Aug 21, 2009

என் பதிவுகளைப் பற்றி என் நண்பர் சொல்லுவது?????

இரண்டு நாட்கள் கோலாலம்பூரில் நிறைய மீட்டிங். ஒரு பதிவும் எழுத முடியவில்லை. படிக்கவும் முடியவில்லை. பதிவுலகத்தை பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து போயின. என்னுடன் வந்திருந்த என் அலுவலக நண்பர் முதல் நாள் இரவு கேட்டார்,

" ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?"

" இரண்டு நாளா ஒன்னும் எழுதல அதான்"

" கண்டிப்பா ஏதாவது எழுதணும்னு கட்டாயமா என்ன?"

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல"

" அப்புறமென்ன?"

" இருந்தாலும் மனசு ஒரு மாதிரி இருக்கு அதான்"

" நீங்க எழுதறதால என்ன பிரயோசனம்? ஏதாவது துட்டு கிட்டு கிடைக்குதா என்ன?"

" துட்டு கிடைக்காது. நிறைய பேர் படிப்பாங்க. ஹிட் கவுண்டர் ஏறும் இல்ல"

" ஹிட் கவுண்டர் ஏறுவதால் என்ன பயன்"

" ஒன்னும் இல்ல. சும்மா ஒரு சந்தோசம். அதான்"

" மூன்று மாசத்துக்கு முன்னாடி எழுத வராதப்ப சந்தோசமா இல்லையா என்ன?"

" ம்ம் சந்தோசமாத்தான் இருந்தேன்"

" அப்பறம் என்ன? இப்ப மட்டும் புது சந்தோசம்?"

" இது தனி. நம்ப எழுத்த பல பேர் படிக்கறாங்க இல்ல"

" பல பேர்னா எத்தனை பேர்"

" எழுதுனா ஒரு நாளைக்கு 150 பேர். எழுதாத நாள்ல ஒரு 80 பேர்"

" இதையா பல பேர் படிக்கிறாங்க அப்படினு சொன்னீங்க"

" ஆமா"

" நீங்க எழுதலனா, ஏன் இன்னைக்கு எழுதுலனு யாராவது கேட்குறாங்களா, என்ன?"

" அந்த மாதிரி எல்லாம் இல்ல"

" அப்ப ரொம்ப சிம்பிள். நீங்க எழுதுனா படிக்கறாங்க. இல்லைனா படிக்கறது இல்ல"

" ஆமாம்"

" தினமும் ஏன் எழுதறது இல்லனு யாரும் கேட்கும் அளவுக்கு நீங்க இல்ல. அதனால முடிஞ்சா எழுதுங்க. இல்லைனா பேசாம ரிலாக்ஸா இருங்க. நீங்க எழுதாத நாட்கள்ல உலகம் இயங்காம இல்ல. அதுபாட்டுக்கு இயங்கிகிட்டுத்தான் இருக்கு. தினமும் எல்லாரும் எழுதணும்னு ஒன்னும் கட்டாயம் இல்ல. அதனால அதைபத்தி நினைக்காம ரிலாக்ஸா வாழ்க்கைய நடத்துங்க. அதை விட்டு விட்டு ஏதையோ பறி கொடுத்தாப்புல இருக்கறது எந்த விதத்துல நியாயம்? சோ, எழுத விசயங்களும், மூடும் வரும்போது எழுதுங்க. தினமும் எழுதித்தான் ஆகணும் இல்லைன்னா நம்பள எழுத்துலகம் மறந்துடும்னு நினைக்காதீங்க. அப்படி மறந்துட்டாங்கன்னா, கவலைப்படாதீங்க. உங்க எழுத்து நல்லா இருக்கும் பட்சத்துல தானா வந்து எல்லாம் படிப்பாங்க. இது ஒன்னும் உங்க தொழில் இல்லையே? எதையுமே கட்டாயம் செஞ்சுத்தான் ஆகணும் அப்படிங்கற மன நிலையில செஞ்சா நல்லா வராது. அதுவா வரும்போது பண்ணா நல்லா வரும். அதனால என்னைக்கு மூடு வருதோ அன்னைக்கு எழுதுங்க. தினமும் எழுதி ஆகணும் அப்படிங்கற கட்டாயத்துல எதையும் எழுதாதீங்க. இதுதான் நான் உங்களுக்கு ஒரு நண்பனா சொல்லும் விசயம்"

ஆமால்ல. அவர் சொன்னது சரிதானே?

9 comments:

கோவி.கண்ணன் said...

//தினமும் ஏன் எழுதறது இல்லனு யாரும் கேட்கும் அளவுக்கு நீங்க இல்ல. அதனால முடிஞ்சா எழுதுங்க. இல்லைனா பேசாம ரிலாக்ஸா இருங்க. நீங்க எழுதாத நாட்கள்ல உலகம் இயங்காம இல்ல. அதுபாட்டுக்கு இயங்கிகிட்டுத்தான் இருக்கு. தினமும் எல்லாரும் எழுதணும்னு ஒன்னும் கட்டாயம் இல்ல.//

உண்மை உண்மை !

எல்லோருக்கும் பொதுவான ஒன்று சார்.

:)

Robin said...

எண்ணிக்கையை விட தரத்திற்கு எல்லா பதிவர்களும் முக்கியத்துவம் கொடுத்தால் கண்டிப்பாக வாசகர் எண்ணிக்கை கூடும். உண்மையில் நடப்பது என்னவென்றால் பதிவர்கள் பலர் தரமற்ற பதிவுகளை (மொக்கைகள் என்று இங்கு அழைக்கிறார்கள்) கொட்டி திரட்டிகளை குப்பை தொட்டிகள் போல மாற்றி விடுகிறார்கள். இந்த குப்பைதொட்டிக்குள் தேடி தான் நல்ல பதிவுகளை கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. வாரத்திற்கு ஒரு பதிவு இட்டாலும் போதும் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் திரட்டிகளுக்குள் ஒரு முறை வருபவர்களுக்கு மீண்டும் வரவேண்டும் என்ற ஆர்வம் வரும்.

Cable சங்கர் said...

ரைட்டு.. உங்க நண்பர் சொன்னது கரெட்டுதான் ஆனா திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்காரு..:)

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவி கண்ணன் சார்.

iniyavan said...

உங்கள் வருகைக்கு நன்றி ராபின்.

iniyavan said...

//ஆனா திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்காரு..:)//

தலைவரே, என்ன சொல்றீங்கன்னு பிரியல.

இந்த மேட்டர முன்னமே எழுதிட்டேனு சொல்லறீங்களா? இல்ல சொன்னதையே திருப்பி திருப்பி இந்த பதிவுல எழுதியிருக்கேனா?

சாந்தி நேசக்கரம் said...

ஆமால்ல. அவர் சொன்னது சரிதானே?

ஆமா நூறுவீதம் சரி.
நல்ல எழுத்துக்களை வாசிக்க வாசகர்கள் எப்போதும் ரெடி.

சாந்தி

குப்பன்.யாஹூ said...

This is once again a Kodambakkam Tamil directors style.

Copying the same matter and writing on it for 100 blogs. U can see Raja's detailed post in this regard.

First Raja (aviynga) started this topic ofcourse Dubukku has written about this in 2005 itself.

iniyavan said...

Dear Mr Ramji,

Thanks for your comment.

I do not know anything about Mr Raja's post or Dubukku's post. I have written this article as per my thinking. I just to clarify that I have not copied from anybody's blog.