Sep 8, 2009

மிக்ஸர் - 08.09.09

சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் சேனலில் "சூப்பர் ஸ்டார்" இறுதி சுற்று நடந்தது. நேரடி ஒளிபரப்பாக நடத்தினார்கள். மொத்தம் ஏழு பேர் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டார்கள். தலைமை நீதிபதியாக இந்தியாவிலிருந்து வந்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி பொறுபேற்றிருந்தார். ஒவ்வொருத்தரும் பாடி முடித்தபின் விஜய் ஆண்டனி கீழே உள்ளவாறு தனது கமெண்டினை கூறினார்:

" கிழிச்சிட்டீங்க. நீங்க மிகப்பெரிய நடிகையாகவும், பாடகியாகவும் ஆக வாய்ப்பு இருக்கிறது"

" பதினெட்டு வயசுல உங்கள் வோக்கல் டெலிவரி ரொம்ப அருமை. நீங்க மட்டும் சென்னையில இருந்திருந்தா வாரம் ஒரு முறை உங்களை வைத்து ஒரு பாடல் ரெக்கார்ட் பண்ணுவேன்"

" நீங்க பாட்டோட நல்லா நடிக்கவும் செய்யறீங்க. நீங்க ஏன் நடிகையாக முயற்சி பண்ணக்கூடாது"

" அருமையா ராப் பாடறீங்க. நீங்க மிகச்சிறந்த ராப் பாடகராக வருவீங்க"

" என்னை கேட்டா நீங்க கிளம்பி உடனே சென்னைக்கு போங்க. நீங்க நல்ல நடிகையாகவும், பாடகியாகவும் வாய்ப்பு இருக்கு"

" என்ன சொல்லறதுனு தெரியல. ஒரே பிரமிப்பா இருக்கு"

கடைசியில செலக்ட் பண்ணது ஒருத்தரைத்தான். பாராட்ட வேண்டியதுதான். அதற்காக இப்படியா?. அவர்களிடம் இருக்கும் குறையை சொன்னால்தானே அவர்களுக்கு தெரியும். அவர்களால் குறைகளை சரி பண்ண முடியும். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியா?

**************************************************

என் அப்பா இறந்து ஒரு மாதம் கழித்துத்தான் என்னால் ஒரு சரியான மனநிலையை அடைய முடிந்தது. இன்றும் அவர் நினைவுகள் வரும்போது வேறு எந்த வேலையும் ஓடாது. ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி மறைந்து சில தினங்கள் கூட ஆக வில்லை. அதற்குள் ஜெய் மோகன் ரெட்டி முதல்வராக துடிக்கிறார். அவராக துடிக்கிறாரா இல்லை மற்றவர்கள் ஏற்றி விடுகிறார்களா தெரியவில்லை. 35 வயதில் ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறதா? இல்லை வேறு யாருமே ஆந்திராவில் காங்கிரஸில் திறமையானவர்கள் இல்லையா? YSRன் மகன் என்பதற்காக அவருக்கு அந்த பதவி கொடுக்க வேண்டுமா என்ன? பார்ப்போம். சோனியா என்ன முடிவு எடுக்கிறார் என்று?

**************************************************

குமுதத்தில் படித்த ஒரு செய்தி. அமெரிக்காவில் மர்லின் மன்றோவின் கல்லறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு இடம் சென்ற வாரம் ஏலம் விடப்பட்டது. இறந்தபின் மன்றோவுக்கு அருகில் தன்னைப் புதைக்க விரும்பிய ஒருவர் இரண்டே முக்கால் கோடி ரூபாய்க்கு அதை வாங்கியிருக்கிறார். என் கேள்வி இதுதான்? இறந்த பிறகு அந்த இடத்தில் அவரை புதைக்காமல் வேறு இடத்தில் புதைத்தால் அவர் என்ன செய்வார்?? என்னங்கையா இது? பணம் இருக்கு அப்படிங்கறதுக்காக இப்படியா???

**************************************************

எனக்குப் பிடித்த நடிகர்களுல் ஒருவரான பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது சந்தோசமாக இருக்கிறது. மிகச்சிறந்த நடிகர் அவர். எந்த பாத்திரம் என்றாலும் அந்த பாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். சமீபத்தில் 'அபியும் நானும்' பார்த்தேன். உண்மையாக ஒரு அப்பா எப்படி இருப்பாறோ அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இன்னும் நான் அந்த பட பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை. காரணம், பல காட்சிகள் என் வாழ்வில் நடந்தவைகளாகவும், நடந்து கொண்டிருப்பதாகவும் இருப்பதால். ஆனால், அவர் விருது வாங்கிய அந்த படம்தான் (காஞ்சிபுரம்) எப்போது வந்தது, எப்போது போனது என்று தெரியவில்லை?

வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் சார்.


**************************************************

ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் மறைவினை அடுத்து தினமும் 100 பேர் மாரடைப்பினாலோ அல்லது தற்கொலை செய்தோ இறக்கிறார்களாம். இதுவரை 500 பேர் இறந்துள்ளார்களாம். மாரடைப்பினால் இறந்தவர்களை விட்டு விடுவோம். தற்கொலை செய்பவர்களை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது. ஒரு தலைவர் மேல் பாசமாக இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா? ஒரு மனிதன் உயிருக்கு மதிப்பு அவ்வளவுதானா? உன் தலைவருக்காக நீ இறக்கிறாய்? உன் குடும்பம் எத்தனை கஷ்டப்படும் என நீ நினைத்து பார்த்தாயா?

வேறு மாதிரி சிந்தித்தால் யாருக்காகவோ தன் குடும்பத்தை பற்றி நினைக்காமல் தன் உயிரை துறக்க முடிந்தவர்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன? செத்தால் என்ன????

**************************************************

எனக்கு விஜய் படங்கள் ரொம்ப பிடிக்கும். வில்லு தவிர அனைத்தையும் பார்த்து விட்டேன். என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவரை தமிழக முதல்வராக நினைத்துப் பார்க்க.....?

சாரி பாஸ், இது ரொம்ப டூஊஊஊஊ மச்!!!!!!!

**************************************************

12 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//. என் பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவரை தமிழக முதல்வராக நினைத்துப் பார்க்க.....?
//

அனுபவித்துப் பாருங்கள்.., ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தை வைத்து எடை போட வேண்டாம் தலைவரே..,

அப்பாவி முரு said...

மிக்சரில் மிளகாய் (அரசியல்) வாசம் தூக்கலாக இருக்கே...

iniyavan said...

//அனுபவித்துப் பாருங்கள்.., ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தை வைத்து எடை போட வேண்டாம் தலைவரே..,//

ஓஒ உங்க ஓட்டும் அவருக்குத்தானா?

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி முரு.

பரிசல்காரன் said...

அவர் ஒய்.எஸ்.ஆர்.

ஒய்.ஜி.ஆர் அல்ல சார்...

பரிசல்காரன் said...

//என் கேள்வி இதுதான்? இறந்த பிறகு அந்த இடத்தில் அவரை புதைக்காமல் வேறு இடத்தில் புதைத்தால் அவர் என்ன செய்வார்?? என்னங்கையா இது?//

என் கேள்வி வேறு. அதே இடத்தில் புதைத்தாலும் அவர் என்ன செய்ய முடியும்?

கி கி கி...

பரிசல்காரன் said...

//எனக்கு விஜய் படங்கள் ரொம்ப பிடிக்கும். //

சரி...

//வில்லு தவிர அனைத்தையும் பார்த்து விட்டேன்.//

பார்த்திருந்தா போன வரியைச் சொல்லியிருக்க மாட்டீங்க...

iniyavan said...

//அவர் ஒய்.எஸ்.ஆர்.

ஒய்.ஜி.ஆர் அல்ல சார்.//

தவறை சுட்டி காமித்தமைக்கு நன்றி.

திருத்திவிட்டேன்.

Anonymous said...

that reminds me of ஒரு விஜயகாந்தின் பழைய படம்.
அதுல விஜயகாந்தின் அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர், செந்திலின் அண்ணன் கான்ஸ்டபல்.. அவர்கள் இருவரையும் வில்லன்கள் கொன்றுவிடுவார்கள்... இடைவேளைக்கி பிறகு விஜயகாந்திற்கு இன்ஸ்பெக்டர் வேலையையும் செந்திலுக்கு கான்ஸ்டபல் வேலையும் அனுதாபத்தின் அடிப்படையில் கிடைக்க பெற்று இறுதியில் வில்லன்களை பிடிப்பார்கள்... அந்த மாதிரி ஒரு முதல்வரோ இல்ல ஒரு பிரதமரோ செத்தா அவங்க குடும்பத்துக்கே தான் அந்த பதவி தருவாங்க போல??

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

iniyavan said...

//அந்த மாதிரி ஒரு முதல்வரோ இல்ல ஒரு பிரதமரோ செத்தா அவங்க குடும்பத்துக்கே தான் அந்த பதவி தருவாங்க போல??//

உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!!

தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்