Sep 1, 2009

மிக்ஸர் - 01.09.2009

எங்க பார்த்தாலும் பதிவர்கள் சினிமா விமர்சனம் அப்படி இப்படினு எழுதீட்டாங்க. இது சரியா? அவங்க எவ்வளவு செலவு பண்ணி படம் எடுக்குறாங்க. நீங்க இப்படி ஒட்டு மொத்தமா படம் சரியில்லைனு சொன்னா, படம் எப்படி ஓடும்? அப்படினு நிறைய பேர் கேள்வி எழுப்பிகிட்டு இருக்காங்க. படம் நல்லா இருக்குனு பதிவர்கள் சில படத்தை பற்றி எழுதியபோது யாரும் அப்படி எழுதிய பதிவர்களை பாராட்டல. நல்லா இருக்க படத்தையை நல்லா இருக்குன்னு சொல்லறதும், நல்லா இல்லாத படங்களை நல்லா இல்லைனு சொல்றதும் என்ன தப்பு இருக்குனு எனக்கு புரியல. உங்களை யாரு நிறைய செலவு செய்து படம் எடுக்க சொல்றா? குறைந்த செலவுல நல்ல படமா எடுங்க. 100 கோடி செலவு பண்ணறீங்க. அதுல 20 கோடி ஒரே ஒரு நடிகர் எடுத்துக்கிட்டு தொடர்ந்து பணக்காரறாவே இருப்பார். ஏழைங்க நிறைய காசு செலவு பண்ணி படம் பார்த்து உங்களை பணக்காரர் ஆக்கணுமா? என்னையா நியாயம் இது?

*************************************

பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் இவர்களின் விவாகரத்துச் செய்திகளை பார்க்கும்போது மனம் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை இது. இருந்தாலும், தினமும் ஏதோ ஒரு வகையில் அவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களும் நம்மை சந்தோசப் படுத்திகொண்டிருக்கிறார்கள். யாருடைய விவாகரத்து செய்திகள் காதுக்கு வந்தாலும் வேதனையாக இருக்கிறது, அதுவும் நமக்கு பிடித்தவர்களுக்கு அந்த நிலை வரும்போது......? என்ன செய்ய??? ஆனால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால், எல்லா பத்திரிக்கைகளிலும் அக்கு வேறு ஆணி வேறாக அவர்களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து எழுதுகிறார்கள். இது தேவையா? ஒரு முறை கமல் கூறியது நினைவுக்கு வருகிறது:

" நான் உங்களை சந்தோசப்படுத்தும் ஒரு நடிகன். என் வாழ்க்கை என்னுடையது. என் பெட் ரூமில் நுழைந்து எட்டி பார்க்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது?"

சரிதான் இல்ல.

*************************************

பாஜாகாவில் பயங்கர உட்கட்சி பூசல். என்ன நடக்கிறதென்று ஒன்றுமே புரியவில்லை. அதவானியை எதிர்கட்சி தலைவர் பதிவியிலிருந்து நீக்க முயற்சிகள் நட்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மன்மோகன் சிங் பாஜாகாவைப் பற்றி சொன்னது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது,

" பாஜாகாவில் நடக்கும் உட்கட்சி குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு பிரதான எதிர்கட்சி நல்ல ஸ்திரத்தன்மையுடன் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. விரைவில் குழப்பங்கள் தீரும் என எதிர்பார்க்கிறேன்"

*************************************

மெயிலில் ஆங்கிலத்தில் வந்த ஒரு நல்ல விசயம்:

பயங்கர தலைவலி போதையுடன் தூக்கத்திலிருந்து விழித்தான் அவன். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த அவனுக்கு அருகில் மேஜையில் இருந்த ஆஸ்பிரின் மாத்திரையும், ஒரு டம்ளரில் இருந்த தண்ணிரும் தெரிந்தது. எழுந்து உட்கார்ந்தான். அவன் முன்னே அவன் அன்று அணிய தேவையான உடைகள் நன்றாக அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்டிருந்தது. அவன் அறை முழுவதும் பார்த்தான், எல்லாமே சுத்தமாக, அவை அவை இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருந்தது. வீடு முழுவதுமே சுத்தமாக இருந்தது. ஒரு ஆஸ்பிரினை எடுத்து வாயில் போட்டவன், டேபிளில் இருந்த ஒரு பேப்பரில் ஏதோ எழுதியிருந்ததை கவனித்தான்.

" ஹனி, உங்களின் காலை உணவு மேஜையில் உள்ளது. நான் ஷாப்பிங் செய்ய வேண்டியிருப்பதால் சீக்கிரமே கிளம்பி விட்டேன், லவ் யூ"

என எழுதியிருந்தது. எழுதியிருந்தது அவனின் மனைவி. படித்தவன் பயங்கர அதிர்ச்சியுடன் கிச்சன் சென்றான். அங்கே சாப்பாட்டு மேஜையில் அவனுக்காக சூடான காலை உணவும், அன்றைய செய்திதாளும் இருந்தது. அவனின் பையன் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

பையனிடம் கேட்டான்,

" நேற்று இரவு என்ன நடந்தது?"

பையன் கூறினான், " அப்பா நீங்கள் அதிகாலை மூன்று மணிக்கு பயங்கர குடி போதையுடன் தள்ளாடிகிட்டே வந்தீங்க. கையில கிடைச்ச பொருளையெல்லாம் எடுத்து உடைச்சீங்க. நடக்க முடியாம கதவுல போய் மோதி விழுந்தீங்க"

குழப்பமடைந்த அவன் மீண்டும் கேட்டான்,

" அப்படின்னா, ஏன் எல்லாம் சுத்தமா ஒழுங்கா இருக்கு. காலை சாப்பாடு கூட எனக்காக மேஜைல காத்திட்டு இருக்கு. எனக்கும் உன் அம்மாவுக்கும் சண்டைதானே வரணும்"
பையன் இப்படி பதில் அளித்தான்,

"அம்மா உங்களை இழுத்துட்டு பெட் ரூம் போனாங்க, உங்க உடைகளையும் ஷீவையும் அவிழ்க்க போனாங்க, அப்போ நீங்க இப்படி சொன்னீங்க,

“LADY LEAVE ME ALONE! I’M MARRIED . . . !”

*************************************

இது எப்படி இருக்கு?

If a barber makes a mistake - It’s a new style
If a driver makes a mistake - It is a new path
If parents make a mistake - It is a new generation
If a politician makes a mistake - It is a new law
If a scientist makes a mistake - It is an invention
If a tailor makes a mistake - It is a new fashion
If a teacher makes a mistake - It is a new theory
If our boss makes a mistake - It is a new idea!

*************************************

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“LADY LEAVE ME ALONE! I’M MARRIED . . . !” //

நல்ல புரிதல் நண்பரே..,

கோவி.கண்ணன் said...

//பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் இவர்களின் விவாகரத்துச் செய்திகளை பார்க்கும்போது மனம் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகிறது.//

நடிகர்களின் விருப்பு வெறுப்பு நாற்சந்திக்கு வருகிறது. எல்லாம் பத்திரிக்கை (அ)தர்மத்தின் உபயம் !

iniyavan said...

//நல்ல புரிதல் நண்பரே..,//

நன்றி சுரேஷ்.

iniyavan said...

உங்கள் கருத்திற்ற்கு நன்றி கோவி கண்ணன்.

Beski said...

//படம் நல்லா இருக்குனு பதிவர்கள் சில படத்தை பற்றி எழுதியபோது யாரும் அப்படி எழுதிய பதிவர்களை பாராட்டல//
அதான, நல்லா இல்லன்னா நல்லா இல்லன்னுதான சொல்ல முடியும்.
---
//நான் உங்களை சந்தோசப்படுத்தும் ஒரு நடிகன். என் வாழ்க்கை என்னுடையது. என் பெட் ரூமில் நுழைந்து எட்டி பார்க்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது?//
அதெப்படிண்ணே... பல பேரு பாத்து ரசிக்கும் ஒருவர் எல்லாருக்கும் ஒரு உதாரணமா இருக்கலாமே. பிரபலம் ஒருவர் சொந்த வாழ்க்கையில் நல்லாயில்லாம இருப்பது வருத்தத்தையே தருகிறது.
---
//“LADY LEAVE ME ALONE! I’M MARRIED . . . !” //
சூப்பரு.

Ithayam said...

//“LADY LEAVE ME ALONE! I’M MARRIED . . . !” //


super

iniyavan said...

நன்றி எவனோ ஒருவன்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இதயம்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

First one is very good. same karutthu enakkum.... pasanga, naadodigal padattha ellaarum kandippa paakkanumnnu sonnappa yaarum vanthu paarattalaye ... ippa mattum ennavam...

******

//“LADY LEAVE ME ALONE! I’M MARRIED . . . !” //

really super,

iniyavan said...

நன்றி பித்தன்.

Cable சங்கர் said...

அந்த இமெயில் மேட்டர் அருமை..

விக்னேஷ்வரி said...

உங்க நியாயம் சரி தான்.

விவாகரத்துக்கு ஏன் வருத்தப்படுறீங்க... நீங்க மாட்டிக்கிட்டு முழிக்கும் போது மத்தவங்க அதுலருந்து எஸ்கேப் ஆகிட்டாங்கன்னா? ;)

மன்மோகன் சிங் படிச்சவர், அனுபவசாலி. சொல்றது சரியா தானே இருக்கும்.

நானும் ரசிச்சுப் படிச்ச மெயில் இது. பெண்கள் பெண்கள் தான்.

Mistakes are good sometimes, not ever.

iniyavan said...

//அந்த இமெயில் மேட்டர் அருமை..//

நன்றி கேபிள் சங்கர்.

iniyavan said...

//விவாகரத்துக்கு ஏன் வருத்தப்படுறீங்க... நீங்க மாட்டிக்கிட்டு முழிக்கும் போது மத்தவங்க அதுலருந்து எஸ்கேப் ஆகிட்டாங்கன்னா? ;)//

விக்கி,

எங்க வீட்டுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான்.

iniyavan said...

//பெண்கள் பெண்கள் தான்.//

விட்டுக் கொடுக்க மாட்டீங்களே!