எங்கு பார்த்தாலும் இதே பேச்சு. பீதி. ஏன்? பத்திரிக்கைகள்தான் காரணம். நன்றாக கவனித்தீர்களானால் ஒரு உண்மை தெரியும். இது போல கிருமிகள் அவ்வப்போது வந்து போய் கொண்டுதான் இருக்கிறது. மக்கள் சிலர் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
H1N1 வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? யாரை தாக்குகிறது? அதிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது? இது போனற விசயங்களை ஏற்கனவே பல பேர் எழுதிவிட்டதால், நான் அந்த விசயங்களை இங்கே தொடப்போவதில்லை. மக்கள் அநாவசியமாக பீதியடையத் தேவையில்லை என்பதை சொல்வதற்காக இந்த பதிவு.
இப்போது உங்களுக்கு சில விவரங்கள் தருகிறேன்:
01. உலகம் முழுவதும்
மக்கள் தொகை 660 கோடி.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் படி 06.08.09 அன்று வரை H1N1 வைரஸினால் பாதிக்க பட்டவர்கள் 1,77,457 பேர்.
இறந்தவர்கள் 1462.
02. இந்தியா
மக்கள் தொகை 110 கோடி.
12.08.09 அன்று வரை H1N1 வைரஸினால் பாதிக்க பட்டவர்கள் 1078 பேர்.
இறந்தவர்கள் 17.
03. மலேசியா
மக்கள் தொகை 2.3 கோடி.
12.08.09 அன்று வரை H1N1 வைரஸினால் பாதிக்க பட்டவர்கள் 2253 பேர்.
இறந்தவர்கள் 44.
உதாரணத்திற்கு மேலே உள்ள தகவல்கள் போதுமென நினைக்கிறேன். இப்போது நீங்களே கணக்கு பண்ணிக்கொள்ளுங்கள். எததனை சதவிகிதம் என்று??? தினமும் இந்த வைரஸ் இல்லாதபோதும் இதே மாதிரி அறிகுறியில் தினமும் மக்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் மலேசியாவில் ரோட் ஆக்ஸிடண்டில் இறப்பவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம். அப்படி இந்த வைரஸ் காற்றில் பரவி அனவைரும் சாவோம் என்றால், இந்த ஆறு மாதத்தில் உலகில் பாதி பேர் செத்து இருக்க வேண்டும். ஏன் அப்படி நடக்கவில்லை. அதனால் மக்கள் அநாவசியமாக அச்சம் அடையத் தேவையில்லை.
மிக வேகமாக இந்த வைரஸ் பரவியிருந்த மெக்ஸிகோ, அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் தற்போது நோயின் தாக்கம் குறைந்து உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் பரவுகிறது. விரைவில் போய்விடும் என நம்புவோம்.
மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் நபர்கள் ஆஸ்பத்திரியில் சேராமலே வெளி நோயாளிகளாயிருந்து பாதிப்பிலிருந்து விலகியவர்கள். மீதம் 10 சதிவிதம் பேர் அவசரப்பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்றவர்கள். அதில் இறந்த 44 பேரில், அதிகமான நபர்கள் High Risk பிரிவில் இருந்தவர்கள்.
டாக்டர்களும், உலக சுகாதார நிறுவனமும் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சொல்லும் வழிமுறைகள் என்ன?
01. தினமும் இரு முறை குளித்து உடம்பை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
02. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
03. நிறைய தண்ணீர் குடியுங்கள்
04. சத்தான உணவை உட்கொள்ளுங்கள்
05. நன்றாக 8 மணி நேரம் தூங்குங்கள்
06. வெளியில் சென்று வந்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள்
07. பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்கள் அருகில் வந்தால் அவர்கள் அருகில் போகாதீர்கள்
08. மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.
நன்றாக பார்த்தீர்களானால், மேலே கூறிய அனைத்துமே தினமும் எல்லோரும் சாதாரணமாக கடைபிடிக்க வேண்டியவைகள் ( பாயிண்ட் 8 ஐத் தவிர, 7 வது பாயிண்டுக்கு வேண்டுமானால், வேறு நோய் அறிகுறி என மாற்றிகொள்ளுங்கள்). பன்றிக் காய்ச்சலுக்காக மட்டும் இதை கடைபிடிக்க வேண்டியதில்லை. நம் தினசரி வாழ்க்கையையே இப்படி மாற்றிக் கொண்டோமானால், நம்மை எந்த நோயிமே அண்டாது.
நேற்று சன் டிவி செய்தியில் இப்படி கூறினார்கள்:
" மக்கள் அநாவசியமாக பீதியடையத்தேவையில்லை. இந்த வைரஸ் அதிகம் தாக்குவது ஹை ரிஸ்க் பிரிவினரைத்தான். இதைப்பற்றி சுகாதாரதுறையைச் சேர்ந்த டாக்டர் சொல்லுவது (உடனே அவர் நேர்காணல் கிளிப்பிங்),
பன்றிக்காய்ச்சல் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம். அந்த வைரஸ் அதிகமாக TB, HIV, Cancer patients, மற்றும் High Risk catagory யில் உள்ளவர்களை மட்டுமே தாக்குகிறது. மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் என சொல்ல வந்தவர், முடிக்கும்போது, " அதனால் அவர்கள் அருகில் வந்தால் உடனே உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.
அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர் சொல்லவந்தது வேறு, சொன்னது வேறு. இப்படி பேசினால் மக்கள் பீதி அடையாமல் என்ன செய்வார்கள்?
அதனால் நாம் அனைவரும் ஜாக்கிரதையாக இருப்போம். ஆனால் பீதியில் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசியமில்லை.
தயவு செய்து நம் டிவி செய்திகளைப் பார்த்து பயம் கொள்ள வேண்டாம். உண்மையான செய்தி தெரிய வேண்டுமானால், உலக சுகாதார நிறுவனத்தின் இணையத்தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பயம் இருக்க வேண்டியதுதான். அதற்காக பயமே வாழ்க்கை ஆகி விடக்கூடாது. சந்தோசமாக, மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.
13 comments:
it's true sir..a good article..media creating too much sensation..they are just telling without thinking about people..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி PVS
நம்பிக்கை நாயகனுக்கு மிகவும் நன்றி.
இந்த நிமிடம் வரைக்கும் நானும் மற்றவர்களை போல பன்றி காய்ச்சளுக்கு பயந்து கொண்டு தான் இருந்தேன்.ஆனால் உங்களின் பதிவை படித்ததும் தெளிவு அடைந்தேன்.நன்றிகள் பல உங்களுக்கு உரித்தாகட்டும்.
நல்ல பதிவு உலகநாதன்
நன்றி
அவசியமான பதிவு.
எல்லோரும் ஒன்னு சொல்லும்போது நாம வேற சொல்லலாம்னு சொல்லக்கூடாது. எதுக்கு இவ்வளவு முக்கியம் குடுத்து இதை விளம்பரம் செய்யறதே, மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்னு தான். பெங்களூர்ல இறந்த 29 வயது ஆசிரியை, மற்றும் பலரை நினைத்து பாருங்கள். H1NI அறிகுறி இருந்தால் உடனடியாக check up செய்வது நலம். அதை விட்டுட்டு பயப்பட வேண்டான்னு பிரசாரம் செய்யதிங்கன்ன நம்மளுக்கு ஒன்னும் இல்லன்னு போயிருவாங்க boss.தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும்.
அடுத்த வார "கிரீடம் " பெறும் பதிவராக நீங்களும் தேர்வாகலாம் உடனே தமிழ்10 தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் .எங்கள் மின் அஞ்சல் tamil10@ymail.com
அடுத்த வார "கிரீடம் " பெறும் பதிவராக நீங்களும் தேர்வாகலாம் உடனே தமிழ்10 தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் .எங்கள் மின் அஞ்சல் tamil10@ymail.com
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சன்யாசி.
வருகைக்கு நன்றி கதிர்.
நன்றி எவனோ ஒருவன்.
//எல்லோரும் ஒன்னு சொல்லும்போது நாம வேற சொல்லலாம்னு சொல்லக்கூடாது. எதுக்கு இவ்வளவு முக்கியம் குடுத்து இதை விளம்பரம் செய்யறதே, மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்னு தான். பெங்களூர்ல இறந்த 29 வயது ஆசிரியை, மற்றும் பலரை நினைத்து பாருங்கள். H1NI அறிகுறி இருந்தால் உடனடியாக check up செய்வது நலம். அதை விட்டுட்டு பயப்பட வேண்டான்னு பிரசாரம் செய்யதிங்கன்ன நம்மளுக்கு ஒன்னும் இல்லன்னு போயிருவாங்க boss.தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கவும்//
நன்றி தினா. இன்னொருமுறை என் கட்டுரையை படியுங்கள். எங்கேயும் check up செய்ய வேண்டாம் என்றோ, ஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றோ கூறவில்லை. அநாவசிய பீதி வேண்டாம் என்றுதான் கூறியுள்ளேன்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'பன்றிக்காய்ச்சல் - மக்கள் அநாவசியமாக பீதியடையத் தேவையில்லை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th August 2009 12:44:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/98621
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
Post a Comment