
நான் கடந்த ஒரு வாரமாக அலுவலக வேலை காரணமாக கோலாலம்பூரில் இருந்ததால் என்னால் எந்த பதிவும் எழுத முடியவில்லை. தமிழ்மணம், தமிழிஷை படிக்கவும் முடியவில்லை. நான் பல மலேசிய நண்பர்களையும், சிங்கப்பூர் நண்பர்களையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் என்னிடம் "கோலங்கள்" நாடகத்தை பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்கள். அவர்களுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை முதலில் தருகிறேன்:
" நீங்கள் கோலங்கள் நாடகம் பார்ப்பதுண்டா?" .
" நான் கோலங்கள், அரசி போன்ற டிவி சீரியல்களை பார்ப்பதில்லை"
" ஏன்?"
" நான் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துபவன் அதனால்தான்"
" உடல் நலத்துக்கும், டிவி சீரியலுக்கும் என்ன சம்பந்தம்?"
" எனக்கு கோலங்கள் போன்ற தொடரை பார்த்தால் என்னுடைய ரத்தம் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது. அது உடல் நலத்துக்கு கெடுதல் என்று டாக்டர்கள் கூறியதால் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்" என்றேன்.
" நாங்களும் இனி அப்படித்தான் இருக்க வேண்டும் போல" என்று சொன்னார்கள்.
அவர்கள் கோலங்கள் சீரியலை பற்றி எழுப்பிய கேள்விகளை நான் கீழே தருகிறேன்:
01. ஆதி என்ற அந்த மனிதனுக்கு அபி குடும்பத்தை பழி வாங்குவதை தவிர வேறு வேலையே இல்லையா? அவன் எப்போதுதான் பிஸினஸை கவனிப்பான்?
02. சொந்த தம்பி மனைவியே ஆதியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி உள்ளதா? அவளிடமே சொந்த தம்பியை கொலை செய்ய சொல்லுவது போன்ற காட்சி தேவையா?
03. தமிழ்நாடு போலீஸ் மேல் அளவு கடந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனால், ஒரு உயர்ந்த நேர்மையான அதிகாரியை, அவரின் வீக்னஸை பயன்படுத்தி, ஒரு கோடியை லஞ்சம் கொடுத்து அபியை அரஸ்ட் செய்ய சொல்வது போன்ற காட்சி தேவையா? அந்த காட்சிகளை பார்க்க எங்களுக்கு வெட்கமாக உள்ளது. உலக தமிழர்கள் அந்த காட்சியை பார்த்து தமிழ் நாடு போலீஸை பற்றி என்ன நினைப்பார்கள்?
04. ஆதி லேடி போலீஸை வைத்து சொந்த மனைவியை ஸ்டேசன் கூட்டி சென்று அடித்து உதைத்து... இதெல்லாம் தேவையா?
05. உண்மையில் ஆதியை போல் ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருக்க முடியுமா?
06. ஏன் ஒரு நல்ல சப்ஜக்டை வைத்து நாடகமே எடுக்க முடியாதா?
07. திருச்செல்வம் நல்ல திறமையான டைரக்டர்தான். அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய திறமையை நல்ல சினிமா படங்களுக்கோ இல்லை நல்ல நாடகங்களுக்கோ பயன்படுத்தலாமே?
08. எதற்காக இப்படி இந்த நாடகத்தை முடிக்காமல் இழுத்துக்கொண்டே போகிறார்?. அவராக நன்றாக நாடகம் எடுக்க முடியும் பட்சத்தில், இந்த நாடகத்தை முடித்து விட்டு வேறு ஒரு நாடகம் எடுக்கலாமே?
09. ஆதி கேரக்டரில் நடிக்கும் அந்த நடிகர் இப்படி கத்தி பேசி பேசி உண்மையிலேயே அவர் ஒரு மன நோயாளி ஆகிவிடுவாரோ என்று எங்களுக்கு அச்சமாக உள்ளது.
10. தயவு செய்து எந்த நாடகம் எடுத்தாலும் உலக தமிழர்களின் உணர்வுகளையும் மனதில் வைத்து நல்லதாக எடுக்க சொல்லுங்கள்.
என்னால் அவர்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. சம்பந்த பட்டவர்கள் கேட்கலாம், " அப்படி பட்டவர்கள் நாடகத்தை பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே?"
இந்த கேள்வியை சம்பந்த பட்டவர்கள் கேட்பார்களேயானால், கேள்விகேட்பவர்கள் அவர்களை பார்த்து கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி,
" வெளி நாட்டு தமிழர்கள் இல்லாமல் உங்களால் உங்கள் பிஸினஸில் லாபம் பார்க்க முடியுமா?"
என்னை பொறுத்தரை அவர்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானதே. சம்பந்த பட்டவர்கள் கோபப்படாமல், கேள்விகளை நல்ல விமர்சனங்களாக எடுத்துக்கொண்டு தங்களை நல்லபடியாக செதுக்கிக் கொள்வதே நல்லது.
பணம் முக்கியம்தான், ஆனால் நம் சமுதாயத்தை பற்றி மட்டமாக சித்திரித்து நாடகம் எடுத்து அதனால் சம்பாதிக்கும் பணம் தேவையா என்ன?
திருச்செல்வம் நன்றாக காட்சிகளை எடுக்க கூடியவர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. திறமை இருப்பதால்தான் அவரால் இத்தனை வருடம் ஒரே சீரியலை எடுக்க முடிகிறது. அந்த திறமையை நல்ல விசயத்துக்கு பயன்படுத்தினால் என்ன? என்பதுதான் அனைவரின் கேள்வியும்?
சிந்திப்பாரா திருச்செல்வம்???
56 comments:
மெஹா சீரியல் இயக்குனர்களுக்கு சிந்தனா சக்தியே இல்லை அதிலை போய் திருச்செல்வம் சிந்திப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளீர்கள். தமிழர்களின் உறவுகளை கொச்சைப் படுத்தும் தமிழ்நாட்டு போலிசை கேவலப்படுத்தும் தொடர்களை ஏனோ அனுமதிக்கின்றார்கள். சும்மா சண்டியர் என்ற பெயரை மாற்று என ஊளையிட்ட மரம்வெட்டி இதெற்கெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்.
விகடன் சன் குழுமம் தமிழனை முட்டாளாக்கி குளிர் காய நினைக்கின்றது இளிச்சவாயன் தமிழனும் இவர்களின் கொட்டத்தை அடக்காமல் பழிவாங்கும் கதைகளைப் பார்த்து சூடு சொரணையற்றவனாகவே இருக்கிறான்.
சார் நீங்க குறிப்பிடும் நிகழ்ச்சிகளை திருச்செல்வம் நினைவு வைத்திருப்பாரா என்பது ஐயமே.
தொடக்கத்தில் கொஞ்ச நாள் தேவயானிக்காக பார்த்தேன். அப்பறம் தொடரவில்லை
\\07. திருச்செல்வம் நல்ல திறமையான டைரக்டர்தான். \\
ஆமா, இல்லைன்னா ஆறு வருஷமா, தமிழக தாய்க்குலங்களை முட்டாளாக்க முடியுமா..?
கேள்வி எல்லாம் சரி தான்..ஆனா..
//நான் பல மலேசிய நண்பர்களையும், சிங்கப்பூர் நண்பர்களையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் என்னிடம் "கோலங்கள்" நாடகத்தை பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்கள். //
ஏன் மலேசியா ,சிங்கப்பூர் வாசிகள் ஏன் இந்த கேள்வியெல்லாம் வளச்சு வளச்சு உங்க கிட்ட கேக்குறாங்க-ன்னு புரியல்ல .. ஒரு கற்பனை கதையில் வரும் பாத்திரங்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் ? கொத்து கொத்தாக செத்து கொண்டிருந்த ஈழத்தமிழருக்காக கூட இத்தனை கோபமும் ஆவேசமும் பட்டிருப்பார்களா தெரியவில்லை .
ஏதோ கோலங்கள் -ல் மட்டும் தான் இப்படி காட்டப்படுவது போல ..கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சி சீரியலும் குப்பை தான் .டீ-வி-ய ஆஃப் பண்ணி போடுறத விட்டுட்டு ஏன் இதுக்கு இப்படி பொங்குறாங்கண்ணு தான் புரியல்ல.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வந்தியத்தேவன்.
//சார் நீங்க குறிப்பிடும் நிகழ்ச்சிகளை திருச்செல்வம் நினைவு வைத்திருப்பாரா என்பது ஐயமே//
கோவி சார்,
இதை ஒரு வேளை அவர் படிக்கும் பட்சத்தில் கதையை மாற்ற மாட்டாரா? என்ற நப்பாசையில் எழுதப்பட்ட பதிவுதான் இது.
வருகைக்கு நன்றி டக்ளஸ்.
முதலில் உங்கள் வருகைக்கு நன்றி ஜோ.
//ஏன் மலேசியா ,சிங்கப்பூர் வாசிகள் ஏன் இந்த கேள்வியெல்லாம் வளச்சு வளச்சு உங்க கிட்ட கேக்குறாங்க-ன்னு புரியல்ல .. //
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
மற்றபடி உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
ஐயோ ஐயோ ஐயோ.....
ஒன்னுமில்லை, என்னையே நொந்துக்கறேன்.
சென்னைக்கு வந்துருக்கேனேன்னு தற்செயலா நாலுநாள் முன்னே கோலங்கள் நடக்கும் சமயம் தெரியாம டிவியைப் போட்டுட்டேன்............
ஒரே ஒருவரி. தேவயானி , தீபாவெங்கிட்டை ஒரு இடத்துக்கு வரச்சொல்லிட்டுக் கார்லே அங்கே போறாங்க. இதையே அரைமனி இழுத்துட்டாங்க.....................
தேவயானி நடிப்பும், முகமும் ........(முதல்வரியை இங்கே போட்டுக்குங்க)
இனி இதைப் பார்த்தேன்னா.........
என் காலில் இருப்பதாலேயே என்னை அடிச்சுக்குவேனோன்னு பயமா இருக்கு.
(நாங்களும் உணர்ச்சிவசப்படுவொம்லெ)
http://vilambarakkaaran.blogspot.com/2009/07/blog-post_09.html
சார் இன்றளவில் தமிழ் நாட்டின் அதிகபட்ச டி.ஆர்.பி. அரசி மற்றும் கோலங்கள் சீரியலுக்குதான். மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ.. தினமும் அந்த நேரஙக்ளில் விடாமல் திட்டிக் கொண்டோ , அல்லது விரும்பியோ பார்த்து கொண்டுதானிருக்கிறார்கள். எனவே.. எப்போது மக்கள் விருப்பமில்லாமல் பார்க்காமல் தவிர்க்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது எல்லாமே முடிந்துவிடும்
// துளசி கோபால் said...
இனி இதைப் பார்த்தேன்னா.........
என் காலில் இருப்பதாலேயே என்னை அடிச்சுக்குவேனோன்னு பயமா இருக்கு.
(நாங்களும் உணர்ச்சிவசப்படுவொம்லெ)//
ஐய்யோ அம்மா.,
என்ன இது??? இதுக்கெல்லாம் அசரலாமா? ஒத்து வரைன்னா விட்டுட வேண்டியது தானே?
கோலங்களை அலங்கோலமாக்கியதை மன்னிக்கமுடியாது. மனனோயாளீ அபியா ஆதியா, இயக்குனரா, தயாரிப்பாளரா,தொலைக்காட்சியா, பார்க்கிறவர்களா,
அன்புடன்
வர்மா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி கோபால் மேடம்.
//இனி இதைப் பார்த்தேன்னா.........
என் காலில் இருப்பதாலேயே என்னை அடிச்சுக்குவேனோன்னு பயமா இருக்கு.
(நாங்களும் உணர்ச்சிவசப்படுவொம்லெ//
ஆனால் இது வேணாமே?
நாம் பார்க்காமல் இருப்போம்.
படித்தேன் நண்பர் தண்டோரா.
நன்றி.
//எப்போது மக்கள் விருப்பமில்லாமல் பார்க்காமல் தவிர்க்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது எல்லாமே முடிந்துவிடும்//
சரியாக சொன்னீர்கள் கேபிள் சார்.
//ஐய்யோ அம்மா.,
என்ன இது??? இதுக்கெல்லாம் அசரலாமா? ஒத்து வரைன்னா விட்டுட வேண்டியது தானே?//
நன்றி நண்பர் அப்பாவி முரு.
உங்கள் கருத்துதான் என் கருத்தும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வர்மா.
nangal kolangal nadakathai parpthai vittu 2 varudangal aachu. Sun tv mattra nadahngal mattrum Sun tv paarpathai vittu 1 varudangal aachu.
Entertainmenta than TV Erukanum but ipo erukura situationa patha TV pakurathu Professiona iruku!!!
Ithu maranumna Serials pakuratha avoid pananum
வருகைக்கு நன்றி ரபியுல்லா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொல்லாதவன்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled '"கோலங்கள்" திருச்செல்வம் சிந்திப்பாரா???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th August 2009 06:55:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/95718
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
//04. ஆதி லேடி போலீஸை வைத்து சொந்த மனைவியை ஸ்டேசன் கூட்டி சென்று அடித்து உதைத்து... இதெல்லாம் தேவையா?//
அதிலும் போலிஸ் ஸடேஷனுக்கு அழைத்து செல்ல வாரண்ட் எதுவும் தேவையில்லை என்பதுபோல், வீட்டிற்கு வந்து அடித்து இழுத்துச் செல்வதுபோல் காட்சியமைத்து இருக்கிறார், அதுவும் ஒரு பெண்ணை. பார்ப்பவர்களை கேனையன் என்று நினைக்கிறார்கள்.
Makkal tholikatchi mattuma pala nalla programgalai tarugiradu
அந்த சீரியல்ல எப்போ பார்த்தாலும் யாராவது அழுதுகிட்டே இருப்பாங்க.. ஒரு நல்ல நாள், வெள்ளிகிழமை எதுவும் கிடையாது... பெண்கள் அழுவதை காட்டினா இவங்களுக்கு காசு கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகள் அரை மணி நேர சீரியலில் குறைந்தது கால் மணி நேரம் கண்டிப்பாக இருக்கும்... தேவயானியும் அவரது அம்மாவாக வரும் சத்தியப்ரியாவும் மூக்குரிஞ்சாத நாட்களே இருக்கிறது என நினைக்கிறேன்.
அட நீங்க வேற! இது எவ்வளவு நாளா போகுதுன்னு எனக்குத் தெரியாதுங்க.
ஒரே ஒருநாள் பார்க்கப்போய்த்தான் இப்படி ஆச்சு எனக்கு:-)))))
அதுவும் தேவயானியைப் பார்க்க(-:
கதை எழுதும் பாஸ்கர் சக்தி, திருச்செல்வம் உட்பட வலைப்பதிவுகளை படிப்பதாக கேள்விப்பட்டேன்.
நாம இப்படி ஓட்டுவதெல்லாம் தெரியாம போகாது.
கவலை வேண்டாம், விகடனுக்கும் சன்னுக்கும் ஏற்கனவே முட்டிக்கிச்சு. ஆப்பு தீட்டிக்கிட்டிருப்பாங்க, அடுத்த எக்ஸ்டென்ஷன் சந்தேகமே..
டோண்டு ராகவன் திருச்செல்வத்திடம் கடந்த ஆண்டு, தொடரை எப்பய்யா முடிப்பீங்க என்பதற்கு, மேயில் முடித்துவிடுகிறேன் என்றாராம்.
ஆனால் எந்த நூற்றாண்டு என்று சொல்லாமல் போனதாக கேள்விப்பட்டேன்.
ஒரு டி வி ப்ரொகிராமில் தேவயான, வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்து ஆய் போயி, கல்யாணம் கட்டி, குழந்தைபெத்து, கிழவியாகி பாடையில் போகும்வரை சீரியல் உள்ளது, அதனால் நாங்களும் அதே முடிவில்தான் இருக்கிறோம் என்று சொன்னார்.
தமிழர்கள் முட்டாளாக இருக்கும்வரை இதுக்கு விடிவே கிடையாது...!!!
அடடா? இப்படியெல்லாம் தொல்லை இருக்கா??
. சித்தி போதும் போதுமென்றானதால்
அதன் பின் எதுவுமே பார்ப்பதில்லை.(இதுவும் கசட் எடுத்தே பார்த்தேன்)
சினிமா; தொடர் நாடகம்;சினிமா சார்ந்தோர் அலட்டல்; அர்த்தமற்ற விளம்பரம்
தவிர பயனுள்ள எதுவும் அற்ற தமிழ்த் தொலைக்காட்சியே வீட்டில் இல்லை.
நான் தப்பினேன்
Think about the homes who have elders and kids. Elders want to watch this shows without missing a single scene. If the TV is on, the kids want to watch whatever goes on TV. We parents don't know how to tell the elders not to watch this.
I do not know why Malaysia Singapore Dubai, US Tamilans watch sun TV, kalaignar tv, vijay tv.
Tamilnadu directors have not aimed NRI audience.
NRI should try to develop their own conutry programmes.
KOLANGAL
humm...
yeru kathyikaka paakuradeee
hehee
devayani ka paakuroom illa..
devayani irukum mathum kolangal odhum.
நமக்கு இந்த சீரியல் பாக்குறதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல. ஆனால், ஆரம்பத்தில் (சித்தி போன்ற தொடர்களில்) இருந்த சுவாரஸ்யம், ஆர்வம் இப்போது எந்த சீரியல்களிலுமே இல்லை என அனது அம்மாவே சொல்கிறார்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி வரதராஜுலு.
//Makkal tholikatchi mattuma pala nalla programgalai tarugiradu//
நன்றி நண்பரே.
//தேவயானியும் அவரது அம்மாவாக வரும் சத்தியப்ரியாவும் மூக்குரிஞ்சாத நாட்களே இருக்கிறது என நினைக்கிறேன்.//
சரியா சொன்னீங்க நிலா.
//அதுவும் தேவயானியைப் பார்க்க(-://
அம்மா, அப்படியா விசயம்.
//ஒரு டி வி ப்ரொகிராமில் தேவயான, வெளிநாடுகளில் எல்லாம் குழந்தை பிறந்து ஆய் போயி, கல்யாணம் கட்டி, குழந்தைபெத்து, கிழவியாகி பாடையில் போகும்வரை சீரியல் உள்ளது, அதனால் நாங்களும் அதே முடிவில்தான் இருக்கிறோம் என்று சொன்னார்.
தமிழர்கள் முட்டாளாக இருக்கும்வரை இதுக்கு விடிவே கிடையாது...!!!//
உங்களின் வருகைக்கும் தெளிவான கருத்திற்கும் நன்றி செந்தழல் ரவி.
சந்தோசமா இருக்கு நீங்க படிக்க வந்தது.
//தவிர பயனுள்ள எதுவும் அற்ற தமிழ்த் தொலைக்காட்சியே வீட்டில் இல்லை.
நான் தப்பினேன்//
நல்ல வேளை தப்பிச்சிங்க யோகன்.
நல்லா சிந்திக்கப்போய் தானே இப்படி எல்லாம் எடுக்கமுடியுது. :))
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மஞ்சரி.
நன்றி ராம்ஜி.
நன்றி அனானி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எவனோ ஒருவன்.
எங்க கொஞ்ச நாளா ஆளைக்காணோம்.
//நல்லா சிந்திக்கப்போய் தானே இப்படி எல்லாம் எடுக்கமுடியுது. :))//
நன்றி துபாய் ராஜா.
//ஏன் மலேசியா ,சிங்கப்பூர் வாசிகள் ஏன் இந்த கேள்வியெல்லாம் வளச்சு வளச்சு உங்க கிட்ட கேக்குறாங்க-ன்னு புரியல்ல .. ஒரு கற்பனை கதையில் வரும் பாத்திரங்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் ? கொத்து கொத்தாக செத்து கொண்டிருந்த ஈழத்தமிழருக்காக கூட இத்தனை கோபமும் ஆவேசமும் பட்டிருப்பார்களா தெரியவில்லை .
ஏதோ கோலங்கள் -ல் மட்டும் தான் இப்படி காட்டப்படுவது போல ..கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சி சீரியலும் குப்பை தான் .டீ-வி-ய ஆஃப் பண்ணி போடுறத விட்டுட்டு ஏன் இதுக்கு இப்படி பொங்குறாங்கண்ணு தான் புரியல்ல.//
Mr JOE,
singaporiens also got pitty to Ela Tamilarlar and they also collect fund and things through RED CROSS. In malaysia, thamilakal they also protest thr srilanka govt in front of their embossy. So dont talk about Elam matters here.
// என். உலகநாதன் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எவனோ ஒருவன்.
எங்க கொஞ்ச நாளா ஆளைக்காணோம்.//
ஊருக்கு போயிருந்தேன்... நம்ம வலைப்பூவுல சொல்லிட்டுத்தான் போனேன்... வந்து அதப் பத்தி ஒரு புரோட்டா பதிவும் போட்டாச்சு...
http://www.yetho.com/2009/07/blog-post_29.html
http://www.yetho.com/2009/08/blog-post_05.html
நம்ம பக்கம் வர்றதே இல்ல போல இருக்கு?
இந்த பதிவே ஒரு வேஸ்ட்.TV இல் ஆஃப் பட்டன் எதற்கு உள்ளதாம்?இந்தியர்களை போன்ற போலிகள் (hypocrites) வேறு எங்கும் காண முடியாது .
எல்லாவற்றையும் ரசிக்கவேண்டியது .பிறகு திட்ட வேண்டியது
சார் பேசாமல் தொடரையும் பார்க்காமல் இருப்பது நலம்...
ஆனாலும் நிறைய பேர் இதற்கு அடிக்ட் என்பதை நம்பித்தான் ஆகனும்
வருகை புரிந்த அனானி நண்பருக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி வலைஞன்.
//சார் பேசாமல் தொடரையும் பார்க்காமல் இருப்பது நலம்...//
நீங்கள் சொல்வதுதான் சர் அபுஅப்ஸர்.
Just better to complete the serial as soon as .Coz daily serial making more head ache
சீரியல் அனைத்தையும் குறை சொல்ல முடியாது.
நாகா அவர்கள் இயக்கிய
1. விடாது கருப்பு
2. எதுவும் நடக்கும்
போன்ற அருமையான சீரியல் வந்தன. ஆனா என்ன, நாகா சீரியல் எல்லாம் சீக்கிரம் முடிச்சுடுவாங்க :-(
daily hyper tension orthan(aathi) kathikitee eruntha veetala erukaranvangaluku presssure increase agum.we are watching Tv for relaxation not for illness.So better to avoid such scenes.
திரு செல்வம் இந்த சீரியல் நீங்க டெய்லி பார்த்த தெரியும் அந்த கஷ்டம் .ஆதி எப்பவும் கத்திகிட்டே இருந்தா எப்படி ? அதுக்கு background மியூசிக்.ஆதி கத்தாம இருந்தா அதுவே பெரிய நிம்மதி ,நாங்க டிவி பார்க்கறது ரிலாக்ஸ் பண்ண டென்ஷன் ஆக இல்ல.அதனால அந்த டென்ஷன்ல கத்தற சீன் avoid பண்ண நல்லா இருக்கும் .நீங்க நெக்ஸ்ட் சீன் என்ன எங்கரதயும் நாங்களே உகிக்க முடியுது .அதனால நீங்க கொஞ்சம் யோசிங்க சீரியல் முடிக்க
திரு செல்வம் இந்த சீரியல் நீங்க டெய்லி பார்த்த தெரியும் அந்த கஷ்டம் .ஆதி எப்பவும் கத்திகிட்டே இருந்தா எப்படி ? அதுக்கு background மியூசிக்.ஆதி கத்தாம இருந்தா அதுவே பெரிய நிம்மதி ,நாங்க டிவி பார்க்கறது ரிலாக்ஸ் பண்ண டென்ஷன் ஆக இல்ல.அதனால அந்த டென்ஷன்ல கத்தற சீன் avoid பண்ண நல்லா இருக்கும் .நீங்க நெக்ஸ்ட் சீன் என்ன எங்கரதயும் நாங்களே உகிக்க முடியுது .அதனால நீங்க கொஞ்சம் யோசிங்க சீரியல் முடிக்க
திரு செல்வம் இந்த சீரியல் நீங்க டெய்லி பார்த்த தெரியும் அந்த கஷ்டம் .ஆதி எப்பவும் கத்திகிட்டே இருந்தா எப்படி ? அதுக்கு background மியூசிக்.ஆதி கத்தாம இருந்தா அதுவே பெரிய நிம்மதி ,நாங்க டிவி பார்க்கறது ரிலாக்ஸ் பண்ண டென்ஷன் ஆக இல்ல.அதனால அந்த டென்ஷன்ல கத்தற சீன் avoid பண்ண நல்லா இருக்கும் .நீங்க நெக்ஸ்ட் சீன் என்ன எங்கரதயும் நாங்களே உகிக்க முடியுது .அதனால நீங்க கொஞ்சம் யோசிங்க சீரியல் முடிக்க
Post a Comment