதில்களை சொல்கிரேன் சகா. கொஞ்சம் பிசி
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'ப்ளாக்கை பாதுகாப்பது எப்படி?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th July 2009 10:00:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/84684
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
ஆனால் இன்னும் சரியான பதில்கள்தான் வரவில்லை.
அண்ணே போனவாரம் என்னோட ப்ளாகை கூட
ஹாக் செய்து விட்டார்கள். எனக்கு நடந்தது என்னவெனில்
என் ப்ளாக் முன் அவர்கள் ஒரு கருப்பு திரையை போட்டுவிட்டார்கள். யாராலும் ப்ளாகில் உள்ள எழுத்துகளை
படிக்க முடியாத படி செய்து விட்டனர். ரெண்டு நாளில்
தானே சரியானது.
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள. ஏற்கனவே அவர்கள்
ஹாக் செய்த ஒரு சைட்......
http://mashable.com/2009/07/10/imageshack-hacked/
அண்ணே போனவாரம் என்னோட ப்ளாகை கூட
ஹாக் செய்து விட்டார்கள். எனக்கு நடந்தது என்னவெனில்
என் ப்ளாக் முன் அவர்கள் ஒரு கருப்பு திரையை போட்டுவிட்டார்கள். யாராலும் ப்ளாகில் உள்ள எழுத்துகளை
படிக்க முடியாத படி செய்து விட்டனர். ரெண்டு நாளில்
தானே சரியானது.
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள. ஏற்கனவே அவர்கள்
ஹாக் செய்த ஒரு சைட்......
http://mashable.com/2009/07/10/imageshack-hacked/
Any site can be hacked.
Make sure you have backups.Even in blogger you can take a back up..
First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
Post a Comment