Aug 24, 2009

மிக்ஸர் - 24.08.09

சமீபகாலமாக நண்பர் கேபிள் சங்கரின் சினிமா விமர்சனம் பார்த்து விட்டுத்தான் படங்கள் பார்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறேன்.நண்பர்கள் 'கந்தசாமி' படத்தைப் பற்றி எழுதிய அனைத்து விமர்சனங்களையும் படித்தேன். படம் பார்க்க கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நேற்று மலேசியா ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை சேனலில் 'விக்ரம்' நேர்காணல் நடைப்பெற்றது. படத்தை ப்ரோமோட் பண்ணுவதற்காக மலேசியாவில் உள்ளார் விகரம். ஆனால், அந்த பேட்டியை நினைத்தால் கோபம்தான் வந்தது. இது போல ஒரு படம் உலகத்தில் வந்ததே இல்லை என்பது போல இருந்தது அவரது பேச்சு. மணிரத்னம், சங்கர் இவர்களுக்கு அடுத்து மிகச்சிறந்த டைரக்டர் சுசி கணேசன்தான் என்கிறார் விக்ரம். அவ்வளவு சிறந்த படம் என்கிறார். ஒவ்வொரு சீனும் அவ்வளவு சிறப்பாம். சிரேயாவின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது. 'கொடுமைடா சாமி'. செக்ஸ் உணர்வுகள் ஏற்படுவதற்கு பதில் அருவெறுப்புத்தான் ஏற்படுகிறது. 'அழகிய தமிழ் மகன்' தாவணி சிரேயா எங்கே? கந்தசாமி சிரேயா எங்கே?

******************************************

ஆதவன் படப்பாடல்கள் அனைத்தும் கேட்டேன். கேட்டுக்கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமை. ஹாரிஷ் ஜெயராஜ் ஏமாற்றவில்லை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. காரில், MP3ல், வீட்டில், ஜிம்மில் எங்கும் ஆதவன் பாடல்கள்தான். 'ஹஸிலி பிஸிலியும், ஏனோ ஏனோ' பாடல்களும் மிகவும் அருமை. ஆனால், 'மாசி மாசி..." பாடல்தான் பல்லவி மட்டும், ஏ.ஆர் ரகுமானின் "காதல் யோகி காதல் யோகி ஏ ஏ'' பாடலை நினைவுப்படுத்துகிறது.

******************************************

ஜெயா டிவியில் விக்ரமன் கொடுத்த பேட்டி இரண்டு வாரம் இங்கே ஒளிபரப்பினார்கள். அப்போது அவர் கூறினார், " நான் ஒரு நல்ல இசை ரசிகன். என்னிடம் நாளை ரிலீஸாகப் போகும் எந்த பாடல் சிடி வேண்டுமானாலும் கொடுங்கள், அந்த பாடல்கள் ஹிட் ஆகுமா இல்லையா எனச் சொல்கிறேன். நான் சொல்வது 100% அப்படியே நடக்கும், நடந்தும் உள்ளது"

உடனே பேட்டி எடுத்த ஐஸ்வர்யா அவர் படத்தின் பாடல்களைப் பற்றி கேட்க, " ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய பாடல்கள் எல்லாம் கொஞ்சம் மைனஸ் நோட்ஸ்ல தான் இருக்கும். எனக்கு புடிச்சா மாதிரிதான் என் படத்து பாடல்கள் இருக்கும்" என்றார். என் கேள்வி இதுதான், அதற்காக ஒரே ட்யூனிலா?

அவர் சொன்ன இன்னும் இரண்டு விசயங்கள் நம்புவதற்கு கஷ்டமாக உள்ளது. யாராவது உண்மையா? எனக்கூறவும்:

"சிவாஜி படப்பாடல்கள் பிறகு அதிகம் ஆடியோ கேஸட்/ சிடி விற்ற படம் மரியாதை"

" மரியாதை படம் மிகப்பெரிய ஹிட். மலேசியா, சிங்கப்பூர் என அனைத்து நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் போன் செய்து படம் சூப்பர் என்றார்கள். அப்போதே எனக்குத் தெரியும், இது மிகப் பெரிய ஹிட் என்று. அதன்படி படம் ஹிட் ஆனது"

உண்மையா????

******************************************

சென்ற வியாழன் இரவு "எல்லாம் அவன் செயல்" என ஒரு படம் பார்த்தேன். படம் விறு விறு என போனது. பட நடுவே சஸ்பென்ஸை யூகிக்க முடிந்தாலும், படம் தொய்வில்லாமல் போனது. முழுப்படம் முடிந்து தான் எழுந்தேன். அந்த ஹீரோ பெயர் தெரியவில்லை. கோபம், சோகம், சிரிப்பு என எல்லா பாவனைகளுக்கும் ஒரே விதமான உணர்ச்சிதான் அவர் முகத்தில். அதுதான் எரிச்சலாக இருந்தது. படத்தில் ஒரு காட்சி அரசு வக்கில் ஒரு பிச்சக்காரனை சாட்சியாக விசாரித்து விட்டு அவன் சொதப்பி விட போலிஸ் ஆபிசர் நாசரிடம் இப்படி கூறுவார்:

" என்னையா சாட்சி பிடிச்சுருக்க. இப்படி சொதப்பிட்டான். போயும் போயும் ஒரு பிச்சைக்காரந்தான் கிடைத்தானா? ஒரு ஆட்டோக்காரன் அல்லது ஒரு பரிசல்காரன் கிடைக்கலியா"

பரிசல் இதை கவனிச்சாரா இல்லையா தெரியல.

******************************************

சிங்கைநாதன் மருத்துவ சிகிச்சை தொடர்பாக எனக்குத்தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் மெயில் செய்தேன். கிட்டத்தட்ட 150 பேருக்கும் மேல் இருக்கும். என்ன ஆச்சர்யம்! ஒருத்தர் கூட ஒரு ரிப்ளை மெயிலோ அல்லது விபரம் கெட்டோ என்னை அணுக வில்லை?எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. யாரையும் வற்புறுத்துவதும் நல்லதில்லை. இதெல்லாம் அவர்களாக அவர்கள் மனம் விரும்பி செய்யும் செயல். அனைவரும் சைலண்ட்டாக உதவுவார்கள் என நம்பி ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

******************************************

எங்கு சென்றாலும் நல்ல ஹோட்டல்களாக சென்று சாப்பிடுவது வழக்கம். தனியக கோலாலம்பூரில் தங்கினால் சரவணபவனோடு என் சாப்பாடு முடிந்து விடும். அலுவலக நண்பர்கள் வந்தால், பாஸேஜ் துரு இந்தியா, பாம்பே பேலஸ், நவாப், ஸ்பைஸி கார்டன், தாஜ் ரெஸ்டாரண்ட் என டின்னருக்கு போவதுண்டு. எல்லாமே 5 ஸ்டார் ஹோட்டல் தரம். ஆனால் ரொம்ப விலை. தமிழ் நாட்டில் எந்த ஹோட்டலுக்கு போனாலும் சாப்பாடு சரியில்லையென்றால் வரும்போது ஒரு கம்ப்ளெயிண்டாக சொல்லி விட்டு வருவதுண்டு. அந்த பழக்கம் வீடு வரை தொடர்கிறது. பின்பு அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். ஆனால், சென்ற வாரம் மேலே சொன்ன ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து விட்டு தயிர்சாதம் ஆர்டர் பண்ணினோம். வந்தது, ஒரே புளிப்பு. சாதம் வேறு அரை வேக்காடு. பாதி சாப்பிட்டு விட்டு அப்படியே வைத்து விட்டோம். ஒரு தயிசாதம் 300 ரூபாய். மனம் கேட்காமல் அந்த சர்வரிடம் சொன்னேன். அவன் போய் மேனஜரை அழைத்து வந்தான். அவர் சமாதானமாக ஏதாவது சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்,

" நார்த் இந்தியால தயிர்சாதம் இப்படித்தான் இருக்கும்" என சொல்லப்போக,

நார்த் இந்தியாவைப் பற்றி தெரிந்த என் நண்பர் கோபம் ஆக ஏறக்குறைய கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை. இந்த லட்சணத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை, "ஹவ் ஈஸ் த புட் சர்" என விசாரிப்பு வேறு???

நல்லா இல்லைனு ஒத்துக்கிட்டா என்ன? இப்படித்தான் யாரும் தன்னோட தவறுகளை ஒத்துக்கறதே இல்லை!!!

******************************************

"புளிப்பு" க்கு ஆங்கில வார்த்தை ''SOUR TASTE"

"துவர்ப்பு" க்கு ஆங்கிலத்துல சரியான வார்த்தை என்ன?

நான் பார்த்த அகராதியில " ASTRINGENT TASTE"

சரியான வார்த்தை என்னவென்று யாராவது சொல்ல முடியுமா?

******************************************

18 comments:

Cable சங்கர் said...

/பரிசல் இதை கவனிச்சாரா இல்லையா தெரியல.
//

பரிசல் இதையெல்லாம் எங்க கவனிக்கிர நிலைமையிலா இருக்கிறார். பார்ட்டி ஸ்ரேயாவோட சுத்திட்டு இருக்காரு.. ம்ஹும்..ம்ஹும்...

அப்புறம் மிக்க நன்றி..

Jackiesekar said...

மிக்சர் சூப்பர்
கந்தசாமி பொக்கிஷம் போல மரியாமை படத்தை பற்றி யாராவது பேசினார்களா? என்பதே என் கேள்வி...

விக்னேஷ்வரி said...

அருவெறுப்புத்தான் ஏற்படுகிறது. //

எனக்கும் அப்படி தான் இருந்தது. :(

ஹசிலி பிசிலி டாப். டமக் டமக் பென்னி தயாளுக்காக. மத்ததெல்லாம் ஓகே தான்.

தெரியல, நான் விக்ரமனின் அழுவாச்சி படங்கள் பாக்குறதில்லை.

பரிசலையும் வம்புக்கு இழுத்தாச்சா.... ;)

பிரார்த்தனைகளோடு கூடிய உதவிகள் அவரைக் காப்பாற்றும். காப்பாற்றுவோம்.

பெரும்பாலான உணவகங்களில் அவர்களின் குறைகளை புன்னகையோடு ஏற்றுக் கொள்வதோடு திருத்தவும் முயற்சிக்கின்றனர். அப்படி இருந்தால் மட்டுமே அவர்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும்.

அறுசுவைகள் ஆங்கிலத்தில் : sweet, sour, salty, bitter, pungent and astringent.
Astringent சரியான வார்த்தை.

இன்னிக்கு சினி செய்திகள் அதிகமாத் தெரியுதே.

மணிஜி said...

நல்ல மிக்ஸர் சாப்பிட்டுட்டு காபி குடிச்சு பாருங்க உலக்ஸ்(அப்படி கூப்பிடலாம் இல்ல..என் நண்பன் பேரும் அதான்).பிராமாதமா இருக்கும்.நான் இன்னிக்கு அப்படித்தான் குடிச்சேன்

iniyavan said...

வருகைக்கு நன்றி கேபிள் சங்கர்.

நான் உங்களை தவறாமல் படிக்கிறேன்.

விமர்சனத்துல உங்களை அடிச்சுக்க ஆள் இல்லை கேபிள் சார்.

iniyavan said...

//கந்தசாமி பொக்கிஷம் போல மரியாமை படத்தை பற்றி யாராவது பேசினார்களா? என்பதே என் கேள்வி...//

ஜாக்கி, நான் மரியாதை படம் ஓடலைனு நினைச்சுட்டு இருக்கேன். அப்போ படம் ஹிட்டா?

நிஜமாவே தெரியாது. நான் இன்னும் பார்க்கலை.

iniyavan said...

விக்கி,

உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.

//அறுசுவைகள் ஆங்கிலத்தில் : sweet, sour, salty, bitter, pungent and astringent.
Astringent சரியான வார்த்தை//

ரொம்ப நன்றி விக்கி.

//இன்னிக்கு சினி செய்திகள் அதிகமாத் தெரியுதே//.

ஆமால்ல. என்னை அறியாம வந்துடுச்சு.

மீண்டும் நன்றி விக்கி.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர் தண்டோரா.

//நல்ல மிக்ஸர் சாப்பிட்டுட்டு காபி குடிச்சு பாருங்க உலக்ஸ்(அப்படி கூப்பிடலாம் இல்ல..என் நண்பன் பேரும் அதான்)//.

நண்பர்கள் என்னை கூப்பிடும் பெயர் உலக்ஸ்தான். நீங்கள் அப்படியே கூப்பிடுங்கள். ரொம்ப சந்தோசப்படுவேன்.

Prapa said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!

நாடோடி இலக்கியன் said...

ஹசிலி பிசிலி மூன்று நாளா திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

மிக்ஸர் நல்ல சுவாரஸ்யம்.

கார்க்கிபவா said...

ம்ம்.. ஆதவன் பாட்டும் எனக்கும் ஃபேவரிட்.. கந்தசாமி பார்த்து தொலைச்சிட்டேன் சகா

வெற்றி-[க்]-கதிரவன் said...

கே.எல் சென்ட்ரல்ல அன்னலக்ஷ்மில ட்ரை பண்ணுங்க, காசு நீங்க கொடுக்குறத வாங்கிக்குவாங்க...(விருப்ப பட்ட தொகை கொடுக்கலாம் ) ஹோட்டல்குள்ள போனா கோவில்குள்ள போன அட்மாஸ்பிஏர் கிடைக்கும். (வயிறும் மனதும் சேந்தே நிறையும்)

முரளிகண்ணன் said...

மிக்சர் நல்ல சுவை. டீ குடித்துக் கொண்டே படித்தேன். சூப்பர்

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரபா.

iniyavan said...

//மிக்ஸர் நல்ல சுவாரஸ்யம்//

நன்றி நாடோடி இலக்கியன்.

iniyavan said...

//ம்ம்.. ஆதவன் பாட்டும் எனக்கும் ஃபேவரிட்.. கந்தசாமி பார்த்து தொலைச்சிட்டேன் சகா//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்க்கி.

iniyavan said...

//கே.எல் சென்ட்ரல்ல அன்னலக்ஷ்மில ட்ரை பண்ணுங்க, காசு நீங்க கொடுக்குறத வாங்கிக்குவாங்க...(//

நீங்க சொல்லறது சரிதான் பித்தன். அங்கேயும் நிறைய தடவ போயிருக்கே. கொடுக்குறத வாங்கிக்குவாங்க, ஆனா, உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்டைரக்டா கேட்பாங்க.

ஆமா, முன்னாடி மிட்வேலி மெகாமால இருந்துச்சு. இப்போ கேல் சென்ட்ரல்ல இருக்கா?

iniyavan said...

//மிக்சர் நல்ல சுவை. டீ குடித்துக் கொண்டே படித்தேன். சூப்பர்//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளிக்கண்ணன்.