என் கல்லூரி நண்பர் ஒருவர் இன்று அனுப்பிய மின்னஞ்சல் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணத்தில் அதனுடைய தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.
தந்தை: நான் தேர்வு செய்திருக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்
மகன்: எனக்கு வரும் மனைவியை நானாகத்தான் தேர்வு செய்வேன்.
தந்தை: ஆனா, அந்த பெண் பில் கேட்ஸின் மகள்
மகன்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.
அடுத்த நாள்:
தந்தை பில் கேட்ஸை அணுகி,
தந்தை: உங்கள் பெண்ணுக்கு தகுந்த கணவர் என்னிடம் உள்ளார்
பில் கேட்ஸ்: ஆனா, என் பெண் ரொம்ப சின்னவள். கல்யாணம் பண்ணுமளவிற்கு பெரியவள் இல்லை.
தந்தை: ஆனா அந்த இளைஞன் உலக வங்கியின் Vice President
பில் கேட்ஸ்: அப்படியென்றால் எனக்கு சம்மதம்.
அடுத்த நாள் அந்த தந்தை உலக வங்கியின் President ஐ அணுகி:,
தந்தை: என்னிடம் ஒரு இளைஞன் உள்ளான். அவனை உங்கள் வங்கிக்கு Vice President பதவிக்காக பரிந்துரை செய்கிறேன்.
President: ஏற்கனவே தேவைக்கு அதிகமாக எங்களிடம் பல Vice President உள்ளார்கள்.
தந்தை: ஆனா, அந்த இளைஞன் பில் கேட்ஸின் மருமகன்
President: அப்படியென்றால் சரி. அவனை சேர்த்துக்கொள்கிறேன்.
Moral: Even if you have nothing, you can get anything. But your attitude & approach should be positive.
14 comments:
நல்லா இருக்குங்க.இதுதான் வாயாலே முழம் போடுறதோ?:-)
நல்ல ஜோக்... இதுக்கு முன்னாடியும் கேட்டுருக்கேன்...ஆனா வேற மாதிரி...
இதுக்கு முன்னாடியும் படிச்சுருக்கேன்!...
-:))))))
மனமிருந்தால் மார்கமுண்டு!! :)
நன்றி இயற்கை உங்கள் கருத்திற்கும், வருகைக்கும்.
//நல்ல ஜோக்... இதுக்கு முன்னாடியும் கேட்டுருக்கேன்...ஆனா வேற மாதிரி//
உங்கள் கருத்துக்கு நன்றி விமர்சகன்.
ஆனால், இது ஜோக்கா?????
நன்றி அன்புடன் அருணா.
நன்றி பித்தன்
நன்றி மெளனமான நேரம்
நல்ல ஜோக்:))
வருகைக்கு நன்றி நாஞ்சில் நாதம்.
நல்ல சுவாரசியமான தமிழாக்கம்!!
நம்ம தமிழ்நாட்டில் நடப்பதுபோல் மாற்றியிருக்கலாம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பாஸிட்டிவ் அப்ரோச்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st July 2009 07:56:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/90426
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment