ரிப்போர்ட் டே என்பதாலும், பிரின்சிபால் நாங்கள் அவசியம் வரவேண்டும் என்று சொன்னதாலும் அவசர அவசரமாக அங்கே சென்றோம்.
போனவுடன் எல்லா பரிட்சை பேப்பர்களும் எங்களிடையே காண்பித்தார்கள். அனைத்திலும் 98 அல்லது 99 மார்க் எடுத்திருந்தான் என் பையன். எனக்கு ஒரே பெருமை. ஆனால் அடுத்து நடந்த உரையாடல்கள்தான் என்னை இந்த பதிவினை எழுத தூண்டியது.
"ரொம்ப தேங்க்ஸ் மேடம். பையன் ரொம்ப நல்ல மார்க் வாங்கியிருக்கான்"
" ரொம்ப மார்க் வாங்கியிருந்தாலும், சில விசயங்கள் நாங்க உங்க கிட்ட சொல்லணும்"
" என்ன விசயம்"
" பையன் ரொம்ப "சையா" இருக்கான். அவன் நல்லா கான்பிடெண்டா பேச மாட்டேங்கறான்"
" இல்லையே வீட்ல நல்லா பேசறானே"
" வீட்ல இருக்கலாம். அதனால நீங்க கேட்ட மாதிரி 'அந்த' வகுப்புக்கு எங்களால ப்ரோமோட் செய்ய முடியாது"
" என் பெண்ணும் அப்படித்தானே படிச்சா. இப்போ எல்லாத்துலயும் முதல் ரேங்க் வாங்கலியா?"
" அது அப்போ சார். இப்போ நாங்க அனுமதிக்க முடியாது"
" நீங்க ப்ரோமோட் பண்ணைலைனா, தயவு செய்து டிசி குடுங்க"
" அப்படீன்னா பிரின்ஸ்பால பாருங்க"
நான் போயிருந்த இடம், என் பையன் படிக்கும் LKG ஸ்கூல். அவன் படித்து முடித்தது K2 ( K3 - pre school, k2 - second stage then K1 - third stage). நான் அவர்களை கேட்டது அவனை பர்ஸ்ட் ஸ்டேண்டர்டில் அனுமதிக்க. அவனின் வயது 5 முடிந்து, ஆறு தொடக்கம். மலேசியாவில் 7 வயதில்தான் முதல் வகுப்பில் அனுமதிப்பார்கள். பிறகு இந்தியா போனால் ஒரு வருடம் இழக்க வேண்டி வரும். கஷ்டப்பட்டு என் பெண்ணிற்கு போராடி சரி செய்தேன் எந்த இழப்பும் இல்லாமல். இப்போ பையன் முறை.
பிறகு பிரின்ஸ்பாலை பார்த்து பேசியவுடன் அவரும் அதே காரணத்தை கூறி, "அவனுக்கு நன்கு தன்னம்பிக்கையை கொடுங்கள், நன்றாக தினமும் படிக்க சொல்லுங்கள், விளையாட்டு பையனாக இருக்கிறான்" என அட்வைஸ் செய்தார்.
நான் பிரின்ஸிபாலுக்கும், அந்த வகுப்பு ஆசிரியர்களிடம் பின் வருமாறு கூறினேன்,
" நான் எக்காரணத்தைகொண்டும், தன்னம்பிக்கையை வலுக்கட்டாயமாக திணிக்க மாட்டேன். படிக்க சொல்லி வற்புறுத்த மாட்டேன். அவனை விளையாட வேண்டாம் என சொல்ல மாட்டேன்"
எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.
" ஏன் அப்படி சொல்லறீங்க"
" ஏன்னா, அவன் ஐந்து வயது குழந்தை. அவன் குழந்தையாக இருப்பதையே நான் விரும்புகிறேன். எதையும் திணிக்க விரும்பவில்லை. அவன் அவனாகவே வளரவே விரும்புகிறேன். அவன் நாளைக்கே இந்திய பிரதமராக உட்காரப்போவதில்லை. அதனால், முடிந்தால் அவனை முதல் வகுப்பில் போடுங்கள். இல்லையென்றால் பரவாயில்லை"
நான் சொன்னது சரியா, இல்லையா?
பிறகு ஒரு சின்ன டெஸ்ட் வைத்து முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் நான் கிராமத்தில் படித்த பள்ளியும், நான் LKG எல்லாம் படிக்காமல் நேரடியாக முதல் வகுப்பில் சேர்ந்ததும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனது.
8 comments:
நிஜம் நண்பரே.இவர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்கள் போல என் பையனை டெஸ்ட் பண்ணி (இந்தியாவில் 5வது படிக்க வேண்டியவனை)4வது வகுப்பில் போட்டு விட்டார்கள்.வருட முடிவில் அவன் தான் 5 பாடத்தில் EXCELLENT AWARD வாங்கி வந்தான்.வெள்ளையர்களுக்கு இன்னும் அந்த தலைக்கனம் போகவில்லை.
நான் படிக்கும்போது பள்ளியில் பெற்றோரை வரச்சொன்னார்கள் என்றால் அவன் மிக தத்தியாக இருக்கிறான் என அர்த்தம். ஆனால் இப்போது பையன் தத்தியோ இல்லை புத்தியோ கண்டிப்பாக பெற்றோர் மாதம் ஒரு முறை ஆசிரியரை பார்க்க வேண்டும்,.. இதற்கு பேர்தான் கல்வி வளர்ச்சியா?
ஸ்கூலில் வாங்கும் fees-ற்கு நாங்கள்
வேலை பார்க்கிறோம் என்று பெற்றோருக்கு தம்பட்டம் அடிக்கவே மாதம் மாதம் கூப்பிடுகிறார்கள்.
நீங்கள் சொல்வது சரிதான் சந்திரா. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//இதற்கு பேர்தான் கல்வி வளர்ச்சியா?//
உங்கள் கேள்வி நியாயமானதுதான் ஜோதி.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அமுதா கிரிஷ்ணா.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'கல்விச்சுமை!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st July 2009 01:49:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/91142
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
இப்படி எதாவது நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் ஸ்க்கோல் பக்கமே போவல ...ஹி ஹி ஹி......
Post a Comment