Sep 4, 2009

மற்ற உயிர்களுக்கு மதிப்பு அவ்வளவுதானா?ஆந்திர முதல்வராக இருந்த YS ராஜசேகர ரெட்டியின் மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது. ஒரு நாள் கழித்துதான் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே நமக்குத் தெரிய வருகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வரின் உடல் கருகிய நிலையில் யாரும் கவனிக்கபடாத நிலையில் 24 மணி நேரம் ஒரு காட்டில் இருந்திருக்கிறது. என்ன கொடுமை இது? என்னதான் கடும் மழை என்றாலும், அதற்காக இப்படியா? இந்த நிலையில் நாம் இந்தியா ஒரு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதற்கு நாம் எல்லா விதத்திலும் தகுதியுடன் இருக்க வேண்டாமா? ஒரு மாநில முதல்வருக்கே இப்படி என்றால், சாதாரண பொதுமக்களுக்கு இப்படி விபத்து ஏற்பட்டால்..? நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக உள்ளது.

இந்த நிலையில் சில கேள்விகள்:

01. தொடர்பு விடுபட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகுதான் தேடவே ஆரம்பித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை?.

02. அவர்கூட மற்ற எம்.எல்.ஏக்களோ இல்லை அமைச்சர்களோ ஏன் செல்லவில்லை? ஒரு அரசு நிகழ்ச்சிக்கு ஒரு முதல்வர் மட்டுமா போவார்?

03. ஒரு வருடமாக பயன்பாட்டில் இல்லாத ஹெலிஹாப்டரில் அவரை பயணிக்க அனுமதித்தது ஏன்?

அவரின் மறைவு குறித்த மேலும் பல சந்தேகங்களை ஏற்கனவே சிலர் எழுதிவிட்டார்கள்.

நேற்று சன் டிவி, மக்கள் டிவி என அனைத்து டிவிகளிலும் இந்த செய்திதான். பார்க்க, கேட்க மிக கஷ்டமாக இருந்தது. ஆனால், என்னை அதிகம் துன்பப் பட வைத்த இன்னொரு விசயம், அவர்கூட பயணம் செய்த மற்ற நான்கு நபர்களை பற்றி. அவர்களும் ராஜசேகர ரெட்டியுடனே இறந்து விட்டார்கள். ஆனால், அனைத்து பத்திரிக்கைகளும், டிவிக்களும் இந்த நான்கு நபர்களை ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை.

ஒரு மாநில முதல்வர் இறந்தது மிகுந்த சோகமான விசயம்தான். இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை. அதனால் அவரைப் பற்றியும், அவரின் வாழ்க்கையை பற்றியும், அவரின் விபத்து பற்றியும் மக்கள் அறிந்து கொள்ள நினைப்பதும், அதை பத்திரிக்கைகள் மற்றும் டிவிக்கள் செய்திகளாக வெளியிடுவதும் தேவையான ஒன்றுதான். ஆனால், அவர்கூடவே உயிர்விட்ட மற்ற நபர்களைப் பற்றி யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லையே. அவர்கள் உயிரும் விலை மதிக்க முடியாதது தானே? அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்குமே? அந்த குடுமபங்கள் எவ்வளவு வேதனைப்படும்?


பிரிவினால் வாழும் YG ராஜசேகர ரெட்டியின் குடும்பத்திற்கும், மற்ற நான்கு நபர்களின் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

7 comments:

முரளிகண்ணன் said...

\\அவர்கூடவே உயிர்விட்ட மற்ற நபர்களைப் பற்றி யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லையே. அவர்கள் உயிரும் விலை மதிக்க முடியாதது தானே? அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்குமே? அந்த குடுமபங்கள் எவ்வளவு வேதனைப்படும்?
\\

இன்றைய தினமலரில்

”உடன் இறந்தவர்கள் குடும்பத்திலும் சோகம்”

என ம்ம் விகுதி சேர்த்துள்ளார்கள்.

ஆத்திரமாய் வந்தது.

அவர்கள் மனிதர்கள் இல்லையா?

Beski said...

நீங்கள் குறிப்பிட்ட மூன்று கேள்விகள் உண்மையிலேயே பல சந்தேகங்களைத் தூண்டுகின்றன.

Anonymous said...

\\அவர்கூடவே உயிர்விட்ட மற்ற நபர்களைப் பற்றி யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லையே. அவர்கள் உயிரும் விலை மதிக்க முடியாதது தானே? அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்குமே? அந்த குடுமபங்கள் எவ்வளவு வேதனைப்படும்?
\\

சாட்டை அடி... ராஜீவ் காந்தி இறந்த பிறகு, சோனியா அம்மையார் அவருடன் இறந்த 28 காவலர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதாக நினைவு!

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளிக்கண்ணன்.

iniyavan said...

வருகைக்கு நன்றி எவனோ ஒருவன்.

iniyavan said...

//சாட்டை அடி... ராஜீவ் காந்தி இறந்த பிறகு, சோனியா அம்மையார் அவருடன் இறந்த 28 காவலர்களுடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதாக நினைவு!//

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

அப்துல்மாலிக் said...

//உயிரும் விலை மதிக்க முடியாதது தானே? அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்குமே? அந்த குடுமபங்கள் எவ்வளவு வேதனைப்படும்?
//

நானும் இதை சொல்லி புலம்பியதுண்டு