Aug 9, 2009

மிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...

சிறுகதை போட்டி முடிவு பற்றி:

உரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டி முடிவில் எனக்கு சில வருத்தங்கள். நான் தேர்வாகும் என நினைத்த சில கதைகள் தேர்வாகவில்லை. நான் நினைத்த கதைகள்தான் தேர்வாக வேண்டும் என நான் நினைப்பது சரியில்லைதான். நான் குறிப்பிட்ட சில கதைகள்தான் படித்தேன். 250 கதைகளும் படிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை. என் கதையும் தேர்வாக இல்லை என்பது வேறு விசயம். எல்லோரும் நினைக்கலாம், "உங்கள் கதை என்ன அவ்வளவு சிறந்த கதையா என்று?". எல்லாருக்குமே அவர்கள் கதை சிறந்தவைகள் தானே? 250 கதைகளை படித்து பார்த்து தேர்வு செய்வது என்பது சாதாரணமான விசயமில்லைதான். அதற்கு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? பத்திரிக்கை துறை சார்ந்த சிலரை நடுவராக போட்டு இருக்க வேண்டும். முதலில் அவர்கள் தேர்வு செய்த நடுவர்கள் தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொண்ட சூழ்நிலையில் வேறு சில பத்திரிக்கை நண்பர்களை நடுவர்களாக நியமித்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? வேறு வழியில்லாத சூழ்நிலையில் நாங்களே நடுவர்களாக இருந்தோம் என சொல்கிறார்கள். அதை ஏன் முடிவு நாள் அன்று அறிவித்தார்கள்? ஏன் முன்பே கூறவில்லை?

முதலில் என் கதை தேர்வாகவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், பிறகு மனதை தேற்றிக்கொண்டேன். அவர்கள் இருவர் பார்வையில் என் கதை தேர்வாக இல்லை அவ்வளவுதான். எனக்கு என் கதை பிடித்திருக்கிறது என்ற அதே எண்ணத்துடன் நாளைய போட்டி பற்றிய அறிவிப்பை எதிர் நோக்கியுள்ளேன். நாளை அறிவிக்க போகும் போட்டியை இதைவிட சரியான முறையில் நடத்துவார்கள் என நம்புகிறேன்.

அதேபோல் 37 கதைகள் சிறந்தவைகளாக இருந்தன என்றும் சொல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது எல்லோருமே அந்த 37 கதைகளில் நம் கதை இருக்காதா? என்ற எண்ணத்தில், அந்த கதைகள் எழுதியவர்களைப் பற்றியும் குறிப்பிடுங்களேன் என்கிறார்கள். நியாயம்தானே? நாம் என்ன பணத்திற்காகவா இதை எதிர்பார்க்கிறோம்? நமக்கும் எழுத்தாளர் என்ற அங்கிகாரம் கிடைக்குமே என்ற நப்பாசைதான்? மற்றபடி என்ன???

இந்த பதிவு உரையாடல் அமைப்பினருக்கு எதிரான ஒரு பதிவு அல்ல. நண்பர் பைத்தியக்காரன் அவர்கள், விமர்சனங்களை பின்னூட்டம் மூலமாகவோ, தனி பதிவாகவோ போடலாம் எனக்கூறியிருந்ததால் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

************************************************

ஒரு செய்தி:

நான் சில நாட்களுக்கு முன் எழுதிய மிக்ஸர் என்ற பதிவில் மலேசியாவில் பழைய அதே சமயம் உபயோகப்படுத்தக்கூடிய துணிகளை சில நிறுவனைங்களில் சேர்த்துவிடுவோம், அந்த நிறுவனங்கள் அவைகளை சில ஏழை நாடுகளுக்கு அனுப்புகின்றன. அதே போல் இந்தியாவில் இருக்கிறதா? எனத் தெரியவில்லை என எழுதியிருந்தேன்.

அதைபடித்துவிட்டு அருணா சீனிவாசன் என்ற தோழி இந்தியாவிலும் அப்படி உள்ளது என்று சொல்லி, அதைபற்றிய செய்தியினை பற்றிய ஒரு லிங்க் கொடுத்து மெயில் அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இதோ அந்த செய்தியின் லிங்க்:

http://sify.com/news/fullstory.php?a=jehbxbidgbb&title=Clothes_bank_Fulfilling_a_basic_need

*******************************************************

ஒரு புத்தக விமர்சனம்:

சமீபத்தில் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. இது பெண்களுக்கான புத்தகம். இதுவரை படிக்காத நம் பெண் பதிவர்களுக்கும், பெண் வாசகிகளுக்கும் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் இங்கே குறிப்பிடுகிறேன்:

புத்தகத்தின் பெயர்: மங்கையருக்கு பயன் தரும் அறிவார்ந்த விஷயங்கள்

ஆசிரியர்: ஜெயா V. ராமன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

முதல் பதிப்பு: 2008

விலை: 150 ரூபாய்

பக்கங்கள்: 288

ஆசிரியர் தன் அனுபவங்களையும், தான் கேட்ட, படித்த பல விசயங்களையும் மிக எளிய முறையில் எழுதியுள்ளார். ஆசிரியர் 1982ல் இருந்து 2008 வரை மங்கையர் மலரில் எழுதிய கட்டுரைகளை மணிமேகலை பிரசுரம் ஒரு புத்தகமாக நல்ல தரமான பேப்பரில் வெளியிட்டு உள்ளது.

பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

********************************************************

9 comments:

Joe said...

It would've been better, if you had provided the link for the post announcing the results of short story contest winners.

iniyavan said...

நண்பர் பைத்தியக்காரனின் பதிவில் பாருங்கள் ஜோ.

வெற்றி-[க்]-கதிரவன் said...

சிறுகதை போட்டியை பற்றி நீங்கள் குறிப்பிட்டதை எள்ளளவும் ஏற்க இயலாது...

//இதைவிட சரியான முறையில் நடத்துவார்கள் என நம்புகிறேன்.
//
இந்தமுறை என்னா கெட்டுபோச்சின்னு நினைக்குரிங்க ?

37 கதைகள் சிறந்தவைகளாக இருந்தன என்று இருந்ததாக அவர்கள் நினைத்தார்கள், போட்டி விதி படி இருபதை தேர்ந்தெடுத்தார்கள் இதில் என்ன தவறு இருக்கின்றது

உங்கள் கருத்தை 0.000000001 % கூட ஏற்க இயலாது.

iniyavan said...

பித்தன்,

என்னை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

01. என்னுடைய கருத்து நடுவர்கள் குறித்து மட்டுமே. "இதைவிட" என்று எழுதியதில் அர்த்தம் மாறிவிட்டது.

02. நண்பா என் கருத்தை எழுதினேன். அவ்வளவுதான்.

03.நான் உங்களை ஏற்றுக்கொள்ள சொல்ல வில்லை.

Beski said...

போட்டி முடிவுகளைப் பற்றி விமர்சிப்பது நன்றாகப் படவில்லை. நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று, விதிமுறைகள் மாறக்கூடும் என்று தெரிந்தபிந்தானே கலந்துகொள்கிறோம்?
---
//அதேபோல் 37 கதைகள் சிறந்தவைகளாக இருந்தன என்றும் சொல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது எல்லோருமே அந்த 37 கதைகளில் நம் கதை இருக்காதா? என்ற எண்ணத்தில், அந்த கதைகள் எழுதியவர்களைப் பற்றியும் குறிப்பிடுங்களேன் என்கிறார்கள். நியாயம்தானே?//
மிகச்சரி. அந்த 37ல் இருந்தால் கூட சந்தோசம்தான். பணம் எல்லாம் இரண்டாம்பட்சமே...
---
//பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.//
இதை ஏன் நீங்கள் படித்தீர்கள் என்ற சந்தேகம் வருகிறது... அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கலாமே. :)

iniyavan said...

Hi Iniyavan2009,

Congrats!

Your story titled 'மிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th August 2009 10:55:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/96643

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

தமிழிஷ் வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

iniyavan said...

//போட்டி முடிவுகளைப் பற்றி விமர்சிப்பது நன்றாகப் படவில்லை. நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று, விதிமுறைகள் மாறக்கூடும் என்று தெரிந்தபிந்தானே கலந்துகொள்கிறோம்?//

நீங்களும் தப்பா புரிஞ்சுகிட்டீங்க எவனோ ஒருவன். நான் போட்டி முடிவுகளைப் ப்ற்ற்றி எங்கேயுமே விமர்சிக்க வில்லை. நடுவர்கள் அவர்கள்தான் என்பதை ஏன் முன்னமே சொல்லவில்லை என்றுதான் கேட்டேன்.

அதுவும் விமர்சனங்களை கூறலாம் என அவர்கள் கூறியதால்தான் நான் கூறினேன். மற்றப்டி அவர்களின் முடிவை நான் விமர்சிக்கவில்லை.

iniyavan said...

//இதை ஏன் நீங்கள் படித்தீர்கள் என்ற சந்தேகம் வருகிறது... அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கலாமே. :)//

ஒரு மிகவும் வேண்டிய நண்பரின் மூலம் கிடைத்தது. வீட்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் படிப்போமே என்று படித்தேன்.

அவ்வளவுதான்.

Cable சங்கர் said...

/இந்த பதிவு உரையாடல் அமைப்பினருக்கு எதிரான ஒரு பதிவு அல்ல. நண்பர் பைத்தியக்காரன் அவர்கள், விமர்சனங்களை பின்னூட்டம் மூலமாகவோ, தனி பதிவாகவோ போடலாம் எனக்கூறியிருந்ததால் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.
//

rightu