கீழே உள்ள என் கவிதைகள் வெளியானது எங்கே?
விடை கடைசியில்.
*****************
பெரிய வீடு வாங்க
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்
என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?
*************************'
எல்லோருக்கும்
நாளையிலிருந்து
வேலையில்லை
என்றுச் சொன்னார்
அந்த ஐடி கம்பனி
மேலாளர் தன்
வேலையும் சேர்ந்து
போனது
தெரியாமல்.
***************************
கெட்டி மேளச்சத்தம்
பட்டு சேலைகளின்
சரசரப்பு
மணவரையில் மகள்
மாங்கல்யம் தந்துனா...
அப்பாடா ஒரு பிரச்சனை
முடிந்து போனது என
நினைத்தார் அப்பா
கூடவே அவள் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.
*****************************
அதிக பின்னூட்டம்
வரவில்லையென்று
கணணியை திறந்து
பார்த்துக்கொண்டே
இருந்தான் அவன்.
கணணி மொளன
மொழியில் அவனைப்
பார்த்து சொன்னது
'என்னை திறந்து
திறந்து பார்க்கும்
நேரத்தில் உன்னை,
உன் பதிவுகளை
திரும்பிப் பார்
நீயே இட மாட்டாய்
பின்னூட்டம்'
*******************************
விடை: மேலே உள்ள கவிதைகள் வெளியானது 'இனியவன்' ப்ளாக்கில் - 24.07.09 அன்று. ஹிஹிஹி.
21 comments:
//கெட்டி மேளச்சத்தம்
பட்டு சேலைகளின்
சரசரப்பு
மணவரையில் மகள்
மாங்கல்யம் தந்துனா...
அப்பாடா ஒரு பிரச்சனை
முடிந்து போனது என
நினைத்தார் அப்பா
கூடவே அவள் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.//
இதெல்லாம் டூ டூ மச்... !
அப்ப திருமணம் ஆன ஆண்கள் 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டாள்' என்று கொண்டாடுவது ஏன் ? யாருக்கு சுதந்திரம் போச்சு ?
:)
//'என்னை திறந்து
திறந்து பார்க்கும்
நேரத்தில் உன்னை,
உன் பதிவுகளை
திரும்பிப் பார்
நீயே இட மாட்டாய்
பின்னூட்டம்'//
ஹி ஹி ஹி...
---
எல்லாம் நல்லாருக்கு.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'கவிதைகள் (?)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th July 2009 03:12:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/87956
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
மிகவும் இரசிக்கும்படியாய் இருக்கிறது கவிதைகள். நகைச்சுவையுடன் சிந்தனையும் சேர்த்து தெளிக்கப்பட்ட கவிதைகள்.
பின்னூட்டம் பற்றிய கவிதை வெகுவாக இரசித்தேன். ;)
கூடவே அவன் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.
மாத்திடோமுல்ல.. :-)
எல்லா கவிதைகளும் அழகு!!
அழகு!!
டிஸ்கி சூப்பரு!
வருகைக்கு நன்றி வெ.இராதாகிரிஷ்ணன் சார்.
நன்றி கலை.
நன்றி இயற்கை.
//டிஸ்கி சூப்பரு!//
வருகைக்கும், உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி பாஸ்.
அனைத்தும் அருமை.
பின்னூட்டம் குறித்த கவிதை சூப்பரோ சூப்பர்.
அருமை
நன்றி துபாய் ராஜா
நன்றி திகழ்மிளிர்
//மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?//
காரெல்லாம் வந்துட்டு போலாம் கனவுல.மனைவி வந்தா மட்டும்...? சார், கவிதைகளை மனைவி பார்ப்பதுண்டா சார்.
நடப்புகளை நன்றாக கவிதையாக்குகின்றீர்கள்.இடுகைகள் வளர வளர வருகிறோம்.
உங்களின் காவியங்களை அடித்துக்குள்ள ஆளில்லை! முடிந்தால் இந்த ப்ளாக்குக்கு ஒருமுறை வருகை தந்து பாருங்கள்! என்னுடையது!! mirthonprabhu.blog spot.com மீண்டும் மிர்தொன் பிரபு பேசுகிறேன்! நன்றி!!
//பெரிய வீடு வாங்க
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்
என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?//
இது சராசரி கணவனின் இன்றிய நிலை
//பெரிய வீடு வாங்க
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்
என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?//
இது சராசரி கணவனின் இன்றிய நிலை
//பெரிய வீடு வாங்க
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்
என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?//
இது சராசரி கணவனின் இன்றிய நிலை
உங்க தளம் வந்து ரொம்ப நாள் ஆகிப் போச்சு.
அருமை. தொடருங்கள்..
இவன்,
ஒரு எழுத்துப் பிரியன்.
hi all the very best...
Regards
S.Sukumar
Post a Comment