Sep 15, 2009

இப்படி ஒரு அனுபவம்!

கந்தசாமி படத்தைப் பற்றி அனைவரும் விமர்சனம் எழுதி விட்டார்கள். படம் ஹிட் ஆக வில்லை என்று சிலரும், இல்லை இல்லை சிவாஜி படத்தை விட வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அந்த விசயங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது நண்பர்கள் மூன்று பேர் கடந்த சனிக்கிழமை அன்று எங்கள் ஊருக்கு பக்கத்து டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு கந்தசாமி படம் பார்க்க சென்றார்கள். படம் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பம். இவர்கள் காலை 12.30 மணி அளவில் தியேட்டருக்கு சென்றிருக்கிறார்கள். எப்போதும் படம் மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்கும். 12.30க்கு சென்றால் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டு, மதிய சாப்பாடு முடித்து வருவதற்கு சரியாக இருக்கும். நாங்கள் அனைவருமே அவ்வாறு செய்வதுதான் வழக்கம். அதனால்தான் 12.30 மணிக்கு சென்றார்கள். பின்புதான் தெரிந்தது கந்தசாமி ரிலிஸான தேதியிலிருந்து மதியக் காட்சி 1 மணிக்கு மாற்றி விட்டார்கள் என்று. பிறகு மதியம் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு டிக்கட் கவுண்டருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கேதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன? டிக்கட் கேட்டால் தியேட்டர் நிர்வாகம் அவர்களை 12.55 வரை காத்திருக்க சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு காரணம் புரியவில்லை. 12.55 க்கு போனாலும் டிக்கட் தரவில்லை. பொறுமையிழந்த நண்பர்கள், " ஏன் சார், இப்படி டிக்கட்டும் தராம, காரணமும் சொல்லாம கடுப்படிக்கிறீங்க?" என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு தியேட்டர் நிர்வாகியின் பதில், " சார், கோபப் படாதீங்க. இது வரை இந்த காட்சிக்கு தியேட்டருக்கு வந்துள்ளதே நீங்க 3 பேர்தான். உங்க 3 பேருக்காக எப்படி படத்தை ஓட்டறது? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இன்னும் யாராவது வராங்களானு பார்க்கலாம்"

அடுத்த அரை மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு இன்னும் இருவர் வந்துள்ளனர். மக்களே, தயவு செய்து நம்புங்கள். அந்த காட்சி மொத்தம் 5 நபர்களுக்காக நடத்தப்பட்டது.

5 பேருக்காக ஒரு காட்சி நடக்க வேண்டுமென்றால், எவ்வளவு நஷ்டம் அந்த தியேட்டர் உரிமையாளருக்கு? எப்படி அதை சமாளிக்கப் போகிறார்?

படம் முடிந்து வந்தவுடன் என் நண்பர் இந்த அனுபவத்தை என்னிடம் கூறினார்.

நான் அவரிடம் படத்தைப் பற்றி இப்படிக் கேட்டேன்,

" படம் எப்படி இருந்தது?"

" கோழி மாதிரி வர ஸீன் தான் அதிகம் தடவை வருது?"

" படம் எப்படி இருந்தது?"

" ஒரு தடவை பார்க்கலாம்"

" அப்படீன்னா, எல்லா படத்தையும் பல தடவை பார்ப்பீங்களா?"

" சில படங்கள் ரெண்டு மூன்று தடவை பார்ப்பேன்"

" ஏன் ஒரு தடவை பார்த்தா புரியாதா உங்களுக்கு"

" அப்படீனு இல்லை"

" அப்புறம் ஏன் ஒரு தடவைக்கு மேல பார்க்கறீங்க?"

" சும்மாதான்"

" நல்லா இருந்துதா?"

" ம்ம்ம். கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் ஜெண்டிமேன், கொஞ்சம் சிவாஜி"

" ஏன் நீங்க மேல சொன்ன படம் எல்லாம் பார்க்கலியா?"

" பார்த்துருக்கேனே"

" அப்புறம் ஏன் எல்லா படங்களும் கலந்துருக்க படத்தை பார்த்துட்டு வந்தீங்க"

நண்பர் கடுப்பாகி, " யோவ், என் காசு நான் பார்க்குறேன். உனக்கு என்னையா? நானே நொந்து போய் வந்துருக்கேன். நோண்டி நோண்டி கேள்வி கேட்டுக்கிட்டு"

" இல்லை, படம் எப்படி இருந்தது?"

" யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

நான் எஸ்கேப்.

7 comments:

மணிகண்டன் said...

நான் திருச்சி மாரிஸ் ராக் தியேட்டர்ல பாரத் பந்த் பார்த்தேன். நானும் என் நண்பனும் ரெண்டே பேர் தான் :) அது ஞாபகம் வந்தது.

மற்றபடி கந்தசாமி சூப்பர் படம்.

iniyavan said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணிகண்டன்.

Anonymous said...

கந்தசாமி படம் பாக்க போய் கந்தல் சாமியா திரும்பி வந்தாங்களாம்.. :-) என்ன உலக்ஸ் நீங்க ஆறுதலா நாலு வார்த்த சொல்லாம அவர இன்னும் நொந்த சாமியா ஆகிறீங்க :-)

இராகவன் நைஜிரியா said...

எறிஞ்சுகிட்டு இருப்பதல எண்ணை ஊத்தறது அப்படின்னு சொல்லுவாங்க இல்ல.. அண்ணே இதுதானுங்களா?

iniyavan said...

//கந்தசாமி படம் பாக்க போய் கந்தல் சாமியா திரும்பி வந்தாங்களாம்.. :-) என்ன உலக்ஸ் நீங்க ஆறுதலா நாலு வார்த்த சொல்லாம அவர இன்னும் நொந்த சாமியா ஆகிறீங்க :-)//

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

iniyavan said...

உங்கள் வருகைக்கு நன்றி இராகவன் சார்.

Beski said...

அது என்ன வசூல் சாதனைனு எனக்கும் புரியல!
---
நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா தலைவா?