Aug 12, 2009

புரிதல்.... - சிறுகதை - பாகம் 1.

மிகுந்த சந்தோசமாய் உணர்ந்தாள் கீதா. "என்ன தவம் செய்தாயடி நீ ?" எனத் தன்னையே அடிக்கடி கேட்டுக்கொண்டாள். நடந்த நிகழ்ச்சிகளை கொஞ்சம் அசை போட தொடங்கினாள். மிகவும் கஷ்டப்படும் குடும்பம் அவளுடையது. அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தில். ஒரு அக்கா, ஒரு தம்பி என சற்றே சிறிய குடும்பம். அக்காவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமாகிறது. அவள் மாமியார் வீட்டிலிருந்ததை விட தாய் வீட்டில் இருந்ததுதான் அதிகம். அப்படி ஒரு மாப்பிள்ளை. ஆனால், வாரத்திற்கு தவறாமல் மூன்று முறை அல்லது நான்கு முறை இரவில் வந்து விட்டு செலவது மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு கல்யாணம் ஆகாத பெண் ஒருவள் இந்த வீட்டில் இருக்கிறாளே? என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் அவர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லை. யாரும் வீட்டில் கேட்க முடியாது. கேட்டாள், அவ்வளவுதான் " சீர் சரியில்லை, போட்ட நகை பத்த வில்லை" என்று ஆரம்பித்து விடுவான். ஆம். 'ன்' தான். வரதட்சணையை பெரிய விசயமாக கேட்கும் மனிதனுக்கு மரியாதை என்ன வேண்டி கிடக்கிறது? இந்த நிலையில் எனக்கு கல்யாணம் நடை பெறுமா என்று எல்லோரும் சிந்தித்த நிலையில்தான், வந்து சேர்ந்தான், ரவி.

ரவி முதலில் அவள் வீட்டிற்கு வந்தபோது எல்லோருக்குமே ஆச்சர்யம்தான். ஏனென்றால், கீதா வீட்டில் அவளுடைய கல்யாணத்திற்கு எந்த விதமான முயற்சியும் எடுக்க வில்லை. எப்படியோ இவர்கள் வீட்டில் பெண் இருப்பதை தெரிந்து கொண்டு, இவளை எங்கோ பார்த்து, பிடித்து போய் பெண் கேட்க வந்து விட்டான். எல்லோருக்கும் பிடித்து போனது. பிடிக்காதா? என்ன?. ஒரு பைசா கூட வரதட்சணை வேண்டாம், கல்யாண செலவும் எங்களுடையது, எனச்சொல்லி கண்ணுக்கு அழகான மாப்பிள்ளை வந்தால் யார் வேணாம்? என சொல்லுவார்கள். வீட்டிற்கு ஒரே பிள்ளை வேறு. நல்ல பணக்கார இடம். உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

நல்லபடியாக கல்யாணம் முடிந்து இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது. ரவி இவளை ராஜாத்தி போல் உள்ளங்கையில் வைத்து தாங்குவதை பார்த்து அனைவருக்கும் சந்தோசம். இது போல் சந்தோசத்தை அவள் பிறந்ததிலிருந்து அனுபவித்ததே இல்லை. ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டுமோ அனைத்தும் அவள் வீட்டில் இருந்தது. பெரிய வீடு. வீடு நிறைய வேலை ஆட்கள். சமையலுக்கு ஆள், வீட்டை பெருக்க ஆள், தோட்டத்திற்கு ஆள். இவளுக்கு ஒரு கார், அவனுக்கு ஒரு கார். இருவரும் சேர்ந்து செல்ல ஒரு கார் என அனைத்து வசதிகளும் இருந்தன. மாமியாரும் இவளை ஒரு மகள் போலவே நடத்தினாள். பீரோ முழுவதும் புது புடவைகள், சுடிதார்கள் மற்றும் நகைகள். இரவு சுகத்துக்கும் ஒன்றும் குறைவில்லை. அதனால் தான் "என்ன தவம் செய்தாயடி நீ ?" எனத் தன்னையே அடிக்கடி கேட்டுக்கொண்டாள். ஆனால், இவ்வளவு அன்பிற்கும் தான் தகுதியானவள் தானா?.....என்ற நினைவு அவளை அடிக்கடி வாட்டி வதைத்தது. அவள் நினைவுகள் 10 வருடம் பின்னோக்கி போனது.

அப்போது கீதா 10 வது படித்துக் கொண்டிருந்தாள். வருட விடு முறைக்கு அத்தை வீட்டுக்கு சென்று இருந்தாள். அவளுக்கு பாட்டு என்றால் உயிர். அத்தை வீட்டிற்கு அடுத்த வீட்டு மாமா, பாட்டு சொல்லிக் கொடுப்பவர். ஒரு நாள் அத்தை கூப்பிட்டு,

" கீதா, ஒரு மாத லீவ்ல என்ன செய்யப்போற?, பேசாம பக்கத்து வீட்டு மாமாட்ட பாட்டு கத்துக்கோயேன்"

" ஆசையாத்தான் இருக்கு. ஆனா அம்மா என்ன சொல்லுவாளொ தெரியலையே?"

" அம்மா கிட்ட பர்மிசன் வாங்க வேண்டியது என் பொறுப்பு, உனக்கு இண்ட்ரஸ்ட் இருக்கா?"

" எனக்கு இண்ட்ரஸ்ட் இருக்கு அத்தை"

உடனே அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள். அடுத்த நாளே பாட்டு கிளாஸ் செல்ல ஆரம்பித்தாள். பாட்டு சொல்லிக் கொடுக்கும் மாமா என்றவுடன் வயதானவரோ? என நினைத்தவளுக்கு பயங்கர ஆச்சர்யம். ரொம்ப சிறியவராக இருந்தார். என்ன மிஞ்சி போனால் ஒரு 45 வயது இருக்கும். பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விட்டது கீதாவிற்கு. ரொம்ப அருமையான குரல் வளம். நன்றாக பாடுவார். அவர் பாடுவதை கேட்டு கேட்டு மெய் மறந்து போனாள் கீதா.

பாட்டு கற்றுக்கொள்கிறாளோ இல்லையோ, அவர் பாடுவதை கேட்பதற்காகவே தினமும் போனாள். இவளுக்கு அவ்வளவாக விபரம் தெரியாத வயசு. ஆனால், வாத்தியாரோ வேறு வித கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதை அறியாமலே தினமும் வகுப்பிற்கு சென்றாள். ஒரு நாள் அவர் பாடுவதை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் கண்களை மூடி அவர் பாட்டை ரசித்துக்கொண்டிருந்தாள். ஆனால், பாட்டு வாத்தியார் அவளை கட்டி பிடித்ததையோ, அணைத்து முத்த மிட்டதையோ அவள் முழுமையாக அறிந்து கொள்ளுமுன் எல்லாம் முடிந்து விட்டிருந்தது. தனக்கு நேர்ந்தது என்ன? என்பதை அறிவதற்கே பல மணி நேரம் ஆனது.

- தொடரும்....

4 comments:

Nathanjagk said...

கடைசி பாராவில இருக்கு வசியம். ஆனா கதை கிளாஸிக் வகையை சார்ந்ததோன்னு நினைக்கு வைக்குது

iniyavan said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி ஜெகநாதன்.

Beski said...

இப்படி பாகம் பாகமாய் வெளியிடுவது, சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

iniyavan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எவனோ ஒருவன்.