Aug 27, 2009

முருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங்க!!!

பதிவர் சிங்கை நாதனுக்கு காலையில் VAD Fixing அறுவை சிகிச்சை நடந்துகொண்டுள்ளது. அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டுள்ளோம். ஆப்பரேசன் நல்லபடியாக நடந்து அவர் விரைவில் குணமடைய இன்னொரு முறை வேண்டலாம் வாருங்கள்:

காப்பு


துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

பாடலில் சில பகுதி

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

***************

பரமண்டலங்களில் இருக்கும் பிதாவே
உமது நாமம் பரிசுத்தபடுவதாக
உமது இராஜ்யம் வருவதாக
உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுப்போல
பூமண்டலத்திலும் செய்யபடுவதாக
அன்றேன்று எங்களுக்குறிய ஆகாரத்தை தாரும்
எங்களுக்கு விரோதமானவர்கள் குற்றங்கள் செய்வதை
நீங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்படாமல்
இரட்சித்துக்கொள்ளும்
உமது இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உடையவைகளே
ஆமன்.

நம்முடைய கர்த்தராகிய யேசு கிறிஸ்துவின் கிருபையும்
பிதாவாகிய தேவனின் அன்பும்
பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும்
என்றெக்கும் நம்முடையே இருப்பதாக
ஆமென்.

********************

எல்லாம் வல்ல எங்கள் குல தெய்வம் கொப்பாட்டியம்மனே
அன்பு ஆண்டவரே,
ஏழுமலையானே
யேசுநாதரே
அல்லாவே,
கபிரியேல்புரம் மாதாவே,
சமயபுரம் மாரியம்மனே,
கோர்ட் மாரியம்மனே,
மாரன் முருகனே
பத்து மலை முருகனே

உங்கள் ஆசிர்வாதத்தால், சிங்கை பதிவர் செந்தில்நாதன் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணம் பெற உங்கள் பொற்பாதங்களில் விழுந்து வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

2 comments:

சந்தனமுல்லை said...

எனது பிரார்த்தனைகளும்!

துபாய் ராஜா said...

நண்பர் செந்தில்நாதனுக்கு இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் VAD Fixing அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இருக்கும் இடத்திலிருந்து இணையப்பதிவர் எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html

செந்தில்,செந்தில்.......
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html